Untitled Document
April 26, 2024 [GMT]
தற்கொலை செய்ய முயன்ற இளைஞனுக்கு புதிய முகம்!
[Sunday 2017-02-19 22:00]

முகத்தில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயற்சி செய்து உயிர் தப்பிய இளைஞர் ஒருவருக்கு
  

அண்டி சாண்டன்ஸ் என்ற இளைஞர், கடந்த 2006ஆம் ஆண்டு, தனது 21வது வயதில், முகத்தில் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்தார். ஆனால் அதில் தெய்வாதீனமாக அவர் உயிர் பிழைத்தார். அவரது முகத்தில் மறுசீரமைப்பு சிகிச்சைகள் செய்யப்பட்டபோதும் விகாரமான தோற்றமே எஞ்சியது.

அவருக்கு மறுசீரமைப்பு சிகிச்சைகள் மூலம் புதிய முகம் ஒன்றை வழங்க சமீர் மர்தானி என்ற வைத்தியர் தலைமையிலான குழு கடந்த வருடம் முடிவெடுத்தது. என்றாலும், அண்டியின் முகத்துக்குப் பொருத்தமாக அவரது வயதையுடைய இளைஞனின் முகம் கிடைப்பது அரிதாக இருக்கும் எனக் கருதப்பட்டது.

தற்கொலை முயற்சிக்கு முன்...

ஆனால், கடந்த ஜூன் மாதம் கெலன் ரோஸ் என்ற 21 வயது இளைஞர் - அவரும் துப்பாக்கியால் சுட்டு - தற்கொலை செய்துகொண்டார். இதைக் கேள்விப்பட்ட வைத்தியர்கள், ரோஸின் கர்ப்பிணி மனைவியான லிலியிடம் ரோஸின் முகத்தை தானமாக வழங்குமாறு கேட்டனர். இறந்து போன தனது கணவனின் முகத்தை மறுபடியும் காண விரும்பாத லிலி முதலில் மறுத்தார். எனினும், கண் மற்றும் நெற்றி என்பன சாண்டியினுடையதாகவே இருக்கும் என்று உறுதி கூறப்பட்டதையடுத்து லிலி சம்மதித்தார்.

கடந்த சில வருட சிகிச்சைகளின் பின்...

இதையடுத்து அண்டிக்கு 56 மணிநேர தொடர் முகமாற்று சத்திர சிகிச்சைகள் வழங்கப்பட்டன. மூக்கு, கன்னங்கள், வாய், உதடுகள், தாடை, நாடி, பற்கள் என அனைத்துமே வெற்றிகரமாக மாற்றப்பட்டன. இந்த சிகிச்சையால் தற்போது அண்டி புதிய முகம் ஒன்றைப் பெற்றிருக்கிறார்.

முழுமையான முகச்சீரமைப்பு சிகிச்சையின் பின்...

தற்போது 31 வயதாகும் அண்டியும், முகத்தை தானமாக வழங்கிய ரோஸின் மனைவி லிலியும் சந்தித்துக்கொள்ளவில்லை. என்றபோதும், ரோஸுக்குப் பிடித்தமான மீன்பிடி, வேட்டை, நாய்களுடன் நேரத்தைச் செலவிடுவது என்பனவற்றை இனிமேல் தானும் செய்வதாக லிலியிடம் உறுதி கூறியிருக்கிறார் அண்டி!

  
   Bookmark and Share Seithy.com


Ambikajewellers-01-08-2021-seithy
Vaheesan-Remax-2016
Airlinktravel-2020-01-01
Kugeenthiran-200-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Mahesan-Remax-169515-Seithy
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Rajeef sebarasha 2023/04/19
Asayan-Salon-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா