Untitled Document
May 3, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
பிரித்தானிய பாராளுமன்றின் உள்ளரங்கத்தில் தமிழ் மரபுத் திங்கள் - தை பொங்கல் நிகழ்வு! Top News
[Friday 2023-01-20 18:00]

தை மரபுத் திங்கள் மற்றும் தை பொங்கல் விழாவினை கடந்த பல வருடங்களை போன்று மிகவும் சிறப்பான முறையில்  17 ஜனவரி 2023 அன்று பிரித்தானிய பாராளுமன்றின் உள்ளரங்கத்தில் (Jubilee Hall) பிரித்தானிய தமிழர் பேரவையினால் நிகழ்த்தப்பட்டது. உலகளாவியரீதியிலும் குறிப்பாக பிரித்தானியாவிற்கும் தமிழ் மக்களின் சிறப்பான பங்களிப்புகளை பாராட்டி சிறிலங்காவில் இன அழிப்பிற்கு ஆளாகி வரும் தமிழ் மக்களை சர்வதேசம் தலையிட்டு பாதுகாக்க வேண்டும் என்று பல்வேறு கட்சிகளை சார்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒருமித்து குரல் கொடுத்தனர்.

தை மரபுத் திங்கள் மற்றும் தை பொங்கல் விழாவினை கடந்த பல வருடங்களை போன்று மிகவும் சிறப்பான முறையில் 17 ஜனவரி 2023 அன்று பிரித்தானிய பாராளுமன்றின் உள்ளரங்கத்தில் (Jubilee Hall) பிரித்தானிய தமிழர் பேரவையினால் நிகழ்த்தப்பட்டது. உலகளாவியரீதியிலும் குறிப்பாக பிரித்தானியாவிற்கும் தமிழ் மக்களின் சிறப்பான பங்களிப்புகளை பாராட்டி சிறிலங்காவில் இன அழிப்பிற்கு ஆளாகி வரும் தமிழ் மக்களை சர்வதேசம் தலையிட்டு பாதுகாக்க வேண்டும் என்று பல்வேறு கட்சிகளை சார்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒருமித்து குரல் கொடுத்தனர்.

  

தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பல்வேறு முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டதுடன் பிரித்தானிய தமிழர் பேரவை 2011இல் ஹரோ மாநகர அவையுடன் (Harrow Council) இணைந்து தை பொங்கல் விழாவை நடத்தி ஒரு விதையை விதைத்து தொடர்ச்சியாக அதனை வருடா வருடம் வளர்த்து மக்கள்மயப்படுத்தியதன் விளைவு பிரித்தானியாவில் மட்டுமல்லாது பல்வேறு நாடுகளிலும் "தமிழ் மரபு திங்கள்" மற்றும் "தை பொங்கல்" எனும் கருப்பொருளில் பல்வேறு நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதனை நினைவுபடுத்தினார்கள்.

பல்வேறு ஆய்வுகளின் அடிப்படையில் தொகுக்கப்பட்ட “கடல்சார் பயணம் மற்றும் உலகமயமாக்கலின் முன்னோடியான தமிழ் பாரம்பரியம்" (Tamil Heritage Pioneered Maritime Expedition & Globalisation) என்ற ஒரு காணொளி வெளியிட்டு வைக்கப்பட்டது. இக் காணொளி தமிழ் மக்களின் பிரமாண்டமான ஆக்கத் திறனையும் திரை கடலோடி திரவியம் தேடுதல், உலகமயமாக்கம் மற்றும் படைநகர்த்தலில் தரைவழி பாதை இன்றி ஆயிரக்கணக்கான கடல் மைல்கள் ஆழ்ந்த சமுத்திரத்தினூடு நெடு நாட்கள் பயணித்து தொலை தூர நாடுகளை வசப்படுத்தும் பிரமிக்கத் தக்க ஆற்றலை தமிழர் படை 1000 வருடங்களின் முன்னே முன்னோடியாக சாதித்தமையை சரித்திரப்பூர்வமான ஆதாரங்களின் அடிப்படையில் விளக்குகின்றது. இது நடந்து ஏறத்தாழ 500 வருடங்களின் பின்னரே ஐரோப்பாவிலுள்ள நாடுகள் நீண்ட தூர கடற்படை கட்டமைப்புகளை உருவாக்கி தத்தம் சாம்ராஜ்யங்களை நிர்மாணிக்கத் தலைப்பட்டன.

கலந்து கொண்ட அனைத்து கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் (All Party Parliamentary Group for Tamils – APPG T) அனைவருமே தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டத்தில் தாம் உறுதுணையாக நிற்பதனை மீண்டும் வலியுறுத்தினார்கள்.

அவர்களது உரையில், பின்வரும் விடயங்கள் முன்வைக்கப்பட்டன:

* சுகாதார சேவை, வணிகம் மற்றும் பிற துறைகளில் பிரித்தானிய நாட்டில் தமிழ் மக்களின் அளப்பரிய பங்களிப்பு,

* பல தசாப்தங்களாக தமிழ் மக்கள் துன்புறுத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு வருவது,

* மனித உரிமைகள் மறுக்கப்படுவது

* 2009 இல் நடந்த நிகழ்வுகளை இனப்படுகொலை என்று மட்டுமே விவரிக்க முடியும்,

* தமிழர்களுக்கான சுயநிர்ணய உரிமை வழங்கப்பட வேண்டும்,

* சிறிலங்காவில் தமிழர்கள் மட்டுமின்றி தற்போது சிங்களவர்களும் அனுபவிக்கும் துன்பத்திற்கான காரணம் ஊழல், பாதுகாப்புக்கு அதிக செலவு மற்றும் சிறிலங்கா அரசின் கொடூரமான நடத்தை.

* தமிழர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முற்படும் சிறிலங்கா தமிழர்கள் ஏன் கொழும்பு அரசாங்கத்தின் மீது சந்தேகம் கொண்டுள்ளனர் என்பதை நோர்வே அனுபவத்தின் மூலம் எம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

* பேச்சுவார்த்தை வெற்றி அளிப்பதற்கு அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், பிரித்தானியா, இந்தியா பிரதிநிதித்துவத்தை கொண்ட சர்வதேச நடுவர் மன்றம் (International Arbitration) அமைக்கப்பட வேண்டும் .

* தமிழ் மக்களுக்கு மனித உரிமைகள் மற்றும் நீதியை வழங்குவதற்கு சிறிலங்கா அரசாங்கத்தின் மீது சர்வதேச அழுத்தங்களை உறுதி செய்ய வேண்டும்.

* முன்னாள் ஜனாதிபதிகளான கோட்டாபாய ராஜபக்ச மற்றும் மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக தடைகளை நிறைவேற்றிய கனேடிய அரசாங்கத்திற்கு பாராட்டுக்கள் மற்றும் பிரித்தானியா உட்பட ஏனைய நாடுகளும் தடை விதிக்க வலியுறுத்தல்.

தமிழர்களுக்கான அனைத்து கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு உதவி வரும் பிரித்தானியத் தமிழர் பேரவைக்கு குறிப்பாகவும், இங்கு வாழும் அனைத்து தமிழ் மக்களுக்கும், சிறிலங்காவிலுள்ள தமிழ் மக்களுக்கும் ஆதரவாக நாங்கள் செய்ய விரும்பும் பணிகளில் அனைத்துக் கட்சிகளிலிருந்தும் உதவியவர்களுக்கு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

தமிழ் பாரம்பரியத்தின் செழுமையை வெளிப்படுத்தும் வண்ணமயமான நிகழ்வில் இங்கிலாந்தின் மூன்று பிரதான கட்சிகளின் 23 பாராளுமன்ற உறுப்பினர்கள், தமிழ் கவுன்சிலர்கள், பிரபுக்கள் சபையின் உறுப்பினர் ஒருவர் மற்றும் பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வினை பிரித்தானிய தமிழர் பேரவையின் இளையோர் முன்னின்று நிகழ்த்தினார்கள்.

கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள்:

1) Rt Hon Theresa Villiers, 2) Rt Hon Sir Ed Davy, 3) Rt Hon Sir Stephen Timms 4) Steve Baker, 5) Catherine West, 6) Janet Daby, 7) Louie French, 8) Sarah Olney, 9) Sarah Jones, 10) Bambos Charalambous, 11) Dawn Butler, 12) Yasmin Qureshi, 13) Ruth Margaret, 14) Ben Elliot, 15) Sarah Champion, 16) Chi Onwurah, 17) Bob Blackman, 18) Gareth Thomas, 19) Stephen Morgan, 20) Paul Bristow, 21) James Grundy, 22) Tan Dhesi, 23) Fiona Bruce மற்றும் Lord John Mann.

கலந்து கொண்ட மாநகர அவை உறுப்பினர்கள்:

1) Sarmila Varatharaj (Deputy Mayor, Wandsworth Council), 2) Chrishni Reshekaron, 3) Ellily Ponnuthurai, 4) Sharmila Sivarajah, 5) Paul White, 6) Kuha Kumaran, 7) Krishna Suresh, 8) Sasi Suresh

பல செழுமையான பங்களிப்புகளை உலகிற்கு வழங்கிய தமிழ் இனம் இலங்கை தீவில் படிப்படியாக இனவழிப்பிற்குள்ளாக்கப்பட்டு வேரோடு அழிக்கப்படுவதை உலகின் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தி நீதி கிடைக்க வேண்டும் என்ற பிரித்தானிய தமிழர் பேரவையின் மூலோபாயத்தின் ஒரு முக்கிய அங்கமான இந்த நிகழ்வு, இந்த வருடம் கடந்த காலங்களை விட மிக அதிகமான பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

  
   Bookmark and Share Seithy.com



கனடா நாடுகடந்த அரசவை தேர்தலில் அநீதிகள் இடம்பெற்றதாக குற்றச்ச்சாட்டு! Top News
[Thursday 2024-05-02 21:00]

இந்த புதிய சிக்கலுக்கு தீர்வுகளை எட்டுமா நாடுகடந்த தமிழீழ அரசின் தலைமைப்பணிமை ? தற்போதைய நான்காவது தவணைத்தேர்தல் முன்னெடுப்புகளில் அநீதிகள் இழைக்கப்பட்டு முன்னாள் அரசவை உறுப்பினர்கள் செயல்பாட்டாளர்கள் புதிய போட்டியாளர்கள் உள்ளிட்ட 14 பேர் முறையான காரணங்கள் இன்றி வெடிப்புமனுக்கள் நீராகரிக்கப்பட்டது தொடர்பிலான பொதுமக்கள் மற்றும் ஊடக சந்திப்பு ஒன்று நேற்றுமாலை நடைபெற்றது.



எஹலேபொல மாளிகையின் உரிமையை உடனடியாக ஸ்ரீ தலதா மாளிகைக்கு மாற்றுமாறு அதிகாரிகளுக்கு அமைச்சர் பிரசன்ன அறிவுறுத்தல்! Top News
[Sunday 2024-04-28 20:00]

வரலாற்று சிறப்புமிக்க எஹலெபொல மாளிகை இந்நாட்டின் முதல் மெழுகுச்சிலை அருங்காட்சியகம் ஆகும். நகர அபிவிருத்தி அதிகார சபையினால் புனரமைக்கப்பட்ட எஹலேபொல மாளிகையை தலதா மாளிகையிடம் ஒப்படைத்ததன் பின்னர் தொல்பொருள் மற்றும் கலாசார விழுமியங்களைப் பாதுகாத்து இந்த மெழுகுசிலை அருங்காட்சியகம் உருவாக்கப்படும் என ஸ்ரீ தலதா மாளிகையின் தியவதன நிலமே நிலங்க தேல பண்டார தெரிவித்தார்.



34ஆவது அகவை நிறைவின் மகிழ்வில் தமிழ்க் கல்விக் கழகம் – தென்மேற்கு மாநிலம், லன்டோவ்-எஸ்லிங்கன்! Top News
[Monday 2024-04-22 21:00]

யேர்மனியிலே 100க்கு மேற்பட்ட தமிழாலயங்களை அமைத்து நெறிப்படுத்திவரும் தமிழ்க் கல்விக் கழகம் தென்மேற்கு மாநிலத்தில் 34ஆவது அகவை நிறைவு விழாவை 20.04.2024 சனிக்கிழமையன்று எஸ்லிங்கன் நகரில் தமிழ்மொழி, கலை, பண்பாடு என்பவற்றை ஊட்டிவரும் செயற்பாட்டில் இணைந்து பயணிக்கும் அனைவரையும் அழைத்துச் சிறப்போடு கொண்டாடியது.



நல்லூரில் வாழும் பழங்குடியின மக்களின் பல்வேறு பிரச்சினைகளை ஆராய விசேட குழு! Top News
[Monday 2024-04-08 22:00]

மூதூர் பிரதேச செயலகத்திற்குட்பட்ட நல்லூரில் வாழும் பழங்குடியின மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ள நிலையில் அவர்களது உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதிப்படுத்த உடனடியாக விசேட குழுவொன்றை நியமிக்க திருகோணமலை அரசாங்க அதிபருக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் உத்தரவிட்டுள்ளார். நல்லூரைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் அண்மையில் திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் நல்லூரில் தங்களின் வாழ்வாதார அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளமை குறித்து கிழக்கு ஆளுநரிடம் முறைப்பாடு செய்திருந்தனர்.



34ஆவது அகவை நிறைவின் மகிழ்வில் தமிழ்க் கல்விக் கழகம்-யேர்மனி! Top News
[Monday 2024-04-08 22:00]

தமிழினம் புலம்பெயர்ந்து உலகெங்கும் பரந்து வாழும் சூழலில், தமது அடையாளத்தை அடுத்த தலைமுறை தொலைத்துவிடாதிருக்க தாய்மொழியைக் கற்பித்தல் அவசியம் என்ற உயர்சிந்தனையின் விளைவாகத் தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் தமிழ்மொழியைக் கற்பிக்கும் செயற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. யேர்மனியிலும் தமிழ்க் கல்விக் கழகம் 100க்கு மேற்பட்ட தமிழாலயங்களை அமைத்துத் தமிழ்மொழி, கலை, பண்பாடு என்பவற்றை ஊட்டிவரும் செயற்பாட்டில் 34 ஆண்டுகளைத் தொட்டுநிற்கிறது.



செங்கலடி இலுப்படிச்சேனையில் வர்த்தக நிலையங்களை திறந்து வைத்த கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான்! Top News
[Monday 2024-04-08 06:00]

செங்கலடி இலுப்படிச்சேனையில் உள்ளுர் தொழில் முயற்சியாளர்களை மேம்படுத்தும் நோக்கில் வர்த்தக நிலையங்களை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் திறந்து வைத்தார். 22 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட கிராமிய வர்த்தக நிலையங்கள் மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.



ஏறாவூர்பற்றில் மாதுளை சேகரிப்பு மற்றும் பதப்படுத்தும் நிலையம் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் திறந்து வைப்பு! Top News
[Sunday 2024-04-07 08:00]

விவசாயிகள் மத்தியில் பழச் செய்கையை ஊக்குவிக்கும் நோக்கில் மாதுளை சேகரிப்பு மற்றும் பதப்படுத்தும் நிலையத்தை ஏறாவூர் பற்று பிரதேசத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் திறந்து வைக்கப்பட்டது. விவசாயிகளின் விளைச்சலை அதிகரிப்பதற்காக விவசாயச் சங்கங்களுக்கு விவசாய உபகரணங்களையும், மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகளுக்கும் உபகரணங்களையம் ஆளுநர் வழங்கி வைத்தார்.



கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் வவுணதீவு வீதி திறந்து வைப்பு! Top News
[Friday 2024-04-05 06:00]

140 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு வீதி கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் திறந்து வைக்கப்பட்டதுடன், மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன்,கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோபாலரத்தினம் உட்பட அரச அதிகாரிகள் கலந்துக்கொண்டனர்.



கனடிய தமிழர் பேரவையின் மகளிர் தின கொண்டாட்டங்கள்! Top News
[Thursday 2024-03-28 21:00]

கனடிய தமிழர் பேரவையின் மகளிர் தின கொண்டாட்டங்கள் மார்ச் 24, 2024 அன்று இடம்பெற்றது. இந்நிகழ்வானது கனடாவில் உள்ள தமிழ் சமூகத்திற்குள்ளும் அதற்கு அப்பாலும் பெண்களின் குறிப்பிடத்தக்க சாதனைகள் மற்றும் பங்களிப்புகளைக் கொண்டாடும் வகையில் அமைந்திருந்தது. பாரம்பரிய மங்கள விளக்கு ஏற்றுதல் கலாச்சார முக்கியத்துவத்துடன் ஆரம்பமான நிகழ்வு கனேடிய தேசிய கீதம் மற்றும் தமிழ் தாய் வாழ்த்து பாடுவதன் மூலம் நமது இரட்டை பாரம்பரியத்தையும் கலாச்சாரங்களின் இணக்கமான கலவையையும் பிரதிபலித்து தொடர்ந்தது.



யேர்மனி தமிழ்ப் பெண்கள் அமைப்பினரால் டோட்முன்ட் நகரில் நடத்தப்பட்ட வாகைமயில் 2024! Top News
[Friday 2024-03-22 18:00]

யேர்மனியில் ஆண்டுதோறும் வாகைமயில் என்னும் நடனப்போட்டியைத் தமிழ்ப் பெண்கள் அமைப்பு நடத்தி வருவது யாவரும் அறிந்ததே. இம்முறை டோட்முன்ட் நகரில் 16.03.24 சனி, 17.03.24 ஞாயிறு ஆகிய இரண்டு நாள்களும் தெரிவுப்போட்டிகளின்றி நிறைவுப்போட்டியாகப் பதினொரு ஆண்டுகளை நிறைவு செய்தபடி வாகைமயில் வெகு சிறப்பாகத் தோகை விரித்தாடியது. யேர்மனியில் உள்ள நடன ஆசிரியர்களால் பயிற்றப்பட்ட அவர்களின் மாணவ மாணவிகள் ஒருவரை ஒருவர் மிஞ்சிய வகையில் களம் கண்டனர். இவர்கள் அற்புதமான பதங்களுடன் பல வண்ணங்கள் உடுத்தித் தேர்போல (இரதங்கள்) அழகாக அசைந்து, மிதமான அணிகளோடு அவையில் இதமான பரதத்தால் நவரசம் தந்தது மண்டபம் நிறைந்த மக்களின் வரவேற்பைப் பெற்றிருந்தது. பிரான்சு, சுவிற்சலாந்து ஆகிய நாடுகளிலிருந்து வருகை தந்திருந்த திறமையும் பட்டறிவும்(அனுபவம்) வாய்ந்த நடுவர்களால் போட்டிகள் நடுவம் செய்யப்பட்டு, மதிப்பளிப்புகளும் வாகைமயில் விருதுகளும் வழங்கப்பட்டன.



இளம் இலங்கை தொழில் முனைவோர் பேரவையின் ரஜத ஜெயந்தி மாபெரும் மாநாடு! Top News
[Wednesday 2024-03-13 06:00]

COYLE அல்லது இளம் இலங்கை தொழில் முனைவோர் பேரவையின் ரஜத ஜெயந்தி மாபெரும் மாநாடு நேற்று (10) ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்றது. இந்த ஆண்டு மாநாடு 25 வது முறையாக நடைபெற்றது. COYLE அல்லது இளம் இலங்கை தொழில் முனைவோர் பேரவை மார்ச் 10, 1999 இல் ஆரம்பிக்கப்பட்டது. "இன்றிலிருந்து முழு மனதுடன் தயாராவோம்" என்பதே இந்த ஆண்டு ரஜத ஜெயந்தியின் கருப்பொருளாக அமைந்துள்ளது.



கல்விக்கு முதலிடம், தமிழர் ஐக்கியத்துக்கு சிறப்பிடம், இரண்டிலும் கனடிய தமிழர், உலகத்தமிழருக்கு வழிகாட்டி - தெஹியோவிற்ற தமிழ் வித்தியாலய விஞ்ஞானகூட அங்குராப்பணம் தொடர்பில் மனோ கணேசன்! Top News
[Tuesday 2024-03-05 06:00]

இன்று, தமிழர்களாகிய எங்கள் ஒரே ஆயுதம், கல்வி. அதேபோல் எங்கள் ஒரே சிந்தனை தமிழ் ஒற்றுமை. இந்த இரண்டு கொள்கைகளையும் முன்னெடுத்து, கனடா தமிழர் பேரவை, அமெரிக்கா முதல் ஐரோப்பா, ஆசியா ஊடாக ஆஸ்திரேலியா வரை உலகம் முழுக்க பரவி, விரவி வாழ்கின்ற தமிழருக்கு, முன்மாதிரியாக நின்று வழி காட்டி உள்ளது. இந்த இரு கொள்கைகளின் அடையாளமாகவே, இங்கே இன்று இந்த மலையக தமிழரினுள் வரும் பெருந்தோட்ட பிள்ளைகள் பயிலும், தெஹியோவிற்ற தமிழ் மகாவித்தியாலய விஞ்ஞானகூடம் கட்டப்பட மற்றும் உபகரணங்கள் வழங்க, கனடா மற்றும் அமெரிக்கா வாழ் தமிழர்கள் மத்தியில் நிதி சேகரித்து, கனடா தமிழர் பேரவை சாதித்து காட்டியுள்ளது என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் கூறியுள்ளார்.



சிகரம் தொட்ட தமிழ்த்திறன் போட்டியின் முத்தகவை நிறைவு! Top News
[Tuesday 2024-03-05 06:00]

1993ஆம் ஆண்டு மாமனிதர் இரா. நாகலிங்கம் ஐயா அவர்களினால் வித்திடப்பட்ட தமிழ்த்திறன் போட்டி, தமிழ்க் கல்விக் கழகத்தின்; வரலாற்றுத் தடங்களில் தனக்கெனத் தனிச்சிறப்புடன் வெற்றி நடைபோட்டு வருகிறது. தமிழாலயங்களில் தமிழ் பயின்றுவரும் மாணவர்களில் மொழித்திறனாளர்கள், உரையாற்றளாளர்கள், கட்டுரைத்திறனாளிகள், வரைஞர்கள் போன்ற வளமிக்க ஆற்றலாளர்களைக் கண்டறிவதும் அவர்களைச் சிறந்தவர்களாக உருவாக்குவதும் தமிழ்த்திறன் போட்டியின் இலக்காகக் கொண்டு ஆண்டுதோறும் நடாத்தப்பட்டுவருகிறது.



திரு.இரா மனோகரன் அவர்களுக்கு “தமிழ்த்திறனாளன்” மதிப்பளிப்பு – தமிழர் ஒருங்கிணைப்புக் குழு யேர்மனி! Top News
[Monday 2024-03-04 06:00]

02.03.2024 அன்று யேர்மனியின் தமிழ்க் கலவிக்கழகத்தினால் முன்சன்கிளட்பாக் நகரில் நடாத்தப்பட்ட தமிழ்த்திறன் போட்டியின் முப்பாதவது அகவை நிறைவு விழாவின் போது யேர்மனியின் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவினால் சிறப்பு மதிப்பு நிகழ்வு ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது.



இன்றிலிருந்து ஒன்ராறியோவில் அமுலுக்கு வரும் 'ஒற்றைக்கட்டண' திட்டம்! Top News
[Tuesday 2024-02-27 06:00]

இன்று முதல் ஒன்ராறியோ பொதுப்போக்குவத்துச் சேவையில் 'ஒற்றைக்கட்டண' திட்டம் அமுலுக்கு வருகின்றது. இன்று தொடக்கம் ரொறன்ரோ பொதுப்போக்குவரத்துச் சேவை (TTC) மற்றும் ரொறன்ரோ பெரும்பாகத்திலுள்ள 'கோ' (GO) போக்குவரத்துச் சேவை உட்பட இத்திட்டத்தில் பங்குபற்றும் அனைத்து சேவைகளுக்குமிடையில் பயணிக்கும் பயணிகள் ஒருமுறை மட்டும் கட்டணம் செலுத்தினால் போதும். இது பற்றி ஒன்ராறியோ முதல்வர் டக் ஃபோர்ட் அவர்கள் “ஒன்ராறியோ அரசானது, அனைத்து போக்குவரத்துப் பயணிகளுக்கும் அவர்களின் சொந்தப் பணத்தை சேமித்து மீண்டும் அவர்களுக்குத் திருப்பிக் கொடுக்கின்றது" என கூறுகின்றார்.



வவுனியாவில் இடம்பெற்ற மேழி எழுபது பிரமாண்ட விழா! Top News
[Tuesday 2024-02-27 06:00]

எழுத்தாளர் கலாநிதி மேழிக் குமரனின் எழுபது அகவையையும் ஐம்பதாண்டு இலக்கிய பயணத்தையும் முன்னிட்டு இரு நூல்கள் வெளியீட்டு நிகழ்வு (25.02.2024) காலை 9 மணிக்கு வவுனியா நகரசபை கலாச்சார மண்டபத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது. வவுனியா தமிழ்ச் சங்கத்தின் நிறுவுனர், தமிழருவி த.சிவகுமாரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக வவுனியா பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் த.மங்களேஸ்வரன், சிறப்பு விருந்தினர்களாக ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், கல்வி அமைச்சின் ஓய்வு நிலை மேலதிக செயலாளர் உடுவை எஸ்.தில்லை நடராஜா, கௌரவ விருந்தினர்களாக வவுனியா தேசிய கல்வியற் கல்லூரியின் ஓய்வு நிலை பீடாதிபதி க.பேர்ணாட், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளர் ந.சிவசக்தி ஆனந்தன், இலக்கியவாதிகள்,சமூக ஆர்வலர்கள்,திணைக்கள உத்தியோகத்தர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.



‘ஒற்றைக்கட்டண’ திட்டம்! Top News
[Thursday 2024-02-08 18:00]

கடந்த திங்கட்கிழமையன்று, ஒன்ராறியோ முதல்வர் டக் ஃபோர்டும் போக்குவரத்து இணை அமைச்சர் விஜய் தணிகாசலமும் இணைந்து ஒன்ராறியோ அரசாங்கம் பொதுப் போக்குவரத்துப் பயணிகளுக்கான செலவைக் குறைப்பதற்காக 'ஒற்றைக்கட்டண' திட்டம் ஒன்றினை அறிவித்தனர். இந்த 'ஒற்றைக்கட்டண' நடைமுறை மூலம் சராசரியாக 1,600 டொலர்களை பயணிகள் சேமிப்பர். பிப்ரவரி 26, 2024 முதல், ரொறன்ரோ பொதுப்போக்குவரத்துச் சேவை (TTC) மற்றும் ரொறன்ரோ பெரும்பாகத்திலுள்ள 'கோ' (GO) போக்குவரத்துச் சேவை உட்பட இத்திட்டத்தில் பங்குபற்றும் அனைத்து சேவைகளுக்குமிடையில் பயணிக்கும் பயணிகள் ஒருமுறை மட்டும் கட்டணம் செலுத்தினால் போதும்.



தமிழ் மரபுத் திங்கள் 2024! Top News
[Thursday 2024-02-01 21:00]

நாடுகடந்த தமிழீழ அரசாங்கமும் தமிழ் மரபத்திங்கள் செயலவையும் இணைந்து 28/01/2024இல் தமிழ் மரபுத் திங்கள் நிகழ்வு வெகு சிறப்பாகவும், கோலாகலமாகவும் நடைபெற்றது. நிகழ்வின் ஆரம்பத்தில் கனடாவின் பூர்வகுடி மக்களுக்கான அங்கீகாரம் செலுத்தப்பட்டு கனேடிய மத்திய பாராளுமன்ற உறுப்பினர், மாகாண உறுப்பினர்கள் ,மாநகர, நகர சபை உறுப்பினர்கள் மற்றும் கல்விச்சபை உறுப்பினர்கள் ,கலைஞர்கள், ஏராளமான பொது மக்கள் முன்னிலையில் கனேடிய தேசியக் கொடி ஏற்றப்பட்டு அடுத்து தமிழீழத் தேசியக் கொடி ஏற்றப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டு மிகவும் சிறப்பாக நிகழ்வுகள் ஆரம்பமாகி தொடர்ந்து தமிழரின் மரபு இசையான பறை இசை முழங்கி சிறப்பித்தனர் ,தொடர்ந்து கனேடிய மக்கள் பிரதிநிதிகளின் உரை ,நாடுகடந்த தமிழீழ அரசாங்கப் பிரதமர் விசுவநாதன் ருத்திரகுமாரனின் உரை, தமிழ் மரபுச் செயலவை மேலாளரும் கல்விச்சபை மேலாளருமான நீதன் சண் அவர்களின் உரைகள் இடம்பெற்றன.



உறை பனியிலும் இறைபணியே மேல் என மனிதம் காத்திடத் திரண்ட மக்கள் கூட்டம்! Top News
[Thursday 2024-01-25 00:00]

கடந்த 19-01-24 வெள்ளி மாலை Scarborough Metropoliton அரங்கில் நிகழ்ந்தேறிய திரு.செந்தில் குமரன் அவர்களின் தாயக மக்களுக்கான "நிவாரணம்" எனும் உயிர்காப்பு இன்னிசை மாலை " MGR 107 " மனிதநேயம் படைத்த மக்கள் வெள்ளம் அலைகடலாக ஆர்ப்பரித்து எழுந்தோடித் தளம்பிய காட்சியாய் விரிந்த காட்சி கண்கொள்ளாக் காட்சியாய் அமைந்தது.



"வரங்கலெல்லாம் தவங்களாவதில்லை" கவிதை நூல் வெளியீட்டு விழா! Top News
[Sunday 2024-01-21 19:00]

க.வசந்தகுமாரி எழுதிய ' வரங்கலெல்லாம் தவங்களாவதில்லை.' என்ற கவிதை நூல் வெளியீட்டுவிழா 20-01-2024 அன்று கொழும்பு ஜே.ஆர். ஜெயவர்த்தன மண்டபத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது. இவ்விழாவிற்கு சிரேஷ்ட ஊடகவியலாளர் சக்தி Tv நிர்வாகி கஜமுகன் தலைமை தாங்கியதோடு பிரதம அதிதியாக முன்னாள் அமைச்சர் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கனேஷன் கலந்துகொண்டதோடு நூலின் முதல் பிரதியை இலங்கை பொன்மனச்செம்மல் தாஜ்மஹான் பெற்றுகொண்டார்.


 gloriousprinters.com 2021
Ambikajewellers-01-08-2021-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Airlinktravel-2020-01-01
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Asayan-Salon-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
Mahesan-Remax-169515-Seithy
Vaheesan-Remax-2016
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா