Untitled Document
May 20, 2024 [GMT]
இனவழிப்புப் போரில் பலியாகியுள்ள ஆயிரக்கணக்கான உயிர்களுக்கு நினைவு வணக்கத்தைச் செலுத்துகிறோம் கனேடியத் தமிழர் கூட்டு
[Thursday 2024-05-09 20:00]

1. இலங்கை அரசின் இனவழிப்புப் போரில் பலியாகியுள்ள ஆயிரக்கணக்கான உயிர்களுக்கு இச்சந்தர்ப்பத்தில் நினைவு வணக்கத்தைச் செலுத்துவதோடு, கனேடியத் தமிழர் கூட்டாக எமது மக்கள் மீதி மேற்கொள்ளப்பட்ட இனவழிப்பில் பாதிக்கப்பட்டவர்களுடனும், உயிர் பிழைத்தவர்களுடனும் ஒரு கூட்டாகவும், ஒற்றுமையாகவும் மிகவும் உறுதியாகவும் நாம் நிற்கிறோம்.

1. இலங்கை அரசின் இனவழிப்புப் போரில் பலியாகியுள்ள ஆயிரக்கணக்கான உயிர்களுக்கு இச்சந்தர்ப்பத்தில் நினைவு வணக்கத்தைச் செலுத்துவதோடு, கனேடியத் தமிழர் கூட்டாக எமது மக்கள் மீதி மேற்கொள்ளப்பட்ட இனவழிப்பில் பாதிக்கப்பட்டவர்களுடனும், உயிர் பிழைத்தவர்களுடனும் ஒரு கூட்டாகவும், ஒற்றுமையாகவும் மிகவும் உறுதியாகவும் நாம் நிற்கிறோம்.

  

2. கடந்த வருடம் டிசம்பரில் கனேடியத் தமிழர் பேரவை (Canadian Tamil Congress - CTC), உலகத் தமிழர் பேரவையுடன் (Global Tamil Forum - GTF) இணைந்து ’இமயமலைப் பிரகடனம்’ என்ற பெயரில் ஆரம்பித்தபோது, கனேடியத் தமிழர் பேரவை மேற்கொண்ட ஒருதலைப்பட்சமான நடவடிக்கைகளால் நாங்கள் அனைவரும் மிகுந்த அதிர்ச்சியும் ஏமாற்றமும் அடைந்தோம்.

3. CTC எமது சமூகத்துடன் எவ்வித ஆலோசனைகளையும் நடத்தாமல், இமயமலைப் பிரகடனத்தை பௌத்த மதத் தலைவர்களுடன் இணைந்து மேற்கொண்டமை மற்றும் இலங்கை அரசாங்கத்துடனான அவர்களின் ஈடுபாடு, குறிப்பாக மஹிந்த ராஜபக்ஷவுடனான அவர்களின் சந்திப்பு என்பன, மிகவும் கவலை தரக்கூடியதாகவும், எமது மக்களின் அரசியல், சமூக விருப்புக்களைக் கருத்தில் கொள்ளாதமை என்பது எமது மக்களுக்கு மிகுந்த கரிசனையையும் உண்டு பண்ணி இருந்தது.

4. கனேடியத் தமிழர் பேரவை, கனேடியத் தமிழர்களை அர்த்தமுள்ள வழியில் ஈடுபடுத்தத் தவறியதன் காரணமாகவே, இத்தகைய ஒரு தவறான நடவடிக்கை பேரவைக்கு சாத்தியமானது என்பதை ஒரு கூட்டாக நாங்கள் அடையாளம் கண்டுகொண்டோம்.

5. CTC தனது உறுப்பினர்களை ஈடுபடுத்துவதற்கும், அவர்களது சொந்த உறுப்பினர்களுக்கும் பொது சமூகத்திற்கும் பொறுப்புக் கூறுவதற்கும், அமைப்புக்குத் தேவையான கொள்கை, நடைமுறைகள் மற்றும் கட்டமைப்புகள் உள்ளன என்பதை உறுதிப்படுத்த, CTC சீர்திருத்தப்படவேண்டும் என்பதையும் நாங்கள் கண்டறிந்தோம். அவர்களின் செயல்களில் வெளிப்படைத்தன்மை இருக்கவேண்டும் என்பதை நாம் வலியுறுத்துகின்றோம்.

6. கனேடியத் தமிழர்கள் கூட்டாக ஒன்றிணைவதன் நோக்கம், CTC யினது ஜனநாயகம், பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றை மேம்படுத்துவதற்கும், அதன் இலக்குகள், குறிக்கோள்கள் மற்றும் முன்னுரிமைகளை அமைப்பதில் சமூகத்துடன் தொடர்ந்து ஈடுபாட்டை உறுதிப்படுத்துவதற்கும், அது கட்டமைப்பு மாற்றங்களுக்கு உள்ளாகியிருப்பதை உறுதிசெய்வது மட்டுமே. 7. மேலும், இச்செயற்பாட்டில், தொடர்ச்சியாக மக்களின் கருத்துக்களை உள்வாங்கி CTC தம்மை சீர்திருத்தி, உண்மையாகவே கனேடியத் தமிழர்களின் குரலாக மாறுவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு CTC க்கு அழைப்பு விடுத்துள்ளதால், சமூகத்தின் குரல் எங்களோடு உள்ளடக்கப்படுவதை உறுதிசெய்யத் தொடர்ந்தும் நாம் கவனம் செலுத்தி வருகிறோம்.

8. இமயமலைப் பிரகடனத் திட்டத்தை தாங்கள் இலங்கையில் உள்ள அமைப்புகளிடம் ஒப்படைத்ததாக CTC பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளதை நாங்கள் கவனத்தில் எடுத்திருக்கின்றோம். இமயமலைப் பிரகடனத்தின் தொலைநோக்கு, இலங்கை மக்களுடன் கலந்தாலோசித்து வடிவமைக்கப்படும் என்றும் CTC யின் அறிக்கை மேலும் வலியுறுத்தியுள்ளது. அவ்வாறு இலங்கையில் உள்ள தமிழ் மக்களின் பூரணமான பங்குபற்றுதலுடன் மட்டுமே எந்த ஒரு நல்லிணக்க முயற்சியும் முன்னெடுக்கப்படவேண்டும் என்பதில் நாங்கள் மிகவும் உறுதியாக உள்ளோம்.

9. மிகச் சமீபத்தில் CTC அதன் உறுப்பினர்கள் மற்றும் கனேடிய நாடளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோருக்கு ஒட்டாவாவில் உள்ள பார்லிமென்ட் ஹில்லில் (Parliament Hill) ஒரு நினைவு வணக்க நிகழ்விற்கான அழைப்பை அனுப்பியது. அவ்வறிக்கையில், தமிழர்கள் மீது இனவழிப்பு மேற்கொள்ளப்பட்டது என்பதை ஒப்புக்கொள்ளவில்லை என்பது மட்டுமல்லாமல், மிக முக்கியமாக, இனவழிப்பாளர்களான இலங்கை அரசாங்கம் பற்றிய எந்தக் குறிப்பும் அதில் உள்ளடக்கப்படவில்லை.

10. இது போன்ற அறிக்கைகள் மற்றும் செயல்கள் ஆகியன நீதியைப் பெறுவதற்கும், இனவழிப்பாளர்களைப் பொறுப்புக் கூறவைப்பதற்கும் மேற்கொள்ளப்பட்டுவரும் முயற்சிகளை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் சாத்தியக்கூறுகள் உள்ளதால், இவ்விடயத்தில் மக்களின் உடனடிக் கவனம் அவசியமானது என்று நாங்கள் உணர்ந்துள்ளோம்.

11. கனேடியத் தமிழர் பேரவை வெளிப்படையாக எமது மக்கள் மீதான இனவழிப்பை முன்நிறுத்தி குறித்த நினைவு நிகழ்வை நடத்த முயலாதமை, இனவழிப்புப் போரில் உயிர் பிழைத்தவர்களுக்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் அதிக வலியை ஏற்படுத்தியதாக நாங்கள் உணர்ந்தோம்.

12. இவ்விடயத்தில் கனடாவில் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட அரசியல் பிரதிநிதிகள் மற்றும் நமது சமூகம் என்பவற்றின் ஒன்றுபட்ட குரல் என்பன, மிக முக்கியமான இவ்விவகாரத்தில் CTC சரியான பாதையை தேர்ந்தெடுக்க உதவும் என்று நாங்கள் நம்புகிறோம்.

13. வெவ்வேறு துருவங்களாக செயல்பட்டு வரும் எமது சமூக அமைப்புக்களை ஒன்றிணைத்து செயல்படுவதற்கான வழிகளைக் கண்டறிய எங்கள் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் போராடி வருகின்றனர். மேலும், ஒரு கூட்டாக எங்கள் செயல்பாடுகள் எப்போதும் எங்கள் நிறுவனங்களின் போதாமையை முன்னிலைப்படுத்தும் நோக்கத்துடன் இருந்தன. எமது செயல்பாடுகள் ஒருபோதும் சமூகப் பொலிஸாராகவோ அல்லது எமது சமூக அமைப்புக்களை சேதப்படுத்தவோ கூடாது என்பதில் நாங்கள் மிகவும் உறுதியாக உள்ளோம்.

14. இந்நேரத்தில், கனேடியத் தமிழர் பேரவை நாடாளுமன்றத்தில் தமது நிகழ்வை இரத்து செய்ய தீர்மானித்துள்ளது என்ற அறிவிப்பை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கின்றோம். எனினும், தமிழர்கள் மீதான இனவழிப்பு விவகாரத்தில் தங்களின் நிலைப்பாட்டை தெளிவாக எடுத்துரைக்கும் ஒரு அறிக்கையையும் CTC வெளியிடும் என்றும் நாம் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றோம்.

15. மே 18, 2022 அன்று, கனேடிய நாடாளுமன்றம் தமிழர்கள் மீதான இனவழிப்பை அங்கீகரித்துள்ளது. மேலும், எண்ணற்ற தனிமனிதர்களின் தொடர்ச்சியான உழைப்பால் தமிழர்கள் மீதான இனவழிப்பை, கனடாவில் பல்வேறு மட்டங்களில் உள்ள ஆட்சி மன்றங்களும் அங்கீகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

16. 70 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ச்சியான கட்டமைப்பு, கலாச்சார, அரசியல் அடக்குமுறைகளாலும், படுகொலைகள், இனக்கலவரங்கள், கொலைகள், வலிந்து காணாமல் ஆக்கப்படுதல் மற்றும் மனித உரிமை மீறல்களின் வலிமிகுந்த வரலாற்றையும் உள்ளடக்கிய, இனவழிப்பு என்பது, குறிப்பாக எமது சமூகத்திற்கு, ஒரு வாழ்வியல் அனுபவமாக உள்ளது என்றே நாங்கள் நம்புகிறோம். தமிழர்களின் மனதில் இது பற்றிய எவ்வித குழப்பமும் இல்லை.

17. எங்கள் சமூக அமைப்புக்கள் இப்பிரச்சினையின் தீவிரத்தை புரிந்துகொண்டு, பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிர் பிழைத்தவர்கள் சார்பாக ஆற்றுப்படுத்தல் , நீதி மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றிற்காக திறம்பட செயட்பட வேண்டும் என்பதை நாங்கள் உறுதிப்படுத்த விரும்புகிறோம்.

18. இந்த நேரத்தில் CTC இன் சீர்திருத்தத்திலும் நாங்கள் தொடர்ந்து ஈடுபடுவோம். எங்களின் இந்த முயற்சிக்கான சமூகத்தின் ஆதரவுக்கு நன்றி தெரிவிக்கவும், நாங்கள் சரியான திசையில் செல்கிறோம் என்பதை சமூகத்திற்கு நினைவூட்டவும் இவ்வேளையில் நாங்கள் விரும்புகின்றோம். ஆனால், செய்ய வேண்டிய வேலைகள் எங்களிடம் இன்னமும் நிறைய இருக்கிறன. அவ்வகையில் சமூகத்தின் தொடர்ந்த ஆதரவு எமக்கு தேவை.

19. பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிர் பிழைத்தவர்களுக்கான நீதியைப் பெறுவதற்கும், எங்கள் சமூக அமைப்புகள் திறம்பட, பொறுப்புணர்வுடனும், வெளிப்படைத்தன்மையுடன் தொடர்ந்து செயல்படுவதை உறுதிசெய்வதற்கும், நாங்கள் தொடர்ந்தும் உறுதியுடன் இருக்கிறோம் என்பதை ‘கனேடியத் தமிழர் கூட்டு’ சார்பில் நாங்கள் உங்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறோம்.

மேலதிக தொடர்புகளுக்கு;

தொலைபேசி: (+1 ) 647-560-7013

மின்னஞ்சல்: canadiantamilcollective@gmail.com

உண்மையுள்ள,

கனேடியத் தமிழர் கூட்டு

  
   Bookmark and Share Seithy.com



பொதுவேட்பாளர் விவகாரத்தில் தமிழரசுக் கட்சிக்குள் குழப்பம் - முடிவின்றி முடிந்தது செயற்குழு கூட்டம்!
[Monday 2024-05-20 05:00]

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்துவது தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்காக கூடிய இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம், எவ்விதமான தீர்மானங்களும் எடுக்காமலேயே நிறைவுக்கு வந்துள்ளது.



ஆட்சிக்கு வந்து 48 மணித்தியாலத்துக்குள் விசேட செயலணி!- இராணுவத்தினருக்கு சஜித் வாக்குறுதி.
[Monday 2024-05-20 05:00]

பயங்கரவாதிகளிடமிருந்து நாட்டைக் காப்பாற்றித் தந்தது போல திருடர்களிடம் இருந்து நாட்டைக் காப்பாற்ற இராணுவ வீரர்கள் எம்மோடு ஒன்றிணைந்துகொள்ள வேண்டும்.நாட்டின் அரசியல் அதிகாரம் சரியான தலைமைத்துவத்தை வழங்கியிருந்தால் நாடு வளமான நாடாக மாறியிருக்கும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.



ஜனாதிபதி தேர்தல் புறக்கணிப்பு தமிழினத்துக்கு பெரும் பலத்தைக் கொடுக்கும்! - என்கிறது முன்னணி.
[Monday 2024-05-20 05:00]

இந்த ஜனாதிபதி தேர்தல் புறக்கணிப்பினூடாக அரசியல் ரீதியாகவும் இராஜதந்திரரீதியாகவும் ஏற்படுத்தப்படப்போகும் அழுத்தமானது தமிழினத்துக்கே மிகப்பெரிய பலத்தை வழங்கும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.



அனுர - சஜித் மோதலுக்கு நாள் குறிப்பு!
[Monday 2024-05-20 05:00]

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தியின் பொருளாதார குழு மற்றும் கட்சி தலைவர்களுக்கிடையில் இடம்பெற இருக்கும் விவாதத்துக்காக திகதி வழங்குவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி நடவடிக்கை எடுத்துள்ளது.



ஜூன் 14 ஆம் திகதிக்குள் பாராளுமன்றம் கலைப்பு!
[Monday 2024-05-20 05:00]

முக்கியமான சட்டங்களை இயற்றிக் கொண்டதன் பின்னர் பாராளுமன்றத்தை கலைக்க இரு தரப்பினரும் இணக்கம் தெரிவித்துள்ளனர். எதிர்வரும் ஜூன் மாதம் 14 ஆம் திகதிக்குள் பாராளுமன்றம் கலைக்கப்படும். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தேர்தலில் போட்டியிடபோவதில்லை. அவருக்கு பொதுஜன பெரமுன ஆதரவு வழங்கவும் போவதில்லை என மஹிந்த ராஜபக்ஷவின் நெருங்கிய உறவினரும், ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவருமான உதயங்க வீரதுங்க தெரிவித்தார்.



தேர்தலை மொட்டு கட்சியே தீர்மானிக்கும் என்றால் தேர்தல் ஆணைக்குழு எதற்கு?
[Monday 2024-05-20 05:00]

ஜனாதிபதி தேர்தல்,பொதுத்தேர்தல் என்ற வேறுபாடில்லை. எந்த தேர்தலுக்கும் நாங்கள் தயார்.வெற்றியோ,தோல்வியோ அதனை நாங்கள் எதிர்கொள்வோம்.எந்த தேர்தல் முதலில் நடத்த வேண்டும் என்று பொதுஜன பெரமுன தீர்மானிக்குமாயின் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு எதற்கு. பாராளுமன்றத்தைக் கலைப்பது ஜனாதிபதி சாதகமாக அமையாது எனத் தேசிய மக்கள் சக்தியின் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.



கனேடியப் பிரதமரின் அறிக்கையை இலங்கை அரசு நிராகரிப்பு!
[Monday 2024-05-20 05:00]

தமிழ் இன அழிப்பு நாளை முன்னிட்டு, கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளியிட்ட அறிக்கையை இலங்கை நிராகரித்துள்ளதாக வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.



புத்தளம் மாவட்ட பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை!
[Monday 2024-05-20 05:00]

புத்தளம் மாவட்டத்தின் அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக வடமேல் ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது. புத்தளம் மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இந்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. புத்தளம் மாவட்டத்தின் பல பகுதிகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன



தமிழரசுக் கட்சி வழக்கை சுமுக தீர்க்க முடிவு!
[Monday 2024-05-20 05:00]

தமிழரசுக் கட்சி தொடர்பில் சுமூகமான முடிவுகள் எட்டப்படவேண்டும் என்ற அடிப்படையில் எமது செயற்பாடுகள் அமைந்துள்ளதாக சட்டத்தரணி கே.வி.தவராசா தெரிவித்தார்.



துணுக்காய் விபத்தில் 4 பேர் காயம்!
[Monday 2024-05-20 05:00]

முல்லைத்தீவு - துணுக்காய் பகுதியில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் 4 பேர் காயமடைந்துள்ளனர். துணுக்காயிலிருந்து மல்லாவி நோக்கி சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிளும், மாங்குளத்திலிருந்து துணுக்காய் நோக்கி சென்றுகொண்டிருந்த காரும் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.



குற்றமிழைத்தவர்களை விசாரிக்க சர்வதேச குற்றவியல் நீதிப்பொறிமுறை!
[Sunday 2024-05-19 17:00]

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை இடம்பெற்று 15 வருடங்களாகின்ற நிலையில் தமிழ் மக்கள் 2009 இனப்படுகொலைகளை நினைவுகூரும்போது அவர்களிற்கு தங்கள் ஆதரவை வெளியிடுவதாக அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.



மாவை தலைமையில் தமிழரசின் மத்திய குழு கூடியது!
[Sunday 2024-05-19 17:00]

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்தியகுழுக் கூட்டம் கட்சியின் முன்னாள் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் வவுனியா இரண்டாம் குறுக்குதெருவில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று காலை 10 மணியளவில் ஆரம்பமாகி இடம்பெற்றது.



நீர்மூழ்கிகளை தடுக்க அமெரிக்காவிடம் ஒத்துழைப்புக் கோரியது இலங்கை!
[Sunday 2024-05-19 17:00]

அனுமதியின்றி இலங்கை கடற்பரப்புக்குள் ஊடுருவும் நீர்மூழ்கி கப்பல்களை தடுக்கவும் கண்காணிக்கவும் ஒத்துழைக்குமாறு அமெரிக்காவிடம் உதவி கோரப்பட்டுள்ளது.



கூலிப்படைகளாகச் சென்றவர்கள் குறித்து 400 முறைப்பாடுகள்!
[Sunday 2024-05-19 17:00]

ரஷ்யா-உக்ரைன் போரில் ஈடுபடுவதற்காக கூலிப்படை நிறுவனங்களால் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட குடிமக்களின் குடும்ப உறுப்பினர்களிடமிருந்து இலங்கையின் பாதுகாப்பு அமைச்சகத்திற்கு 400 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.



ஒக்டோபர் 5 அல்லது 12இல் ஜனாதிபதி தேர்தல்!
[Sunday 2024-05-19 17:00]

ஜனாதிபதி தேர்தலை ஒக்டோபர் 5 அல்லது 12 ஆம் திகதி நடத்த தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. சம்பந்தப்பட்ட தரப்பினரின் ஆலோசனைக்குப் பிறகே ஆணைக்குழு இந்த முடிவை எடுத்துள்ளது.



மட்டக்களப்பில் நினைவேந்தல் நிகழ்வை குழப்பிய பொலிசாருக்கு கண்டனம்!
[Sunday 2024-05-19 17:00]

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை ஒழுங்கு செய்த கிழக்குப் பல்கலைக் கழக மாணவர்களின் செயற்பாடுகளுக்கு தடை ஏற்படுத்திய பொலிஸாரின் செயலை ஒரு சிவில் சமூகமாக வன்மையாகக் கண்டிப்பதாக மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர் வி. லவகுமார் தெரிவித்துள்ளார்.



காங்கேசனுக்கான கப்பல் சேவை காலவரையின்றி ஒத்திவைப்பு!
[Sunday 2024-05-19 17:00]

நாகப்பட்டினத்திலிருந்து காங்கேசன்துறை வரையான கப்பல் சேவை ஆரம்பிக்கும் திகதி மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



இலங்கையர்களுடன் துணை நிற்கிறது அமெரிக்கா!
[Sunday 2024-05-19 17:00]

இலங்கையின் உள்நாட்டுப் போர் முடிவடைந்து 15 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், ஒன்றிணைந்த எதிர்காலத்திற்கான மீளெழுச்சி மற்றும் நம்பிக்கையை பிரதிபலிக்கும் வகையில், அனைத்து இலங்கையர்களுடனும் அமெரிக்கா துணை நிற்பதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.



எலோன் மஸ்க்கைச் சந்தித்தார் ஜனாதிபதி!
[Sunday 2024-05-19 17:00]

இந்தோனேசியாவில் நடைபெற்ற 10வது உலக நீர் மன்ற உயர்மட்டக் கூட்டத்தின் போது, ​​ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தொழிலதிபர் எலோன் மஸ்க்கைச் சந்தித்து Starlink ஐ இலங்கையில் அமுல்படுத்துவது குறித்து கலந்துரையாடியதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.



ஈரானியத் தூதுவரைத் தாக்கிய கொழும்பு வர்த்தகர் கைது!
[Sunday 2024-05-19 17:00]

ஈரானிய தூதுவர் ஏ.டெல்கோஷை தாக்கி விபத்திற்குள்ளாக்கிய கொழும்பு வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக கொம்பனித் தெரு பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் சிக்கிய தூதர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.


Airlinktravel-2020-01-01
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Mahesan-Remax-169515-Seithy
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Rajeef sebarasha 2023/04/19
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
Ambikajewellers-01-08-2021-seithy
Asayan-Salon-2022-seithy
NKS-Ketha-04-11-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா