Untitled Document
May 4, 2024 [GMT]
யாரையோ வெல்ல வைக்க முயற்சிக்கிறார் கஜேந்திரகுமார்!
[Monday 2024-04-15 04:00]


இலங்கையில் தமிழர் தரப்பில் ஒரு பொது வேட்ப்பாளரினை தெரிவு செய்வதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பை பொறுத்தமட்டில் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என சித்தார்த்தன் எம்பி அழைப்பு விடுத்துள்ளார்.

இலங்கையில் தமிழர் தரப்பில் ஒரு பொது வேட்ப்பாளரினை தெரிவு செய்வதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பை பொறுத்தமட்டில் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என சித்தார்த்தன் எம்பி அழைப்பு விடுத்துள்ளார்.

  

நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றிலே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்

இந்த ஜனாதிபதி தேர்தலிலே தமிழ் பொது வேட்பாளர் தரப்பில் இருக்க கூடிய கட்சிகள் ஆகக்கூடிய கட்சிகள் ஒரு பொது வேட்பாளரை போடவேண்டும் என்ற நிலைப்பாடு ஆரம்பத்திலே நாங்களும் எடுத்த ஒரு நிலைப்பாடுதான் இன்றுவரை அதனை எடுத்துக்கொண்டிருக்கின்றோம். ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பை பொறுத்த மட்டில் கொள்கை ரீதியாக அதிலே இருக்கின்ற 5 கட்சிகளும் ஏற்றுக் கொண்டிருக்கின்றோம். அதிலிருக்க கூடிய ஒன்று நிச்சயமாக தமிழரசுக்கட்சியும் அதில் சேர வேண்டும்.

இன்று அவர்கள் மத்தியில் பல பிரச்சினைகள் இருந்தாலும் கட்சி பிளவு பட்டது போல தெரிந்தாலும் முக்கியமான கட்சியாக தமிழ் தேசிய கட்சியில் உள்ளவர்கள் பார்க்கப்பட வேண்டும். ஆகவே அவர்களும் இதிலே சேரவேண்டும் என்பது நான் ஆரம்ப காலம் தொடக்கம் சொல்லி வருகின்றேன்.

அதே போல விக்னேஸ்வரனின் கட்சியும் இதிலே சேருவது நல்லது. மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களினுடைய தமிழ் காங்கிரஸும் இதிலே இணைந்து கொண்டால் நல்லது. அவர் நிச்சயமாக இணைவதற்கு தயாராகவில்லை. நிச்சயமாக இதை ஒரு நாடகம் என்ற ரீதியிலே கூறிக்கொண்டிருக்கிறார்கள். ஏனென்றால் யாரையோ வெல்லப் பண்ணுவதற்காக நாங்கள் எடுக்கின்ற முயற்சி என்று அவர்கள் கூறுகிறார்கள்.

பகிஸ்கரிப்பு என்பதுவும் யாரையோ வெல்ல வைப்பதற்கான நிகழ்ச்சி என்று நான் பார்க்கின்றேன். பகிஸ்கரிப்பதன் மூலம் யாரோ ஒருவருக்கு வெற்றி வாய்ப்பை கொடுக்க முயற்சிக்கிறார்கள். ஏனென்றால் இது கடந்த காலங்களில் கூட பகிஸ்கரிப்பின் மூலம் ஒருவரை தோற்கடித்து வெல்லுவதற்காகத்தான் 2005 இலே அந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

அதனால் ரணில் தோற்கடிக்கப்பட்டு அந்த நேரத்தில் மகிந்தவை வெல்ல வைப்பதன் மூலம் அவர் சர்வதேச செல்வாக்கு அற்றவர். அவரை வெல்ல வைப்பது நல்லது என்ற அபிப்பிராயம் அங்கு இருந்தது என்ற காரணத்தினாலே வெல்ல வைக்கின்ற முயற்சிகள் எடுக்கப்பட்டது. அதனை கொள்கை றீதியாக செயல் படுத்தியிருக்கிறார்கள். அதே போலத்தான் இன்றும் பகிஸ்கரிப்பதன் மூலம் யாரை வெல்ல முயற்சிக்கின்றார்கள் என்பதை அவர்கள் இன்னும் கூறவில்லை.

ஆனால் எங்களை பொறுத்தமட்டில் இது ஒரு கொள்கை ரீதியாக கடந்த காலங்களிலே எதோ ஒரு வகையிலே ஒரு கட்சிக்கு நாங்கள் சார்பாக இருந்த போதும் அந்த கட்சியால் முழுமையாக கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாமல் போய்க்கொண்டிருக்கிறது. அவர்கள் ஏமாற்றிக்கொண்டிருந்திருக்கிறார்கள்.

அதனடிப்படையிலேதான் அனைவருமாக சேர்ந்து இந்த எடுக்க வேண்டும். ஒரு பொது வேட்பாளரை போடுகின்ற பொழுது அந்த வேட்ப்பாளர் ஆகக்கூடிய தமிழ் மக்களினுடைய வாக்குகளை பெற வேண்டும். என அவர் தெரிவித்துள்ளார்.

  
   Bookmark and Share Seithy.com



ரணில் - பசில் இன்று மீண்டும் சந்திப்பு!
[Saturday 2024-05-04 16:00]

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்சவுக்கும் இடையில் இன்று விசேட சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. கொழும்பு – மஹகமசேகர மாவத்தையில் உள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.



தமிழ்ப் பொது வேட்பாளர் குறித்த கலந்துரையாடல் தொடர்கிறது!
[Saturday 2024-05-04 16:00]

பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என நேற்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.



வாக்காளர்களுக்கு இலஞ்சம் கொடுக்கிறது அரசாங்கம்!
[Saturday 2024-05-04 16:00]

வாக்காளர்களுக்கு இலஞ்சம் வழங்குவதற்காக அரசாங்கம் அரசசொத்துக்களை பயன்படுத்துகின்றது என பவ்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோகண ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.



15ஆம் திகதி நாடாளுமன்றம் கலைக்கப்படுமா?
[Saturday 2024-05-04 16:00]

எதிர்வரும் 15ஆம் திகதி நாடாளுமன்றம் கலைக்கப்படும் என கொழும்பு அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருவதாக கொழும்பு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.



ஜனாதிபதி தேர்தலில் குமார் குணரட்ணமும் போட்டி?
[Saturday 2024-05-04 15:00]

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் முன்னிலை சோஷலிசக் கட்சியும் களமிறங்கும் என்று அந்தக் கட்சியின் செயலாளர் குமார் குணரத்தினம் தெரிவித்தார்.



ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் கொழும்பு வந்தார்!
[Saturday 2024-05-04 15:00]

ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் யோகோ கமிகாவா இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ளார்.



வெற்றிபெறும் வேட்பாளரையே மொட்டு முன்னிறுத்தும்!
[Saturday 2024-05-04 15:00]

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெறும் வேட்பாளரை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்வைக்கும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.



அதிபரை பல்லக்கில் சுமந்த மாணவர்களின் பெற்றோர்! Top News
[Saturday 2024-05-04 15:00]

வவுனியா - புதுக்குளம் ஆரம்பப் பாடசாலையின் அதிபரின் பணி ஓய்வு நாளை முன்னிட்டு அவரை கௌரவிக்கும் நிகழ்வுகள் குறித்த பாடசாலையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன்போது மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் அதிபரை பல்லக்கில் சுமந்து செல்ல ஏற்பாடு செய்திருந்தனர்.



முழங்காவிலில் கடற்படைச் சிப்பாய் உயிர்மாய்ப்பு!
[Saturday 2024-05-04 15:00]

முழங்காவில் கடற்படை முகாமில் பணியாற்றிய கடற்படை சிப்பாய் ஒருவர் நேற்றைய தினம் கடமையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த கடல் பரப்பில் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டிருந்த துப்பாக்கியை எடுத்து தன்னைத் தானே சுட்டு உயிரைமாய்த்துக் கொண்டுள்ளார்.



ஆவரங்காலில் வீட்டின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல்!
[Saturday 2024-05-04 15:00]

யாழ்ப்பாணம் ஆவரங்கால் கிழக்கு பகுதியில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதலுக்கான காரணம் தெரிய வராத நிலையில் சம்பவம் தொடர்பாக அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.



பொதுவேட்பாளராக களமிறங்கவுள்ள ரணில்! - தருணம் பார்த்து காத்திருக்கிறார்.
[Saturday 2024-05-04 05:00]

இலங்கை வங்குரோத்து நிலையிலிருந்து மீண்டுவிட்டது என்ற உத்தரவாதத்தை சர்வதேசம் வழங்கிய பின்னரே ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் அறிவிப்பை ரணில் விக்ரமசிங்க உத்தியோகபூர்வமாக அறிவிக்கவுள்ளார்.



13வது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்துவது பற்றி சஜித் எம்மை அழைத்துக் கூற வேண்டும்!
[Saturday 2024-05-04 05:00]

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமல்படுத்துவதற்கு தயாராக இருக்கின்றார் என்றால், அதனை மனோ கணேசன் ஊடாக சொல்லக்கூடாது, தமிழ் தேசியத்திற்கான தமிழ் மக்களது பிரதிநிதிகளாக இருப்பவர்களை அழைத்து அவர் கூற வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.



படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி யாழ்ப்பாணத்தில் கோரி போராட்டம்! Top News
[Saturday 2024-05-04 05:00]

சர்வதேச ஊடக சுதந்திர தினத்தை முன்னிட்டு, யாழ். ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் போராட்டம் ஒன்று முன்னெடுப்பப்பட்டது. யாழ். ஊடக அமையத்தின் முன்பாக நேற்று மாலை 3 மணியளவில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.



யாழ்ப்பாணத்தில் சர்வதேச சிலம்பம் போட்டி! - இன்று ஆரம்பம்.
[Saturday 2024-05-04 05:00]

உலகில் தமிழுக்கு அகராதியை கொடுத்த இடம் யாழ்ப்பாணம் என்பதில் தான் பெருமை அடைவதாக உலக சிலம்பம் சங்கத்தின் தலைவர் முனைவர் சுதாகரன் யாழ்ப்பாணத்தில் தெரிவித்தார்.



புரிந்துணர்வு ஒப்பந்தங்களை விரைவாக நடைமுறைப்படுத்த சீனா அழுத்தம்!
[Saturday 2024-05-04 05:00]

இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடனை மறுசீரமைப்பதற்கும் பொருளாதார சவால்களை எதிர்கொள்வதற்கும் இலங்கையின் தற்போதைய முயற்சிகளுக்கு தொடர்ந்து ஆதரவு வழங்கப்படும் என சீனா மீண்டும் உறுதியளித்துள்ளது.



திருகோணமலையில் இந்தியத் தூதுவர்! Top News
[Saturday 2024-05-04 05:00]

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தலைமையிலான உயர்மட்ட அதிகாரிகள் குழு கிழக்கு மாகாணத்துக்கு விசேட விஜயமொன்றை மேற்கொண்டுள்ளது. இந்த விஜயத்தின் போது உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, திருகோணமலையில் முன்னெடுக்கப்படும் இந்திய திட்டங்கள் மற்றும் எண்ணெய் தாங்கி முனையம், விமானப்படை தளம் உள்ளிட்ட முக்கிய இடங்களைச் சென்று பார்வையிட்டுள்ளார்.



10 ஆயிரம் பரீட்சார்த்திகளுக்கு விண்ணப்பிக்காத பாடங்களுக்கு அனுமதி அட்டை!
[Saturday 2024-05-04 05:00]

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு இரண்டாம் முறை விண்ணப்பித்த 10,000க்கும் அதிகமான தனிப்பட்ட பரீட்சார்த்திகள் , தாங்கள் விண்ணப்பிக்காத பாடத்திற்கான அனுமதி அட்டையை பெற்றதால், சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.



சிஐடியிடம் மைத்திரி நேற்றும் வாக்குமூலம்!
[Saturday 2024-05-04 05:00]

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் 2 மணிநேர வாக்குமூலம் ஒன்றை வழங்கியுள்ளார். உயிர்த்த ஞாயிறு குண்டுதாக்குதல் தொடர்பிலே அவர் வாக்குமூலம் அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



கிளிநொச்சியில் ஐசுடன் இருவர் கைது!
[Saturday 2024-05-04 05:00]

கிளிநொச்சியில் போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.



மட்டக்களப்பில் ஆணின் சடலம் மீட்பு!
[Saturday 2024-05-04 05:00]

மட்டக்களப்பு - ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செங்கலடி பகுதியில் உள்ள பாழடைந்த வெற்றுக்காணியொன்றினுள் இருந்து இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.


Ambikajewellers-01-08-2021-seithy
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Airlinktravel-2020-01-01
Rajeef sebarasha 2023/04/19
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
Asayan-Salon-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
NKS-Ketha-04-11-2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா