Untitled Document
April 27, 2024 [GMT]
7 தலைமுறையாக தீபாவளி கொண்டாடமல் இருக்கும் விசித்திர கிராமம்!
[Saturday 2023-11-11 18:00]

கடந்த 7 தலைமுறைகளாக தீபாவளி பண்டிகையை கொண்டாடமல் இருக்கும் கிராமம் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவில் ஆந்திர மாநிலம் ஸ்ரீகாக்குளம் மாவட்டத்தில் உள்ள ரனஸ்தலம் அருகே புன்னானா பாலம் என்ற கிராமத்திலேயே இந்த சம்பவம் 7 தலைமுறைகளாக நடந்துக்கொண்டு இருக்கிறது.


  

இந்த கிராமத்தில் 2000 இற்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இங்கு 95 சதவீதத்திற்கும் அதிகமாக புன்னானா என்ற தலைமுறையினரே இருகின்றனர்.

பல ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே இந்த கிராமத்தில் தீபாவளி பண்டிகையை கொண்டாடிக் கொண்டே தான் இருந்தார். ஆனால் ஒரு வருடத்தில் நிகழந்த தீபாவளி கொண்டாட்டத்தின் போது துரதிர்ஷ்டவசமாக பல சம்பவங்கள் நிகழந்துள்ளன. இதன் காரணமாகவே இந்த கிராமத்தில் தீபாவளி பண்டிகையை கொண்டாடமல் இருகின்றனர்.

தொட்டிலில் விளையாடிக் கொண்டிருந்த புன்னானா குடும்பத்தைச் சேர்ந்த ஒரு ஆண் குழந்தையை பாம்பு கடித்து இறந்தது. அதையடுத்து, பண்டிகை முடிந்த 3 ஆவது நாளில் 2 காளைகள் இறந்தன. இந்த இரு சம்பவங்கள் இரண்டும் அந்த கிராமத்தையே அதிர்ச்சியில் உலுக்கியது.

இதனாலேயே அந்த கிராமத்தில் இருப்பவர்கள் தீபாவளிக் கொண்டாடினால் துரதிர்ஷ்டம் என நம்பத்தொடங்கினர். இதனால் ஆண்டுதோறும் அவர்கள் தீபாவளி திருநாளை கொண்டாடுவதில்லை.

தலைமுறை தலைமுறையாக எப்போதும் தீபாவளிக் கொண்டாட வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளனர். ஆகவே படித்த இளைஞர்களும் இதை கொண்டாட வேண்டும் என்று முன்வரவில்லை.

தலை தீபாவளி கொண்டாடுபவர்கள் வெளியூர்களில் பெண் எடுத்திருந்தால் அவர்கள் மாமனார் வீட்டுக்கு சென்று தீபாவளியை கொண்டாடலாம்.

ஆனால் உள்ளூரில் பெண் எடுத்தவர்கள் தலை தீபாவளி கொண்டாட முடியாத நிலையில் இருகின்றனர். மேலும் கிட்டத்தட்ட 7 தலைமுறைகளாக இந்த கிராமத்தில் மூடநம்பிக்கை காரணமாக தீபாவளி பண்டிகை கொண்டாடாமல் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  
   Bookmark and Share Seithy.com


Mahesan-Remax-169515-Seithy
Kugeenthiran-200-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Ambikajewellers-01-08-2021-seithy
Airlinktravel-2020-01-01
Vaheesan-Remax-2016
Asayan-Salon-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Rajeef sebarasha 2023/04/19
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா