Untitled Document
April 27, 2024 [GMT]
2 கி.மீ. நீளத்தில் பீட்சா: அமெரிக்க சமையல் கலைஞர்கள் சாதனை
[Sunday 2017-06-11 15:00]

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் 2 கி.மீ. நீள பீட்சா தயாரிக்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டது. ஃபோண்டோனா நகரில் உள்ள ஆட்டோ கிளப் ஸ்பீட்வே உணவகத்தைச் சேர்ந்த 12 சமையல் கலைஞர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் இணைந்து இந்த சாதனையை படைத்தனர்.


  

இதன்மூலம் உலகின் நீளமான பீட்சா என்ற பெருமையை, இத்தாலியில் கடந்தாண்டு தயாரிக்கப்பட்ட 1.93 கி.மீ. நீள பீட்சாவிடமிருந்து அமெரிக்க சமையல் கலைஞர்கள் தட்டிப்பறித்தனர்.

7,808 கிலோ எடை கொண்ட இந்த பீட்சாவைத் தயாரிக்க 8 மணி நேரத்துக்கும் அதிகமான நேரம் செலவழிக்கப்பட்டது.

மனிதநேயம் மற்றும் நட்பைக் கொண்டாடும் வகையில் தயாரிக்கப்பட்ட இந்த பீட்சா தயாரிப்பு நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களுக்கு இலவசமாக பரிமாறப்பட்டது.

மீதமுள்ள பீட்சா துண்டுகள் ஆதரவற்றோர் இல்லங்களுக்கும், உணவு வங்கிகளுக்கும் அளிக்கப்பட்டதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

உலகின் நீளமான பீட்சா என்ற பெயரில் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இந்த பீட்சா இடம்பெற இருக்கிறது.

  
   Bookmark and Share Seithy.com


Karan Remax-2010
Mahesan-Remax-169515-Seithy
Rajeef sebarasha 2023/04/19
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
Ambikajewellers-01-08-2021-seithy
NKS-Ketha-04-11-2021
 gloriousprinters.com 2021
Airlinktravel-2020-01-01
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Asayan-Salon-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா