Untitled Document
April 28, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
"மக்களின் கவனத்தை ஈர்க்கவே இப்படி செய்தேன்" - தன்னைத்தானே இறந்ததாக கூறிய பூனம் பாண்டே!
[Saturday 2024-02-03 16:00]

நான் உயிருடன் தான் இருக்கிறேன், புற்றுநோய் காரணமாக நான் உயிரிழக்கவில்லை என்று பிரபல பாலிவுட் நடிகையான பூனம் பாண்டே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார். பிரபல பாலிவுட் நடிகை மற்றும் சமூக ஊடகத்தில் அதிக செல்வாக்கு கொண்ட வருமான பூனம் பாண்டே நேற்று கர்ப்பப்பை வாய் புற்றுநோய்(cervical cancer) காரணமாக உயிரிழந்து இருப்பதாக பூனம் பாண்டேவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரது மேலாளர் அறிக்கை வெளியிட்டு இருந்தார்.

அதில், உத்தரபிரதேசத்தில் உள்ள சொந்த ஊரில் வியாழக்கிழமை இரவு பூனம் பாண்டே உயிரிழந்து விட்டதாகவும், அவருக்கு சில மாதங்களுக்கு முன்பு தான் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் உறுதிப்படுத்தப்பட்டது என்றும் தெரிவித்து இருந்தார்.

2013ல் “நாஷா” என்ற திரைப்படம் மூலம் அறிமுகமாகி கங்கனா ரனாவத் நடத்திய “லாக் அப்” நிகழ்ச்சியின் பிரபலமான 32 வயது நடிகை பூனம் பாண்டே உயிரிழந்து விட்டதாக வெளியான தகவல் திரையுலகத்தினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் காரணமாக நான் உயிரிழக்கவில்லை, நான் உயிருடன் தான் இருக்கிறேன் என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை பூனம் பாண்டே வீடியோ வெளியிட்டுள்ளார்.

அதில், என்னை மன்னிக்கவும். கர்ப்பப்பை வாய் புற்றுநோய் குறித்த உரையாடலை ஏற்படுத்தவும், அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் தான் நான் உயிரிழந்து விட்டதாக கூறினேன்.

உயிரை பறிக்கும் நோய் என்பதாலும், இந்த நோய்க்கு அவசர கவனம் தேவைப்படுவதாலும், என்னுடைய மரண செய்தி மூலம் இதற்கான கவனத்தை ஈர்க்க முயற்சி செய்தேன் என பூனம் பாண்டே தெரிவித்துள்ளார்.

மேலும் மற்ற புற்றுநோய்களை போல் அல்லாமல் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் முற்றிலுமாக குணப்படுத்த கூடியது என்றும் அவர் வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.

இறந்துவிட்டதாக தெரிவித்துவிட்டு, பூனம் பாண்டே இப்போது வீடியோ வெளியிட்டு இருப்பது பாலிவுட் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  
  
   Bookmark and Share Seithy.com


Ambikajewellers-01-08-2021-seithy
Rajeef sebarasha 2023/04/19
Asayan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Airlinktravel-2020-01-01
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Mahesan-Remax-169515-Seithy
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
NKS-Ketha-04-11-2021
Vaheesan-Remax-2016
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா