Untitled Document
April 28, 2024 [GMT]
பூமியை தாக்கவிருக்கும் சூரியப்புயல்: இணையசேவை பாதிக்கும் அபாயம்!
[Wednesday 2022-03-30 16:00]

மேற்பரப்பில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக வெப்பப்புயல் ஏற்பட்டுள்ளதாகவும், இந்த புயல் நாளை பூமியைத் தாக்கும் எனவும் கொல்கத்தாவில் உள்ள இந்திய அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த புயலினால் ஏற்படும் அலைகள் கிரகத்தின் வழியாகவோ, செயற்கைக்கோள் வழியாகவோ செல்லும் போது பாதிப்பை ஏற்படுத்தும் என விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். சூரியனின் மேற்பரப்பில் கடந்த 28-ம் தேதி வெடிப்பு ஏற்பட்ட நிலையில், இதனால் ஏற்பட்ட காந்தப் புயல் நாளை பூமியைத் தாக்க வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. இந்த புயலின் வேகம் விநாடிக்கு 496-607 கிலோ மீட்டர் வரை இருக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.


  

அமெரிக்காவில் செயல்பட்டு வரும் NOAA எனப்படும் தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாக அமைப்பும் இந்த புயல் தாக்குவதை உறுதி செய்துள்ளது. இந்த வெப்பப் புயலின் தாக்கத்தை 5 பிரிவுகளாக வகைப்படுத்தலாம். இதில் ஜி-1 என்பது மிகக்குறைந்த தாக்கத்தை ஏற்படுத்துவதை குறிப்பதாகும். பூமியை நாளை தாக்கவுள்ள புயல் ஜி-3 வகையைச் சார்ந்ததாக இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் உலகம் முழுவதும் ஜி.பி.எஸ். சேவையில் பாதிப்பு ஏற்படுவதோடு, விண்வெளியில் உள்ள செயற்கைகோள்கள் செயலிழக்கலான் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த புயலினால் ஏற்பட்ட கதிர்வீச்சு காரணமாக விமான பயணிகளுக்கு பாதிப்பு ஏற்படலாம் எனவும், மின் வழிதடங்களில் திடீர் உயர் மின் அழுத்த மாறுபாடு ஏற்படும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

  
   Bookmark and Share Seithy.com


Airlinktravel-2020-01-01
NKS-Ketha-04-11-2021
Rajeef sebarasha 2023/04/19
Asayan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Mahesan-Remax-169515-Seithy
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா