Untitled Document
April 27, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
புதிய கட்சி குறித்து நடிகர் விஜய் வழங்கியுள்ள விளக்கம்!
[Friday 2024-02-02 20:00]

தமிழகத்தின் முன்னணி நடிகரான விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ளார். நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற தன்னுடைய புதிய அரசியல் கட்சியின் பெயரை அதிகாரப்பூர்வமாக இன்று அறிவித்துள்ளார். அத்துடன் தமிழக வெற்றி கழகம் கட்சியின் தலைவராகவும் நடிகர் விஜய் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள 3பக்க அறிக்கையில், வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்கள் விரும்பும் அடிப்படை அரசியல் மாற்றத்திற்கு வழிவகுப்பது தான் நமது இலக்கு என்று நடிகர் விஜய் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக வெற்றி கழகம் கட்சியின் தலைவர் விஜய் வெளியிட்டுள்ள இந்த அறிக்கையிலேயே நான் ஏன் அரசியல் கட்சி தொடங்குகிறேன் என்ற விளக்கத்தை கூறியுள்ளார்.

அதில், நிர்வாக சீர்கேடுகள் மற்றும் “ஊழல் மலிந்த அரசியல் கலாச்சாரம்” ஒருபுறம் உள்ளது, மக்களை சாதி மத பேதங்கள் வாயிலாக பிளவுபடுத்த துடிக்கும் “பிளவுவாத அரசியல் கலாசாரம்” மறுபுறம் உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

சாதிமத பேதமற்ற, தொலைநோக்கு சிந்தனை உடைய லஞ்ச ஊழலற்ற திறமையான நிர்வாகத்திற்கு வழிவகுக்கக் கூடிய அடிப்படை அரசியல் மாற்றத்திற்காக தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் ஏங்கி கொண்டு இருக்கிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை.

இந்நிலையில் என்னுடைய தாய் தந்தைக்கு அடுத்து எனக்கு பெயர், புகழ் மற்றும் எல்லாமும் கொடுத்த தமிழ்நாட்டு மக்களுக்கும், தமிழ் சமுதாயத்திற்கும் என்ன முடிந்த வரையில் உதவ வேண்டும் என்ற என்னுடைய நீண்ட கால எண்ணம் மற்றும் விருப்பமாகும்.

ஒரு தன்னார்வ அமைப்பால் மட்டும் சமூக பொருளாதார அரசியல் சீர்திருத்தம் கொண்டு வர இயலாது, அதற்கு அரசியல் அதிகாரம் தேவைப்படுகிறது.

அரசியல் எனக்கு மற்றொரு தொழிலோ பொழுதுபோக்கோ அல்ல, ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ள திரைப்படத்தை முடித்துவிட்டு முழுமையாக அரசியலில் ஈடுபட உள்ளேன் என விஜய் தன்னுடைய அரசியல் பயணத்திற்கான காரணத்தை குறிப்பிட்டுள்ளார்.

  
  
   Bookmark and Share Seithy.com



தொகுப்பாளினியிடம் கடுப்பான சித்தார்த்!
[Saturday 2024-04-27 18:00]

சித்தார்த் எப்போதுமே கலகலப்பாக ஜாலியாக பேசக்கூடியவர். அதேபோல் மனதில் பட்டதை பட்டென்று பேசிவிடுவார். அப்படித்தான் தற்போது ஒரு கேள்விக்கு ஓப்பன் ஆக பதில் அளித்துள்ளார். அதன்படி சமீபத்தில் இவர் கலந்து கொண்ட பேட்டியில் பல கேள்விகள் முன்வைக்கப்பட்டது. அதில் என்னை ஒரு சக மனிதனாக நினைத்து பேசும் பெண்களிடம் நான் பேசுவேன்.



அஜித் பிறந்தநாளுக்கு காத்திருக்கும் தரமான 4 அப்டேட்!
[Saturday 2024-04-27 18:00]

அஜித்தின் பிறந்த நாள் மே ஒன்றாம் தேதி ஒவ்வொரு வருடமும் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். அந்த வகையில் கடந்த ஆண்டு அஜித்துக்கு சொல்லிக் கொள்ளும் அளவுக்கு சினிமாவில் படங்களின் புதுவரவு எதுவுமே இல்லை. துணிவு படத்திற்கு பிறகு அஜித்தின் படங்கள் ரிலீஸ் ஆகாததால் அவரது ரசிகர்கள் சிறு அதிருப்தியில் இருக்கின்றனர். ஆனாலும் 2024 ஆம் ஆண்டு அஜித்துக்கு பொன்னான ஆண்டாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.



விஷால், ஹரி கூட்டணி வெற்றி பெறுமா?
[Saturday 2024-04-27 06:00]

இயக்குனர் ஹரி மற்றும் விஷால் கூட்டணி ரத்னம் படத்திற்கு முன்னதாகவே தாமிரபரணி மற்றும் பூஜை படங்களில் வெற்றி பெற்றது. அதிலும் குறிப்பாக தாமிரபரணி படம் விஷாலின் கேரியரில் மிக முக்கியமான படமாக அமைந்தது.



சன் டிவி ரசிகர்களுக்கு ஓர் அதிர்ச்சி!
[Saturday 2024-04-27 06:00]

டிவி சேனல்கள் தற்போது போட்டிபோட்டுக்கொண்டு புதுப்புது சீரியல்களாக ஒளிபரப்ப தொடங்கி இருக்கின்றன. அதற்காக தற்போது ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்கள் பலவும் முடிக்கப்படுவது ரசிகர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தி வருகிறது.



கில்லி படத்தை தொடர்ந்து விஜய்யின் அடுத்த திரைப்படம் ரீ-ரிலீஸ்!
[Friday 2024-04-26 18:00]

முன்னணி நடிகர்களின் வெற்றிப் படங்கள் மீண்டும் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் ஆவது வழக்கமான ஒரு விஷயமாகிவிட்டது. அப்படி கடந்த சில தினங்களுக்கு முன் வெளியாகி வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கும் படம் விஜய்யின் கில்லி. தரணி இயக்கத்தில் விஜய்-த்ரிஷா நடிக்க 2004ம் ஆண்டு வெளியான இப்படம் திரையரங்குகளில் இப்போது வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கிறது.



15 நிமிடங்கள் நடிக்க இத்தனை கோடி சம்பளம் வாங்குகிறாரா கமல்ஹாசன்?
[Friday 2024-04-26 18:00]

நடிகர் கமல்ஹாசன் நடிப்பை தாண்டி பல விஷயங்களை தமிழ் சினிமா ரசிகர்கள் தெரிந்துகொள்ள காரணமாக இருந்தவர். நிறைய தொழில்நுட்ப விஷயங்களை முதல் ஆளாக அறிமுகம் செய்து வந்தார். நடிப்பு, நடனம், கதை, திரைக்கதை, பாடல்கள் என அனைத்திலும் மாஸ் காட்டக்கூடியவர். இப்போது இந்தியன் 2, தக் லைஃப், கல்லி 2898 என தொடர்ந்து நிறைய படங்கள் நடித்து வருகிறார்.



விஜய்யுடன் மூன்றாவது முறையாக கைகோர்க்கும் 31 வயது நடிகை!
[Friday 2024-04-26 18:00]

தளபதி விஜய்யின் கடைசி படம் குறித்து பல தகவல்கள் தொடர்ந்து வெளியாகிறது. ஆனால், அவை யாவும் அதிகாரப்பூர்வமான தகவலாக இல்லை. ஹெச். வினோத் இப்படத்தை இயக்கப்போகிறார் என கூறப்படுகிறது. ஆனால், இதுவரை இப்படத்திற்கான தயாரிப்பாளர் யார் என தெரியவில்லை. ஏ.ஜி.எஸ் மற்றும் பேஷன் ஸ்டூடியோ ஆகிய நிறுவனம் இப்படத்தை கைப்பற்று ஆர்வம் காட்டி வருவதாக பிரபல பத்திரிகையாளர் கூறியிருந்தார்.



காதலரை பிரேக்கப் செய்த நடிகை ஸ்ருதி ஹாசன்!
[Friday 2024-04-26 06:00]

நடிகர் கமல்ஹாசனின் மகள் ஸ்ருதி ஹாசன் இந்திய அளவில் பாப்புலரான நடிகை தான். தமிழ், தெலுங்கு படங்களில் முக்கிய நடிகையாக இருப்பது மட்டுமின்றி, சோலோ பாடல்கள் மூலமாகவும் அவர் பாப்புலராகி வருகிறார்.



உச்சகட்ட கவர்ச்சியில் ஷில்பா மஞ்சுநாத்! Top News
[Friday 2024-04-26 06:00]

இஸ்பேட் ராஜாவும் இதயராணியும் படத்தில் ஹீரோயினாக நடித்து அறிமுகம் ஆனவர் ஷில்பா மஞ்சுநாத். தற்போது அவர் செம ஹாட் உடையில் இருக்கும் அழகிய ஸ்டில்கள் இதோ...



பணத்தாசையால் தமன்னாவுக்கு ஏற்பட்ட விபரீதம்!
[Thursday 2024-04-25 18:00]

டாப் நடிகையாக வலம் வந்த தமன்னா தமிழ் சினிமாவில் மார்க்கெட் குறையவே அக்கட தேசம் சென்றுவிட்டார். ஆனால் நெல்சனின் ஜெயிலர் படத்தில் இடம்பெற்ற காவாலா பாடலின் மூலம் மீண்டும் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார்.



சிவகார்த்திகேயனுடன் மோத போகும் ஐயப்பனும் கோஷியும் நடிகர்!
[Thursday 2024-04-25 18:00]

சிவகார்த்திகேயன், ராஜ்குமார் இயக்கத்தில் கமல் தயாரிப்பில் உருவாகி வரும் அமரன் படத்தில் நடித்து வருகிறார். முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டு வருகிறது.



இரண்டாம் திருமணத்திற்கு தயாராகும் VJ ரம்யா?
[Thursday 2024-04-25 18:00]

விஜய் டிவியில் பிரபல தொகுப்பாளராக இருந்தவர் ரம்யா சுப்ரமணியன். அவர் தற்போது படங்களில் சின்ன சின்ன ரோல்களில் நடித்து வருகிறார். அது மட்டுமின்றி உடல் எடையை எப்படி குறைக்க வேண்டும் என பிட்னெஸ் ட்ரெயினிங் வகுப்புகளையும் நடத்தி வருகிறார் அவர். ரம்யா தீவிர ஒர்கவுட் செய்து தனது எடையை குறைத்து ஸ்லிம் ஆன தோற்றத்துக்கு மாறி இருப்பது குறிப்பிடத்தக்கது.



மஞ்சுமல் பாய்ஸ் பட நடிகரை கரம்பிடித்த நடிகை அபர்ணா தாஸ்!
[Wednesday 2024-04-24 18:00]

மஞ்சுமல் பாய்ஸ் பட நடிகர் தீபக் பரம்போலுக்கும் டாடா பட நடிகை அபர்ணா தாஸுக்கும் இன்று கேரளாவில் பாரம்பரிய முறைப்படி திருமணம் இடம்டிபெற்றுள்ளது. அபர்ணா தாஸின் திருமண புகைப்படங்கள் தற்போது இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது. அபர்ணா தாஸ் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்தில் ஒரு சின்ன ரோலில் நடித்து தமிழக மக்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை அபர்ணா தாஸ்.



தேர்தல் முடிந்த கையோடு டெல்லிக்கு போன கமல்!
[Wednesday 2024-04-24 18:00]

கமலைப் பொறுத்தவரை கமர்சியலாக நடித்து வெற்றி பெற்று லாபத்தை பார்க்க வேண்டும் என்று நினைக்கக் கூடியவர் அல்ல. எத்தனை வருடங்கள் ஆனாலும் பேசும் படமாக சாதனை படைக்க வேண்டும் என்று ஆசைப்படுபவர். அப்படி இவருடைய கேரக்டரில் எத்தனையோ படங்கள் இருக்கிறது. அப்படிப்பட்ட இவரை வைத்து மணிரத்தினம் 34 வருடங்களுக்கு முன் எடுத்த நாயகன் படம் இப்பொழுதும் பெயர் பெற்று வருகிறது.



அதற்காக பிளாஸ்டிக் சர்ஜரி செய்தாரா யாஷிகா ஆனந்த்? - அவரே சொன்ன தகவல்!
[Wednesday 2024-04-24 18:00]

ஜீவா நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான கவலை வேண்டாம் என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் தான் யாஷிகா ஆனந்த். இதையடுத்து இரண்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலமாக இளைஞர்கள் மத்தியில் பிரபலமானார்.


Kugeenthiran-200-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Asayan-Salon-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
NKS-Ketha-04-11-2021
Ambikajewellers-01-08-2021-seithy
Karan Remax-2010
Airlinktravel-2020-01-01
Vaheesan-Remax-2016
Rajeef sebarasha 2023/04/19
 gloriousprinters.com 2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா