Untitled Document
April 26, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
கனடியத் தலைநகரை அதிர வைத்த தமிழர் கொண்டாட்டம்: Top News
[Tuesday 2017-07-04 20:00]

கனடாவின் 150வது பிறந்த தினக் கொண்டாட்டத்தினை, கனடா தினமான ஜூலை 1ந்திகதியும் அதற்கடுத்த நாளான 2ம் திகதியும் கனடியத் தமிழர்கள் தலைநகரில் வைத்துக் கோலாகலமாகக் கொண்டாடினர். ரொறன்ரோ, ஒட்டாவா, மொன்றியல், கிங்ஸ்ரன் ஆகிய நகரங்களில் வாழும் தமிழ் மக்கள் ஆயிரக் கணக்கில தலை நகரில் குழுமியிருந்தனர். 86ம் ஆண்டு கனடாவிற்கு வந்த தமிழ் அகதிப் படகும் ஒட்டாவா பாராளுமன்றத்திற்கு மிக அருகிலிருந்த Dominion-Chalmers church முன்றலில் காட்சிக்கு வைக்கப்பட்டது.

ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உட்பட 155 தமிழ் மக்களை காப்பாற்றிய அனைவருக்கும் தமிழ்க் கனடியர்கள் சார்பில் நன்றி தெரிவிக்கும் விதமாகவும், தமிழர் பாரம்பரிய விழுமியங்களை சக கனடியர்களுக்கு எடுத்துக்காட்டும் விதமாகவும் இந்த நிகழ்வை கனடியத் தமிழர் பேரவை ஒழுங்கு செய்திருந்தது. 155 அகதிகள் காப்பாற்றபட்ட சம்பவம் கனடிய வரலாற்றிலும், தமிழ் மக்கள் வரலாற்றிலும் நிலைத்து நிற்கும் என்ற வகையில், கனடா மத்திய அரசு, ஒன்ராறியோ மாகாண அரசு ஆகியவற்றின் நிதி ஆதரவுடன் கனடா 150 கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக இந்த படகுக் கண்காட்சி நடத்தப்பட்டது.

நாதஸ்வரம் இசைக்கப்பட்டு கனடா தேசிய கீதம் பாடப்பட்ட பின்னர் ஒட்டாவா பூர்வ குடியினர் நட்புறவு மையத்தின் மூத்த தலைவரான Terry McKay அவர்கள் பூர்வகுடிகளின் பிரார்த்தனைகளைச் செய்து, அனைவருக்கும் ஆசி வழங்கிக் கொண்டாட்ட நிகழ்வை ஆரம்பித்து வைத்தார். கனடிய தமிழர் பேரவையின் முன்னாள் தலைவரான ராஜ் தவரட்ணசிங்கம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க, தலைவர் டொக்டர் சாந்தகுமார் வரவேற்புரையை நிகழ்த்தினார். தமக்குச் சொந்தமான நிலத்தில் தமிழ் மக்கள் வாழ்வதை வரவேற்கும் பூர்வ குடியினருக்கு தமிழ் மக்கள் சார்பில் நன்றி சொல்்லும் வகையில் ஒரு நினைவுப் பரிசிலையும் Terry McKay அவர்களுக்கு டொக்டர் சாந்தகுமார் வழங்கினார்.

தொடர்ந்து பிரெஞ்ச் மொழியிலமைந்த வரவேற்புரை லக்ஸ்மி ஜெயவேல் அவர்களால் நிக‌ழ்த்தப்பட்டது. தொடர்ந்து Ottawa Centre சட்டசபை உறுப்பினரும், அட்டர்னி ஜெனரலுமான கௌரவ Yasir Naqvi அவர்களும், Ottawa West-Nepean பாராளுமன்ற உறுப்பினரான Anita Vandenbeld அவர்களும், ஒட்டாவா போலிஸ் பிரிவினரின் சமூகங்களுக்கிடையிலான உறவு மேம்பாட்டு அதிகாரி David Zackrais அவர்களும் உரையாற்றினர். அதன்பின் ரொறன்ரோ, ஒட்டாவா நகரில் இயங்கிவரும் நடனக் குழுக்களால் பரத நாட்டியம், ‌நாட்டுப்புற நடனம், நவீன நடனம் என பல்வேறு நடனங்களும் நடத்தப்பட்டு வந்தோரைக் குதூகலத்தில் ஆழ்த்தின. வேற்றின மக்கள் தமிழ் பாடல்களுக்கு தாமும் ஆட ஆரம்பித்தனர். இரண்டாம் நாள் நிகழ்வில் ஸ்காபரோ ரூஜ்பார்க் பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்த சங்கரியும் வந்து கலந்து கொண்டார்.

இரண்டு தினங்களும் 86ம் ஆண்டு அகதிப்படகை வேற்று இனத்தவர் பிரமிப்புடன் பார்த்துச் சென்றனர். அந்தப் படகிலும், அதே அளவிலிருந்த மற்றப் படகிலும் 155 தமிழர் கனடாவிற்கு வந்த கதை பார்வையாளர்ளை நெகிழ வைத்தது. அகதிகளைக் காப்பாற்றிய மீன்பிடிக் கப்பலின் கப்டன் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார். ஆயினும் முதுமை காரணமாக உடல் நலம் குன்றியிருக்கும் அவரை பிரதிநிதித்துவப்படுத்தி அவரது இரண்டு மகள்களும் நியூபவுண்லாந்திலிருந்து பிரத்தியேகமாக வந்து இந்தக் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டனர். நன்றி மறவாமல் தம்மை கௌரவிக்கும் தமிழ் மக்களுக்கும், நிகழ்வை ஒழுங்கு செய்த கனடியத் தமிழர் பேரவைக்கும் உணர்ச்சி பொங்க அவர்கள் நன்றி தெரிவித்தனர்.

தமிழ் அகதிப்படகின் கதையை சொல்லும் ஆங்கில, பிரெஞ்ச் மொழியிலமைந்த பிரசுரமும் ஒன்றும் ஆயிரக்கணக்கான பிரதிகள் அச்சிடப்பட்டு அனைவருக்கும் தரப்பட்டது. மேலும் தமிழரின் சிற்றுண்டி என்ற அறிமுகத்துடன் முறுக்கு, சிப்பிப்பலகாரம், பகோடா போன்ற உணவுகளும் சிறு பைகளில் இடப்பட்டு கனடா தினத்தை கொண்டாட வந்தோர்க்கு வழங்கப்பட்டன. அதைச் சுவைத்த வேற்றின மக்கள் பலரும் மீண்டும் மீண்டும் நம் சிற்றுண்டிகளை பெற்றுச் சென்றதையும் அனைவரும் மகிழ்வுடன் காணக்கூடியதாக இருந்தது. இவற்றுடன் தமிழ்ப் பாடல்கள் முழங்க, flashmob என அழைக்கப்படும் திடீர் வீதி நடனங்களையும் ஒட்டாவா நகரின் மத்திய பகுதியில் நமது நடனக்குழுவினர் ஆடிக்காட்டி அதிரவைத்தனர்.

  
  
   Bookmark and Share Seithy.com



நல்லூரில் வாழும் பழங்குடியின மக்களின் பல்வேறு பிரச்சினைகளை ஆராய விசேட குழு! Top News
[Monday 2024-04-08 22:00]

மூதூர் பிரதேச செயலகத்திற்குட்பட்ட நல்லூரில் வாழும் பழங்குடியின மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ள நிலையில் அவர்களது உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதிப்படுத்த உடனடியாக விசேட குழுவொன்றை நியமிக்க திருகோணமலை அரசாங்க அதிபருக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் உத்தரவிட்டுள்ளார். நல்லூரைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் அண்மையில் திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் நல்லூரில் தங்களின் வாழ்வாதார அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளமை குறித்து கிழக்கு ஆளுநரிடம் முறைப்பாடு செய்திருந்தனர்.



34ஆவது அகவை நிறைவின் மகிழ்வில் தமிழ்க் கல்விக் கழகம்-யேர்மனி! Top News
[Monday 2024-04-08 22:00]

தமிழினம் புலம்பெயர்ந்து உலகெங்கும் பரந்து வாழும் சூழலில், தமது அடையாளத்தை அடுத்த தலைமுறை தொலைத்துவிடாதிருக்க தாய்மொழியைக் கற்பித்தல் அவசியம் என்ற உயர்சிந்தனையின் விளைவாகத் தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் தமிழ்மொழியைக் கற்பிக்கும் செயற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. யேர்மனியிலும் தமிழ்க் கல்விக் கழகம் 100க்கு மேற்பட்ட தமிழாலயங்களை அமைத்துத் தமிழ்மொழி, கலை, பண்பாடு என்பவற்றை ஊட்டிவரும் செயற்பாட்டில் 34 ஆண்டுகளைத் தொட்டுநிற்கிறது.



செங்கலடி இலுப்படிச்சேனையில் வர்த்தக நிலையங்களை திறந்து வைத்த கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான்! Top News
[Monday 2024-04-08 06:00]

செங்கலடி இலுப்படிச்சேனையில் உள்ளுர் தொழில் முயற்சியாளர்களை மேம்படுத்தும் நோக்கில் வர்த்தக நிலையங்களை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் திறந்து வைத்தார். 22 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட கிராமிய வர்த்தக நிலையங்கள் மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.



ஏறாவூர்பற்றில் மாதுளை சேகரிப்பு மற்றும் பதப்படுத்தும் நிலையம் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் திறந்து வைப்பு! Top News
[Sunday 2024-04-07 08:00]

விவசாயிகள் மத்தியில் பழச் செய்கையை ஊக்குவிக்கும் நோக்கில் மாதுளை சேகரிப்பு மற்றும் பதப்படுத்தும் நிலையத்தை ஏறாவூர் பற்று பிரதேசத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் திறந்து வைக்கப்பட்டது. விவசாயிகளின் விளைச்சலை அதிகரிப்பதற்காக விவசாயச் சங்கங்களுக்கு விவசாய உபகரணங்களையும், மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகளுக்கும் உபகரணங்களையம் ஆளுநர் வழங்கி வைத்தார்.



கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் வவுணதீவு வீதி திறந்து வைப்பு! Top News
[Friday 2024-04-05 06:00]

140 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு வீதி கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் திறந்து வைக்கப்பட்டதுடன், மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன்,கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோபாலரத்தினம் உட்பட அரச அதிகாரிகள் கலந்துக்கொண்டனர்.



கனடிய தமிழர் பேரவையின் மகளிர் தின கொண்டாட்டங்கள்! Top News
[Thursday 2024-03-28 21:00]

கனடிய தமிழர் பேரவையின் மகளிர் தின கொண்டாட்டங்கள் மார்ச் 24, 2024 அன்று இடம்பெற்றது. இந்நிகழ்வானது கனடாவில் உள்ள தமிழ் சமூகத்திற்குள்ளும் அதற்கு அப்பாலும் பெண்களின் குறிப்பிடத்தக்க சாதனைகள் மற்றும் பங்களிப்புகளைக் கொண்டாடும் வகையில் அமைந்திருந்தது. பாரம்பரிய மங்கள விளக்கு ஏற்றுதல் கலாச்சார முக்கியத்துவத்துடன் ஆரம்பமான நிகழ்வு கனேடிய தேசிய கீதம் மற்றும் தமிழ் தாய் வாழ்த்து பாடுவதன் மூலம் நமது இரட்டை பாரம்பரியத்தையும் கலாச்சாரங்களின் இணக்கமான கலவையையும் பிரதிபலித்து தொடர்ந்தது.



யேர்மனி தமிழ்ப் பெண்கள் அமைப்பினரால் டோட்முன்ட் நகரில் நடத்தப்பட்ட வாகைமயில் 2024! Top News
[Friday 2024-03-22 18:00]

யேர்மனியில் ஆண்டுதோறும் வாகைமயில் என்னும் நடனப்போட்டியைத் தமிழ்ப் பெண்கள் அமைப்பு நடத்தி வருவது யாவரும் அறிந்ததே. இம்முறை டோட்முன்ட் நகரில் 16.03.24 சனி, 17.03.24 ஞாயிறு ஆகிய இரண்டு நாள்களும் தெரிவுப்போட்டிகளின்றி நிறைவுப்போட்டியாகப் பதினொரு ஆண்டுகளை நிறைவு செய்தபடி வாகைமயில் வெகு சிறப்பாகத் தோகை விரித்தாடியது. யேர்மனியில் உள்ள நடன ஆசிரியர்களால் பயிற்றப்பட்ட அவர்களின் மாணவ மாணவிகள் ஒருவரை ஒருவர் மிஞ்சிய வகையில் களம் கண்டனர். இவர்கள் அற்புதமான பதங்களுடன் பல வண்ணங்கள் உடுத்தித் தேர்போல (இரதங்கள்) அழகாக அசைந்து, மிதமான அணிகளோடு அவையில் இதமான பரதத்தால் நவரசம் தந்தது மண்டபம் நிறைந்த மக்களின் வரவேற்பைப் பெற்றிருந்தது. பிரான்சு, சுவிற்சலாந்து ஆகிய நாடுகளிலிருந்து வருகை தந்திருந்த திறமையும் பட்டறிவும்(அனுபவம்) வாய்ந்த நடுவர்களால் போட்டிகள் நடுவம் செய்யப்பட்டு, மதிப்பளிப்புகளும் வாகைமயில் விருதுகளும் வழங்கப்பட்டன.



இளம் இலங்கை தொழில் முனைவோர் பேரவையின் ரஜத ஜெயந்தி மாபெரும் மாநாடு! Top News
[Wednesday 2024-03-13 06:00]

COYLE அல்லது இளம் இலங்கை தொழில் முனைவோர் பேரவையின் ரஜத ஜெயந்தி மாபெரும் மாநாடு நேற்று (10) ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்றது. இந்த ஆண்டு மாநாடு 25 வது முறையாக நடைபெற்றது. COYLE அல்லது இளம் இலங்கை தொழில் முனைவோர் பேரவை மார்ச் 10, 1999 இல் ஆரம்பிக்கப்பட்டது. "இன்றிலிருந்து முழு மனதுடன் தயாராவோம்" என்பதே இந்த ஆண்டு ரஜத ஜெயந்தியின் கருப்பொருளாக அமைந்துள்ளது.



கல்விக்கு முதலிடம், தமிழர் ஐக்கியத்துக்கு சிறப்பிடம், இரண்டிலும் கனடிய தமிழர், உலகத்தமிழருக்கு வழிகாட்டி - தெஹியோவிற்ற தமிழ் வித்தியாலய விஞ்ஞானகூட அங்குராப்பணம் தொடர்பில் மனோ கணேசன்! Top News
[Tuesday 2024-03-05 06:00]

இன்று, தமிழர்களாகிய எங்கள் ஒரே ஆயுதம், கல்வி. அதேபோல் எங்கள் ஒரே சிந்தனை தமிழ் ஒற்றுமை. இந்த இரண்டு கொள்கைகளையும் முன்னெடுத்து, கனடா தமிழர் பேரவை, அமெரிக்கா முதல் ஐரோப்பா, ஆசியா ஊடாக ஆஸ்திரேலியா வரை உலகம் முழுக்க பரவி, விரவி வாழ்கின்ற தமிழருக்கு, முன்மாதிரியாக நின்று வழி காட்டி உள்ளது. இந்த இரு கொள்கைகளின் அடையாளமாகவே, இங்கே இன்று இந்த மலையக தமிழரினுள் வரும் பெருந்தோட்ட பிள்ளைகள் பயிலும், தெஹியோவிற்ற தமிழ் மகாவித்தியாலய விஞ்ஞானகூடம் கட்டப்பட மற்றும் உபகரணங்கள் வழங்க, கனடா மற்றும் அமெரிக்கா வாழ் தமிழர்கள் மத்தியில் நிதி சேகரித்து, கனடா தமிழர் பேரவை சாதித்து காட்டியுள்ளது என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் கூறியுள்ளார்.



சிகரம் தொட்ட தமிழ்த்திறன் போட்டியின் முத்தகவை நிறைவு! Top News
[Tuesday 2024-03-05 06:00]

1993ஆம் ஆண்டு மாமனிதர் இரா. நாகலிங்கம் ஐயா அவர்களினால் வித்திடப்பட்ட தமிழ்த்திறன் போட்டி, தமிழ்க் கல்விக் கழகத்தின்; வரலாற்றுத் தடங்களில் தனக்கெனத் தனிச்சிறப்புடன் வெற்றி நடைபோட்டு வருகிறது. தமிழாலயங்களில் தமிழ் பயின்றுவரும் மாணவர்களில் மொழித்திறனாளர்கள், உரையாற்றளாளர்கள், கட்டுரைத்திறனாளிகள், வரைஞர்கள் போன்ற வளமிக்க ஆற்றலாளர்களைக் கண்டறிவதும் அவர்களைச் சிறந்தவர்களாக உருவாக்குவதும் தமிழ்த்திறன் போட்டியின் இலக்காகக் கொண்டு ஆண்டுதோறும் நடாத்தப்பட்டுவருகிறது.



திரு.இரா மனோகரன் அவர்களுக்கு “தமிழ்த்திறனாளன்” மதிப்பளிப்பு – தமிழர் ஒருங்கிணைப்புக் குழு யேர்மனி! Top News
[Monday 2024-03-04 06:00]

02.03.2024 அன்று யேர்மனியின் தமிழ்க் கலவிக்கழகத்தினால் முன்சன்கிளட்பாக் நகரில் நடாத்தப்பட்ட தமிழ்த்திறன் போட்டியின் முப்பாதவது அகவை நிறைவு விழாவின் போது யேர்மனியின் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவினால் சிறப்பு மதிப்பு நிகழ்வு ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது.



இன்றிலிருந்து ஒன்ராறியோவில் அமுலுக்கு வரும் 'ஒற்றைக்கட்டண' திட்டம்! Top News
[Tuesday 2024-02-27 06:00]

இன்று முதல் ஒன்ராறியோ பொதுப்போக்குவத்துச் சேவையில் 'ஒற்றைக்கட்டண' திட்டம் அமுலுக்கு வருகின்றது. இன்று தொடக்கம் ரொறன்ரோ பொதுப்போக்குவரத்துச் சேவை (TTC) மற்றும் ரொறன்ரோ பெரும்பாகத்திலுள்ள 'கோ' (GO) போக்குவரத்துச் சேவை உட்பட இத்திட்டத்தில் பங்குபற்றும் அனைத்து சேவைகளுக்குமிடையில் பயணிக்கும் பயணிகள் ஒருமுறை மட்டும் கட்டணம் செலுத்தினால் போதும். இது பற்றி ஒன்ராறியோ முதல்வர் டக் ஃபோர்ட் அவர்கள் “ஒன்ராறியோ அரசானது, அனைத்து போக்குவரத்துப் பயணிகளுக்கும் அவர்களின் சொந்தப் பணத்தை சேமித்து மீண்டும் அவர்களுக்குத் திருப்பிக் கொடுக்கின்றது" என கூறுகின்றார்.



வவுனியாவில் இடம்பெற்ற மேழி எழுபது பிரமாண்ட விழா! Top News
[Tuesday 2024-02-27 06:00]

எழுத்தாளர் கலாநிதி மேழிக் குமரனின் எழுபது அகவையையும் ஐம்பதாண்டு இலக்கிய பயணத்தையும் முன்னிட்டு இரு நூல்கள் வெளியீட்டு நிகழ்வு (25.02.2024) காலை 9 மணிக்கு வவுனியா நகரசபை கலாச்சார மண்டபத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது. வவுனியா தமிழ்ச் சங்கத்தின் நிறுவுனர், தமிழருவி த.சிவகுமாரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக வவுனியா பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் த.மங்களேஸ்வரன், சிறப்பு விருந்தினர்களாக ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், கல்வி அமைச்சின் ஓய்வு நிலை மேலதிக செயலாளர் உடுவை எஸ்.தில்லை நடராஜா, கௌரவ விருந்தினர்களாக வவுனியா தேசிய கல்வியற் கல்லூரியின் ஓய்வு நிலை பீடாதிபதி க.பேர்ணாட், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளர் ந.சிவசக்தி ஆனந்தன், இலக்கியவாதிகள்,சமூக ஆர்வலர்கள்,திணைக்கள உத்தியோகத்தர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.



‘ஒற்றைக்கட்டண’ திட்டம்! Top News
[Thursday 2024-02-08 18:00]

கடந்த திங்கட்கிழமையன்று, ஒன்ராறியோ முதல்வர் டக் ஃபோர்டும் போக்குவரத்து இணை அமைச்சர் விஜய் தணிகாசலமும் இணைந்து ஒன்ராறியோ அரசாங்கம் பொதுப் போக்குவரத்துப் பயணிகளுக்கான செலவைக் குறைப்பதற்காக 'ஒற்றைக்கட்டண' திட்டம் ஒன்றினை அறிவித்தனர். இந்த 'ஒற்றைக்கட்டண' நடைமுறை மூலம் சராசரியாக 1,600 டொலர்களை பயணிகள் சேமிப்பர். பிப்ரவரி 26, 2024 முதல், ரொறன்ரோ பொதுப்போக்குவரத்துச் சேவை (TTC) மற்றும் ரொறன்ரோ பெரும்பாகத்திலுள்ள 'கோ' (GO) போக்குவரத்துச் சேவை உட்பட இத்திட்டத்தில் பங்குபற்றும் அனைத்து சேவைகளுக்குமிடையில் பயணிக்கும் பயணிகள் ஒருமுறை மட்டும் கட்டணம் செலுத்தினால் போதும்.



தமிழ் மரபுத் திங்கள் 2024! Top News
[Thursday 2024-02-01 21:00]

நாடுகடந்த தமிழீழ அரசாங்கமும் தமிழ் மரபத்திங்கள் செயலவையும் இணைந்து 28/01/2024இல் தமிழ் மரபுத் திங்கள் நிகழ்வு வெகு சிறப்பாகவும், கோலாகலமாகவும் நடைபெற்றது. நிகழ்வின் ஆரம்பத்தில் கனடாவின் பூர்வகுடி மக்களுக்கான அங்கீகாரம் செலுத்தப்பட்டு கனேடிய மத்திய பாராளுமன்ற உறுப்பினர், மாகாண உறுப்பினர்கள் ,மாநகர, நகர சபை உறுப்பினர்கள் மற்றும் கல்விச்சபை உறுப்பினர்கள் ,கலைஞர்கள், ஏராளமான பொது மக்கள் முன்னிலையில் கனேடிய தேசியக் கொடி ஏற்றப்பட்டு அடுத்து தமிழீழத் தேசியக் கொடி ஏற்றப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டு மிகவும் சிறப்பாக நிகழ்வுகள் ஆரம்பமாகி தொடர்ந்து தமிழரின் மரபு இசையான பறை இசை முழங்கி சிறப்பித்தனர் ,தொடர்ந்து கனேடிய மக்கள் பிரதிநிதிகளின் உரை ,நாடுகடந்த தமிழீழ அரசாங்கப் பிரதமர் விசுவநாதன் ருத்திரகுமாரனின் உரை, தமிழ் மரபுச் செயலவை மேலாளரும் கல்விச்சபை மேலாளருமான நீதன் சண் அவர்களின் உரைகள் இடம்பெற்றன.


 gloriousprinters.com 2021
Airlinktravel-2020-01-01
Asayan-Salon-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Karan Remax-2010
Mahesan-Remax-169515-Seithy
Kugeenthiran-200-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Rajeef sebarasha 2023/04/19
Vaheesan-Remax-2016
Logan-Kumaresh-Homelife-02-02-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா