Untitled Document
February 21, 2018 [GMT]
  • Welcome
  • Welcome
தமிழீழ உணர்வுடன் பேர்லினில் நடைபெற்ற விடுதலை மாலை 2018 Top News
[Sunday 2018-02-04 19:00]

தமிழீழ ஆன்மாவை  மனதில் நிறுத்தி தமிழீழ தேசத்துக்காக தமது இன்னுயிர்களை விதையாக்கி சென்ற அனைத்து உறவுகளின் நினைவாக நேற்றைய தினம்  சனிக்கிழமை அன்று பேர்லின் மாநகரத்தில் விடுதலை மாலை உணர்வுபூர்வமாக நடைபெற்றது.பொதுச்சுடர் ஏற்றலுடன் ஆரம்பிக்கப்பட்ட  வணக்க நிகழ்வில் தேசியக்கொடி ஏற்றப்பட்டு , சிறப்பாக அமைக்கப்பட்ட தூபிக்கும், வங்கக் கடலில் வீரகாவியமான கேணல் கிட்டு உட்பட 10 வேங்கைகளின் 25 வது ஆண்டு நினைவேந்தலோடு கேணல் கிட்டு அவர்களின் திருவுருவப்படத்துக்கும் மலர் தூவி  சுடர் வணக்கம் செலுத்தப்பட்டது.

தமிழீழ ஆன்மாவை மனதில் நிறுத்தி தமிழீழ தேசத்துக்காக தமது இன்னுயிர்களை விதையாக்கி சென்ற அனைத்து உறவுகளின் நினைவாக நேற்றைய தினம் சனிக்கிழமை அன்று பேர்லின் மாநகரத்தில் விடுதலை மாலை உணர்வுபூர்வமாக நடைபெற்றது.பொதுச்சுடர் ஏற்றலுடன் ஆரம்பிக்கப்பட்ட வணக்க நிகழ்வில் தேசியக்கொடி ஏற்றப்பட்டு , சிறப்பாக அமைக்கப்பட்ட தூபிக்கும், வங்கக் கடலில் வீரகாவியமான கேணல் கிட்டு உட்பட 10 வேங்கைகளின் 25 வது ஆண்டு நினைவேந்தலோடு கேணல் கிட்டு அவர்களின் திருவுருவப்படத்துக்கும் மலர் தூவி சுடர் வணக்கம் செலுத்தப்பட்டது.

  

மாவீரர்களின் நினைவுரைகள் பகிரப்பட்டு, சமகால அரசியல் தொடர்பான எழுச்சியுரைகளுடன், சிறுவர்களின் எழுச்சி நடனங்களும் அதேவேளையில் எழுச்சிப் பாடலுடன், கவிதை , நாடகம், இசை வணக்கம் என அனைத்து நிகழ்வுகளும் சிறப்பாக அரங்கேறியது.

நிகழ்வில் சமகால அரசியல் தொடர்பான கருத்துக்களை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் உருத்திரகுமாரன் விஸ்வலிங்கம் மற்றும் அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவையின் தலைவர் பேராசிரியர் சிறிரஞ்சன் அவர்களும் காணொளி ஊடாக நிகழ்த்தினார்கள்.

தமிழின அழிப்புக்கு பரிகார நீதியை நிலைநாட்டவும் ,தமிழ் மக்களின் உரிமையை வென்றெடுக்கவும் தாயகத்திலும் புலத்திலும் இளையோர்களை ஒருங்கிணைத்து அரசியற்செயற்பாடும் அறிமுகப்படுத்தப்பட்டது.

தாயகத்தில் நிலவுகின்ற சமகால அரசியல் புறச்சூழல் தொடர்பாக யேர்மன் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளர் திரு சிறிரவீந்திரநாதன் அவர்கள் உரையாற்றியதோடு தமிழ் மக்களை ஏமாற்றி அரசியல் லாபம் தேடுபவர்களை புறம்தள்ளி உண்மையான உறுதியான நேர்மையான இளையோர்களை தெரிவுசெய்வது இன்று எமக்கு முன்னிருக்கும் கடமை எனவும் எடுத்துரைத்தார். இறுதியாக தாயக மக்களின் வாழ்வாதாரத்தை நாம் மேலும் கட்டி அமைக்க முன்வரவேண்டும் என்பதனையும் வலியுறுத்தினார்.

புலம்பெயர்ந்து பிறந்தாலும், வாழந்தாலும் தமது வேர்களை தேடும் பயணத்தை இவ் நிகழ்வில் அரங்கேறிய சிறார்களின் எழுச்சி ஆக்கங்களிலிருந்து காணக்கூடியதாக அமைந்தது. தாயக உறவுகளின் சுதந்திர வாழ்வுக்காக , அவர்களின் இருப்புக்காக தொடர்ந்தும் ஓர்மத்துடன் சற்றும் சளைக்காமல் குரல்கொடுப்போம் என்று உறுதியெடுத்துக் கொண்டு விடுதலை மாலை நிறைவுபெற்றது.

  
   Bookmark and Share Seithy.com



கிளிநொச்சியைச் சேர்ந்த லக்ஸ்மன் தங்கராசாவுக்கு வாழ்வாதார உதவி வழங்கிவைப்பு! Top News Top News
[Thursday 2018-02-08 12:00]

தாயகத்தில் யுத்தத்தாலும் இதர அனர்த்தங்களாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதில் கனடா செந்தில்குமரன் நிவாரண நிதியமும் கனடா வாழ் உறவுகளும் முனைப்போடு பணியாற்றிவரும் சூழலில் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த பயனாளிகளுக்கு உதவி வழங்கும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது.



பிரம்ரனில் களைகட்டிய தமிழ் மரபுத்திங்கள் பொங்கல்விழா: Top News
[Monday 2018-02-05 07:00]

பிரம்ரன் தமிழ் சமூகம் நடாத்திய 6ம் ஆண்டு தமிழ் மரபுத் திங்கள் பொங்கல் விழா மிகவும் எழுச்சியுடன் நடைபெற்றது. உலகளாவிய தமிழர்கள் ஒருமித்து, நன்றி மறவாமை என்கின்ற உயரிய நோக்கத்திற்காக ஒரே மாதிரியாகக் கொண்டாடும் ஒரே திருவிழா பொங்கல் திருநாள் எனப்படும் உழவர் திருநாளாகும். தை பிறந்தால் வழி பிறக்கும் இது ஆன்றோர் வாக்கு. தை திருநாளில் இது வரை இருந்து வந்த துன்பங்கள் நீங்கி நல்வழி பிறக்கும் என்ற நம்பிக்கையோடு இந்த பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த சிறப்புக்குரிய விழா கடந்த 21.1.18 ஞாயிறு அன்று Brampton.Sandalwood Heights S. S அரங்கில் மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை பெருந்தொகையான பார்வையாளர்களுடன் மிகச்சிறப்பாக நடைபெற்றது.



முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு உதவிக்கரம் நீட்டும் நிவாரண நிதியம்: Top News
[Friday 2018-02-02 19:00]

கிளிநொச்சியில் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு உதவிக்கரம் நீட்டும் கனடா செந்தில் குமரனின் நிவாரண நிதியம் சிகிச்சைக்காக ஏழரை இலட்சம் செலவில் முச்சக்கரவண்டியும் கையளிப்பு. இன்னமும் தாயகத்தில் யுத்தத்தின் கொடுமையால் ஏற்பட்ட வடுக்கள் ஆறாத காயங்களாக தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. அதன் வடுக்களை வலிகளை இன்னமும் சுமந்தவர்களாக முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்ட பல போராளிகள் பொதுமக்கள் வாழ்ந்துகொண்டிருக்கும் நிலையில் அவர்களுக்கான சிகிச்சை, மற்றும் வாழ்வாதாரம் என பல பணிகளை கனடா வாழ் உறவுகளின் அனுசரணையோடு செந்தில் குமரன் அவர்களின் நிவாரணநிதியம் ஆற்றிவருகின்றது.



தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரத்திற்கு சென்றவர்களுக்கு நடந்த சோதனை: Top News
[Tuesday 2018-01-30 07:00]

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாபெரும் பிரசார கூட்டத்துக்கு வருகைதந்த பொதுமக்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் அனைவரையும் பொலிஸார் தீவிர பரிசோதனையின் பின்னரே உள்ளே செல்வதற்கு அனுமதித்த செயற்பாடு பலர் மத்தியில் விசனத்தை தோற்றுவித்துள்ளது.



அன்பு இல்லத்தில் அமரர் மார்க்கண்டு யோகவதி அம்மாவின் 31 ஆம் நாள் நினைவு நாள் Top News
[Monday 2018-01-29 18:00]

தமிழருவி வானொலி முன்னெடுத்துவரும் உதவும் உள்ளங்கள் செயற்றிட்டத்தினூடாக, அமரர் மார்க்கண்டு யோகவதி அவர்களின் 31 ஆம் நாள் நினைவாக முல்லைத்தீவு முத்தையன்கட்டில் அமைந்துள்ள அன்பு இல்ல குழந்தைகளுக்கு இன்றையதினம் (29) காலை, மதியம், இரவு சிறப்புணவுகள்  வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.



யாழ்ப்பாணம் சர்வதே வர்த்தக சந்தை கண்காட்சி இன்று ஆரம்பம்:Top News
[Friday 2018-01-26 18:00]

யாழ்ப்பாணம் சர்வதே வர்த்தக சந்தை கண்காட்சி இன்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பமாகி எதிர்வரும் 28 ஆம் திகதி வரை தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறவுள்ளது. யாழ் மாநகர சபை மைதானத்தில் 9ஆவது முறையாக நடைபெறவுள்ள இந்த வர்த்தக சந்தையில் இந்தியாவின் வர்த்தக தொழிற்துறையின் மன்றங்களை ஒன்றிணைத்த அசோக் சாம் அமைப்பிலுள்ள 75 நிறுவனங்கள் இம்முறை நேரடியாக கலந்து கொள்ளவுள்ளன.



10 இருதய நோயாளிகளுக்கு இலவச சத்திர சிகிச்சையை செந்தில் குமரனின் நிவாரண நிதியம் ஒழுங்கு! Top News Top News
[Friday 2018-01-26 18:00]

இலங்கையில் இதய நோயினினால் அல்லலுறும் பல உறவுகள், அரசாங்க மருத்துவமனையில் இலவச சிகிச்சைக்கு காத்திருப்பு பட்டியலில் தங்கள் பெயரை பதிந்து விட்டு, பல வருடங்களாக அந்த நோயினால் அவதியுற்று உயிரையும் மாய்த்துள்ளனர்.



தமிழருவியின் உதவும் உள்ளங்கள் செயற்திட்டம் -2018 Top News
[Wednesday 2018-01-24 09:00]

வன்னி மண்ணிலிருந்து வையகம் முழுவதும் ஒலிபரப்பாகும் தமிழருவி வானொலியின் தைப்பொங்கல் சிறப்பு உதவும் உள்ளங்கள் செயற்றிட்டம் நேற்று (23) செவ்வாய்க்கிழமை மாலை முல்லைத்தீவில் இடம்பெற்றது.



அரசியல் மூலோபாயங்களை வகுத்துக் கொண்ட நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அமர்வு ! Top News
[Tuesday 2018-01-23 18:00]

கனடாவில மூன்று நாட்களாக இடம்பெற்றிருந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வு பல்வேறு நிறைவுகண்டுள்ளது. நா.தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாம் தவணைக்காலத்தில் இடம்பெற்ற எட்டாவது நேரடி அரசவை அமர்வாக இது கடந்த வாரம் மார்கம் பகுதியில் வன்னிவீதியில் அமையப் பெற்றுள்ள நகர மண்டபத்தில் சனவரி 19-20-21 ஆகிய நாட்களில் ரொறன்ரோவில் இடம்பெற்றிருந்தது.



கிளிநொச்சி முழங்காவில் மகாவித்தியாலயத்தில் குடி நீர் சுத்திகரிப்பு இயந்திரம்: - கனடா செந்தில் குமரன் வழங்கிவைப்பு Top News
[Sunday 2018-01-21 20:00]

தாயகத்தில் ஏராளமானோர் சுத்தமில்லாத குடி நீரை அருந்துவதால் சிறுநீரக நோய்;க்கு உள்ளாகி அவதியுற்று இறக்கும் நிலை பெருகி வருகின்றது. இந்நிலையில் தாயகத்தில் யுத்தத்தின் வடுக்களைச்சுமந்தும் நோய்களின் தாக்கங்களினாலும் துன்பங்களைச்சந்தித்து வரும் தாயக உறவுகளுக்கு உயிர்காக்கவும் உதவிக்கரம் நீட்டுவதிலும் கனடா செந்தில்குமரன் அவர்களின் நிவாரண நிதியமும் கனடா வாழ் உறவுகளும் பெரும்பங்கை ஆற்றிவரும் நிலையில் இன்றைய தினம் பூநகரிப்பிரதேசத்தின் கிளி/முழங்காவில் மகாவித்தியாலயத்தில் குடி நீர் சுத்திகரிப்பு இயந்திரம் வழங்கும் நிகழ்வு பாடசாலைமுதல்வர் திரு பத்மநாதன் ஆனந்தராசா தலைமையில் சிறப்புற இடம்பெற்றது.



நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அமர்வு - 2018: Top News
[Saturday 2018-01-20 19:00]

தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை எனும் ஈழத்தமிழ் மக்களின் அரசியல் பெருவிருப்பின் சனாநாயக வடிவமாக விளங்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வு கனடாவில் நேற்று 19.01.2018 கூடியுள்ளது. எதிர்வரும் 21ம் நாள் வரை ரொறன்ரோவில் Aaniin community centre, 5665. 14th Ave. ( Between Middlefield and Vanni st )Markham, On L3S 3K எனும் முகவரியில் அமைந்த இவ்விடத்தில் நடைபெற்ற அமர்வில் ஒவ்வொரு நாடுகளில் இருந்தும் அரசவை உறுப்பினர் நேரடியாக பங்கெடுத்துள்ளனர்.



பிரித்தானிய பாராளுமன்றத்தில் முதன் முதலாக நடாத்தப்பட்ட தை திருநாள் நிகழ்வு! Top News
[Friday 2018-01-19 09:00]

பிரித்தானிய நாடாளுமன்றில் தைப்பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த நிகழ்வானது பிரித்தானிய நாடாளுமன்ற ஜூபிலி அரங்கில் முதன்முறையாக நடைபெற்றது. தைப்பொங்கல் விழாவினை தமிழர்களுக்கான அனைத்துக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் (APPG T) பிரித்தானிய தமிழர் பேரவை (BTF) இணைந்து ஒழுங்குபடுத்தியிருந்தது.



செந்தில் குமரன் அறக்கட்டளை நிதியத்தின் உதவியுடன் நான்காவது கட்ட தலைமைத்துவ பயிற்சி நிறைவுற்றது: Top News
[Monday 2018-01-15 08:00]

கனடா நாட்டில் வாழும் புலம் பெயர் தாயக உறவுகளின் நிதி அனுசரணையுடனும் மற்றும் செந்தில் குமரன் அறக்கட்டளை நிதியத்தின் நிதியுதவியுடன் கிளிநொச்சி மாவட்ட கல்வி, கலாச்சார அமையத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகளில் கல்வி கற்று வருகின்ற க. பொ. த. உயர் தரப் பிரிவு 220, மாணவர்களுக்கும் தலைமைத்துவம், மற்றும் போதைப் பொருள் தடுப்பு மற்றும் அதன் தீமைகள் தொடர்பான பயிற்சி நெறியின் நிறைவு நாள் விழா நடை பெற்றுள்ளது.



வன்னித் தமிழ்ச் சமூக கலாச்சார அமையத்தின் உதவிக்கரம் Top News
[Tuesday 2018-01-09 11:00]

வீட்டுத் தோட்டத்திற்கு கிணற்றில் நீரின்றியும்,முள்ளந்தண்டு நோயினாலும் பாதிக்கப்பட்ட நெ/ பெரியமடுவைச் சேர்ந்த திரு தர்மலிங்கம் அவர்களுக்கு க.பொ.த.உ தரத்தில்   முதலாம் மற்றும் மூன்றாம் (ஆவணி 2017)வருடங்களில் கல்வி பயில்கின்ற மகள்களை தொடர்ந்து கற்பிக்க முடியாத நிலையில் இருந்த போது கிராம அலுவலகர் மூலம் எமது அமையத்திற்கு விண்ணப்பித்திருந்தனர்.



வவுனியா வடக்கில் பல்வேறு இடங்களில் தமிழ்த் தேசியப் பேரவையினரின் மக்கள் சந்திப்பு: Top News
[Monday 2018-01-08 19:00]

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அகில இலங்கை தமிழ்க் காங்கிரசின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் தமிழ்த் தேசியப் பேரவையினர் வவுனியா வடக்கு பிரதேசத்தில் நேற்றைய தினம் பல்வேறு இடங்களில் தேர்தல் பரப்புரைகளை மேற்கொண்டுள்ளனர். நெடுங்கேணி ஒலுமடு, நெடுங்கேணி சூடுவெந்தான் கிராமம், வவுனியா வடக்கு, பரந்தன், புளியங்குளம் முத்துமாரி நகர், கனகராயன்குளம், வவுனியா வடக்கு நயினைமடு மற்றும் சின்னடம்பன் ஆகிய இடங்களில் மக்கள் சந்திப்புக்களும் இடம்பெற்றுள்ளன.



அனைவரையும் அழித்துவிடுவேன்,மூதூர் கிழக்கு மக்களை அச்சுறுத்திய ஆளுநரின் மனைவி! - காளியம்மா காப்பாற்று என்று கதறிய தமிழ் மக்கள் Top News
[Saturday 2017-12-30 09:00]

திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கூனித்தீவு கிராம சேவகர் பிரிவுள்ள மத்தளமலை ஆலயத்தில் வழிபாடுகளில் ஈடுபட்டிருந்த தமிழ் மக்களை கிழக்கு மாகாண ஆளுநரின் மனைவி அச்சுறுத்தியுள்ளார். கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகம மற்றும் கிழக்கு மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஆகியோர் முன்னிலையிலேயே மத்தளமலையில் அமைந்துள்ள ஆலய வளாகத்தில் இருந்த பெண்கள் உட்பட தமிழர்களை கிழக்கு மாகாண ஆளுநரின் மனைவி தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தி திட்டித் தீர்த்து அனைவரையும் அழித்துவிடுவதாகவும் அச்சுறுத்தி இருக்கின்றார்.



மூன்று தாயக உறவுகளின் உயிர்கள் கனடா வாழ் எம் உறவுகளால் காப்பாற்றப்பட்டுள்ளது: Top News
[Thursday 2017-12-28 18:00]

டிசம்பர் மாதத்தில் மட்டும் மூன்று இருதய சத்திர சிகிச்சைகள் இலங்கையில் உள்ள Lanka மருத்துவ மனையில் கனடா மின்னல் செந்தில் குமரனின் நிவாரண அமைப்பின் ஊடாக நடைபெற்று நோயாளிகளின் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளது. நாற்பது வயதான மூன்று (03) பிள்ளைகளின் தந்தையான மட்டக்களப்பு பழுகாமத்தை சேர்ந்த திருச்செல்வத்திற்கும், முப்பத்தி இரண்டு வயதான இரண்டு(02) பிள்ளைகளின் தந்தையான மட்டக்களப்பு திராய்மடுவை சேர்ந்த தங்கவடிவேல் அவர்களுக்கும், யாழ்ப்பாணம் புத்துரை சேர்ந்த ஆறு வயது சிறுவன் சயந்தன் ஆகிய மூன்று ( 3 )நோயாளிகளின் வாழ்வில் ஒரு பெரும் நிம்மதி மூச்சை கனடா தேசத்து உறவுகள் செந்தில் குமரன் ஊடாக செய்தமைக்கு ஈழத்து உறவுகளாகிய நாங்கள் உங்களை இரு கரம் கூப்பி வணங்குகின்றோம்.



சுனாமி அனர்த்தத்தின் 13 ஆவது வருடம் - வடக்கு, கிழக்கில் அஞ்சலி! Top News
[Tuesday 2017-12-26 20:00]

சுனாதி அனர்த்தம் ஏற்பட்டு இன்றுடன் 13 ஆண்டுகளாகும் நிலையில் இலங்கையின் பல இடங்களிலும் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்ற து.



சயந்தனின் சத்திர சிகிச்சை வெற்றிகரமாக நிறைவேறியது! Top News
[Thursday 2017-12-14 23:00]

மின்னல் மியூசிக் செந்தில் குமரன் கனடா கந்தசுவாமி ஆலயத்தின் வளாகத்தில் நின்று பக்தர்களிடம் சேர்த்த அன்பளிப்புகளை கொண்டு 6 வயதான சயந்தனின் சிகிச்சையை லங்கா மருத்துவமனையில் நடத்தி முடித்துள்ளார். புத்தூரை சேர்ந்த கௌதமி தனது நன்றியினை கனடிய மக்களுக்கு தெரிவித்துள்ளார். சென்ற வாரம் கந்தஸ்வாமி கோவில் வளாகத்தில் நிதி தந்தோர் விபரத்தை செந்தில் குமரன் வெளியிட்டு வைத்தார்.



ஒதியமலைப் படுகொலையின் 33 ஆவது ஆண்டு நினைவுதினம்! Top News
[Saturday 2017-12-02 19:00]

முல்லைத்தீவு, ஒதியமலை கிராமத்தில் 1984.12.02 திகதி இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட 32 அப்பாவி தமிழ் மக்களின் 33 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று படுகொலை நடைபெற்ற இடத்தில் நடைபெற்றது. படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவுகள் தீபம் ஏற்றியும் ஒதியமலை பிள்ளையார் ஆலயத்தில் விசேட ஆராதனையில் ஈடுபட்டும் தமது உறவுகளை நினைவு கூர்ந்தனர்.


Tharsi-home-15-10-2016
Mahesan-Remax-169515-Seithy
Easankulasekaram-Remax-300716
SELVI-HOMES-09-02-17
<P>
 <b> 13-08-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற இசை மாலைப் பொழுது - 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
</p>
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 29ம் 30ம்தி கதிகளில் நடைபெற்ற World Tamil Badminton Federation 5th annual tournament நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 7ம் 8ம் 9ம்தி கதிகளில் நடைபெற்ற குதூகலம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா