Untitled Document
April 27, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
கமல் நடிக்க ஆசைப்பட்டு முடியாமல் போன 4 ஹிட் படங்கள்!
[Sunday 2024-02-04 07:00]

கதாபாத்திரத்திற்கு என்ன தேவையோ அதை அசால்டாக நடித்து அசத்தி விட்டுபோவார் உலக நாயகன் கமல். ஆனால் தனக்கு வாய்த்த கதைகளில் அவர் காட்டிய தயக்கத்தினாலும் கால்ஷீட் பிரச்சினைகளினாலும் சில ஹிட் படங்கள் நடிக்க முடியாமல் போனது. அவர் நடிக்க ஆசைப்பட்டு முடியாமல் போன 4 ஹிட் படங்களை காணலாம்.

சீவலப்பேரி பாண்டி: “என் விதியை எழுதயில்ல, அந்த சாமியும் உறங்கியதே” என்று போராளியின் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு பிரதாப் போத்தன் இயக்கத்தில் 1994 ல் வெளிவந்த திரைப்படம் சீவலப்பேரி பாண்டி. இப்படத்தின் கதையை பிரதாப் போத்தன் முதலில் கமலுக்கு கூறினாராம். கமல் நடிக்க தயக்கம் காட்டவே வாய்ப்பு நெப்போலியனுக்குச் சென்றது.

சத்ரியன்: நூறு நாட்களுக்கும் மேல் ஓடி திரையில் சாதனை செய்திருந்தது விஜயகாந்தின் சத்ரியன் திரைப்படம். மணிரத்தினத்தின் திரைக்கதையில் மற்றும் தயாரிப்பில் உருவாகிய சத்ரியன், அவரது உதவி இயக்குனராக இருந்த சுபாஷ் மூலம் படமாகியது. இந்த படத்தின் போது கமல் அவர்கள் மைக்கேல் மதன காமராஜன் படத்தில் பிஸியாக இருந்ததால் இதில் நடிக்க இயலாமல் போனது.

அஞ்சலி: ஆட்டிசம் தாக்கிய சிறப்பு குழந்தைகளை இந்த சமூகம் எவ்வாறு நோக்க வேண்டும் என்பதை தெள்ளத் தெளிவாக விளக்கிய படம் அஞ்சலி. இதில் உணர்ச்சி பூர்வமான கிளைமாக்ஸ்க்கு அழாத கண்களே இல்லை எனலாம். மணிரத்தினத்தின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் நடித்த ரகுவரன் மற்றும் பிரபு இருவருமே தங்களுக்குரிய பங்கை சிறப்பாக செய்திருந்தனர். இவ்வாய்ப்பை தவறவிட்டது கமலின் துரதிஷ்டமே

பம்பாய்: மும்பையில் நடைபெற்ற கலவரங்களை பின்னணியாக கொண்ட மணிரத்தினத்தின் இத்திரைப்படத்தில் மனிஷா கொய்ராலா, அரவிந்த்சாமி, நாசர் முதலானோர் நடித்திருந்தனர்.

மதம் ஜாதியை கடந்து காதலில் வென்ற பம்பாயின் வெற்றி அனைவரும் போற்றும் படியாக இருந்தது பல விருதுகளை வாங்கி குவித்த திரைப்படத்தில் நடிக்க ஆசைப்பட்டாராம் கமல். பல்வேறு காரணங்களால் கமல் இப்படத்தில் நடிக்க முடியாமல் போனது. கமலை போலவே இப்படத்தை மிஸ் செய்த மற்றொரு நபர் விக்ரம் ஆவார்.

  
  
   Bookmark and Share Seithy.com


Kugeenthiran-200-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Rajeef sebarasha 2023/04/19
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Asayan-Salon-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Karan Remax-2010
Airlinktravel-2020-01-01
Mahesan-Remax-169515-Seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா