Untitled Document
April 28, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
எதை நோக்கிப் போகிறது ஈழத்து கலை கலாச்சாரம்? Top News
[Sunday 2023-11-12 13:00]

இயல், இசை, நாடகம், கலையிலும் அறிவிலும் ஆற்றலிலும் ஈழத்தமிழர்கள் சளைத்தவர்கள் அல்ல, பல கலை மேதைகள் நம் மண்ணில் இருந்திருக்கிறார்கள், ஏன் இந்திய திரைத்துறையிலும் கூட சாதித்து இருக்கிறார்கள். முதல் முதலில் கிறிஸ்தவ வேதாந்த நூலான Bible தமிழில் மொழிபெயர்த்தவர் இலங்கையை சேர்ந்த ஆறுமுகநாவலர். கலையரசு சொர்ணலிங்கம் ஐயா, A ரகுநாதன் ஐயா போன்ற பல பல கலைஞர்கள் எங்கள் கலைகளை, கலாச்சாரம் சீரழியாமல் வளரவேண்டும் என்று பல ஆண்டுகளாக பாடுபட்டனர். கலை உலகிலும் சரி, திரையுலகிலும் சரி பல தயாரிப்பாளர்கள், கலைஞர்கள் துறையை வளர்க்கப் படாத பாடு பட்டுள்ளனர்.

ஏறக்குறைய 50 ஆண்டுகள் எங்கள் விடுதலைப்போர் சூழல் காரணமாக கலைத்துறையிலோ, திரைத்துறையிலோ பெரும் செயல்பாடுகள் ஏதும் நடக்காத காரணத்தால் பெரும் வளர்ச்சியோ மாற்றமோ ஏற்டபடவில்லை. ஆனால் அந்த காலகட்டத்தில் கலாச்சார சீரழிவுகள் ஏதும் நடக்கவில்லை என்பது நாம் மறுக்கமுடியாத உம்மை, அதற்கு காரணம் என்ன என்பதும் நாம் நன்கறிவோம். கடந்த சில வருடங்களாக நமது தாய் மண்ணில் பெண்கள் அழகு நிலையங்கள் அதிகரித்து வருவதோடு, அதைச்சார்ந்த நிகழ்வுகளும், நிகழ்ச்சிகளும், பாடல்காட்சி காணொளிகளும் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன.

அவை நமது கலாச்சாரம் கெடாமல் இருக்கும் வரை எவருக்கும் எந்தவித கவலையும் இல்லை, ஆனால் இச்செயல்பாடுகள் நமது கலாச்சாரத்தை சீர்குலைக்கும் வகையில் உருவெடுக்கின்றது என்றால் அதைப்பற்றி நாம் சற்று கவனிக்கவேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது. நம் மண்ணில் கலைத்துறை, திரைத்துறை வளரவேண்டும், சந்தேகமே இல்லை, திரைத்துறை பொருளாதாரரீதியில் வெற்றியடைந்து வளராமல் கலைத்துறையில் யாரும் பெரும் வெற்றியைப் பெற முடியாது, ஒரு துறை வளர்ச்சியடைந்து இருக்கிறது என்றால் அத்துறையால் கலைஞர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் பொருளாதார ஆதாயம் இருந்தால் மட்டுமே அதை வளர்ச்சி, வெற்றி என்று நாம் ஏற்றுக்கொள்ள முடியும்.

முயற்சி என்பது வருட காலமாக வெற்றி இன்றி அதே இடத்தில் இருக்கிறதது என்றால் நாம் வெற்றிபெற, அதாவது நமது படைப்புக்களை உலகம் முழுதும் கொண்டு செல்ல என்ன செய்யவேண்டும் என்ற செயற்ப்பாட்டை முதலில் ஆராய்ந்து நடவடிக்கை எடுத்து செயல்படவேண்டும். வலுவான ஒரு துறையே இல்லாது, இந்திய பிரபலங்களைப் போல், நீங்கள் நாளைய பிரபலம் ஆகலாம் என்ற ஆசையைக்காட்டி நமது பெண்களின் ஆவலைத்தூண்டி, அவர்களை தவறாக உபயோகித்து, தவறான பாதையில் அழைத்துச்சென்று, பெண்களை துஷ்பிரயோகம் செய்து, சமுதாயத்தில் ஒரு சீரழிவை ஏற்படுத்தும் வகையில் நிகழ்வுகள் நடைபெறுமே ஆனால் இது ஒரு சீரழிந்த சமூகத்தை உருவாக்கிறது என்றாலே, அது ஒரு ஆரோக்கியமான மாற்றமாக இருக்க வாய்ப்பே இல்லை.

இந்நிகழ்வுகளால் யாருக்கு லாபம், என்ன லாபம்? எங்கு பார்த்தாலும் Beauty Parlour, Bridal shoot, பெண்களை அழகுபடுத்தி, ஆசை காட்டி தாங்கள் பணம் சம்பாதிக்க வேண்டும் என்று ஒரு கூட்டம் கிளம்பி உள்ளது, அதே பெண்களை நட்சத்திரம் ஆக்குகிறோம் என்று ஆசை காட்டி வெளிநாட்டில் இருந்து வந்து அழகுராணி போட்டிகளை நடத்தி அதில் இருந்து பெண்களை துஷ்பிரயோகம் செய்வதோடு ஆள்கடத்தல் செய்து அதன்மூலம் பணம் சம்பாதிக்கும் நோக்கில் ஒரு கும்பல் இறங்கி உள்ளது, மொத்தத்தில் பாதிக்கப்படுவது பெண்களைப்பெற்ற பெற்றோற்களும், பிரபலம் ஆகவேண்டும் என்ற மோகம் கொண்ட இளம் பெண்களும், நமது கலாச்சாரமும்தான்.

ஒரு அமைப்பு திருமணம் சம்மந்தமான ஒரு நிகழ்வு நடத்துகிறது, திருமணம் செய்யும் பெண்களை என்ன உடை அணியவேண்டும் என்று ஒரு வரைமுறை உள்ளது அல்லவா? ஆனால் அந்நிகழ்வில், மேடையில் வரும் பல பெண்கள் இந்திய கவர்ச்சிநடிகை அணியும் உடை போல் அணிந்து பவனிவருவது என்ன அவசியம்? அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து திருமணங்கள் நடந்தது போக அருந்ததியே, மாற்று மோதிரம் கலாச்சாரத்ததை கொச்சைப்படுத்தும் அளவிற்கு அழகு நிலையங்கள் வடிவமைக்கும் ஆடைகளை ஆங்கீகரித்து மேடையேற்றி நமது திருமண கலாச்சாரத்தையே கொச்சைப்படுத்தும் அளவிற்கு ஏன் கவர்ச்சி கலாச்சாரம் நமது மண்ணில் ஊடுருவுகிறது?

புலன்பெயர்ந்த நாட்டில் இருந்து ஒரு கூட்டம் தாய் மண்ணில் இறங்கி இருக்கிறது, இவர்கள் வசிக்கும் நாட்டில் ஏற்கனவே இவர்களைப்பற்றி பல சர்ச்சைகள் இருப்பது அந்நாட்டில் வாழும் சிலரின் பதிவுகளில் இருந்து தெரியவந்தது. இந்த கூட்டம் இலங்கையில் வசிக்கும் பெண்களுக்கு பண ஆசையையும், வெளிநாட்டுப்பயணம் என்ற ஆசையையும் மற்றும் நீங்கள் நாளைய பிரபலம் ஆகலாம் என்ற ஆசையையும் காட்டி பல அழகுராணி நிகழ்வுகளை நடாத்தி வருகிறது, பெண்களும் இவர்களின் உள்நோக்கம் அறியாமல் சமூகவலைத்தள பிரபலத்திற்கு ஆசைப்பட்டு, இவர்கள் இழுக்கும் திசையெல்லாம் சென்றுகொண்டு இருக்கிறார்கள். அது மட்டுமின்றி, வெற்றியைக் கொண்டாடும் பெயரில் ஒரு இரவுநேர கேளிக்கை விடுதிகளில் குடியும், போதைப்பொருட்களும், குத்தாட்டமும்.

ஒரு நிகழ்ச்சி நடாத்தும் போது அந்நிகழ்ச்சி பற்றிய செய்திகள் மக்களை சென்றடையவேண்டும் என்றால், பிரபலமாக வேண்டுமென்றால், நிகழ்ச்சி பற்றிய செய்திகள் சமூக வலைத்தளங்களில் பகிரப்படவேண்டும் அல்லவா? இதில் வேடிக்கையும் அதிசயம் என்னவென்றால், இந்நிகழ்வுகளை நடாத்தும் நபர்களும், முன்னின்று செயல்பாடுகளை பொறுப்பெடுத்து நடாத்தும் நபர்களும் அவர்களின் முகநூலில் அவர்கள் அன்றாட வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களையும், அவர்கள் கலந்துகொள்ளும் வேறு நிகழ்வுகளைப்பற்றி உடனுக்குடன் பகிரும் இவர்கள், இவர்கள் நடாத்தும் குறிப்பிட்ட நிகழ்ச்சிகள் பற்றி பதிவுகளைப் பகிர்வதில்லை, இச்செயல்பாடு நமது சந்தேகங்களை இன்னும் அதிகரிக்க வைக்கின்றது.

இதுபற்றி விசாரித்ததில், சில பொறுப்பாளர்கள் பெண்களை கூட்டிக்கொடுத்து பணம் சம்பாதிப்பதாகவும், இலங்கையில் சில முன்னணி தொலைக்காட்சிகள் இக்குழுக்கள் செயல்பாடுகள் கருதி, தமது தொலைக்காட்சியில் இவர்கள் நிகழ்ச்சிகளோ, செய்திகளோ வராமல் தடை செய்துள்ளதாக தகவல் கிடைத்தது. கலாச்சார உடையையொட்டி ஒரு நிகழ்ச்சி நடாத்துகிறோம் என்று கூறிவிட்டு ஒத்திகைகளில் அதே பெண்களை அரைகுறை உடையில் பார்த்து ரசிக்கும் கும்பல் எப்படி எமது கலாச்சாரத்தை பாதுகாக்கப்போகிறது? அவர்களுக்கு தேவை, ஒன்று பணம், இன்னொன்று பெண்களுடன் உல்லாசம், இதைத்தான் வளர்ச்சி என்பதா? இதுதான் கலையை வளர்ப்பதா? இதற்க்கெல்லாம் யாரை குறை கூறுவது.... அரசாங்கத்தையா? பிரபலம் , சமூக வளைதள மோகம் கொண்ட இளைய சமூகத்தையா? சுதந்திரம் என்ற பெயரில் தமது பிள்ளைகளை கட்டுப்படுத்த முடியாமல் தவிக்கும் பெற்றோர்களையா? பெண்ணாசையும், பொன்னாசையும் கொண்டு வெளிநாடுகளில் இருந்து தாய் நாடு வந்து சமூகத்தை ஆசை காட்டி வேஷம் போடும் துரோகிகளையா? தங்கள் வியாபாரத்துக்காக சமூக சீரழிவை நடாத்தும் வளர்ந்துவரும் அழகு நிலையங்களையா? இருப்பவர்கள் இருந்திருந்தால் இச்சீரழிவு நடந்திருக்குமா? விழித்தெழ வேண்டியது யார்? விழித்தெழு... விழித்தெழு பெண்ணே... விழித்தெழுங்கள் உறவுகளே...

  
  
   Bookmark and Share Seithy.com


Vaheesan-Remax-2016
Asayan-Salon-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
NKS-Ketha-04-11-2021
Rajeef sebarasha 2023/04/19
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Kugeenthiran-200-2022-seithy
Airlinktravel-2020-01-01
 gloriousprinters.com 2021
Mahesan-Remax-169515-Seithy
Karan Remax-2010
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா