Untitled Document
February 21, 2018 [GMT]
  • Welcome
  • Welcome
அமெரிக்காவில் தோழியை காதலித்து திருமணம் செய்து கொண்ட பெண்!
[Tuesday 2018-02-13 07:00]
அமெரிக்காவில் உயிர் தோழியை பள்ளி ஆசிரியை திருமணம் செய்து கொண்டுள்ள நிலையில் அவர் பள்ளியிலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.ப்ளோரிடா மாகாணத்தின் மியாமி நகரில் உள்ள செண்ட் பீட்டர் கத்தோலிக பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்பவர் ஜோசிலின் மோர்பி.ஓரின சேர்க்கையாளரான இவர் தனது உயிர் தோழி நடாஷாவை காதலித்து வந்த நிலையில் கடந்த வாரம் திருமணம் செய்து கொண்டார்.

அமெரிக்காவில் உயிர் தோழியை பள்ளி ஆசிரியை திருமணம் செய்து கொண்டுள்ள நிலையில் அவர் பள்ளியிலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.ப்ளோரிடா மாகாணத்தின் மியாமி நகரில் உள்ள செண்ட் பீட்டர் கத்தோலிக பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்பவர் ஜோசிலின் மோர்பி.ஓரின சேர்க்கையாளரான இவர் தனது உயிர் தோழி நடாஷாவை காதலித்து வந்த நிலையில் கடந்த வாரம் திருமணம் செய்து கொண்டார்.

  

இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பள்ளி நிர்வாகம் ஜோசிலினை தற்போது பணிநீக்கம் செய்துள்ளது.இதுகுறித்து ஜோஸ்லின் கூறுகையில், என் காதலியை திருமணம் செய்து கொண்டதால் நான் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளேன்.அவர்கள் பார்வையில் நான் செய்தது தவறாக உள்ளது, ஆனாலும் ஆசிரியை தொழிலை தான் வருங்காலத்திலும் செய்வேன் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது, எனக்கு ஆதரவளித்தவர்களுக்கு நன்றி என கூறியுள்ளார்.

செண்ட் பீட்ட பள்ளி நிர்வாக செய்தி தொடர்பாளர் கூறுகையில், பணிக்கு சேரும் முன்னரே எல்லா ஆசிரியைகளிடமும் கத்தோலிக தேவாலய விதிமுறைப்படி செயல்பட வேண்டும் என ஒப்பந்தம் போட்டுள்ளோம்.ஆனால் அந்த ஒப்பந்தத்தை ஜோசிலின் மீறியதால் அவரை வேறு வழியின்றி பணிநீக்கம் செய்துள்ளோம் என கூறியுள்ளார்.ஜோசிலின் திருமணத்தில் கலந்து கொண்ட சக ஆசிரியைகளுக்கு கடும் எச்சரிக்கையை பள்ளி நிர்வாகம் விடுத்துள்ளது.

  
   Bookmark and Share Seithy.com



வங்காளதேசத்தில் ரெயில் கூரையில் இருந்து விழுந்து 4 பேர் பலி: - ஓசிப் பயணத்தால் வந்த வினை
[Wednesday 2018-02-21 17:00]

வங்காளதேசம் நாட்டின் வடக்கு பகுதியில் தினஜ்பூர் நோக்கி சென்ற டுருடோஜன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் சிலர் பயணச்சீட்டு இல்லாமல் ரெயில் கூரையின் மீது அமர்ந்து பயணம் செய்தனர். அந்த ரெயில் ராணிநகர் நிலையத்தை நெருங்கியபோது மின்சாரம் கடத்தும் கம்பத்தின் இடையில் ரெயில் புகுந்து சென்றது.



சிரியாவில் அரசுப்படைகளின் தாக்குதலில் குழந்தைகள் உட்பட அப்பாவி பொதுமக்கள் 250 பேர் பலி!
[Wednesday 2018-02-21 17:00]

சிரியாவில் கிளர்ச்சியாளர்களின் பிடியில் உள்ள பகுதியில் அந்நாட்டு ராணுவம் நடத்திய பயங்கர தாக்குதலில் 250-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பலியாகினர். 4 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வசித்து வரும் கவுட்டா பகுதியில் நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் 58 குழந்தைகள், 42 பெண்கள் உள்பட 250-க்கும் அதிகமான பொதுமக்கள் பலியாகியுள்ளனர். 1000-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். அதிபர் படை தொடர்ந்து தாக்குதலை தீவிரப்படுத்தி வருவதால் உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக மக்கள் கூட்டம் கூட்டமாக இடம் பெயர்ந்து வருகின்றன.



அமெரிக்காவில் கழிப்பறை இல்லாத வீட்டில் பிள்ளைகளை அடைத்து வைத்த பெற்றோர்!
[Wednesday 2018-02-21 16:00]

அமெரிக்காவில் 4 பிள்ளைகளை அவர்களின் வளர்ப்பு பெற்றோர் வீட்டில் உள்ள படுக்கையறையில் உணவு மற்றும் கழிப்பறை வசதியில்லாமல் அடைத்து வைத்திருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அரிசோனா மாகாணத்தில் உள்ள டுக்சன் நகரில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது.பெனிடோ (69) மற்றும் கரோல் குடிரீஸ் (64) தம்பதி 6லிருந்து 12 வயதுடைய 4 பிள்ளைகளை தத்தெடுத்து வளர்த்து வந்தனர்.



ரஷ்யாவில் குடும்பத்தாருக்கு வீடியோ அனுப்பிய பின்னர் தற்கொலை செய்து கொண்ட சகோதரிகள்!
[Wednesday 2018-02-21 16:00]

ரஷ்யாவில் குடும்பத்தாருக்கு வீடியோ அனுப்பிய பின்னர் இரண்டு சகோதரிகள் ஒன்றாக தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Izhevsk நகரத்தில் வசித்து வந்த Maria Vinogradova(12) மற்றும் Anastasia Svetozarova(15) ஆகிய ஒன்றுவிட்ட சகோதரிகள் தான் இந்த துயரச் செயலில் ஈடுபட்டுள்ளனர்.



பம்ப்ஸ்டாக் இயந்திர துப்பாக்கிக்கு தடை விதிக்கும் உத்தரவில் கையெழுத்திட்ட டொனால்ட் டிரம்ப்!
[Wednesday 2018-02-21 08:00]

கடந்த சில தினங்களுக்கு முன் நிகழ்ந்த ஃப்ளோரிடா பள்ளி துப்பாக்கிச் சூட்டிற்கு இந்த இயந்திரம்தான் பயன்படுத்தப்பட்டது. ஃப்ளோரிடாவில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் மாணவர்கள் பெற்றோர்கள் என 17 பேர் இறந்தனர். இதனால், அமெரிக்க மக்கள் ஆயுதக் கொள்கையில் மாற்றம் கொண்டு வர வலியுறுத்தி உள்ளூர் நேரப்படி புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டு இருந்தனர்.



சொந்த மகனை பெட்டிக்குள் அடைத்து கடத்திய தந்தை: - விசாரணையை துவக்கிய நீதிமன்றம்
[Wednesday 2018-02-21 07:00]

ஸ்பெயின் எல்லையில் நபர் ஒருவர் தமது 8 வயது மகனை பெட்டிக்குள் அடைத்து கடத்திய விவகாரத்தில் நீதிமன்றம் விசாரணையை துவக்கியுள்ளது.கடந்த 2015 ஆம் ஆண்டு பெட்டிக்குள் வைத்து 8 வயது சிறுவன் கடத்தப்படுவதாக வெளியான புகைப்படம் உலக அளவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.



தென்கொரியாவில் வடிவமைக்கப்பட்ட உலகின் மிக இருட்டான கட்டிடம்!
[Tuesday 2018-02-20 17:00]

உலகின் மிக இருட்டான கட்டிடம் தென் கொரியாவில் திறக்கப்பட்டுள்ளது. இந்த கட்டிடம் பொதுமக்கள் பார்வைக்கு விடப்பட்டுள்ளது. குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் ஒரு பகுதியாக ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் சார்பில் லண்டன் கட்டிடக்கலை நிபுணர்களைக் கொண்டு இந்த வித்யாசமான கட்டிடத்தை வடிவமைத்துள்ளனர். தூய்மை மற்றும் ஆரோக்கியமான எதிர்காலத்தை குறிக்கும் வகையில் இந்த கட்டிடம் உருவாக்கப்பட்டுள்ளதாக வடிவமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.



கனடாவில் பல் மருத்துவரின் தவறான சிகிச்சையால் சிறுமிக்கு நேர்ந்த பரிதாபம்!
[Tuesday 2018-02-20 09:00]

கனடாவில் பல் மருத்துவரின் தவறான சிகிச்சையால் இளம் சிறுமியின் மூளை பாதிக்கப்பட்டுள்ள சம்பவத்தால் பெற்றோர்கள் மன வேதனையில் உறைந்துள்ளனர்.2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பல் சிகிச்சைக்காக Amber Athwal என்னும் நான்கு வயது சிறுமி Dr. William Mather என்னும் பல் மருத்துவரின் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாள்.அங்கு அவளுக்கு பல் சிகிச்சைக்காக மயக்க மருந்து செலுத்தப்பட்டது,சிகிச்சைக்குப் பின் அவளுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.



உறுப்புகளை தானம் செய்ததன் மூலம் நான்கு பேரை வாழ வைத்த சிறுமி!
[Tuesday 2018-02-20 09:00]

கார் விபத்தில் பலியான சிறுமி ஒருத்தி தனது உறுப்புகளை தானம் செய்ததன்மூலம் நான்கு பேரை வாழ வைத்துள்ளதை நினைவு கூறுகிறார் அவளது தந்தை.கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் பிரித்தானியாவிலுள்ள Devonஇல் நிகழ்ந்த கார் விபத்தொன்றில் சிக்கி 9 வயது Keiraவும் அவளது தாய் மற்றும் சகோதரனும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.



சவுதியில் பெண்கள் தொழில் தொடங்க ஆண்களின் அனுமதி தேவையில்லை: - அரசு அதிரடி
[Tuesday 2018-02-20 08:00]

பெண்கள் தொழில் தொடங்க ஆண்களின் அனுமதி தேவையில்லை என சவுதி அரேபிய அரசு அறிவித்துள்ளது. சவுதி அரேபியாவில் மன்னர் ஆட்சி நடைபெறுகிறது. இங்கு பெண்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மற்ற நாடுகளை போல பெண்கள் இங்கு சுதந்திரமாக இருக்க முடியாது. ஆண்களுடன் பழகவோ, வெளியிடங்களுக்கு செல்லவோ பெண்களுக்கு ஏராளமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இளவரசர் முகமது பின் சல்மான், நிர்வாகத்தில் பெண்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது, அண்மையில் பெண்களுக்கு கார் ஓட்டும் லைசென்ஸ் வழங்கப்பட்டது, அதேபோல் கால்பந்து போட்டிகளை காணவும் பெண்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.



தனது உள்ளாடையை பறக்கும் விமானத்தில் காயவைத்த பெண் பயணி!
[Tuesday 2018-02-20 08:00]

பறக்கும் விமானத்தில் பெண் பயணி ஒருவர் தனது உள்ளாடையை காயவைத்த சம்பவம் வீடியோவாக வெளியாகி வைரலாகியுள்ளது. துருக்கியில் இருந்து ரஷ்ய தலைநகர் மாஸ்கோவுக்கு Ural விமான சேவை நிறுவனத்தின் விமானம் ஒன்று புறப்பட்டு சென்றுள்ளது. இதில் பயணம் செய்த பெண் ஒருவர் தமது உள்ளாடையை, தலைக்கு மேலிருக்கும் சிறு துளை வழியாக வெளிவரும் காற்றில் காயவைத்த்துள்ளார்.



தாய்லாந்தில் கரு நாக ரத்தம் குடித்த அமெரிக்க ராணுவத்தினர்!
[Tuesday 2018-02-20 08:00]

தாய்லாந்தில் போர் பயிற்சியில் ஈடுபட்டு வரும் அமெரிக்க ராணுவத்தினர், பயிற்சியின் ஒருபகுதியாக கரு நாக ரத்தம் குடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தாய்லாந்தில் அமெரிக்க ராணுவத்துடன் இணைந்து ஆசிய நாடுகள் சில போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றது. 10 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியில் தாய் ராணுவத்துடன், சிங்கப்பூர், ஜப்பான், இந்தோனேசியா, தென் கொரியா மற்றும் மலேசியா ராணுவத்தினரும் கலந்து கொண்டுள்ளனர்.



மற்றவர்களை தோற்கடித்தது போல் அவரையும் தோற்கடித்து காட்டுவேன்: - டொனால்ட் டிரம்ப் ஆவேசம்
[Monday 2018-02-19 18:00]

தொலைக்காட்சி பேட்டியை, தனக்கு எதிரான கருத்துகளை பதிலளிக்கும் வகையில் அமைத்த, தொகுப்பாளினி ஓப்ரா வின்பிரேவின் முகத்திரையை கிழிப்பேன் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஆவேசமாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.இந்த ஆண்டுக்கான கோல்டன் குளோப் விருது வழங்கும் விழாவில், ஹாலிவுட் வெளிநாட்டு பத்திரிக்கைகள் கூட்டமைப்பு சார்பில், ‘செசில் பி. டெ மில்லே’ விருது அறிவிக்கப்பட்டது.



ரஷ்யாவில் மர்மநபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 பெண்கள் உயிரிழப்பு!
[Monday 2018-02-19 16:00]

தெற்கு ரஷ்யாவின் மர்மநபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 பெண்கள் கொல்லப்பட்டுள்ளனர். ரஷ்யாவின் தாகெஸ்தான் பிராந்தியத்தில் உள்ள தேவாலயத்துக்கு அருகே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. கிஸ்ல்யார் பகுதியில் உள்ள தேவாலயத்தில் வழிபாட்டை முடித்து வெளியே வந்தவர்கள் மீது மர்மநபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.



பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இம்ரான் கானுக்கு மூன்றாவது திருமணம்!
[Monday 2018-02-19 16:00]

பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இம்ரான் கான், மூன்றாவது திருமணம் செய்துகொண்டார். பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இம்ரான் கான் தலைமையின் கீழ், 1992-ம் ஆண்டு, பாகிஸ்தான் அணி உலகக்கோப்பையை வென்றது. இதையடுத்து, கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற அவர், அரசியலில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் என்ற கட்சியைத் தொடங்கிய அவர், அந்நாட்டின் முக்கிய எதிர்க்கட்சித் தலைவராகவும் இருக்கிறார். 1995ல் இங்கிலாந்தைச் சேர்ந்த தனது காதலியான ஜெமிலா கோல்ட்ஸ்மித்தை மணந்த இவர், 9 வருடத்திற்குப் பின் ஜெமிலாவை விவாகரத்துசெய்தார். பின்னர் 2015-ம் ஆண்டில், டிவி தொகுப்பாளரான ரேஹாம் கானை மணந்தார். 10 மாதங்களிலேயே இந்தத் திருமண வாழ்க்கை முடிவுக்குவந்தது.



தென் கொரியா ஒலிம்பிக்கில் வீராங்கனையின் மேலாடை விலகியதால் பரபரப்பு!
[Monday 2018-02-19 07:00]

தென் கொரியாவில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக்கில் பிரான்ஸ் சார்பில் பனிச்சறுக்கு நடனப்போட்டியில் பங்கேற்ற வீராங்கனையின் மேலாடை விலகியதால் பரபரப்பு ஏற்பட்டது.கேப்ரில்லா பபாடாகிஸ் (22) என்ற வீராங்கனை தனது ஜோடியான குயிலுமி சிசிரோனுடன் சேர்ந்து பனிச்சறுக்கு நடனப்போட்டியில் பங்கேற்றார்.



ஜேர்மனியில் சமூகவலைதள சவாலில் ஈடுபட்ட 4 நபர்கள் மருத்துவமனையில் அனுமதி!
[Monday 2018-02-19 07:00]

ஜேர்மனியில் சமூகவலைதள சவாலில் ஈடுபட்ட 4 நபர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஜேர்மனியில் தற்போது பிரபலமாக நடந்து வரும் சமூகவலைதள சவாலின் பெயர் "Grill-Pool-Challenge". இந்த சவாலை ஏற்கும் நபர்கள், வெப்பநிலை அதிகமாக இருக்கும் நாட்களில் செய்வனவற்றை குளிர்காலத்தில் செய்து அதனை வீடியோவாக பதிவு செய்து சமூகவலைதளத்தில் பதிவேற்ற வேண்டும்.



தமிழர் முறைப்படி திருமணம் செய்த அமெரிக்காவை சேர்ந்த எழுத்தாளர்!
[Monday 2018-02-19 07:00]

அமெரிக்காவை சேர்ந்த எழுத்தாளர் மர்சி ஷிமாப் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்னர் செர்ஜியோ பரோனி என்பவரை மதுரையில் திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது மீண்டும் திருமணத்தை புதுப்பித்துள்ளார். அமெரிக்காவை சேர்ந்தவர் மர்சி ஷிமாப், Chicken Soup, Happy for No Reason போன்ற பல்வேறு புத்தகங்களை இவர் எழுதியுள்ளார்.



அமெரிக்க புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ-யை கடுமையாக விமர்சித்த டொனால்டு டிரம்ப்!
[Sunday 2018-02-18 15:00]

ஃப்ளோரிடா பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூடு தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அமெரிக்க புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ-யை கடுமையாக விமர்சித்துள்ளார்.



ஈரானில் பயணிகள் விமானம் விழுந்து விபத்து: - 66 பேர் பலி
[Sunday 2018-02-18 14:00]

ஈரான் நாட்டின் தலைநகர் டெஹ்ரானில் இருந்து இஸ்ஃபாஹன் மாகாணத்தில் உள்ள யசூச் நகரத்திற்கு இன்று காலை பயணிகள் விமானம் ஒன்று புறப்பட்டுச் சென்றது. ATR-72 என்ற அந்த விமானத்தில் 66 பயணிகள் இருந்ததாக கூறப்படுகிறது. வானில் பறந்து கொண்டிருக்கும் போதே ரேடாரில் இருந்து விமானம் மாயமானது.


Mahesan-Remax-169515-Seithy
Tharsi-home-15-10-2016
SELVI-HOMES-09-02-17
Easankulasekaram-Remax-300716
<P>
 <b> 13-08-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற இசை மாலைப் பொழுது - 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
</p>
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 29ம் 30ம்தி கதிகளில் நடைபெற்ற World Tamil Badminton Federation 5th annual tournament நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 7ம் 8ம் 9ம்தி கதிகளில் நடைபெற்ற குதூகலம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா