Untitled Document
April 27, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
தாயகத்திலும் கொண்டாடப்பட்ட கனடாவின் 150து பிறந்த தினம்! Top News
[Friday 2017-07-07 09:00]

பல்லாயிரக்கணக்கான கனடியர்கள் கனடாவின் தலைநகர் ஒட்டாவாவில் திரண்டு கனடாவின் 150வது பிறந்தநாள் விழாவை மிகக் கோலாகலமாகக் கொண்டாடினார்கள். கனடாவின் பிரதான நகரங்கள் பலவற்றிலும் குறிப்பாக ரொறன்ரோவிலும்கூட மிகப் பெரிய அளவில் கனடா தினம் கொண்டாடப்பட்டது.

ஈழத்தமிழர்கள் பல ஆயிரக்கணக்கில் வாழும் கனடா நாட்டின் இந்த முக்கிய நிகழ்வை எமது தாயக உறவுகளுடனும் கொண்டாடி மகிழ கனடிய தமிழர் நிவாரணம் நடவடிக்கைகளை மேற்கொண்டது. சுனாமி பாதிப்பின்போதும் முள்ளிவாய்க்கால் உட்பட பல்வேறு அனர்த்தங்களின்போதும் தாயக மக்களுக்கு பல உதவிகளை வழங்கிய கனடிய தமிழர் நிவாரணம் இளவாலையில் இயங்கும் வசதியற்ற சிறுவர்களுக்கான பராமரிப்பு நிலையத்தில் வாழும் சிறுவர் சிறுமியர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 150 இளையவர்களுக்கு சிறந்த மதிய உணவும் வைப்பில் வைத்து அவர்கள் பராமரிப்பிற்குச் செலவிடுவதற்கென குறிப்பிட்ட தொகைப் பணமும் வழங்கினார்கள்.

ஸ்காபரோ-கில்வூட் தொகுதியில் புறோகிறசிவ் கொன்சவ்வேட்டிவ் கட்சியின் வேட்பாளர் தெரிவிற்குப் போட்டியிடும் திரு.குயின்ரஸ் துரைசிங்கம் அவர்களும்க னடிய தமிழர் நிவாரணத்துடன் இணைந்து இந்த நிதிக்குப் பங்களித்ததுடன் இந்த ஏற்பாடுகளை முழுமையாக ஒழுங்கமைத்தார்.

கனடாவிற்கு நன்றி கூறும் வழிபாடுகளைத் தொடர்ந்து மதிய உணவை சுவைத்து மகிழ்ந்தனர் சிறுவர்கள். அந்நிகழ்வின்போது எடுத்த படங்களை இங்கே பார்க்கலாம்.

  
  
   Bookmark and Share Seithy.com


Rajeef sebarasha 2023/04/19
 gloriousprinters.com 2021
Airlinktravel-2020-01-01
Vaheesan-Remax-2016
Logan-Kumaresh-Homelife-02-02-2021
NKS-Ketha-04-11-2021
Mahesan-Remax-169515-Seithy
Karan Remax-2010
Asayan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா