Untitled Document
May 12, 2024 [GMT]
சென்னைக்கு வந்தது ஆட்டுக்கறியா... நாய்க்கறியா? - இறைச்சி சங்கத்தின் விளக்கம்
[Monday 2018-11-19 18:00]
 
இறைச்சியின் வால் பகுதியைப் பார்த்து அது நாய்க்கறி என்ற தகவல் பரப்பியது தவறானது. ஆய்வுக்குப்பிறகுதான் அது எந்த விலங்கின் இறைச்சி என்பதை தெரிவித்திருக்க வேண்டும்'' என்று தமிழ்நாடு அனைத்து இறைச்சி வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள் நலச்சங்கத்தின் பொதுச் செயலாளர் அலி தெரிவித்தார்.

ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரிலிருந்து எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னை எழும்பூருக்கு தெர்மோகோல் பாக்ஸில் பதப்படுத்தப்பட்ட இறைச்சி கொண்டு வரப்பட்டது. அந்த இறைச்சி குறித்து ரகசியத் தகவல் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்குக் கிடைத்தது.

இறைச்சியின் வால் பகுதியைப் பார்த்து அது நாய்க்கறி என்ற தகவல் பரப்பியது தவறானது. ஆய்வுக்குப்பிறகுதான் அது எந்த விலங்கின் இறைச்சி என்பதை தெரிவித்திருக்க வேண்டும்'' என்று தமிழ்நாடு அனைத்து இறைச்சி வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள் நலச்சங்கத்தின் பொதுச் செயலாளர் அலி தெரிவித்தார். ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரிலிருந்து எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னை எழும்பூருக்கு தெர்மோகோல் பாக்ஸில் பதப்படுத்தப்பட்ட இறைச்சி கொண்டு வரப்பட்டது. அந்த இறைச்சி குறித்து ரகசியத் தகவல் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்குக் கிடைத்தது.

  

உடனடியாக அங்கு விரைந்த அதிகாரிகள், தெர்மோகோல் பாக்ஸைப் பிரித்து ஆய்வு செய்தனர். அப்போதுதான் கொண்டு வரப்பட்டது ஆட்டு இறைச்சி அல்ல, நாய்க்கறி என்ற தகவல் பரவியது. இதனால், சென்னை மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இதனால் அவைகளைப் பறிமுதல் செய்த அதிகாரிகள் ஆய்வுக்காக பரிசோதனைக் கூடங்களுக்கு அனுப்பினர். பரிசோதனைக்குத் தேவையில்லாத இறைச்சிகளைக் குப்பைக்கிடங்குக்குக் கொண்டுசென்று அழித்தனர். இந்த நிலையில், ஜோத்பூரிலிருந்து ரயிலில் கொண்டு வரப்பட்டது ஆட்டு இறைச்சிதான் என்று திருவான்மியூரைச் சேர்ந்த ஷகிலாபானு, புதுப்பேட்டையைச் சேர்ந்த அல்தாப் ஆகியோர் தெரிவித்தனர். அதற்கான ரசீதுகள் தங்களிடம் இருப்பதாக அவர்கள் கூறினர். நாய்க்கறியா, ஆட்டு இறைச்சியா என்பதை இன்னமும் உணவுப் பாதுகாப்புத் துறையினர் உறுதிப்படுத்தவில்லை. இந்தச் சூழ்நிலையில் தமிழ்நாடு அனைத்து இறைச்சி வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள் நலச்சங்கத்தின் பொதுச் செயலாளர் ராயபுரம் அலியிடம் பேசினோம்.

நாய்கறி விவகாரத்தில் பேசும் அலி``சென்னையைப் பொறுத்தவரை புளியந்தோப்பு, வில்லிவாக்கம் சைதாப்பேட்டை ஆகிய இடங்களில் ஆட்டுத் தொட்டிகள் உள்ளன. அங்கு தினமும் 3,000 ஆடுகள், 200 மாடுகள் அறுக்கப்படுகின்றன. ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த எண்ணிக்கை இருமடங்காகும்"

எதற்காக சென்னையை தவிர்த்து வெளிமாநிலங்களிலிருந்து இறைச்சிகள் கொண்டு வரப்படுகின்றன? ``விலைதான் காரணம். சென்னையில் மொத்த சேல்ஸில் ஒரு கிலோ ஆட்டு இறைச்சி 500 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஆனால், வடமாநிலங்களிலிருந்து கொண்டு வரப்படும் இறைச்சியின் ஒரு கிலோ விலை 350 முதல் 400 ரூபாய்தான். இதனால்தான் வடமாநிலங்களிலிருந்து இறைச்சிகள் ரயில்மூலம் சென்னைக்கு கொண்டு வரப்படுகின்றன" சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தது ஆட்டு இறைச்சியா, நாய்க்கறியா? ``தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநில ஆடுகளின் வால் சிறியதாக இருக்கும். ஆனால் ராஜஸ்தான் போன்ற வடமாநிலங்களில் வளரும் ஆடுகளுக்கு வால் பகுதி நீளமாக இருக்கும். எழும்பூர் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட இறைச்சிகளின் வால்பகுதி நீளமாக இருந்ததால்தான் அது நாய்க்கறி என்ற தகவல் பரப்பப்பட்டுவிட்டது. எந்தவித ஆய்வும் நடத்தாமல் அதை நாய்க்கறி என்று எப்படி உறுதிப்படுத்தமுடியும். ஆய்வு அறிக்கை வெளியான பிறகுதான் எந்த விலங்கின் இறைச்சி என்பதை உறுதிப்படுத்த முடியும். சுகாதாரமற்ற முறையில் இறைச்சிகள் கொண்டுவரப்படுவதை அதிகாரிகள் தடுக்கலாம், பறிமுதல் செய்யலாம். ஏன், சம்பந்தப்பட்டவர்களுக்கு அபாராதம் கூட விதிக்கலாம். தற்போது எழும்பூரில் பறிமுதல் செய்யப்பட்ட இறைச்சி குறித்த அறிக்கையை விரைவில் வெளியிடப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், நாய் இறைச்சி என்று ஆய்வின் முடிவு வந்தால் அதை சென்னைக்கு கொண்டு வந்தவர்கள் மீது தாராளமாக நடவடிக்கை எடுக்கலாம். தற்போது பரப்பப்பட்ட தகவலால் இறைச்சி வியாபாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது."

உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரி ஒருவரிடம் பேசினோம். ``எழும்பூர் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்த இறைச்சியின் ஆய்வு முடிவுக்காக காத்திருக்கிறோம். அதன்பிறகுதான் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

இறைச்சியை ஜோத்பூரிலிருந்து சென்னைக்கு கொண்டு வந்த ஷகிலாபானு மற்றும் அல்தாப் ஆகியோரை தொடர்புகொள்ள பலமுறை முயன்றோம். ஆனால், அவர்களின் கருத்தைப் பெறமுடியவில்லை. பரிசீலனைக்குப்பிறகு அவர்களின் விளக்கத்தை வெளியிடத் தயாராக இருக்கிறோம்.

  
   Bookmark and Share Seithy.com



அடுத்த 4 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை!
[Sunday 2024-05-12 16:00]

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கோடை மழை பொழிந்து வருகிறது. பல பகுதிகளில் மாலை வேளையில் பலத்த காற்றுடன் கனமழை பொழிந்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.



சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!
[Sunday 2024-05-12 16:00]

சென்னை மதுரவாயல் பகுதியைச் சேர்ந்த ஆச்சிமுத்து என்பவர் மகன் சங்கர் என்கிற சவுக்கு சங்கர். யூடியூபரான இவர் தமிழக காவல்துறை அதிகாரிகள் மற்றும் பெண் போலீசார் குறித்து அவதூறாக பேசியதாக கடந்த 4 ஆம் தேதி (04.05.2024) தேனியில் கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.



நாகை - இலங்கை இடையே கப்பல் சேவை ஒத்திவைப்பு!
[Sunday 2024-05-12 16:00]

நாகப்பட்டினம் சிறு துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு பயணிகள் கப்பல் போக்குவரத்தை கடந்த ஆண்டு அக்டோபர் 14 ஆம் தேதி (14.10.2023) பிரதமர் மோடி டெல்லியில் இருந்து காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இந்தக் கப்பலின் பயணக் கட்டணமாக 6 ஆயிரத்து 500 ரூபாயுடன் 18 சதவிதம் ஜிஎஸ்டியுடன் சேர்த்து 7 ஆயிரத்து 670 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டது.



நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் புதிய சாதனை!
[Sunday 2024-05-12 16:00]

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் கடந்த 1970 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் துவங்கப்பட்டு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. இதன் வாயிலாக வீட்டுவசதி, குடிசைப்பகுதி மேம்பாடு, மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு போன்ற பல்வேறு திட்டங்களை குடிசைப்பகுதி வாழ் மக்களின் வாழ்க்கை தரத்தினை மேம்படுத்த செயல்படுத்தி வருகிறது. இந்த வாரியம் தொடக்கத்தில் சென்னையில் மட்டுமே தனது பணிகளைச் செயல்படுத்திக் கொண்டிருந்தது. இதனையடுத்து கடந்த 1984ஆம் ஆண்டு முதல் தனது பணிகளை தமிழ்நாடு முழுவதும் படிப்படியாக நகர்ப்புற பகுதிகளிலும் விரிவாக்கம் செய்தது.



இந்திய மக்களவைத் தேர்தலில் களமிறங்கும் இலங்கைக்கான முன்னாள் உயர்ஸ்தானிகர்!
[Sunday 2024-05-12 06:00]

இலங்கைக்கான முன்னாள் இந்திய உயர்ஸ்தானிகர் மற்றும் அமெரிக்காவுக்கான தூதராக செயற்பட்ட, தரன்ஜித் சிங் சந்து, இந்தியாவின் ஆளும் பாரதீய ஜனதாவில் இணைந்து இந்தமுறை மக்களவைத் தேர்தலில் போட்டியிடவுள்ளார்.



இந்தியாவிற்கு சவால் விடும் சீன போர்க்கப்பல்!
[Sunday 2024-05-12 06:00]

பிரமாண்ட போர் கப்பலை சீனா(China) தயாரித்து சமீபத்தில் அறிமுகம் செய்தமையானது இந்தியாவிற்கு பெரும் சவாலாக மாறியுள்ளது. 80 ஆயிரம் தொன் நிறையுள்ள பிரம்மாண்ட விமானம் தாங்கி போர்க்கப்பலாக இது அமைந்திருந்துள்ளது. இதற்கு ஃபியூஜியன் என சீன தரப்பு பெயரிட்டுள்ளது.



பாகிஸ்தான் ஆளில்லா விமானத்தை நோக்கி இந்திய படையினர் துப்பாக்கி பிரயோகம்!
[Sunday 2024-05-12 06:00]

இந்திய (India)- ஜம்மு காஸ்மீரின் (Jammu and Kashmir) சம்பா மாவட்டத்தில் உள்ள சர்வதேச எல்லைக்கு அருகே, பாகிஸ்தானின் ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்துவதற்காக இந்திய படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.



காவல்துறை சார்பில் பாலியல் வன்கொடுமை குறித்து விழிப்புணர்வு பேரணி!
[Saturday 2024-05-11 18:00]

சிதம்பரம் இருப்பு பாதை காவல்துறை சார்பில் சிதம்பரம் ரயில் நிலையத்தில் போதைப் பொருள் தடுப்பு, குழந்தைகள் மற்றும் பெண்கள் பாலியல் வன்கொடுமை, ரயில் பயணிகள் விபத்து குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.



காரில் பெண் சடலத்துடன் சுற்றிய இளைஞர்கள்: விசாரணையில் அதிர்ந்த போலீசார்!
[Saturday 2024-05-11 18:00]

திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் இளம்பெண் சடலத்தை காரில் வைத்துக்கொண்டு சுற்றித்திரிந்த இரண்டு இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று இரவு இரண்டு இளைஞர்கள் சந்தேகப்படும்படி காரில் சென்று கொண்டிருந்தனர். அவர்களை அம்மைநாயக்கனூர் போலீசார் சோதனை செய்தபோது அவர்கள் பயணித்த காரில் இளம்பெண்ணின் சடலம் ஒன்று இருந்தது. சடலம் குறித்து இருவரிடம் விசாரணை செய்த போது அவர்கள் சொன்ன தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.



“ஆலோசனை என்ற பெயரில் தேர்தல் ஆணையம் மிரட்டுகிறது” - கார்கே பதிலடி!
[Saturday 2024-05-11 18:00]

18 ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. பல மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது. அண்மையில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இந்தியா கூட்டணியில் உள்ள கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அந்தக் கடிதத்தில் தேர்தல் ஆணையம் வாக்குப்பதிவு தரவுகளை தாமதமாக கொடுக்கிறார்கள்; சரியான வகையில் வாக்குப்பதிவு தரவுகள் கொடுக்கப்படவில்லை எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளை பதிவு செய்திருந்தார்.



“பூர்வ குடிகளை வலுக்கட்டாயமாக வெளியேற்றும் வனத்துறை” - டி.டி.வி.தினகரன் கண்டனம்!
[Saturday 2024-05-11 18:00]

வனப்பகுதிகளில் வசிக்கும் பூர்வகுடிகளை வலுக்கட்டாயமாக வெளியேற்றும் வனத்துறையின் நடவடிக்கை கண்டனத்திற்குரியது என அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிடுள்ள சமூக வலைத்தளப் பதிவில், “பூர்வகுடிகளுக்கு தேவையான வசதிகளை தமிழக அரசு மனிதாபிமான அடிப்படையில் செய்து தர வேண்டும். தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் அருகே உள்ள எடத்திட்டு, வேப்பமரத்து, கோம்பு ஆகிய வனப்பகுதிகளில் வசித்து வரும் பூர்வகுடிகளை வனத்துறையினர் துன்புறுத்தி, வலுக்கட்டாயமாக வெளியேற்றியிருப்பதாக வரும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன.



அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால பிணை!
[Saturday 2024-05-11 06:00]

மதுபான ஊழல் வழக்கில் தொடர்புடையதாக கூறி குற்றம் சுமத்தப்பட்டுள்ள டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு(Arvind Kejriwal), இந்திய உயர் நீதிமன்றம் பிணை வழங்கியது. அரவிந்த் கெஜ்ரிவால் மீதான வழக்கு நேற்று(10.05.2024) விசாரணைக்காக எடுத்துக்கொண்டபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.



டெல்லியில் புழுதிப் புயல்: பொதுமக்களுக்கு எச்சரிக்கை!
[Saturday 2024-05-11 06:00]

டெல்லியில் கடுமையாக புழுதிப் புயல் வீசி வருவதால் பொதுமக்கள் எச்சரிக்கை இருக்கும்படி வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. டெல்லி மாநகரின் பகுதியில் பல்வேறு பகுதிகளில் புழுதிப் புயல் வீசி வருகிறது. இது தொடர்பாக ஏற்கனவே இந்திய வானிலை ஆய்வு மையம் பல அறிவுறுத்தல்களையும், எச்சரிக்கைகளையும் கொடுத்திருந்தது. ஒரு வாரத்திற்கு முன்பாகவே எச்சரிக்கைகள் கொடுக்கப்பட்டுள்ளது. கோடைகால வெப்பநிலை காரணமாக டெல்லி மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் பலத்த காற்றுடன் புழுதி புயல் வீசி வருகிறது.



தேர்தல் எதிரொலி: ஈரோட்டில் 1 லட்சம் வடமாநில தொழிலாளர்கள் காலி!
[Saturday 2024-05-11 06:00]

இந்தியாவில் பாராளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. தற்போது வரை 3 கட்ட தேர்தல் நடந்து முடிந்து விட்டது. தமிழகத்தில் கட்டுமானம் தொடங்கி பெரிய உணவகங்கள், சூப்பர் மார்க்கெட், கோழிப்பண்ணை, ஆழ்துளை கிணறு தோண்டும் வாகனங்கள், நட்சத்திர விடுதிகள், செங்கல் சூளை, சாய, தோல் தொழிற்சாலை வணிக நிறுவனங்களில் வடமாநில தொழிலாளர்கள் ஏராளமானோர் பணிபுரிந்து வருகின்றனர்.



“பாகிஸ்தானை மதிக்கணும்” - காங்கிரஸ் தலைவரின் பேச்சால் சர்ச்சை!
[Friday 2024-05-10 18:00]

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. அதில், ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்டமாகவும், ஏப்ரல் 26ஆம் தேதி இரண்டாம் கட்டமாகவும், மே 7ஆம் தேதி மூன்றாம் கட்டமாகவும் தேர்தல் நடந்து முடிந்தது. ஏழு கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெறும் இந்தத் தேர்தல், ஜூன் 4ஆம் தேதி அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. அதனைத் தொடர்ந்து, அடுத்தடுத்த கட்டத் தேர்தல்களை எதிர்கொண்டு பல மாநிலங்களில் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.



10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்: முதல் மதிப்பெண் எடுத்த மாணவ மாணவியரின் பெயர்கள் வெளியிடப்படாதது ஏன்?
[Friday 2024-05-10 18:00]

இன்று தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியாகின. வழக்கம்போல, மாணவர்களைவிட மாணவிகளே அதிக அளவில் வெற்றி பெற்றுள்ளார்கள். இந்நிலையில், முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்ற மாணவ மாணவியரின் பெயர்கள் மற்றும் புகைப்படங்கள் வெளியிடப்படவில்லை. அதற்கு பதிலாக எந்தெந்த மாவட்டங்கள் மற்றும் நகரங்களில் மாணவர்கள் அதிக அளவில் வெற்றி பெற்றுள்ளார்கள் என்னும் விவரம் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது.



10, 12 -ம் வகுப்பு மாணவர்களுக்கு நல்ல செய்தி சொன்ன விஜய்!
[Friday 2024-05-10 18:00]

10 மற்றும் 12 -ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு நடிகர் விஜய் நெஞ்சார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த 6 -ம் திகதி பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கான முடிவுகள் வெளியாகியது. அதன்படி,கடந்த 2023 -ம் ஆண்டு 94.03 சதவீதம் தேர்ச்சி பதிவாகியிருந்த நிலையில், இந்த ஆண்டு 94.56 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது.



தேர்வில் 494 மதிப்பெண்கள் எடுத்த மாணவர் விபரீத முடிவு!
[Friday 2024-05-10 18:00]

தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர் ஒருவர் 500 க்கு மேல் மதிப்பெண்கள் எடுக்க முடியவில்லை என்ற மன உளைச்சலில் விபரீத முடிவு எடுத்துள்ளார். தமிழக மாவட்டமான தேனி, கம்பம் கிளப் ரோடு மணி நகரத்தைச் சேர்ந்தவர் கண்ணன். இவரது மகன் ஜெயவர்மன் (17) அங்குள்ள தனியார் பள்ளி ஒன்றில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தார்.



பட்டாசு ஆலைகள் விதிமீறல்: உயிரிழப்பு 10ஆக உயர்ந்த நிலையில் எச்சரிக்கை!
[Friday 2024-05-10 06:00]

சிவகாசி ஸ்ரீசுதர்ஸன் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ள நிலையில், வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆறுதல் கூறினார். மேலும், சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்தார்.



பிரசாதம் சாப்பிட்டுவிட்டு கை கழுவ முயன்ற சிறுமிகளுக்கு நேர்ந்த சோகம்!
[Friday 2024-05-10 06:00]

நீர்நிலைகளில் சிறுவர், சிறுமிகள் முதல் பெரியவர்கள் வரை தவறி விழுந்து உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்கதையாகி வரும் நிலையில் கன்னியாகுமரியில் கோவிலில் பிரசாதம் சாப்பிட்டு விட்டு குளத்தில் கை கழுவ முயன்ற சிறுமிகள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.


Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
NKS-Ketha-04-11-2021
Airlinktravel-2020-01-01
Karan Remax-2010
Rajeef sebarasha 2023/04/19
Logan-Kumaresh-Homelife-02-02-2021
 gloriousprinters.com 2021
Mahesan-Remax-169515-Seithy
Asayan-Salon-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா