Untitled Document
May 13, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
பிரான்சு ஆர்ஜெந்தே தமிழ் சங்கம், ஆர்ஜெந்தே மாநகர சபை இணைந்து நடாத்திய தமிழர் திருநாள் பொங்கல் நிகழ்வு: Top News
[Monday 2016-01-18 09:00]

பிரான்சு ஆர்ஜெந்தே தமிழ் சங்கம், ஆர்ஜெந்தே மாநகர சபை இணைந்து நடாத்திய தமிழர் திருநாள் பொங்கல் நிகழ்வு ஆர்ஜெந்தே தமிழ்ச் சங்க மண்டபத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. இந்நிகழ்வில் மங்கள விளக்கினை ஆர்ஜெந்தே தமிழ்ச்சோலை பழைய மாணவர்கள் ஏற்றிவைக்க, பிரெஞ்சு தேசியப் பேரவை உறுப்பினர் பிலிப் டுசே(Phlippe doucet - Conseil national), ஆர்ஜெந்தே நகரபிதா ஜோர்ஜ் மொந்ரோ (Georges motiron - maire d'argenteui) ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு பொங்கல் நிகழ்வை பானைவைத்து ஆரம்பித்துவைத்தனர்.

இவர்கள் தமிழரின் கலாச்சார ஆடையான வேட்டிசால்வை அணிந்து நிகழ்வில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது. அழகிய கோலமிட்டு அலங்கரிக்கப்பட்ட பந்தலின் நடுவே பொங்கலிடப்பட்டமை கண்கொள்ளாக்காட்சியாக இருந்தது. தொடர்ந்து கலை நிகழ்வுகள் இடம்பெற்றன. ஆர்ஜெந்தே தமிழ்ச்சோலை மாணவர்களின் நடனம், வாத்திய இசை, தமிழ்ச்சோலை ஆசிரியரின் வயலின் இசை மற்றும் ஓர்கன் இசை, பாடல் என நிகழ்வுகள் யாவும் சிறப்பாக அமைந்திருந்தன. நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடலுடன் நிகழ்வுகள் யாவும் நிறைவுபெற்றன. இந்நிகழ்வில் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தனர்.

  
  
   Bookmark and Share Seithy.com


Airlinktravel-2020-01-01
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Ambikajewellers-01-08-2021-seithy
Rajeef sebarasha 2023/04/19
Asayan-Salon-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Mahesan-Remax-169515-Seithy
Kugeenthiran-200-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா