Untitled Document
May 3, 2024 [GMT]
நீராவியடி விகாரையில் சிவிரிவி பொருத்த தடை!
[Wednesday 2019-10-16 08:00]

முல்லைத்தீவு - நீராவியடி குருகந்த ரஜமஹா விகாரையின் பாதுகாப்பு கருதி அந்த விகாரையின் விஹராதிபதி மினிதுபுர ரத்தனதேவ கீர்த்தி தேரர் சி.சி.ரி.வி கண்காணிப்பு கெமராக்களை பொருத்துவதற்கு எடுத்த நடவடிக்கைக்கு பொலிஸார் தடைவிதித்துள்ளனர்.

முல்லைத்தீவு - நீராவியடி குருகந்த ரஜமஹா விகாரையின் பாதுகாப்பு கருதி அந்த விகாரையின் விஹராதிபதி மினிதுபுர ரத்தனதேவ கீர்த்தி தேரர் சி.சி.ரி.வி கண்காணிப்பு கெமராக்களை பொருத்துவதற்கு எடுத்த நடவடிக்கைக்கு பொலிஸார் தடைவிதித்துள்ளனர்.

  

விகாரைகளில்கண்காணிப்பு கமராக்களை பொருத்த அனுமதிக்க முடியாது எனவும் அதனால் அதனை அகற்றுமாறும் முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்தாக விகாரையின் தற்காலிக பாதுகாவலர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் சி.சி.டி.வி கெமராக்களை பொருத்த வெலிஓயாவிலிருந்து இரண்டு பேர் வருவதாக விகாரையின் தலைமை தேரர் தன்னிடம் கூறியதாக குறித்த தற்காலிக பாதுகாவலர் கெலும் பண்டார தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் விஹாராதிபதி பணியின் நிமித்தம் வெளியில் சென்றுள்ளதாகவும் அவர் மீண்டும் வரும் வரை விகாரையின் நடவடிக்கைகளை தான் பார்த்துக்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் சி.சி.ரி.வி கெமராக்களை பொருத்த நடவடிக்கை எடுத்த போது பொலிஸார் வருகைதந்து பணிகளுக்கு தடை ஏற்படுத்தியதாக தற்காலிக பாதுகாவலர் கூறியுள்ளாரர்.

அதன் பின்னர் அவர்கள் பொருத்தப்பட்ட அனைத்து உபகரணங்களையும் அங்கிருந்து அகற்றியதாக குறித்த பாதுகாவலர் தெரிவித்துள்ளார்.

இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த விகாரையின் தற்காலிக பாதுகாவலர் கெலும் பண்டார, எமது விகாரையில் கோயில் ஒன்று உள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் சிலர் தெரிவித்து அச்சுறுத்தி வருகின்றனர்.அதன் பின்னணியிலேயே விகாரையில் சி.சி.ரி.வி கண்காணிப்பு கெமராக்களை பொருத்த விஹாராதிபதி நடவடிக்கை எடுத்தார்.ஆனால் தற்போது அதற்கு பொலிஸார் தடை விதிக்கின்றனர். இந்த நிலையில் விகாரையின் நிர்வாக குழுவும் பொலிஸாரின் இந்த செயற்பாட்டை கண்டித்துள்ளது.

இதற்கு முன்னரும் விகாரை பூமியில் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படும் கோயிலை வழிபட முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் டி.ரவிகரன் உள்ளிட்ட பலர் வருகைதந்து விகாராதிபதியை அச்சுறுத்தி சென்றனர் என்றார்.

இந்த சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸாரிடம் வினவியதற்கு குறித்த விஹாரை அமைந்துள்ள பகுதியில் கோவிலை அமைப்பதை தடுப்பது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இடம்பெறுவதாகவும் அதனால் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.ரி.வி கெமராக்களை அகற்றியதாகவும் தெரிவித்தனர்.

  
   Bookmark and Share Seithy.com



அச்சுவேலியில் வீடுகள் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல்!
[Friday 2024-05-03 05:00]

யாழ்ப்பாணம் - அச்சுவேலி பகுதியில் இரண்டு வீடுகள் மீது வன்முறை கும்பலொன்று தாக்குதல் நடத்தியுள்ளது. அச்சுவேலி - சங்கானை வீதியில் தென்மூலைப் பகுதியில் குறித்த தாக்குதல் நேற்று நடத்தப்பட்டுள்ளது. இந்த, வன்முறைச் சம்பவம் தொடர்பாக சகோதரர்கள் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.



வெளிநாட்டவர்களுக்கு விசா வழங்கும் பணி தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படவில்லை!
[Friday 2024-05-03 05:00]

இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டவர்களுக்கு விசா விநியோகிக்கும் பணிகள் வெளிநாட்டு நிறுவனத்துக்கு முழுமையாக வழங்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி முற்றிலும் பொய்யானது. விசா விநியோகிக்கும் பணிகளுக்கு உரிய வசதிகளை வழங்கும் நடவடிக்கைகளுக்கான பொறுப்பு மாத்திரமே இந்நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது என அரசாங்கம் அறிவித்துள்ளது.



கட்டுநாயக்க விமான நிலைய விசா வழங்கும் பிரிவை இந்திய நிறுவனம் பொறுப்பேற்கவில்லை!
[Friday 2024-05-03 05:00]

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசா வழங்கும் நடைமுறையை இந்திய நிறுவனங்கள் பொறுப்பேற்றுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி உண்மைக்கு புறம்பானது என கொழும்புக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவிக்கின்றது.



வட இலங்கை சமாதானத்தை அனுபவிக்கிறதாம்!- சொல்கிறார் சொல்ஹெய்ம்.
[Friday 2024-05-03 05:00]

தற்போது வட இலங்கை சமாதானத்தை அனுபவிப்பதாகவும், யுத்தம் இடம்பெற்ற காலத்துக்குத் திரும்பிச்செல்வதை எவரும் விரும்பவில்லை எனவும் தெரிவித்துள்ள இலங்கைக்கான முன்னாள் சமாதானத்தூதுவரும், நோர்வே நாட்டு இராஜதந்திரியுமான எரிக் சொல்ஹெய்ம், இருப்பினும் இன்னமும் தமிழர்களின் அபிலாஷைகள் முழுமையாகப் பூர்த்திசெய்யப்படாத நிலையில் இலங்கை அரசு அதிகாரங்களைப் பகிரவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.



முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு - 15ஆம் ஆண்டு நினைவு நாள்! Top News
[Friday 2024-05-03 05:00]

ஆண்டுகள் பல கடந்தும் நீதிக்காகவும், சுதந்திரவேட்கையோடு எம் மண்ணின் விடுதலைக்காகவும் இறுதிப்போரில் வதைக்கப்பட்ட,கொல்லப்பட்டஎம் உறவுகளுக்காகவும் லண்டன் மாநகரில் அணிதிரள்வோம் வாரீர்.



உமா ஓயாவினால் மின்சார சபைக்கு தினமும் 80 மில்லியன் ரூபா மிச்சம்!
[Friday 2024-05-03 05:00]

உமாஓயா அபிவிருத்தி திட்டம் செயற்படத் தொடங்கியதன் மூலம் மின்சார சபைக்கு நாளொன்றுக்கு 80 மில்லியன் ரூபா சேமிக்கப்படுவதாக என அதன் திட்டப் பணிப்பாளர் சுதர்ம எலகந்த தெரிவித்துள்ளார்.



நள்ளிரவில் குறைகிறது லிட்ரோ எரிவாயு விலை!
[Friday 2024-05-03 05:00]

சமையல் எரிவாயுவின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. குறைக்கப்படும் விலைகள் தொடர்பில் இன்ற அறிவிக்கப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்தார். அதன்படி குறைக்கப்பட்ட விலை இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.



அனுரவின் மேதின கூட்டத்திலேயே அதிக சனம்! - என்கிறார் சம்பிக்க.
[Friday 2024-05-03 05:00]

தேசிய மக்கள் சக்தியின் மே தின கூட்டத்திலேயே பெருமளவிலானோர் கலந்துக் கொண்டார்கள்.அவர்களின் கூட்டமே சிறந்த முறையில் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது. பழைய மாக்ஸிச கொள்கையில் இருந்து மக்கள் விடுதலை முன்னணி விடுபட்டால் அரசியலில் முன்னேற்றமடையலாம் என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.



இன, மதக் கலவரத்தை தடுத்தவர் பேராயர்!
[Friday 2024-05-03 05:00]

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்ட போது ஏற்படவிருந்த இன, மத கலவரத்தை பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தடுத்தார். எனவே அவர் மீது போலியான விமர்சனங்களை முன்வைக்க வேண்டாம் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்தார்.



கனடாவில் முதியவர்களிடம் மோசடி செய்த இரு தமிழர்கள் கைது!
[Friday 2024-05-03 05:00]

கனடாவின் டர்ஹாம் பிராந்தியத்தில் பல முதியவர்களை ஏமாற்றி மோசடி செய்த குற்றச்சாட்டில் இரு தமிழர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.



அளம்பில் மாவீரர் துயிலும் இல்ல காணியை இராணுவத்துக்கு சுவீகரிக்கும் முயற்சி தடுத்து நிறுத்தம்! Top News
[Thursday 2024-05-02 17:00]

முல்லைத்தீவு - அளம்பில் மாவீரர் துயிலும் இல்ல காணியினை, இராணுவத்தினருக்கு சுவீகரித்து வழங்க எடுத்த முயற்சி அப் பகுதி மக்களாலும், அரசியல் கட்சி பிரமுகர்கள் சிலராலும் இன்று தடுத்து நிறுத்தப்பட்டது.



எரிக் சொல்ஹெய்முக்கு அம்பிகா கண்டனம்!
[Thursday 2024-05-02 17:00]

இலங்கையின் வடபகுதி அமைதியாக உள்ளது அது சிறப்பான விடயம் பாதுகாப்பு சிறப்பாக உள்ளது என நோர்வேயின் இலங்கைக்கான முன்னாள் சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் டுவிட்டரில் பதிவிட்டுள்ள கருத்திற்கு இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் கடும் பதிலடி கொடுத்துள்ளார்.



அடிமைத்தனத்திலிருந்து விடுபட வேண்டிய நிலையில் உள்ளோம்!
[Thursday 2024-05-02 17:00]

தொழிலாளர்களின் உரிமைக்காக மட்டுமல்ல தமிழர் நிலம் அழிக்கப்படும் நிலையில் ஒன்று கூடியிருக்கிறோம் என மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.



கட்டுநாயக்க விமான நிலையத்தில் விசா வழங்குவதை இந்திய நிறுவனம் பொறுப்பேற்றதால் பதற்றம்!
[Thursday 2024-05-02 17:00]

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவு திணைக்கள அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட விசா வழங்கும் நடைமுறை மே.1 ஆம் திகதி முதல் இந்திய தனியார் நிறுவனத்திற்கு மாற்றப்பட்டதால், நேற்று மாலை 05.00 மணி முதல் அவர்களால் கணினிகளை சரியாக இயக்க முடியவில்லை, இதனால் விமான பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.



லக்ஷ்மன் யாப்பா, நஸீர் அஹமட் ஆளுநர்களாக சத்தியப் பிரமாணம்! Top News
[Thursday 2024-05-02 17:00]

தென் மாகாண ஆளுநராக லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன இன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். அதேவேளை, வடமேல் மாகாண ஆளுநராக நஸீர் அஹமட் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.



சரத் பொன்சேகாவுக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை!
[Thursday 2024-05-02 17:00]

ஐக்கிய மக்கள் சக்தி மே தினக் கூட்டத்தை ஏற்பாடு செய்ததில் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா எந்தப் பங்கையும் வகிக்கவில்லை, எனவே அவருக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை என்று அதன் உப தலைவர் சுஜீவ சேனசிங்க இன்று தெரிவித்துள்ளார்.



பாடசாலை முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் நாளையுடன் முடிவு!
[Thursday 2024-05-02 17:00]

நாட்டிலுள்ள அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் பாடசாலைகளில் 2024ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் நாளையுடன் முடிவடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



புங்குடுதீவு அகழ்வில் செப்புக் காசுகளுடன் பெண்ணின் எலும்புக்கூடு சிக்கியது! Top News
[Thursday 2024-05-02 17:00]

யாழ்ப்பாணம் - புங்குடுதீவு கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், இன்று காலை ஆரம்பிக்கப்பட்ட அகழ்வு பணிகள் மதியத்துடன் நிறைவுக்கு வந்தது.



அனுரகுமாரவைச் சந்தித்தார் நோர்வே தூதுவர்!
[Thursday 2024-05-02 17:00]

நோர்வே தூதுவர் மே-எலின் ஸ்டெனர் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க ஆகியோருக்கிடையிலான சந்திப்பு மக்கள் விடுதலை முன்னணியின் காரியாலயத்தில் இன்று பிற்பகல் இடம்பெற்றது.



மன்னாரில் கைதான சந்தேக நபரின் 9 கோடி 30 லட்சம் சொத்துக்கள் முடக்கம்!
[Thursday 2024-05-02 16:00]

யுக்திய தேடுதல் நடவடிக்கையின் மன்னாரில் சந்தேக நபர் ஒருவரின் 9 கோடி 30 லட்சம் பெறுமதியான சொத்துக்கள் இன்று முடக்கப்பட்டுள்ளன.


Kugeenthiran-200-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Karan Remax-2010
Mahesan-Remax-169515-Seithy
Asayan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
NKS-Ketha-04-11-2021
Rajeef sebarasha 2023/04/19
Airlinktravel-2020-01-01
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Vaheesan-Remax-2016
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா