Untitled Document
February 25, 2018 [GMT]
  • Welcome
  • Welcome
  
   Bookmark and Share Seithy.comசாம்சங் - தலைமை நிர்வாக அதிகாரி ராஜினாமா செய்துள்ளார்.
[Friday 2017-10-13 19:00]

நெருக்கடி ஏற்பட்டுள்ளதை காரணங்காட்டி சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஆகஸ்ட் மாதம் முழு சாம்சங் குழுமத்திற்குமான வாரிசு சிறையில் அடைக்கப்பட்ட பின்னர், அந்த நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள சமீபத்திய திடீர் நிர்வாக மாற்றம் இதுவாகும். சாம்சங் எலக்ட்ரானிக்ஸின் மூன்று இணை தலைமை நிர்வாக அதிகாரிகளில் க்வான் ஓ ஹ்யூன் ஒருவர்.புற்று நோயால் உயிருக்கு போராடி கொண்டிருக்கும் சிறுவன்: - தாயின் உருக்கமான கோரிக்கை
[Monday 2017-07-17 17:00]

புற்றுநோய் பாதிப்பால் உயிருக்கு போராடி கொண்டிருக்கும் சிறுவனின் வாழ்நாட்களை நீடிக்க வைக்க அவன் தாய் நிதி உதவி கோரியுள்ளார்.பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்தவர் Albino. தொழிற்சாலையில் தொழிலாளியாக பணி புரிந்து வருகிறார். இவர் மனைவி Marissa. இவர்களின் மகன் John Marvin (8).ஜனநாயக பிரதிநிதித்துவம் வாய்ந்ததாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை மாற்ற சரியான நேரம்: - பான்-கி-மூன்
[Friday 2016-09-16 10:00]

ஐ.நா. பொது சபையின் 71-வது கூட்டத் தொடர் அடுத்த வாரம் நடைபெற உள்ளது. இந்நிலையில், ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் பான்-கி-மூன் செய்தியாளர்களிடம் பேசியதாவது:- ஐ.நா. சபையில் சீர்திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று பலமுறை நான் வலியுறுத்தி வந்துள்ளேன். குறிப்பாக பாதுகாப்பு கவுன்சிலை பொறுத்த வரை எத்தனை முறை என்று சொல்ல முடியாத அளவிற்கு சீர்திருத்தத்தை வலியுறுத்தி வருகிறேன். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கண்டிப்பாக அதிக அளவில் ஜனநாயக, பிரதிநிதித்துவம் வாய்ந்ததாக சீர்திருத்தம் செய்யப்பட வேண்டும். அதற்கான கவுன்சிலில் மாறுதல்கள் கொண்டு வரப்பட வேண்டும்.முன்னாள் எகிப்து அதிபர் மோர்ஸிக்கு ஆயுள் தண்டனை!
[Saturday 2016-06-18 20:00]

உளவு பார்த்த குற்றத்திற்காக எகிப்தின் முன்னாள் இஸ்லாமியவாத அதிபரான முகமது மோர்ஸிக்கு ஆயுள் தண்டனை விதித்து எகிப்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ரகசிய ஆவணங்களை வளைகுடா நாடான கத்தாருக்கு அனுப்பிய விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் மோர்ஸியும் ஒருவர். தற்போது, அவர் குற்றவாளி என நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டிருக்கிறார்.தினமும் சொக்லேட் சாப்பிட்டால் நீரிழிவில் இருந்து தப்பிக்கலாம்: -ஆய்வில் தகவல்
[Saturday 2016-04-30 15:00]

அதிக அளவில் சாக்லேட் சாப்பிட்டால் உடல் பருமன் அதிகரிக்கும் என்ற தகவல் நிலவி வருகிறது. இந்த நிலையில் தினமும் சாக்லேட் சாப்பிடுபவர்களை நீரிழிவு நோய் அண்டாது. அவர்களை விட்டு விலகி ஓடிவிடும் என்ற நல்ல தகவலும் வெளியாகி உள்ளது. இங்கிலாந்தில் உள்ள வார்விக் பல்கலைக் கழகத்தை சேர்ந்த நிபுணர்கள் இது குறித்து ஆய்வு மேற்கொண்டனர். 18 முதல் 69 வயது வரையிலான 1,153 பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. அதன்படி தினமும் 100 கிராம் அளவுக்கு அதாவது ஒரு பார் அளவுக்கு சாக்லேட் சாப்பிடுபவர்களை நீரிழிவு நோய் மற்றும் இதய ரத்த நாள நோய்கள் தாக்காது என கண்டறியப்பட்டது.வங்க தேசத்தில் ரசாயன ஆலையில் தீ விபத்து: - பள்ளி ஆசிரியை உட்பட 5 பேர் பலி!
[Sunday 2016-01-24 16:00]

வங்காள தேச தலைநகர் டாக்கா அருகில் உள்ள ரசாயன ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தால் பள்ளி ஆசிரியை உட்பட 5 பேர் உடல் கருகி பலியாகியுள்ளனர்.காசிபூர் நகரில் உள்ள புபெய்ல் என்ற இடத்தில் டயர்களை உருக்கி எண்ணெய் தயாரிக்கும் ரசாயன ஆலை ஒன்று அமைந்துள்ளது. நேற்று அந்த ரசாயன ஆலையில் உள்ள பாய்லர் வெடித்ததால் அப்பகுதியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தின் போது அங்கு 30 தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர்.விபத்து குறித்து தகவலறிந்ததும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர்.ஜெர்மனி அதிபரின் உரையாடல்களை அமெரிக்கா ஒட்டு கேட்டது: - அம்பலப்படுத்தியது விக்கிலீக்ஸ்
[Friday 2015-07-10 20:00]

உலகின் பல்வேறு நாட்டு தலைவர்களின் நடவடிக்கைகளை அமெரிக்கா உளவு பார்க்கும் ரகசியத்தை விக்கிலீக்ஸ் பத்திரிகை அடிக்கடி அம்பலப்படுத்தி வருகிறது. அந்தவகையில் ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்க்கலின் தொலைபேசி உரையாடல்களை அமெரிக்கா உளவு அமைப்பான என்.எஸ்.ஏ. பதிவு செய்து வந்ததாக அந்த பத்திரிகை தற்போது செய்தி வெளியிட்டு உள்ளது. அந்த செய்தியில், ஏஞ்சலா மெர்க்கல், அவரது உதவியாளர்கள் மற்றும் அரசின் மூத்த அதிகாரிகள் பயன்படுத்தும் சுமார் 125 தொலைபேசி எண்களை பல ஆண்டுகளாக அமெரிக்கா ஒட்டு கேட்டதாக கூறப்பட்டு உள்ளது. மேலும் ஜெர்மனி முன்னாள் அதிபர்களின் நடவடிக்கைகளையும் அமெரிக்கா உளவு பார்த்து வந்துள்ளது.அல்லாஹ்வின் கருணையால் நான் உயிருடன் இருப்பதை தெரிவித்துக் கொள்கிறேன்: - பத்திரிக்கையாளர்களிடம் தலிபான் தலைவர்!
[Thursday 2015-03-26 07:00]

பாகிஸ்தான் ராணுவ தாக்குதலில் தான் சாகவில்லை என்று பத்திரிக்கையாளர்களுக்கு போன் செய்து தலிபான் தலைவர் உறுதிப்படுத்தியுள்ளார். தங்கள் நாட்டின் வடமேற்கு கைபர் பகுதியில் நடத்திய தாக்குதலில், லஷ்கர்-இ-இஸ்லாம் என்ற தீவிரவாத இயக்கத்தின் செய்தி தொடர்பாளரான சலாவுதீன் அயூபி உள்பட 30 பேரை கொன்றதாக, சில தினங்களுக்கு முன் பாகிஸ்தான் அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில் அந்நாட்டு பத்திரிகையாளர்களை போன் மூலம் தொடர்பு கொண்ட அயூபி, தாக்குதலில் தான் கொல்லப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.குர்திஷ் பெண் போராளியின் தலையுடன் போஸ் கொடுக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ்!
[Friday 2014-10-31 12:00]

குர்திஷ் பெண் போராளி ஒருவரை ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினர், தலைத் துண்டித்து கொலை செய்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. சிரியாவின் எல்லைப்பகுதியில் உள்ள கோபேனி(Kobane) நகரை கைப்பற்றுவதில் ஐ.எஸ்.ஐ.எஸ் மும்பரமாக உள்ளதால் அவர்களை எதிர்த்து அப்பகுதியை சேர்ந்த குர்து இனப் பெண்கள் நீண்ட நாட்களாய் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் குர்திஷ் பெண் போராளிகளில் மிக முக்கியமாக கருதப்படுகின்ற ரெஹேனா(Rehana) என்பவரை ஐ.எஸ்.ஐ.எஸ் உயிருடன் சிறைப்படித்துள்ளனர்.எகிப்தில் ஒவ்வொரு ஆண்டும் சாலை விபத்துகளினால் 12,000 பேர்வரை பலி: - இன்றும் 9 பேர் பலி
[Monday 2014-04-28 21:00]

எகிப்தில் நேற்று நடந்த நெடுஞ்சாலை விபத்து ஒன்றில் ஆறு வாகனங்களும், மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதிக்கொண்டதில் குறைந்தது 9 பேர் பலியானதாகவும் 11 பேர் காயமடைந்ததாகவும் ஊடகத் தகவல்கள் தெரிவித்துள்ளன. இந்த விபத்து தலைநகர் கெய்ரோவிலிருந்து 100 கி.மீ தெற்கே உள்ள பயோம் பெனிப் ஸ்வைப் சாலையில் உள்ள டெக்ஸ்டைல் தொழிற்சாலை அருகே நடந்ததுள்ளது. உலக சுகாதாரக் கழகத்தின் கணக்கீட்டின்படி எகிப்தில் ஒவ்வொரு ஆண்டும் சாலை விபத்துகளினால் 12,000 பேர் பலியாகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகளவில் எகிப்தில்தான் சாலை விபத்துகளினால் ஏற்படும் மரணங்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளதாக அந்நாட்டு வல்லுனர்கள் குறிப்பிடுகின்றனர்.பிரிட்டனின் - வடக்கு அயர்லாந்தில் காவல்துறை வாகனத்தில் பொருத்தப்பட்டிருந்த வெடிகுண்டு : அயர்லாந்து தேசியவாதிகள் சதித்திட்டம் முறியடிப்பு
[Monday 2012-12-31 12:00]

பிரிட்டனின் வடக்கு அயர்லாந்து பிராந்தியத்தில் காவல்துறை வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு உரிய நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. போலீஸ் அதிகாரி ஒருவரைக் கொல்லும் நோக்கில் அயர்லாந்து குடியரசு இயக்கத்தினர் எனப்படும் தேசிய இயக்கவாதிகளால் இந்த வெடிகுண்டு வைக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. வடக்கு அயர்லாந்தில் பிரிட்டிஷ் ஆட்சி நடப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தேசிய இயக்கவாதிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர். அயர்லாந்து நாட்டுடன், வடக்கு அயர்லாந்தை இணைக்க வேண்டும் என்று அவர்கள் கோரி வருகின்றனர்.


Tharsi-home-15-10-2016
SELVI-HOMES-09-02-17
Mahesan-Remax-169515-Seithy
Easankulasekaram-Remax-300716
<P>
 <b> 13-08-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற இசை மாலைப் பொழுது - 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
</p>
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 29ம் 30ம்தி கதிகளில் நடைபெற்ற World Tamil Badminton Federation 5th annual tournament நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 7ம் 8ம் 9ம்தி கதிகளில் நடைபெற்ற குதூகலம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா