Untitled Document
May 22, 2024 [GMT]
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை - நாட்டு மக்களுக்கும் நம்பிக்கையில்லை!
[Wednesday 2024-05-01 03:00]


உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்வைத்த கேள்விகளுக்கு அரசாங்கம் முறையாக பதிலளிக்கவில்லை. விசாரணைகள் தொடர்பில் கத்தோலிக்க சபைக்கு மட்டுமல்ல நாட்டு மக்களுக்கும் நம்பிக்கையில்லை என பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்வைத்த கேள்விகளுக்கு அரசாங்கம் முறையாக பதிலளிக்கவில்லை. விசாரணைகள் தொடர்பில் கத்தோலிக்க சபைக்கு மட்டுமல்ல நாட்டு மக்களுக்கும் நம்பிக்கையில்லை என பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார்.

  

கொழும்பில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் கடந்த வாரம் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற மூன்று நாள் சபை ஒத்திவைப்பு விவாதத்தின் போது எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அரசாங்கம் முறையாக பதிலளிக்கவில்லை.குண்டுத்தாக்குதலில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை தொடர்பில் பாரிய சந்தேகம் காணப்படுகிறது.

நீதியரசர் விஜித் மலல்கொட தலைமையிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அறிக்கையில் குண்டுத்தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் ஒரு விதமாகவும்,பாராளுமன்ற தெரிவுக்குழுவில் பிறிதொரு எண்ணிக்கை குறிப்பிடப்பட்டுள்ளது.

பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தொடர்பில் ஆளும் தரப்பினர் முறையற்ற கருத்துக்களை குறிப்பிடுகிறார்கள்.

2029 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட கோட்டபய ராஜபக்ஷ உயிர்த்த ஞாயிறு தின குண்டுத்தாக்குதலின் உண்மையை பகிரங்கப்படுத்துவதாகவும்,பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி பெற்றுக் கொடுப்பதாகவும் கத்தோலிக்க சபைக்கு வாக்குறுதி வழங்கினார். அதேபோல் 2020 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் பொதுஜன பெரமுன இதே வாக்குறுதியை வழங்கியது.

குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் வழங்கிய வாக்குறுதியை கோட்டபய ராஜபக்ஷவும்,அவர் தலைமையிலான அரசாங்கமும் நிறைவேற்றவில்லை.

இதன் பின்னரே கத்தோலிக்க சபை கேள்வி எழுப்பியது.2019 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தவுடன் நீதியை பெற்றுக்கொடுப்பதாக குறிப்பிட்டவர்கள் இன்று பேராயர் அரசியல் செய்கிறார் என்று குறிப்பிடுகிறார்கள்.

2019 மற்றும் 2020 ஆம் ஆண்டு தேசிய தேர்தல்களில் குண்டுத்தாக்குதல்களை அரசியலுக்காக பயன்படுத்தியதை ஆளும் தரப்பினர் மறந்து விட்டார்கள்.

குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் இதுவரை முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணைகளில் கத்தோலிக்க சபைக்கு மாத்திரமல்ல ஒட்டுமொத்த மக்களுக்கும் நம்பிக்கையில்லை என்றார்.

  
   Bookmark and Share Seithy.com



கலப்பு விசாரணைப் பொறிமுறையை நிராகரித்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்!
[Wednesday 2024-05-22 05:00]

இறுதிக்கட்டப் போரின் போது இலங்கை அரச பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்த அல்லது அவர்களின் கட்டுப்பாட்டுக்குள் சென்ற தமது உறவினர்களுக்கு சர்வதேச பொறிமுறையின் ஊடாக நீதி வழங்கப்பட வேண்டுமென யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தாய்மார்கள் சர்வதேச மனித உரிமைகள் அமைப்பின் தலைவரிடம் வலியுறுத்தியுள்ளனர்.



தமிழ்ப் பொதுவேட்பாளர் விவகாரம் -குத்துவிளக்கு கூட்டணிக்குள் குழப்பம்?
[Wednesday 2024-05-22 05:00]

தனித்தனியாவும், கூட்டணியாகவும் பேசிய பின்னரேயே இறுதித் தீர்மானம் எடுக்க முடியும் என்று ஜனநாயகத் தேசியக் கூட்டணியின் பங்காளிக்கட்சிகள் தெரிவித்ததை அடுத்து தமிழ் பொதுவேட்பாளர் விடயத்தில் தீர்மானமின்றி கூட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.



உயர்கிறது பணவீக்கம்!
[Wednesday 2024-05-22 05:00]

தேசிய நுகர்வோர் விலைக் சுட்டெண்ணுக்கு அமைய, நாட்டின் மொத்த பணவீக்கம் 2024 மார்ச்சில் பதிவான 2.5% இலிருந்து 2024 ஏப்ரலில் 2.7% ஆக சற்று அதிகரித்துள்ளதாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் அறிவித்துள்ளது.



இலங்கையில் இருந்து சென்ற ஐஎஸ் பயங்கரவாதிகள் - தற்கொலைத் தாக்குதலுக்கு திட்டமிட்டனர்!
[Wednesday 2024-05-22 05:00]

இந்தியாவின் அகமதாபாத் சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட இலங்கையை சேர்ந்த நான்கு ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் நபர்கள், தற்கொலைத் தாக்குதல் நடத்துவதற்கு கூட தயாராக இருந்ததாக குஜராத் பொலிஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.



இரண்டு வாரங்களில் வேட்பாளரை அறிவிப்போம்!
[Wednesday 2024-05-22 04:00]

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பொதுவேட்பாளராக களமிறக்க தீர்மானித்தால் அதற்கு முழுமையான ஆதரவு வழங்குவோம்.எமது வேட்பாளரை இன்னும் இரு வாரங்களில் அறிவிப்போம் என கடற்றொழில் வளங்கள் இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த டி சில்வா தெரிவித்தார்.



இறுதிச்சடங்கில் பங்கேற்க ஈரான் சென்றார் அலி சப்ரி!
[Wednesday 2024-05-22 04:00]

ஈரானின் தப்ரிஸில் நடைபெறும் மறைந்த ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி நேற்று இரவு ஈரான் புறப்பட்டுச் சென்றுள்ளார் என வெளிநாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.



மனோ கணேசன் - சுவிட்சர்லாந்து தூதுவர் சந்திப்பு!
[Wednesday 2024-05-22 04:00]

தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பியை, சுவிட்சர்லாந்து தூதுவர் கலாநிதி திருமதி சிரி வோல்ட் சந்தித்து உரையாடி உள்ளார். மனோ எம்பியின் இல்லத்தில் நிகழ்ந்த இந்த சந்திப்பில் சுவிஸ் தூதரகத்தின் அரசியல் துறை முதலாம் செயலாளர் செல்வி ஜஸ்டின் பொய்லாவும் கலந்து கொண்டார்.



வரிக்குறைப்பு செய்தால் பொருளாதாரம் பாதிக்கப்படும்!
[Wednesday 2024-05-22 04:00]

கோட்டபய ராஜபக்ஷ வரி குறைப்பு செய்ததால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது என்று குற்றஞ்சாட்டும் எதிர்க்கட்சியினர் தமது அரசாங்கத்தில் வரி குறைப்பு செய்வதாக குறிப்பிடுவது வேடிக்கையாகவுள்ளது. அரசியல் காரணிகளை அடிப்படையாகக் கொண்டு பொருளாதாரத்தை தீர்மானிப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என பதில் நிதியமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.



கனேடியப் பிரதமரின் அறிக்கைக்கு இலங்கை அரசு கண்டனம்!
[Wednesday 2024-05-22 04:00]

இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இடம்பெற்ற யுத்தத்தை இனப்படுகொலை என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மீண்டும் குறிப்பிட்டுள்ளதை வன்மையாக கண்டிப்பதாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.



15,667 இராணுவத்தினர் சட்ட ரீதியாக சேவையில் இருந்து விலகினர்!
[Wednesday 2024-05-22 04:00]

இராணுவத்தினர் சட்ட ரீதியாக சேவையில் இருந்து விலகுவதற்காக பிரகடனப்படுத்தப்பட்ட ஒரு மாத கால பொது மன்னிப்பு காலம் 20ஆம் திகதியுடன் முடிவடைந்தது. குறித்த காலப்பகுதியில் 15,667 இராணுவத்தினர் சட்ட ரீதியாக சேவையில் இருந்து விலகியுள்ளதாக இலங்கை இராணுவம் அறிவித்துள்ளது.



யாழ்ப்பாணத்தில் வீட்டுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்திய கனேடிய வாசிகள் கைது!
[Tuesday 2024-05-21 17:00]

யாழ்ப்பாணத்தில் உள்ள வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் கனடாவில் இருந்து வந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.



இந்தியாவின் பாதுகாப்பிற்கு தீங்கு விளைவிக்க இலங்கை அனுமதிக்காது!
[Tuesday 2024-05-21 17:00]

பொறுப்பான அண்டை நாடான இலங்கை, இந்தியாவின் பாதுகாப்பிற்கு தீங்கு விளைவிக்க யாரையும் அனுமதிக்காது என்று வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி கூறியுள்ளார்.



ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து ரணில் அடுத்த மாதம் அறிவிப்பார்!
[Tuesday 2024-05-21 17:00]

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அடுத்த மாதம் உத்தியோகபூர்வமாக அறிவிப்பார் என அமைச்சர் மனுஷ நாணயக்கார இன்று தெரிவித்தார்.



வடக்கில் 100 ஆண்டுகளில் மே மாதம் அதிகபட்ச மழைவீழ்ச்சி!
[Tuesday 2024-05-21 17:00]

வங்காள விரிகுடாவில் தமிழ்நாட்டுக்கு கிழக்காக அநேகமாக 22 ஆம்திகதி காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகும். இது எதிர்வரும் 23ம் திகதி மாலையளவில் ஒரு சிறிய புயலாகி வடக்கு வடமேற்கு திசை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், யாழ். பல்கலைக்கழக புவியியல்துறை விரிவுரையாளர் கலாநிதி நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.



வற்றாப்பளையில் இருந்து திரும்பிய பேருந்து தடம்புரண்டு 6 பக்தர்கள் காயம்! Top News
[Tuesday 2024-05-21 17:00]

யாழ்ப்பாணம் - பண்டத்தரிப்பு சாந்தை பகுதியில் இருந்து வற்றாப்பளை ஆலயத்திற்கு சென்று தரிசனம் செய்துவிட்டு திரும்பிய பக்தர்கள் பேருந்து விபத்தில் படுகாயமடைந்துள்ளனர்.



யுவதி பலியான விபத்து -இராணுவச் சிப்பாய் விளக்கமறியலில்!
[Tuesday 2024-05-21 17:00]

யாழ்ப்பாணத்தில் இராணுவ வாகனம் மோதி யுவதி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் இராணுவ வாகன சாரதியான இராணுவ சிப்பாய் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.



முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகளை அனுமதித்தது இலங்கை அரசாங்கத்தின் கோழைத்தனம்!
[Tuesday 2024-05-21 17:00]

முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகளை அனுமதித்தது இலங்கை அரசாங்கத்தின் கோழைத்தனம் என்று பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில குற்றம் சாட்டியுள்ளார்.



மழையினால் யாழ்ப்பாணத்தில் 5 குடும்பங்கள் பாதிப்பு!
[Tuesday 2024-05-21 17:00]

தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக இதுவரை யாழ்ப்பாணத்தில் ஐந்து குடும்பங்களைச் சேர்ந்த 15 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.



டயனா கமகே பிணையில் விடுவிப்பு!
[Tuesday 2024-05-21 17:00]

போலியான தகவல்களை முன்வைத்து கடவுச்சீட்டை பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டு தொடர்பில், நீதிமன்றில் முன்னிலையான முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவை பிணையில் விடுவிக்குமாறு புதுக்கடை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.



பஸ்சில் பயணித்த பெண்ணிடம் தாலிக்கொடி அபகரிப்பு!
[Tuesday 2024-05-21 17:00]

யாழ்ப்பாணத்தில் பஸ்ஸில் பயணித்த பெண்ணொருவரின் தாலிக்கொடி திருடப்பட்டுள்ளதாக மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.


NKS-Ketha-04-11-2021
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Rajeef sebarasha 2023/04/19
Asayan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
Mahesan-Remax-169515-Seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Karan Remax-2010
Airlinktravel-2020-01-01
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா