Untitled Document
May 4, 2024 [GMT]
தனிக்குடித்தனம் வர மறுத்தத கணவர்: - மனவேதனையில் புதுப்பெண் தற்கொலை
[Tuesday 2018-09-04 16:00]

கடலூர் மாவட்டம் புவனகிரி சுண்ணாம் புக்கரை தெருவைச் சேர்ந்தவர் சீனுவாசன். இவரது மகள் மாலதி(வயது 32). இவருக்கும் சென்னை மடிப்பாக்கத்தை சேர்ந்த ரவிசங்கர்(35) என்பவருக்கும் இடையே கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இதையடுத்து மாலதி தனது கணவருடன் மாமனார், மாமியாருடன் சென்னையில் வசித்து வந்தார்.

கடலூர் மாவட்டம் புவனகிரி சுண்ணாம் புக்கரை தெருவைச் சேர்ந்தவர் சீனுவாசன். இவரது மகள் மாலதி(வயது 32). இவருக்கும் சென்னை மடிப்பாக்கத்தை சேர்ந்த ரவிசங்கர்(35) என்பவருக்கும் இடையே கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இதையடுத்து மாலதி தனது கணவருடன் மாமனார், மாமியாருடன் சென்னையில் வசித்து வந்தார்.

  

தனிக்குடித்தனம் செல்ல வேண்டும் என்று மாலதி தன் கணவரிடம் வலியுறுத்தினார். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்தார். இதனால் மாலதி தனது கணவருடன் கோபித்துவிட்டு புவனகிரியில் உள்ள தாய் வீட்டுக்கு வந்துவிட்டார். அங்கு மாலதி மிகுந்த மனஉளைச்சலில் இருந்தார். தனது கணவர் தனிக்குடித்தனம் வர மறுக்கிறார் என எண்ணி மனவேதனை அடைந்தார். நேற்று இரவு மாலதி தாய் வெளியே சென்று விட்டார். வீட்டில் தனியாக இருந்த மாலதி திடீரென மின்விசிறியில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வீட்டுக்கு வந்த தாய் தனது மகள் மாலதி தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து புவனகிரி போலீசில் தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். மாலதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றிய புகாரின் பேரில் புவனகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருமணமாகி 5 மாதத்தில் மாலதி தற்கொலை செய்து கொண்டதால் கோட்டாட்சியரும் இதுகுறித்து விசாரித்து வருகிறார். இந்தசம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  
   Bookmark and Share Seithy.com



கடலோர மாவட்டங்களுக்கு எச்சரிக்கை: வெளியான முக்கிய அறிவிப்பு!
[Saturday 2024-05-04 17:00]

தமிழ்நாட்டில் தற்போது வெப்ப அலை அதிகரித்து வருகிறது. ஈரோடு போன்ற சில மாவட்டங்களில், 100 டிகிரிக்கு மேல் வெயில் அதிகரித்து வருகிறது. இதனால், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த வெப்ப அலையில் தப்பிப்பதற்காக தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.



நடராஜர் கோவிலில் தேவாரம் பாடிவிட்டு வெளியே வந்தவர்கள் கைது!
[Saturday 2024-05-04 17:00]

கடலூர் மாவட்டம் வடலூரில் உள்ள வள்ளலார் சத்திய ஞான சபை கட்டுமான பணிகளுக்கு பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் சனிக்கிழமை நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழ் தேசிய பேரியக்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் வடலூர் சத்திய ஞான சபையில் கட்டுமானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வடலூரில் போராட்டம் நடத்துவதற்கு அனுமதி கேட்டிருந்தனர்.



பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம்: கைது நடவடிக்கையில் கர்நாடக அரசு தீவிரம்!
[Saturday 2024-05-04 17:00]

முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாகப் புகார் எழுந்தது. அதாவது தன்னிடம் உதவி கேட்டு வந்த ஏராளமான பெண்களை பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் தேவைகளுக்காகப் பயன்படுத்திக் கொண்டதாகப் பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்தது. பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் இருப்பது போன்ற ஆபாச காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



மாயமான காங்கிரஸ் மாவட்ட தலைவர் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு!
[Saturday 2024-05-04 17:00]

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.பி.ஜெயக்குமார் கடந்த மாதம், தனக்கு கொலை மிரட்டல் வருவதாக பொலிஸில் புகார் அளித்திருந்தார்.



சிக்கன் ரைஸில் பூச்சிக்கொல்லி: தந்தையை தொடர்ந்து மகளும் உயிரிழப்பு!
[Saturday 2024-05-04 07:00]

நாமக்கல்லில் பூச்சி மருந்து கலந்த சிக்கன் ரைஸ் சாப்பிட்டு உயிரிழந்த தந்தையை தொடர்ந்து மகள் நதியாவும் உயிரிழந்துள்ளார். நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே உள்ள கொண்டிச்செட்டிபட்டி தேவராயபுரத்தை சேர்ந்த பகவதி (20) என்ற தனியார் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் ஓட்டல் ஒன்றில் சிக்கன் பிரியாணி சாப்பிட்டு உள்ளார்.



“ராகுல் காந்தி தப்பி ஓடுவது இது முதல் முறையல்ல” - ஸ்மிருதி இராணி விமர்சனம்!
[Saturday 2024-05-04 07:00]

நாடு முழுவதும் ஒவ்வொரு கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி அன்று தமிழ்நாடு, மணிப்பூர், உள்ளிட்ட 102 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. இதனையடுத்து, இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26ஆம் தேதி கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 89 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. அடுத்து வரவிருக்கும் மூன்றாம், நான்காம் கட்டத் தேர்தலுக்காக, காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



அமித்ஷா மீது வழக்குப்பதிவு!
[Saturday 2024-05-04 07:00]

நாடு முழுவதும் ஒவ்வொரு கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி அன்று தமிழ்நாடு, மணிப்பூர், உள்ளிட்ட 102 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. இதனையடுத்து, இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26ஆம் தேதி கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 89 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. அடுத்து வரவிருக்கும் மூன்றாம், நான்காம் கட்டத் தேர்தலுக்காக, காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



மதுபானக் கொள்கை வழக்கு: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சாதகமாகும் தீர்ப்பு?
[Friday 2024-05-03 18:00]

டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 9 முறை அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பியும், அவர் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார். இது தொடர்பாக அவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு கடந்த மார்ச் மாதம் 21 ஆம் தேதி(21.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாதென உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது.



சுட்டெரிக்கும் வெயிலுக்கு ஊடகவியலாளர் பலி!
[Friday 2024-05-03 18:00]

ஊடகவியலாளர்கள் வெயில், மழை, இரவு, பகல் பார்த்து பணி செய்வதில்லை. உலகம் முழுவதும் இராணுவ மோதலின்போது செய்தி சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு உயிரைவிட்ட ஊடகவியலாளர்கள் அனேகம்பேர். இந்தியாவிலும் செய்திப் பணிக்காகக் கொல்லப்பட்ட பத்திரிக்கையாளர்களின் பட்டியல் பெரிது. ஆக, உயிரையும் பணயம் வைத்துச் செய்தி சேகரிப்பது, ஒரு சமூகத் தொண்டாகவே கருதப்படுகிறது.



பத்மஸ்ரீ விருது பெற்றவருக்கு ஏற்பட்டுள்ள அவலநிலை!
[Friday 2024-05-03 18:00]

இந்தியாவின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருது பெற்ற பெற்றவர் தற்போது தினக்கூலிக்கு வேலை செய்து வருகிறார். இந்திய மாநிலமான தெலங்கானாவைச் சேர்ந்தவர் தர்ஷனம் மொகிலையா (Mogulaiah). இவர், வீணை போன்ற ஒரு சரம் கொண்ட கருவியான கின்னரா என்ற பழங்குடி இசைக்கருவியை இசைக்கும் கலைஞர் ஆவார்.



விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது!
[Friday 2024-05-03 18:00]

மறைந்த நடிகரும், அரசியல்வாதியுமான விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த டிசம்பர் மாதம் 28 ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணத்தால் உயிரிழந்தார். இவரது மறைவு தமிழகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.



கோவாக்சின் பாதுகாப்பானது: பயோடெக் நிறுவனம் விளக்கம்!
[Friday 2024-05-03 06:00]

கோவாக்சின் தடுப்பூசி பாதுகாப்பானது என பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது. கோவிஷீல்டு தடுப்பூசியில் இரத்த உறைதல் போன்ற பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக ஆஸ்ட்ராஜெனேகா நிறுவனம் தெரிவித்ததை அடுத்து, கோவாக்சின் தடுப்பூசி போட்டு கொண்டவர்களிடையே அச்சம் ஏற்பட்டது. இந்த அச்சத்தை போக்கும் வகையில், கோவாக்சின் தடுப்பூசி பாதுகாப்பானது மற்றும் இரத்த உறைதல் போன்ற பாதிப்புகள் ஏற்படாது என்று பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.



மேற்குவங்க ஆளுநர் மீது பாலியல் புகார்!
[Friday 2024-05-03 06:00]

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஒப்பந்த பணியாளராக பணியாற்றும் பெண் ஒருவர் அம்மாநில ஆளுநர் சி.வி. ஆனந்த்போஸ் மீது பாலியல் புகார் தெரிவித்துள்ளார். ஹேர் ஸ்ட்ரீட் பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் இந்த பாலியல் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் மேற்கு வங்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



'பெண்கள், சிறுவர்கள் மீது தடியடி?'- விசிக போராட்டம்!
[Friday 2024-05-03 06:00]

சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் திருவிழாவில் இரு தரப்பினருக்கிடையே மோதல் ஏற்பட்டதால் கோவில் திருவிழா நிறுத்தப்பட்டது. இதனால் அந்தப் பகுதியில் கல்வீச்சு சம்பவம் ஏற்பட்டு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் போலீசார் தடியடி நடத்தி கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.



கோவி ஷீல்டை அடுத்து கோவாக்சின்: தயாரிப்பு நிறுவனம் கொடுத்த விளக்கம்!
[Thursday 2024-05-02 18:00]

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவிலிருந்து பரவிய கொரோனா நோய்த் தொற்று உலகமெங்கும் பெருந்தொற்றாக மாறி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நோய்த் தொற்றால் உலகமெங்கும் லட்சக்கணக்கானோர் பலியானார்கள். இந்தத் தொற்றை கட்டுப்படுத்த உலகில் உள்ள மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்கள் உட்பட அனைவரும் பல்வேறு ஆய்வுகளை செய்து தீவிர முயற்சியில் ஈடுபட்டு வந்தனர். அதன் பின்பு, கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள், மாஸ்க், தடுப்பூசி போன்ற தீவிர முயற்சிகளால் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்தது.



சென்னையில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பகுதிக்குக் கொடுக்கப்பட்ட திடீர் அறிவிப்பு!
[Thursday 2024-05-02 18:00]

18 ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து வாக்கு பெட்டிகள் அனைத்தும் ஸ்ட்ராங் ரூம் எனப்படும் ஐந்து அடுக்கு பாதுகாப்பு அறைக்குள் வைக்கப்பட்டுள்ளன.



உத்தர பிரதேசத்தில் சோகம்: மூட நம்பிக்கையால் பறிபோன உயிர்!
[Thursday 2024-05-02 18:00]

கங்கை நதியில் உடம்பை வைத்திருந்தால் பாம்பு கடியின் விஷம் தானாக இறங்கி விடும் என்ற மூடநம்பிக்கையால் ஒரு உயிர் பறிபோகியுள்ளது. இந்திய மாநிலமான உத்தர பிரதேசம், புலன்சாகர் மாவட்டத்திற்கு உட்பட்ட ஜஹாங்கிராபாத் பகுதியில 20 வயது கல்லூரி மாணவர் மோகித் என்பவர் பி.காம் படித்து வந்துள்ளார்.



சொத்துக்காக தாயை அடித்தே கொன்ற கொடூரன்!
[Thursday 2024-05-02 18:00]

இந்திய மாநிலம் ஆந்திராவில் வளர்ப்பு தாயை மகன் அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆந்திராவின் பல்நாடு மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் தத்து நாயக். இவரது தந்தையின் முதல் மனைவியான லட்சுமி பாய், சொந்த மகன் போல தத்து நாயக்கை சிறுவயது முதலேயே வளர்த்து வந்துள்ளார்.



உலகில் அதிக சம்பளம் வாங்கும் இந்தியர்: யார் அந்த தமிழர்?
[Thursday 2024-05-02 06:00]

உலகின் அதிக சம்பளம் வாங்கும் இந்தியர் யார் தெரியுமா? அது வேறு யாரும் இல்லை, நம்ம சொந்த தமிழர் சுந்தர் பிச்சை தான்! கூகுள் நிறுவனத்தின் CEO ஆக இருக்கும் சுந்தர் பிச்சை, வெளிநாடுகளில் வேலை செய்யும் இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளிகளில் அதிக சம்பளம் வாங்குபவர் என்ற பெருமைக்குரியவர்.



"2 எருமை மாடுகள் இருந்தால் காங்கிரஸ் ஆட்சியில் ஒன்றை பறித்துக்கொள்வார்கள்" - பிரதமர் மோடி பேச்சு!
[Thursday 2024-05-02 06:00]

உங்களிடம் 2 எருமை மாடுகள் இருந்தால், காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் ஒரு எருமை மாட்டை உங்களிடம் இருந்து பறித்துவிடுவார்கள் என குஜராத்தில் மாடுகள் வளர்க்கும் மக்கள் அதிகம் உள்ள பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி பேசியுள்ளார். நாடு முழுவதும் லோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி லோக்சபா தேர்தல் நடந்தது.


Vaheesan-Remax-2016
Airlinktravel-2020-01-01
Rajeef sebarasha 2023/04/19
Mahesan-Remax-169515-Seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Ambikajewellers-01-08-2021-seithy
Karan Remax-2010
NKS-Ketha-04-11-2021
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Asayan-Salon-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா