Untitled Document
May 10, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
புற்றுநோய் ஏற்பட்டதாக பொய் கூறி நிதி சேகரித்த அமெரிக்க அழகுராணி: - அமெரிக்காவில் கைது
[Thursday 2015-12-31 19:00]

தனக்கு புற்றுநோய் ஏற்பட்டுள்ளதாக பொய் கூறி, நிதி சேகரித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட அமெரிக்க அழகுராணி ஒருவருக்கு எதிராக வழக்கு விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன. பிராண்டி லீ வீவர் கேட்ஸ் எனும் யுவதி இவ்வருடம் பென்சில்வேனியா மாநில அழகுராணியாக முடிசூட்டப்பட்டிருந்தார். தற்போது 23 வயதான வீவர் கேட்ஸ் தனக்கு புற்றுநோய் ஏற்பட்டதாகக் கூறி தனது சிகிச்சைகளுக்காக நிதி சேகரிக்க ஆரம்பித்தார். கடந்த இரு வருடகாலமாக இவர் தொடர்ச்சியாக நிதி திரட்டல் நடவடிக்கைகளை மேற்கொண்டுவந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாகக் கிடைத்த இரகசியத் தகவல்களையடுத்து, பென்சில்வேனியா மாநில பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர். அதன்பின் கடந்த ஓகஸ்ட் மாதம் வீரர் கேட்ஸ் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், அவருக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன. வஞ்சகமாக பணம் திருடியதாக வீவர் கேட்ஸ் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அதேவேளை, வீவர் கேட்ஸுக்கு நிதி வழங்கி பாதிக்கப்பட்டவர்கள் முறைப்பாடு செய்தால் அவருக்கு எதிராக மேலும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படலாம் என பென்சில்வேனியா மாநில பொலிஸ் அதிகாரியான தோமஸ் ஸ்டொக் தெரிவித்துள்ளார்.

  
  
   Bookmark and Share Seithy.com


Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
Airlinktravel-2020-01-01
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Ambikajewellers-01-08-2021-seithy
NKS-Ketha-04-11-2021
Rajeef sebarasha 2023/04/19
Karan Remax-2010
Asayan-Salon-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா