Untitled Document
April 28, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
அரசியல் கட்சி தொடங்கிய விஜய்: சினிமா பயணம் தொடருமா?
[Friday 2024-02-02 20:00]

நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கி இருக்கும் நிலையில் இனி திரைப்படங்களில் நடிக்க போவது இல்லை என குறிப்பிட்டுள்ளார். நடிகர் விஜய் அரசியலுக்கு வரப் போவதை உறுதி செய்து இருப்பதோடு, தனது கட்சிக்கு தமிழக வெற்றி கழகம் என பெயரிட்டுள்ளார்.

விஜய் மக்கள் இயக்கம் மூலம் பல ஆண்டுகளாக மக்களுக்கு சேவையாற்றி வந்த நிலையில், நடிகர் விஜய் மக்கள் மன்றம் இன்று முதல் புதிய அரசியல் கட்சியாக உருவெடுத்துள்ளது.

அத்துடன் தமிழக வெற்றி கழகம் கட்சியின் தலைவராக நடிகர் விஜய் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சாதிமத பேதமற்ற, தொலைநோக்கு சிந்தனை உடைய லஞ்ச ஊழலற்ற திறமையான நிர்வாகத்திற்கு வழிவகுக்ககூடிய அடிப்படை அரசியல் மாற்றத்திற்காக தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் ஏங்கி கொண்டு இருக்கிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை.

எண்ணித் துணிக கருமம் என்பது வள்ளுவன் வாக்கு. அதன்படியே தமிழக வெற்றி கழகம் என்கிற பெயரில் எனது தலைமையிலான அரசியல் கட்சி துவங்கப்பட்டு இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய எமது கட்சியின் சார்பில் இன்று விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது.

வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்கள் விரும்பும் அடிப்படை அரசியல் மாற்றத்திற்கு வழிவகுப்பது தான் நமது இலக்கு என்று நடிகர் விஜய் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அந்த அறிக்கையில் என்னை பொறுத்தவரை அரசியல் மற்றொரு தொழில் அல்ல, அது புனிதமான மக்கள் பணி. எனவே அரசியல் எனக்கு பொழுதுபோக்கு அல்ல, அது என் ஆழமான வேட்கை.

அதில் என்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள விரும்புகிறேன் என தெரிவித்துள்ளார். அத்துடன் என் சார்பில் நான் ஏற்கனவே ஒப்புக் கொண்டுள்ள இன்னொரு திரைப்படம் சார்ந்த கடமைகளை, கட்சி பணிகளுக்கு இடையூறு இல்லாத வகையில் முடித்துவிட்டு முழுமையாக மக்கள் சேவைக்கான அரசியலில் ஈடுபட உள்ளேன்.

அதுவே தமிழ் நாட்டு மக்களுக்கு நான் செய்யும் நன்றி கடனாக கருதுகிறேன் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

  
  
   Bookmark and Share Seithy.com


Mahesan-Remax-169515-Seithy
Karan Remax-2010
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Vaheesan-Remax-2016
Airlinktravel-2020-01-01
 gloriousprinters.com 2021
Asayan-Salon-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
Ambikajewellers-01-08-2021-seithy
Kugeenthiran-200-2022-seithy
NKS-Ketha-04-11-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா