Untitled Document
May 2, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
  
  
   Bookmark and Share Seithy.com



கிளிநொச்சி: ஜெயபுரம் மகாவித்தியாலய மாணவி மரணம் – சமூகத்தை உலுக்கும் துயரம்! Top News
[Saturday 2026-04-25 19:00]

கிளிநொச்சி மாவட்டத்தின் ஜெயபுரம் பகுதியில் அமைந்துள்ள ஜெயபுரம் மகாவித்தியாலயத்தில் கல்வி கற்றுவரும் தரம் 11 மாணவி அக்சயா உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இளம் வயதில் கல்வியில் முன்னேற்றம் கண்டுவரும் மாணவியின் திடீர் மரணம், குடும்பத்தினரும், நண்பர்களும், ஆசிரியர்களும் உட்பட அனைவரையும் ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அக்சயாவின் இன்முகம், எப்போதும் சிரிப்புடன் பழகும் தன்மை மற்றும் நண்பர்களுடன் இணைந்து கலந்துரையாடும் இயல்பு ஆகியவை அனைவரின் நினைவிலும் நிலைத்து நிற்கின்றன.



ஜெர்மனியின் Herne நகரில் 13.03.2026 - 15.03.2026 வரை நடைபெற்ற பரதநாட்டிய போட்டி மிகச் சிறப்பாக நடைபெற்றது! Top News
[Thursday 2026-04-23 07:00]

இந்த நிகழ்ச்சியை அழகாக ஏற்பாடு செய்த *தமிழ் பெண்கள்* அமைப்பிற்கு எங்களது இதயப்பூர்வமான பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.



யாழில் பிரபலமான றியோ கனடாவில் விமரிசையாக திறந்து வைக்கப்பட்டுள்ளதை பெருமையுடன் அறியத்தருகின்றனர்! Top News
[Thursday 2026-04-09 07:00]

இன்று மார்க்கம் நகரின் (மாரக்கம் - எல்சன் ) சந்திப்பில் மிக விமரிசையாக திறந்து வைக்கப் பட்டுள்ளதை பெருமையுடன் அறியத் தருகின்றனர். திரு . செந்தில் குமரனின் நிவாரண உயிர்காப்பு அமைப்பின் மனித நேயப் பணிகளுக்கு எப்பொழுதும் தாராள பொருள் உதவி வழங்கி வரும் இந்நிறுவன உரிமையாளர் என்பது இங்கு கவனத்திற்குரியது.



வாசிங்டன், டி.சி. - யில் நடைபெற்ற 'நேட்னா' முதல் மாநாடு - மாபெரும் வெற்றி! Top News
[Thursday 2026-04-09 07:00]

வட அமெரிக்கத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் (North American Thamizh National Association, Inc. -- NATNA) முதல் மாநாடு, அமெரிக்காவின் தலைநகர் வாசிங்டன், டி. சி.- யில் மிகவும் வெற்றிகரமாக நடைபெற்றது. தமிழ் இன உணர்வாளர்களும், பொதுமக்களும் மிகப்பெரிய அளவில் கலந்துகொண்டு மாநாட்டைச் சிறப்பித்தனர். கனடாவின் பல பகுதிகளில் இருந்தும் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் பல பகுதிகளில் இருந்தும் குடும்பம் குடும்பமாகப் பயணித்து வந்து தமிழ்த்தேசியத்திற்கான தேவையையும், வலிமையையும் பறைசாற்றினார்கள்! தமிழ் நாட்டுத் தமிழர், ஈழத்தமிழர், மலேசியத் தமிழர் என உலகளாவிய தமிழ் உறவுகள் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.



சிவ்சங்கர் மேனனுக்குப் பதில்: புலம்பெயர் தமிழர்கள் காலனித்துவ நீக்கக் கோட்பாட்டை முன்வைத்து, இலங்கைக் குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டிற்குச் சவால் விடுக்கின்றனர்! Top News
[Monday 2026-03-30 20:00]

டெய்லி மிரர் ஸ்ரீலங்காவுக்கு சமீபத்தில் அளித்த பேட்டியில் சிவசங்கர் மேனன் தெரிவித்த கருத்துக்களுக்கு, அமெரிக்க புலம்பெயர்ந்த தமிழர்கள் இன்று ஒரு வலுவான பதிலடியை வெளியிட்டுள்ளனர். அதில், தமிழ் பிரச்சினையை ஒரு உள்நாட்டு விவகாரமாக வகைப்படுத்த முடியாது என்றும், அது சர்வதேச சட்டத்தின் கட்டமைப்பிற்குள் கையாளப்பட வேண்டும் என்றும் அவர்கள் கூறியிருந்தார்கள் .



தமிழ்நாடு முழுவதிலும் டி-சேவா மையங்கள் தொடங்குவதற்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் அழைக்கப்படுகின்றன! Top News
[Friday 2026-03-20 20:00]

டி-சேவா சென்டர் தமிழ்நாட்டின் அனைத்து நகரங்கள், மாவட்டங்கள், மண்டல்கள் மற்றும் ஊராட்சிகளில் டி-சேவா ஆன்லைன் மற்றும் திறன் மேம்பாட்டு மையங்களை திறக்க उद्यमிகள் மற்றும் வேலைவாய்ப்பின்மையினோரிடமிருந்து ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது. புதிய PAN அட்டைகள் தொடர்பான விண்ணபங்கள் மற்றும் திருத்தங்கள், பேருந்து, ரயில் மற்றும் விமான டிக்கெட்டுகள், வங்கிப் பண பரிவர்த்தனைகள், ஆதார்ப் பாவனையால் பண பரிமாற்றம், மைக்ரோ ATM சேவைகள், பண வைப்பு, சுகாதாரம், பைக் & கார் காப்பீடுகள், நிலுவை கட்டணங்கள், 1000 க்கும் மேற்பட்ட திறன் மேம்பாட்டு பாடநெறிகளில் ஆன்லைன் பயிற்சி வகுப்புகளுக்கான பதிவு, 500 க்கும் மேற்பட்ட திறன்களுக்கு திறன் சான்றிதழ் தேர்வுக்கான பதிவு, 100 க்கும் மேற்பட்ட அரசுத் தேர்வுகளுக்கான மாக் தேர்வு பதிவு மற்றும் பிற ஆன்லைன் சேவைகளை பயனாளர்களுக்கு வழங்கலாம்.



பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கு எதிராக புத்தூரில் போராட்டம்! Top News Top News
[Friday 2026-02-27 12:00]

அரசினால் புதிதாக முன்வைக்கப்பட்டுள்ள அரசைப் பாதுகாக்ககும் பயங்கரவாதத் தடைச்சட்டம் மற்றும் நடைமுறையில் உள்ள பயங்கரவாதத் தடைச்சட்டம் என சகல அடக்குமுறைச்சட்டங்களையும் உடனே அரசாங்கம் மீளப் பெறவேண்டும் என வலியுறுத்தி புத்தூரில் கறுப்புப் பதாகை ஆர்ப்பாட்டம் மற்றும் எதிர்ப்புப் பதாகைகளை வீதியில் கட்சிப்படுத்தி போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இன்று வியாழக்கிழமை மதியம் புத்தார் பிரதேச சபையின் முன்பாக தவிசாளர் தியாகராஜா நிரோ~; தலைமையில் ஒன்று கூடிய பிரதேச சபையின் உறுப்பினர்கள் அரசு நடைமுறையில் உள்ள பயங்கரவாதத் தடைச்சட்டத்தினையும் நீக்கவேண்டும் என கோசம் எழுப்பியதுடன் புதிய அரசைப் பாதுகாக்கும் பயங்கரவாதத்தடைச்சட்டத்தினையும் நீக்கவேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



ஈழத்தமிழர்களுக்கு கரிநாள்: இலங்கையின் சுதந்திர தினத்தில் லண்டனில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்! Top News
[Thursday 2026-02-05 06:00]

ஈழத்தமிழர்களுக்கு இலங்கையின் சுதந்திர தினம் ஒரு கரி நாள் என்று கூறியும் ஈழத்தமிழர்கள் மீது இலங்கை அரசு மேற்கொண்டுவரும் படுகொலைகள் மற்றும் கடத்தப்பட்டு காணாமல் போனவர்களுக்கு நீதி வேண்டியும் இன்று லண்டனில் பிரித்தானிய பிரதமர் அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. ஸ்ரீலங்கா உயர்ஸ்தானிகரகத்திலிருந்து பிரித்தானிய பிரதமர் அலுவலகம் வரைக்கும் பேரணியாக சென்ற புலம்பெயர் தமிழ் உறவுகள் கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.



வாகீசன் இராசையாவுக்கு 'வேல்' வழங்கிப்பாராட்டிய அமைச்சர் விஜய் தணிகாசலம்! Top News
[Monday 2026-01-26 07:00]

கனடாவின் ரொறன்ரோ நகரில்அமைந்துள்ள டூறம் மாநாட்டு மண்டபத்தில்(Durham Convention Centre), ஜனவரி24-ஆம் திகதி சனிக்கிழமை அன்று'எங்கட பெடியள்' என்ற கருப்பொருளில்மாபெரும் கலை நிகழ்ச்சியொன்றுநடைபெற்றது. தேர்ட் ஐ மீடியாபுரொடக்சன் (ThirdEye Media Production) நிறுவனத்தால் மிகவும்நேர்த்தியாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த'வாகீசன் லைவ் இன் ரொறன்ரோ' (Vaheesan Live in Toronto) இசைச்சங்கமம், உலகத்தமிழர்களை இசையாலும்உணர்வாலும் ஒன்றிணைக்கும் ஒருவரலாற்றுப் பாலமாக அமைந்திருந்தது. இக்கலைவிழாவில், 'சிலோன் ராப்' (Ceylon Rap) சொல்லிசைக்கலைஞர்களின் பங்களிப்பும் அவர்களின்ஆழமான தமிழ்ப்பற்றும் வெகுவாகப்பாராட்டப்பட்டது.



தொல்லியல் இழுபறியால் கவனிப்பாரற்றிருந்த நிலாவரை வலிகாமம் கிழக்கு பிரதேச சபையால் தூய்மிப்பு! Top News
[Monday 2026-01-12 07:00]

நிலாவரை ஆழமற்ற கிணற்றுப் பகுதி மிகவும் தூய்மையற்றதாகக் காணப்படுவதாக சமூக வலைத்தளம், ஊடகங்களில் வெளியாகிய விமர்சனத்தினைத் தொடர்ந்து வலிகாமம் கிழக்கு பிரதேச சபையால் விரைவாக துய்மிப்புப் பணிகள் இடம்பெற்றுள்ளன. காலாகாலமாக பிரதேச சபையினால் நிலாவரை ஆழமற்ற கிணறு உள்ளிட்ட பகுதிகள் சபையின் சொத்தாக பராமரிக்கப்பட்டன. பிரதேச சபையின் நேரடி முகாமைத்துவத்தின் சபையின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் எல்லை மதில்கள் அமைக்கப்பட்டு ஆழமற்ற கிணற்றினைச் சுற்றி பாதுகாப்பு, உலோக வேலிகள், பிரதேசத்தினை அழகுபடுத்தும் மின்குமிழ்கள், பார்வையாளர் இருக்கைகள், நடைபாதைகள் அமைக்கப்பட்டு திறன்பட வலயம் முகாமை செய்யப்பட்டு வந்தன. இதன் மூலம் தமிழ் மக்களின் வரலாறும் தொன்மையும் எடுத்தியம்பப்பட்டு வந்தது.



மைக்கேல் ஜாக்சனுடன் நடனம் ஆடிய ஈழ வம்சாவழித் தமிழ்ப்பெண்! Top News
[Sunday 2026-01-11 17:00]

நடன அசுரன் மைக்கேல் ஜாக்சனுடன் ஒரு தமிழ்ப்பெண் நடனம் ஆடி இருக்கிறார். இந்த விசயம் சிலருக்குத் தெரியும். பலருக்குத் தெரியாது. இது 1991-ஆம் ஆண்டில் நடந்த நிகழ்ச்சி. அவரை ஸ்காபரோவில் நடைபெற்ற குமாரி அபீனா சத்தியலிங்கம் அவர்களின் பரதநாட்டிய அரங்கேற்ற நிகழ்விற்கு பிரதம விருந்தினராக அழைத்திருந்த வேளை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட என்னால் சந்திக்க முடிந்தது. 1991 இல் மைக்கல் யக்சனுடன் நடனமாடிய அந்தத் தமிழ்ப்பெண் நயனங்களின் கலை விருந்தாய், மிக நளினமாய் நடனம் ஆடி தமிழ் உலகத்தையே ஒரு கலக்கு கலக்கி இருக்கிறார். அவர் தான் யமுனா சங்கரசிவம்.



ராவண தேசத்தை மீட்போம்!
[Monday 2025-12-29 17:00]

கடந்த கால சிங்கள அரசாங்கங்கள் தமிழர்களையும் தமிழ அரசியல் தலைவர்களையும் கொலை செய்து அழிப்பதற்காக சிங்கள பகுதிகளில் இருந்த தமிழ் தலைவர்களுக்கு ஆயுதங்கள் கொடுத்து தமிழர்கள் தமிழர்களையே கொலை செய்ய எல்லா வசதிகளும் பணமும் கொடுத்து உதவிசெய்த சிங்களர் அரசியல் தலைவர்கள் இப்போதுதமிழர் பகுதிகளில் குறிப்பாக வட பகுதியில் தங்கள் சிங்கள அரசியலை நிலைநிறுத்தவும் புதிய சிங்கள கட்சிகளுக்கு தமிழ் அடிமைகளை சேர்க்கவும் தங்களுக்கு வடபகுதியில் அஞ்சலாக இருக்கக்கூடிய தங்களால் வளர்க்கப்பட்ட தமிழ் தலைவர்களை தமிழ் மக்கள் மத்தியில் இருந்து அப்புறப்படுத்தும்வேலைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிகிறது. இந்த தமிழ் தலைவர்கள் கடந்த காலத்தின் சிங்களவர்களோடு சேர்ந்து செய்த வேலைகளை ஏற்றுக் கொள்ள முடியாவிட்டாலும், இன்று இந்த டக்ளஸ் தேவானந்தாவின் கைது தமிழர்களுக்கு புதிய மறைமுக எச்சரிக்கை விடுத்துள்ளது. வருங்காலத்தில் தமிழ் மக்கள் பெரும் அடக்குமுறைகளை எதிர்கொள்ள வேண்டி வரும் போல் உள்ளது. அரசியல் காரணங்களுக்காக டக்ளஸ் தேவ ஆனந்தாவை கைது செய்த அரசாங்கம் அவருக்கு ஆயுதம் கொடுத்த ராணுவத்தினையும் அப்போது இருந்த அரசாங்க ஜனாதிபதியையும் எப்போது கைது செய்வார்கள். அத்தோடு 1988,1989 ஆண்டு தங்கள் அரசியல் எதிரிகளை கொலை செய்ய ஜேவிபி இயக்கம் , பிளாட் இயக்கத்தை பயன்படுத்தியது எல்லோருக்கும் தெரியும். அதற்காக சித்தார்த்தன் ஐயும் ஜேவிபி இயக்கத் தலைவர்களையும் விசாரணைக்காக எப்போது கைது செய்வார்கள்.



அவுஸ்ரேலியா தாக்குதலாளி அடையாளம் காணப்பட்டார்! Top News
[Monday 2025-12-15 07:00]

ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள போண்டி கடற்கரையில் யூத சமூக ஹனுக்கா கொண்டாட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய இரண்டு துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களில் ஒருவர் நவீத் அக்ரம் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்நாட்டின் ஏபிசி நியூஸ் தெரிவித்துள்ளது. துப்பாக்கிச் சூடு நடந்த இடத்திலிருந்து 50 கிலோமீட்டருக்கும் அதிகமான தொலைவில் சிட்னியின் தென்மேற்கில் உள்ள ஒரு தெருவை காவல்துறையினர் சுற்றி வளைத்துள்ளனர்.



இலங்கையின் வெள்ள நிவாரணத்திற்காக கனடிய அரசு 1 மில்லியன் கனேடிய டாலர் உதவி! Top News
[Sunday 2025-12-07 07:00]

இலங்கையின் வெள்ள நிவாரணத்திற்காக கனடிய அரசு 1 மில்லியன் கனேடிய டாலர் உதவி அறிவித்துள்ளதை கனேடிய தமிழர் பேரவை (CTC) வரவேற்கிறது. இலங்கையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சமூகங்களை ஆதரிக்கும் பொருட்டு, 1 மில்லியன் கனேடிய டாலர் மனிதாபிமான உதவியை அறிவித்துள்ள கனடா அரசுக்கு கனேடிய தமிழர் பேரவை (CTC) தனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.



இனம் தான் இலங்கையின் ஆதி இனம் என்று கூறுவது வரலாற்றிற்கு முற்றிலும் முரணானது!
[Sunday 2025-12-07 07:00]

இலங்கைத் தீவானது இன்று சிங்கள பௌத்தர்களுக்கு மட்டுமே உரித்தான "சிங்கள தேசம்" என்று முன்னிறுத்தப்பட்டாலும், வரலாற்றின் ஆழமான பக்கங்கள் உண்மையை உரக்கச் சொல்கின்றன. இலங்கை என்பது சிங்களவர்களுக்கு மட்டும் சொந்தமானதல்ல; இது தமிழ், சிங்களம், முஸ்லிம் என மூவின மக்களுக்கும் சொந்தமான ஒரு பல்லினப் பண்பாட்டு நாடு (Multicultural Country). ஆனால், வரலாற்றைத் திரித்து, பல்லாயிரம் ஆண்டுகளாக இங்கு வாழ்ந்து வரும் தமிழர்களின் பூர்வீகத்தை மறைக்க நடக்கும் திட்டமிட்ட முயற்சிகளை நாம் சான்றுகளுடன் எதிர்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.


Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
 gloriousprinters.com 2021
Asiaan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா