Untitled Document
April 26, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
குத்துச்சண்டை வீராங்கனையாக நடிக்கும் நிகிஷா!
[Tuesday 2018-02-20 17:00]

அழகும், அறிவும், அனுபவமும் மட்டும் ஒரு நடிகையை முன்னணிக்கு கொண்டுவரப் போதாது. ஏழு ஆண்டுகளாக முழுத்திறமையை தமிழிலும், தெலுங்கிலும் காட்டியும்கூட இன்னமும் நிகிஷா படேல் தன் இருப்பை தக்கவைத்துக் கொள்ள போராடிக் கொண்டிருக்கிறார். கட்டி வா என்றால் வெட்டி வருமளவுக்கு கிளாமரை அள்ளித் தருபவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழில் தலைவன், என்னமோ ஏதோ படங்களில் தலை காட்டியவர் இப்போது கரையோரம், நாரதன், 7 நாட்கள் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கில் ஆக்‌ஷன் ரோல் ஒன்றில் புக் ஆகியிருக்கிறாராம். முகுல்தேவ் வில்லனாக நடிக்கும் இந்தப் படத்தின் மூலம் தான் தென்னிந்தியாவின் முன்னணி நட்சத்திரமாக மிளிர முடியும் என்று நம்புகிறார்.

அந்தப் படத்தில் குத்துச்சண்டை வீராங்கனையாக நடிக்கிறேன். நீண்டகாலமாகவே ஆக்‌ஷன் வேடங்களில் நடிக்க வேண்டுமென்ற ஆசை இருந்தது. அது இப்போது நிறைவேறியிருக்கிறது. இதைத் தொடர்ந்து ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தரும் வேடங்களையே ஒப்புக் கொள்வேன் என்று தில்லாகப் பேசுகிறார் நிகிஷா.

  
  
   Bookmark and Share Seithy.com


Rajeef sebarasha 2023/04/19
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Mahesan-Remax-169515-Seithy
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
NKS-Ketha-04-11-2021
Airlinktravel-2020-01-01
Karan Remax-2010
Asayan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா