Untitled Document
May 16, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
மொன்றியல், ரொறொன்ரோ ஐலன்ட் பகுதிகளில் வெள்ளம்! Top News
[Thursday 2017-05-04 19:00]

மொன்றியல் தெற்கு பகுதியில் கடும் வெள்ளத்தினால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். நேற்றிரவு தொடக்கம் இன்று காலை வரை இந்நிலை தொடர்ந்தது. வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. அத்துடன் பல நிலக்கீழ் குடியிருப்புக்களும் வெள்ள மயமாக காணப்படுகின்றன. புதன்கிழமை காலை வரையில் கிட்டத்தட்ட 100 கட்டிடங்கள் வெள்ள அபாயத்திற்குள்ளாகியுள்ளதாக மொன்றியல் நகர சபை அறிவித்துள்ளது. கியுபெக்கிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களுக்கு மணல் மூடைகள் வழங்கப்பட்டுள்ளன. வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி உதவி வழங்க கியுபெக் மாகாணம் முன்வந்துள்ளது.

அதேவேளை, இன்று பலத்த மழை பெய்யும் என்று எதிர் பார்க்கப்படுவதால் ரொறொன்ரோ ஐலன்ட் பகுதி நீர்மட்டம் உயரும் அபாயம் ஏற்படலாம் என்ற அச்சம் காரணமாக அப்பகுதியில் அவசர வெளியேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அப்பகுதி குடியிருப்பாளர்கள் இன்று பிற்பகலில் பலத்த மழை பெய்வதற்கு முன்னராக ஐலன்டை விட்டு வெளியேற உதவும் நோக்கத்துடன் இன்று படகு சேவைகள் செயல்படுத்தப்படுமென தெரிவிக்கப்படுகின்றது.

இரவு தொடக்கம் வார்ட்ஸ் ஐலன்டில் அவசர தங்குமிடமாக படகு பணிக்கமர்த்தப்பட்டுள்ளதாக நகர ஊழியர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். வெள்ளம் அல்லது புயல் நிலைமைகளில் மக்கள் ஐலன்டை விட்டு விரைவாக வெளியேற வேண்டிய நிலைமை ஏற்படுமாயின் அவர்கள் படகிற்குள் தங்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

இக்காலநிலை காரணமாக ரொறொன்ரோ ஐலன்ட் பார்க் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது.

ஒன்ராறியோவின் தென் பாகத்திற்கு மழை பொழிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ரொறொன்ரோ உட்பட்ட பகுதிகளில் சனிக்கிழமை இரவு அளவில் 40 முதல் 70மில்லி மீற்றர்கள் வரையிலான மழை பொழிவு காணப்படும் எனவும் கனடா சுற்று சூழல் தெரிவிக்கின்றது. ஓடைகள், ஆறுகள், மதகுகள் போன்ற பகுதிகளை அண்மிக்க வேண்டாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

  
  
   Bookmark and Share Seithy.com


Mahesan-Remax-169515-Seithy
Asayan-Salon-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Karan Remax-2010
Rajeef sebarasha 2023/04/19
Vaheesan-Remax-2016
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Airlinktravel-2020-01-01
NKS-Ketha-04-11-2021
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா