Untitled Document
February 21, 2018 [GMT]
  • Welcome
  • Welcome
புதுக்குடியிருப்பில் கபே கண்காணிப்பாளரைத் தாக்கிய வேட்பாளர் கைது!
[Tuesday 2018-02-13 19:00]

தேர்தல் கண்காணிப்பு அமைப்பான கபே அமைப்பின் கண்காணிப்பாளர் மீது தாக்குதல் நடத்திய சுயேட்சை குழு வேட்பாளரை இன்று  கைது செய்துள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்தனர். விசுவமடு மாணிக்கபுரம் பகுதியில், கடந்த 10ஆம் திகதி மாலை, சுயேட்சைக்குழு வேட்பாளர் ஒருவரின் வீட்டுக்கு முன்னால் வேறு கட்சியின் ஆதரவாளர்கள் வெடி கொழுத்தி எறிந்து விட்டுச் சென்றனர்.
இதன்போது, சுயேட்சைக்குழு வேட்பாளர், எதிர்வீட்டுக்காரரான, கபே அமைப்பின் கண்காணிப்பாளர் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளார்.

தேர்தல் கண்காணிப்பு அமைப்பான கபே அமைப்பின் கண்காணிப்பாளர் மீது தாக்குதல் நடத்திய சுயேட்சை குழு வேட்பாளரை இன்று கைது செய்துள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்தனர். விசுவமடு மாணிக்கபுரம் பகுதியில், கடந்த 10ஆம் திகதி மாலை, சுயேட்சைக்குழு வேட்பாளர் ஒருவரின் வீட்டுக்கு முன்னால் வேறு கட்சியின் ஆதரவாளர்கள் வெடி கொழுத்தி எறிந்து விட்டுச் சென்றனர். இதன்போது, சுயேட்சைக்குழு வேட்பாளர், எதிர்வீட்டுக்காரரான, கபே அமைப்பின் கண்காணிப்பாளர் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளார்.

  

இதனால் காயமடைந்த கண்காணிப்பாளர், புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். இதனையடுத்து, விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் இன்று வேட்பாளரை கைது செய்துள்ளனர்.

  
   Bookmark and Share Seithy.comலண்டனில் இருந்து திருப்பி அழைக்கப்படுகிறார் பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ!
[Wednesday 2018-02-21 07:00]

பிரித்தானியாவில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகர் அலுவலகத்தில் பாதுகாப்பு ஆலோசகராக செயற்பட்ட பிரிகேடியர் பிரியங்க இலங்கை அரசாங்கம் விடுத்துள்ள வேண்டுகோளுக்கு அமைய நாடு திரும்பவுள்ளார். இலங்கையின் சுதந்திர தினத்தன்று பிரித்தானிய தூதரகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழர்களின் கழுத்தை அறுத்து விடுவேன் என சமிக்ஞை காட்டியமையினால் பாரிய சர்ச்சைகளுக்கு அவர் முகம் கொடுக்க நேரிட்டது.தேசிய அரசு பற்றிய முக்கிய முடிவை இன்று அறிவிப்பார் சபாநாயகர்!
[Wednesday 2018-02-21 07:00]

தேசிய அரசாங்கத்தின் இரண்டு வருட ஒப்பந்தக் காலம் முடிவடைந்திருக்கும் நிலையில் அதன் தற்போதைய நிலைமை தொடர்பாக இன்று முடிவை அறிவிப்பதாக சபாநாயகர் கருஜயசூரிய நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இரு கட்சிகளுக்குமிடையிலான ஒப்பந்தம் நீடிக்கப்பட்டுள்ளதா இல்லையா என்பது தொடர்பாக தனக்கு எந்த அறிவிப்பும் கிடைக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.புதிய அமைச்சரவையில் இளம் எம்.பிக்களுக்கு வாய்ப்பு!
[Wednesday 2018-02-21 07:00]

இரு பிரதான கட்சிகள் இணைந்த கூட்டு அரசாங்கத்தின் இரண்டாவது அமைச்சரவை மாற்றம் இன்று அல்லது நாளை இடம்பெறவுள்ளது. இதன்போது, நிதி, சட்டம் ஒழுங்கு, நெடுஞ்சாலைகள், மீன்பிடி மற்றும் நீரியியல் வளங்கள், விளையாட்டு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய அமைச்சுக்களில் மாற்றம் ஏற்படுத்தப்படவுள்ளதாக அரசாங்க பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.தலைமைத்துவ பயிற்சியில் பெண் அதிபர் மரணம்! - கயிற்றில் நடந்த போது விழுந்தார்
[Wednesday 2018-02-21 07:00]

தலைமைத்துவப் பயிற்சியின்போது அதிபர் ஒருவர் மரணமடைந்த சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தப்படும்வரை அதிபர் தலைமைத்துவப் பயிற்சிகளை இடைநிறுத்தி வைக்குமாறு அமைச்சர் அகில விராஜ் காரியவசம் பணிப்புரை விடுத்துள்ளார். இவர் கயிற்றில் நடந்த போது, 40 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்து மரணமானார்.மஹரகமவில் பதவி விலகுமாறு சுயேட்சைக் குழுவை அச்சுறுத்தும் மஹிந்த அணி!
[Wednesday 2018-02-21 07:00]

உள்ளூராட்சித் தேர்தலின் போது மஹரகம நகர சபையில் வெற்றிபெற்ற சுயேட்சைக் குழுவின் அனைவரும் பதவி விலகி புதியவர்களுக்கு இடமளிக்க அழுத்தம் கொடுக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உள்ளூராட்சித் தேர்தலின் போது மஹரகம நகரசபைக்கு பொதுஜன பெரமுன சமர்ப்பித்த வேட்பாளர் பட்டியல் க நிராகரிக்கப்பட்டது.நீதிமன்றச் சாட்சிக் கூண்டில் விமல் வீரவன்சவுக்கு நாற்காலி! - நிற்கமுடியாமல் தடுமாறினார்
[Wednesday 2018-02-21 07:00]

காலாவதியான கடவுச்சீட்டில் வெளிநாடு செல்ல முயற்சித்தமை தொடர்பில் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிராக வழக்கு விசாரணை இடம் பெற்று வருகிறது. குற்ற விசாரணை திணைக்கள அதிகாரிகளினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, 2 நாட்களுக்கு முன்னா் நீர்கொழும்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.மயிலிட்டி துறைமுக அபிவிருத்திக்கு 1 பில்லியன் ரூபா வழங்கியது நொர்வே!
[Wednesday 2018-02-21 07:00]

மயிலியிட்டி துறைமுகத்தை நவீனமுறையில் அபிவிருத்தி செய்வதற்காக, நோர்வே அரசாங்கம் சுமார் 1 பில்லியன் ரூபா நிதியுதவி வழங்கியுள்ளதாக இலங்கைக்கான நோர்வே உதவி தூதுவர் மொனிக்கா ஸ்வென்ஸ்கெட் தெரிவித்துள்ளார்.புலிகளுக்கு எதிரான 150 இன்டபோல் பிடியாணைகளை ரத்து செய்து விட்டது நல்லாட்சி அரசு! - உதயங்க குற்றச்சாட்டு
[Wednesday 2018-02-21 07:00]

விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு எதிரான சர்வதேச சிவப்பு அறிக்கையுடனான 150 பிடியாணைகள் நல்லாட்சி அரசாங்கத்தினால் ரத்துச் செய்யப்பட்டுள்ளதா குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் உதயங்க வீரதுங்க இந்தக் குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார்.இரண்டாவது ஆண்டில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டம்! - கிளிநொச்சியில் கவனயீர்ப்பு நிகழ்வு Top News
[Tuesday 2018-02-20 19:00]

காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கோரி கிளிநொச்சியில் ஆரம்பிக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம் இன்று இரண்டாவது ஆண்டுக்குள் நுழைந்துள்ளது. இதனை முன்னிட்டு காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.சுவிசில் புலிகளுக்கு நிதி சேகரித்த வழக்கு - 12 தமிழர்களுக்கு எதிரான வழக்கு மீண்டும் விசாரணை!
[Tuesday 2018-02-20 19:00]

விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு நிதி உதவி செய்ததாக சந்தேகத்தின் பேரில் 12 தமிழர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. இரண்டு வார இடைவெளிக்குப்பின் Bellinzonaவிலுள்ள Federal Criminal நீதிமன்றத்தில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.பொதுக் கொள்கையுடன் இணையுங்கள்! - சிறிகாந்தா அழைப்பு
[Tuesday 2018-02-20 19:00]

தமிழ் மக்களின் தேசிய பிரச்சினைக்கும், அடிப்படைப் பிரச்சினைக்கும் தீர்வு காண்பதற்காக, தமிழ் கட்சிகள் ஒரு பொது கொள்கையின் அடிப்படையில் ஒன்றிணைந்து செயற்பட முன்வருமாறு ரெலோ செயலாளர் என். ஸ்ரீகாந்தா பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார்.அமைச்சரவைக் கூட்டத்தில் சுசிலும் தயாசிறியும் மாயம்!
[Tuesday 2018-02-20 19:00]

ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன தலைமையில் இன்று காலை நடைபெற்ற வாராந்த அமைச்சரவை கூட்டத்தில், அமைச்சர்கள் இருவர் கலந்து ​கொள்ளவில்லையெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர்களான தயாசிறி ஜயசேகர மற்றும் சுசில் பிரேம்ஜயந்த் ஆகி​யோரே அமைச்ச​ரவை கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. இந்த இரு அமைச்சர்களையும் தவிர ஏனைய அனைத்து அமைச்சர்களும் அமைச்சரவை சந்திப்பில் கலந்து கொண்டதாக தகவல்கள் தெரிவித்தன.மகிந்தவிடம் நாட்டைக் கையளிக்கச் சொல்கிறார் ஞானசார தேரர்!
[Tuesday 2018-02-20 19:00]

உள்ளூராட்சி தேர்தலில் அதிக வாக்குகளுடன் வெற்றி பெற்ற மகிந்த ராஜபக்சவிடம் நாட்டை கொண்டு நடத்துவதற்கு இடமளிக்க வேண்டும் என கோரியுள்ள பொதுபல சேனா அமைப்பின் ஞானசார தேரர், நாட்டிற்கு தேவையான அரசாங்கம் ஒன்றை ஏற்படுத்த முடியாவிடின் ஜனாதிபதி நிறைவேற்று அதிகாரமிக்க பதவியில் இருந்து என்ன பயன் என்று கேள்வியெழுப்பியுள்ளார்.நாரந்தனை வாசியின் கையைத் துண்டித்தவர்களுக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை!
[Tuesday 2018-02-20 19:00]

நாரந்தனையில் குடும்பத்தலைவரை வெட்டிப் படுகாயம் ஏற்படுத்திய 4 குற்றவாளிகளுக்கு 10 ஆண்டுகள் ஒத்திவைக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. கடந்த 2015ஆம் ஆண்டு ஜூன் 3ஆம் திகதி ஊர்காவற்றுறை நாரந்தனை வடக்குப் பகுதியைச் சேர்ந்த அன்ரன் எட்வெட் ஹென்றி என்பவரை கும்பல் ஒன்று வெட்டிக் காயப்படுத்தியது. அதன் போது, அவரது ஒரு கை துண்டாகியது.மாணவர்களுக்கு டப் வழங்கும் திட்டத்தை இடைநிறுத்தினார் ஜனாதிபதி!
[Tuesday 2018-02-20 19:00]

பாடசாலையில் கல்வி பயிலும் உயர்தர மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் டப் (Tab) வழங்கும் திட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது. ஜனாதிபதியின் வேண்டுகோளுக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. டப் (Tab) வழங்கும் இத்திட்டத்தால் 175,000 பாடசாலை மாணவர்களும், 28,000 ஆசிரியர்களும் பயனடைய இருந்தனர்.சுமந்திரன் எழுப்பிய பிரச்சினையால் விவாதம் ஒத்திவைப்பு!
[Tuesday 2018-02-20 19:00]

இலங்கை மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணைமுறி மோசடி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை தமிழ் மற்றும் ஆங்கில மொழிமூலப் பிரதிகள் இல்லாததினால் நாடாளுமன்றத்தில் இன்று நடைபெறவிருந்த விவாதம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சிங்கள மொழியில் மட்டும் குறித்த அறிக்கை இருப்பதை சுட்டிக்காட்டிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன், தமிழ்மொழியில் பிரதிகள் வரும்வரை விவாதத்திற்கு ஒத்துழைக்க முடியாது எனக் கூறினார். இதை தொடர்ந்தே விவாதம் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது.இரணைமடு குளம் வற்றியதால் விவசாயம் கேள்விக்குறி! Top News
[Tuesday 2018-02-20 19:00]

கிளிநொச்சி இரணைமடு குளத்தின் நீர் மட்டம் தற்போது குறைவடைந்து காணப்படுவதால், சிறுபோக நெற்செய்கை கேள்விக்குள்ளாகியுள்ளது. இரணைமடுகுளத்தில் 30 அடி நீர் சேமிக்கப்படுகின்ற போது, பெப்ரவரி, மார்ச் மாதங்களில் குளத்தின் நீர் மட்டம் 24 அடியாக காணப்படும். இவ்வாறான வேளைகளில் இரணைமடுகுளத்தின் கீழ் 8 ஆயிரம் ஏக்கர் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு வந்தது.தென்மராட்சி விபத்துகளில் நால்வர் படுகாயம்!
[Tuesday 2018-02-20 19:00]

தென்­ம­ராட்­சிப் பிர­தே­சத்­தில் நேற்­றுக் காலை இடம்­பெற்ற விபத்­துக்­க­ளில் தாளை­யடி கத்­தோ­லிக்க பங்­குத் தந்தை உட்­பட நால்­வர் காய­ம­டைந்­த­னர். இவர்­க­ளில் இரு­வர் மேல­திக சிகிச்­சைக்­காக யாழ்.போதனா மருத்­து­வ­ம­னைக்கு அனுப்பி வைக்­கப்­பட்­ட­னர்.நிலையான ஆட்சிக்கே ஆதரவு! - ரிஷாட் பதியூதீன்
[Tuesday 2018-02-20 19:00]

நிலையான ஆட்சியை அமைப்பவர்களுக்கே அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆதரவு வழங்கும் என்று அமைச்சர் ரிஷாட் பதியூதீன் தெரிவித்தார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், “ நிலையான ஆட்சியை அமைப்பவர்களுடன் நாமும் இணைவோம். இந்நாட்டின் சிறுபான்மை இனம் நிம்மதியாக வாழக்கூடிய சூழலை ஏற்படுத்தும் நல்லாட்சிக்கே ஆதரவு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வழங்கும்” என்றார்.செயற்கை மழையை பொழியச் செய்வதற்கு திட்டம்!
[Tuesday 2018-02-20 19:00]

நாட்டின் மின்சக்தி நெருக்கடிக்கு தீர்வாக நீர் மின் உற்பத்தி நிலையங்களை அண்மித்த நீரேந்து பிரதேசங்களுக்கு செயற்கை மழையை பொழிவிப்பதற்கு தாய்லாந்து அரசாங்கத்தின் உதவியை பெற்றுக் கொள்ள உள்ளதாக மின்சக்தி மற்றும் மீள் புத்தாக்க எரிசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய கூறினார்.


Easankulasekaram-Remax-300716
Tharsi-home-15-10-2016
SELVI-HOMES-09-02-17
Mahesan-Remax-169515-Seithy
<P>
 <b> 13-08-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற இசை மாலைப் பொழுது - 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
</p>
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 29ம் 30ம்தி கதிகளில் நடைபெற்ற World Tamil Badminton Federation 5th annual tournament நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 7ம் 8ம் 9ம்தி கதிகளில் நடைபெற்ற குதூகலம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா