Untitled Document
January 24, 2018 [GMT]
  • Welcome
  • Welcome
பொட்டும் பூவும் இல்லாமல் வாழ முடியாது: - கணவனுக்கு முன் உயிர் துறந்த பெண்
[Thursday 2018-01-11 18:00]


சென்னையைச் சேர்ந்த தம்பதி, சாவிலும் இணைபிரியாமல் ஒரே நாளில் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது சென்னை, மந்தைவெளியைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவர், கிண்டி சிறுவர் பூங்காவில் பணியாற்றினார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு வயிற்றுவலியால் பிரகாஷ் துடித்தார். ராயபேட்டை அரசு மருத்துவமனையில் பிரகாஷ் சிகிச்சை பெற்றார். அப்போது, அவருக்கு வயிற்றில் புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்தத் தகவல், பிரகாஷ் குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மற்றவர்களைவிட பிரகாஷின் மனைவி உமா மகேஸ்வரி சோகத்தில் உறைந்தார்.

சென்னையைச் சேர்ந்த தம்பதி, சாவிலும் இணைபிரியாமல் ஒரே நாளில் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது சென்னை, மந்தைவெளியைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவர், கிண்டி சிறுவர் பூங்காவில் பணியாற்றினார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு வயிற்றுவலியால் பிரகாஷ் துடித்தார். ராயபேட்டை அரசு மருத்துவமனையில் பிரகாஷ் சிகிச்சை பெற்றார். அப்போது, அவருக்கு வயிற்றில் புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்தத் தகவல், பிரகாஷ் குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மற்றவர்களைவிட பிரகாஷின் மனைவி உமா மகேஸ்வரி சோகத்தில் உறைந்தார்.

  

> கணவரைக் காப்பாற்ற போராடினார். ஆனால், நோயின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்ததால்,பிரகாஷ் வேதனையில் துடித்தார். அவரது வேதனையைப் பார்க்க முடியாமல் உமாமகேஸ்வரி தவித்தார்.இந்தச் சூழ்நிலையில், கடந்த 9-ம் தேதி உமாமகேஸ்வரி, கோயிலுக்குச்செல்வதாகக் கூறிவிட்டு வீட்டைவிட்டுச் சென்றார். இரவு வரை அவர் வீடு திரும்பவில்லை. இதற்கிடையில், மகன் கேசவனின் செல்போனுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பியிருந்தார் உமாமகேஸ்வரி. அதில், 'அப்பாவை நன்றாகக் கவனித்துக்கொள். நான் என் முடிவைத் தேடிக்கொள்கிறேன்' என்று கூறியிருந்தார். இதைப் பார்த்த கேசவன், பிரகாஷ் இருவரும் கதறினர். பிறகு சேகவன், தன்னுடைய உறவினருடன் போலீஸ் நிலையத்துக்குச் சென்று விவரத்தைத் தெரிவித்தார். போலீஸாரும் மாயமான உமாமகேஸ்வரியைத் தேடினர்.

இந்த நிலையில் பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை ஓரத்தில் 50 வயது மதிக்கத்தக்க பெண்ணின் உடல் ஒதுங்கியது. அந்தப் பெண்குறித்து விசாரித்தபோது, அது உமாமகேஸ்வரி என்று தெரியவந்தது. இதையடுத்து, உமாமகேஸ்வரியின் உடல், பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. உமாமகேஸ்வரி மாயமான தகவலைக் கேட்ட அதிர்ச்சியில், பிரகாஷின் உயிரும் பிரிந்தது. இதையடுத்து, பிரகாஷின் இறுதிஅஞ்சலி நேற்று நடந்தது. பிரேதப் பரிசோதனை முடிந்து உமாமகேஸ்வரியின் இறுதி அஞ்சலி இன்று நடந்தது.

இதுகுறித்து போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், 'புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பிரகாஷுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் கைவிரித்துவிட்டனர். இதனால், அவரது மனைவி உமாமகேஸ்வரி மனமுடைந்து காணப்பட்டுள்ளார். அடிக்கடி பிரகாஷிடம், பூவும் பொட்டுமாக வாழ்ந்த என்னால் நீங்கள் இல்லாமல் வாழ முடியாது என்று புலம்பியிருக்கிறார். அப்போது, பிரகாசும் கேசவனும் உமாமகேஸ்வரிக்கு ஆறுதல் கூறியுள்ளனர். ஆனால் உமாகேஸ்வரி, விரக்தியில் சில தினங்களுக்கு முன்பு கடலில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். அவரது பிரிவால் பிரகாசும் இறந்துவிட்டார்' என்றனர்.

அப்பாவையும் அம்மாவையும் ஒரே நாளில் இழந்த சோகத்தில் கேசவன் கதறிஅழுதது கல்நெஞ்சையும் கரையவைத்தது. ஒட்டுமொத்த குடும்பமே சோகத்தில் மூழ்கியுள்ளது. சாவிலும் இணைபிரியாத இந்தத் தம்பதிகுறித்து மந்தைவெளி பகுதியில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.

  
   Bookmark and Share Seithy.comஏழு பேரை விடுதலை செய்ய பிரதமரிடம் நேரில் வலியுறுத்த வேண்டும்: - பழனிசாமிக்கு அற்புதம்மாள் வேண்டுகோள்
[Wednesday 2018-01-24 07:00]

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்துவரும் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு வேண்டுகோள் விடுத்து அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-காதலன் ஏமாற்றியதல் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட இளம் பெண்!
[Wednesday 2018-01-24 07:00]

தமிழகத்தில் காதலன் ஏமாற்றியதல் இளம் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.எண்ணூர் சுனாமி குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் சங்கர். ஆட்டோ டிரைவரான இவருக்கு கற்பகம் என்ற மனைவியும் சந்தியா (19) என்ற மகளும் உள்ளனர்.தனியார் கிளினிக்கில் நர்சாக பணிபுரிந்து வரும் சந்தியாவுக்கும், தாம்பரத்தை சேர்ந்த அஜிஸ் என்ற ரபீக் (26) என்பவரும் கடந்த ஒரு வருடத்துக்கு முன், மிஸ்ட்கால் மூலம் நண்பராகினர். அதன் பின் இது காதலாக மாறியுள்ளது.கடன் சுமை அதிகமானதால் தாய் மகன் தூக்கிட்டு தற்கொலை!
[Wednesday 2018-01-24 07:00]

கடன் சுமை அதிகமானதால் தூத்துக்குடியில், தாயும் மகனும் சேர்ந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.துாத்துக்குடி, பாத்திமா நகரை சேர்ந்தவர் சகாயராஜ். இவரது தாய் சகாயமேரி. சகாயராஜ் தூத்துக்குடி விருந்தினர் மாளிகையில், தற்காலிக சமைல்காரராக வேலை பார்த்து வந்தார். இவர் தனது வீட்டின் அருகில் உள்ளவர்கள் மற்றும் நண்பர்களுக்கு பணம் தேவைப்பட்டால் ஏற்பாடு செய்து கொடுப்பதும், நகைகளை அடமானம் வைத்து பணம் கொடுப்பதுமாக இருந்து வந்தார்.வாழைப் பழத்துக்காக நடந்த சண்டையில் நண்பனை வெட்டிக் கொலை செய்து ஆற்றில் வீசிய கொடூரம்!
[Wednesday 2018-01-24 07:00]

ஒரு வாழைப் பழத்துக்காக நடந்த சண்டையில் குடிபோதையில் நண்பனையே வெட்டிக் கொலை செய்து ஆற்றில் வீசிய கொடூரம் அரங்கேறி உள்ளது. இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய இளைஞர்களை போலீஸார் தேடி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட ஆனந்தராஜ்பாளையங்கோட்டை மனக்காவலம்பிள்ளை நகரைச் சேர்ந்தவர், ஆனந்தராஜ். பிரபல ரவுடியான இவர் மீது கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த ஆண்டு முருகன் என்பவரைக் கொலை செய்து ஆற்றின் கரையோரத்தில் புதைத்த வழக்கில் இவர் இரண்டாவது குற்றவாளியாக உள்ளார். ஆனந்தராஜூம், அவரது நண்பர்களான விக்டர், ராஜீவ்காந்தி ராஜாசிங் உள்ளிட்டோர் அடிக்கடி மது அருந்துவது வழக்கம்.தாலிகட்டும் நேரத்தில் இன்ஜினீயரின் திருமணத்தை நிறுத்திய காதலி: - மணக்கோலத்தில் தவித்த பட்டதாரிப் பெண்
[Tuesday 2018-01-23 17:00]

தாலிகட்டும் நேரத்தில் சென்னை இன்ஜினீயரின் திருமணத்தை அவரின் காதலி வீட்டினர் தடுத்து நிறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையைச் சேர்ந்தவர் குமார். இன்ஜினீயர். இவருக்கும் திருவள்ளூர் மணவாள நகரைச் சேர்ந்த எம்.சி.ஏ பட்டதாரிப் பெண்ணுக்கும் திருமணத்தை நடத்த பெற்றோர்கள் முடிவு செய்தனர். அதன்படி திருமண நிச்சயதார்த்தம் சில மாதங்களுக்கு முன்பு நடந்தது. இருவருக்கும் வெகுவிமர்சையாக நேற்று (22.1.2018) திருமணம் நடத்தப்படவிருந்தது.மருத்துவமனையின் அலட்சியத்தால் வலியால் துடித்த கர்ப்பிணிப் பெண்: - காரிலேயே பிரசவமான அவலம்
[Tuesday 2018-01-23 17:00]

திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் அலட்சியத்தால் வலியால் துடித்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு காரிலேயே பிரசவமான அவலம் நடந்திருக்கிறது. திருவாரூர் அருகே புளிச்சக்காடு கிராமத்தைச் சேர்ந்த தனலெட்சுமி என்ற கர்ப்பிணிக்கு நேற்று (21-ம்தேதி) நள்ளிரவு பிரசவ வலியெடுக்க, வாடகைக் காரில் அவசரமாகத் திருவாரூர் அரசு மருத்தவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வந்திருக்கிறார்கள். தனலெட்சுமியுடன் வந்த உறவினர்கள், விரைந்தோடிச் சென்று காரிலிருந்து தனலெட்சுமியைக் கொண்டுவர ஸ்ட்ரெச்சர் கேட்டுள்ளனர்.இலங்கையில் நிகழ்ந்த பாலியல் வன்கொடுமைகள்: - மீண்டும் ஓர் ஆவணம்
[Tuesday 2018-01-23 17:00]

கலிங்கப் போரில் வெற்றிபெற்ற பேரரசன் அசோகன், தன் போர் நியாயமானது இல்லை என்று உணர ஒரு பௌத்தத் துறவி தேவையாக இருந்தார். ஆம்! 'போர் அறமற்றது' என்று அசோகனே உணர்ந்தான். ஒவ்வொரு போரும் ரத்த ஆற்றில் முடிவுற்ற பின்னரே, அது நியாயமற்றது என்று உணரப்படுகிறது. பௌத்த சமயம் பெரும்பான்மையாகப் பின்பற்றப்படுகிற இலங்கையில், 2009-ல் நிகழ்ந்த இன எதிர்ப்புப் போரும் கிட்டத்தட்ட அப்படியே. போரின் ரணங்களுக்குக் களிம்பாக அவ்வப்போது அது தொடர்பான ஆவணங்கள் இலக்கியமாகவும், உண்மைக் கதைகளாகவும், எதிர்ப்புக் குரலாகவும் தொடர்ந்து வெளிப்பட்டு வந்தன.புதிய பறவைகள் சிறகடிக்க நினைக்கின்றன: - ஸ்டாலினின் சூசகமான அறிக்கை
[Tuesday 2018-01-23 17:00]

தமிழக அரசியலில் ரஜினி, கமல், விஷால் என பல முன்னணி திரைத் துறையினர் குதித்துள்ளனர். அ.தி.மு.க அரசும் எப்போது வேண்டுமானாலும் கவிழலாம் என்ற ரீதியில் உள்ளது. இந்நிலையில், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும் தி.மு.க-வின் செயல் தலைவருமான ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், புதிதாக அரசியலில் காலெடுத்து வைத்தவர்கள் பற்றி சூசகமாக விமர்சித்துள்ளார்.அடித்துக் கொலை செய்யப்பட்ட இலங்கை அகதி: - - கொந்தளித்த மக்கள்
[Tuesday 2018-01-23 17:00]

இந்தியா - கரூர், இராயனூர் இலங்கை அகதிகள் முகாமில் உள்ள இளைஞனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி அப்பகுதி மக்கள் போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.இராயனூர் இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த டைசன் ஜெயக்கொடி என்பவரது மரணத்திலேயே சந்தேகம் எழுந்துள்ளது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,காதலித்து திருமணம் செய்து கொண்ட பெண்ணை கொலை செய்த கணவன்!
[Tuesday 2018-01-23 08:00]

தமிழ்நாட்டில் காதலித்து திருமணம் செய்து கொண்ட பெண்ணை 20 நாளில் கழுத்தை அறுத்து கொலை செய்த கணவரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.திருச்சி மாவட்டத்தின் எரகுடியை சேர்ந்தவர் சரண்யா (19). இரண்டாம் ஆண்டு கல்லூரி படிப்பு படித்து வந்தார்.அதே ஊரை சேர்ந்த தனது தாய் மாமா விஜய்யை (23) காதலித்து வந்த சரண்யா கடந்த 1-ஆம் திகதி வீட்டை விட்டு வெளியேறி அவரை திருமணம் செய்து கொண்டார்.ஆபாச வீடியோ வெளியாவதால் நடிகைகள் கலக்கம்: -மீண்டும் ஆட்டத்தை ஆரம்பித்த சுசி லீக்ஸ்
[Monday 2018-01-22 07:00]

மீண்டும் சுசி லீக்ஸ் விவகாரம் விஸ்வரூபம் எடுப்பதால் நடிகைகள் கலக்கம் அடைந்துள்ளனர்.திரைப்பட பின்னணி பாடகி சுசித்ராவின் டுவிட்டர் பக்கத்தில் கடந்த ஆண்டு நடிகர், நடிகைகளின் அந்தரங்க படங்கள், வீடியோக்கள் வெளியாகின.இது தமிழ் திரை உலகில் பெரும் சர்ச்சையையை ஏற்படுத்தியது.ஜெயலலிதாவின் அறையை திறந்தால் அதிமுக ஆட்சி கவிழ்ந்துவிடும்: - கேரள நம்பூதிரி பகீர்
[Monday 2018-01-22 07:00]

ஜெயலலிதா செப்டம்பர் மாதம் இறந்துவிட்டார் என்றும் அவரது அறையை திறந்தால் அதிமுக ஆட்சி கவிழ்ந்துவிடும் என கேரள நம்பூதிரி ஒருவர் பகீர் கிளப்பியுள்ளார்.தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு கேரள நம்பூதிரி வேங்கட சர்மா அளித்துள்ள பேட்டியில், 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதமே அவர் உயிர் பிரிந்தது. போயஸ் கார்டனில் இருந்து அப்பல்லோவுக்கு செல்வதற்கு முன்பே அவர் இறந்துவிட்டார். தொண்டர்கள் செய்த பிரார்த்தனைகள் அவரை தெய்வ நிலையை அடைய வைத்துவிட்டது.ஏன் திராவிடக் கட்சிகள் மீண்டும் வர வேண்டும்: - கிருஷ்ணசாமி
[Monday 2018-01-22 07:00]

"தமிழகத்தில் திராவிடக் கட்சிகள் இருக்கக் கூடாது. நடிகர்கள் அரசியலுக்கு வரும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்ததே திராவிடக்கட்கள் தான்." என புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.நடிகர் சூர்யாவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்: - குஷ்பு
[Monday 2018-01-22 07:00]

சூர்யா நடிக்கும் படத்தில் நடிகர் அமிதாப்பச்சன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.இதை வைத்து ஒரு தனியார் தொலைக்காட்சியில் ‘கிசு கிசு’ நிகழ்ச்சி ஒன்றில் பெண் தொகுப்பாளர் சூர்யாவை கிண்டல் செய்யும் விதமாக அனுஷ்காவுடன் ஹீல்ஸ் போட்டுத்தான் நடிச்சாரு, அமிதாப்பச்சனுடன் ஸ்டூல் போட்டு ஏறி நின்றுதான் பேசணும் என்று உயரத்தை குறிப்பிட்டு பேசியுள்ளார்.பெண் தொகுப்பாளர்களுக்கு நடிகர்கள் விஷால், கருணாஸ், இயக்குனர் விக்னேஷ் சிவன், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ஆகியோர் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.கர்ப்பிணி பெண்ணை கடத்திச் சென்று கற்பழித்த மர்ம கும்பல்!
[Sunday 2018-01-21 15:00]

உத்தரபிரதேச மாநிலத்தில் கர்ப்பிணி பெண் 3 பேர் கொண்ட கும்பலால் கற்ப்பழிக்கப்பட்ட கொடூரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. உத்தரபிரதேச மாநிலம் படூன் மாவட்டம் காஞ்சுலா கிராமத்தை சேர்ந்த 32 வயது கர்ப்பிணி. கால்நடைகளுக்கு தீவனம் வாங்குவதற்காக வெளியே சென்றார். அப்போது 3 பேர் கொண்ட கும்பல் அவரை கடத்திச் சென்றது. அங்குள்ள காட்டுப் பகுதியில் கர்ப்பிணி பெண்ணை 3 பேரும் கற்பழித்து உள்ளனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.கள்ளக்காதல் பிரச்சினை தொழிலாளி படுகொலை: - 3 பேருக்கு கத்திக்குத்து
[Sunday 2018-01-21 15:00]

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள சிறுவத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் பெரியண்ணன் (வயது 45), விவசாயி. இவரது மனைவி பாக்கியலட்சுமி (37). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.கணவன்-மனைவிக் கிடையே நேற்று இரவு திடீரென தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த பெரியண்ணன் கத்தியை எடுத்து மனைவி பாக்கியலட்சுமியை சரமாரியாக குத்தினார். அவர் கூச்சல் போட்டு அலறினார். அவரது சத்தம் கேட்டு பக்கத்து வீட்டை சேர்ந்த தொழிலாளி ஏழுமலை (50), ராஜசேகர் (27), வெண்ணிலா (36) ஆகியோர் பெரியண்ணன் வீட்டுக்கு ஓடிவந்தனர். தகராறில் ஈடுபட்ட பெரியண்ணனை தடுத்தனர்.12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை கற்பழித்தால் மரண தண்டனை: - அமுலுக்கு வந்த புதிய சட்டம்
[Sunday 2018-01-21 07:00]

இந்தியாவின் அரியானா மாநிலத்தில், 12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை கற்பழித்தால் மரண தண்டனை விதிக்கும் வகையில், புதிய சட்டத்தை கொண்டு வர அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.அரியானா மாநிலத்தில் சிறுமிகள் கற்பழிப்பு சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து வருகின்றன. இது குறித்து எதிர்கட்சியினர் கேள்வி எழுப்பி இருந்தனர்.இந்நிலையில், அரியானா மாநிலத்தில் 12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை கற்பழித்தால், மரண தண்டனை விதிக்கும் புதிய சட்டத்தை கொண்டு வர இருப்பதாக முதல்வர் மனோகர்லால் கட்டார் தெரிவித்துள்ளார்.பருவம் எய்திடாத 9 வயது சிறுமிக்கு 39 வயது நபருடன் திருமணம்!
[Sunday 2018-01-21 07:00]

தமிழகத்தில் பருவம் கூட எய்திடாத 9 வயது சிறுமியை 39 வயது நபருக்கு திருமணம் செய்ய குடும்பத்தினரே முயற்சி செய்தது அம்பலமாகியுள்ளது.தமிழகத்தின் திருச்சியில் கடந்த 18-ஆம் திகதி அன்று முசிறி அனைத்து பெண்கள் பொலிஸ் நிலையத்தை தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர், திடுக்கிடும் தகவல் ஒன்றை கொடுத்துள்ளார்.அதில் 9 வயது பள்ளி மாணவியை 39 வயது நபருக்கு திருமணம் செய்திட மின்னதம்பட்டி கிராமத்தில் முயற்சி நடப்பதாக அந்த நபர் கூறியதால், அதிர்ச்சியடைந்த பொலிஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணையை துவங்கியுள்ளனர்.பணத்துக்காக மகளை ஆண்களிடம் வாடகைக்கு விட்ட தந்தை: -அதிர்ச்சி சம்பவம்
[Sunday 2018-01-21 07:00]

கேரளாவில் மது குடிக்க தேவையான பணத்துக்காக சிறுமியான தனது மகளை பலருக்கு வாடகைக்கு விட்ட தந்தையை பொலிசார் கைது செய்துள்ளனர்.இந்த வழக்கில் சிறுமியை பலாத்காரம் செய்த ஆறு பேரை ஏற்கனவே பொலிசார் கைது செய்துள்ள நிலையில், சனிக்கிழமை சிறுமியின் தந்தையை கைது செய்துள்ளனர்.இதில் முதல் குற்றவாளியான அதிரா அலியாஸ் குளேரியா (24) அளித்துள்ள வாக்குமூலத்தில், மாற்றுதிறனாளியான சிறுமியின் தந்தைக்கு மது குடிக்க 300 ரூபாய் பணம் கொடுத்து சிறுமியை அழைத்து சென்றதாக கூறியுள்ளார்.கண்ணாடி புட்டிக்குள் அதிசய பூதம்: - 10 லட்சம் ரூபாய்க்கு விற்க முயன்ற 4 நபர்கள் கைது
[Sunday 2018-01-21 07:00]

இந்தியாவில் கண்ணாடி புட்டிக்குள் அதிசய பூதம் இருப்பதாக கூறி 10 லட்சம் ரூபாய்க்கு விற்க முயன்ற 4 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.கொல்கத்தாவின் பகுயாட்டியைச் சேர்ந்த டபஸ் ராய் சவுத்ரி என்னும் நபரிடம் பேசிய அவரது நண்பர் ஒருவர், உன் தேவை அனைத்தையும் நிறைவேற்றித்தரும் அதிசய பூதம் தனக்கு தெரிந்த நபரிடம் இருப்பதாக கூறியுள்ளார்.அதிசய பூதம் இருப்பதாக நம்பிய சவுத்ரியும், பூத வியாபாரியை சந்திக்க தனது நண்பருடன் சென்றுள்ளார்.


Tharsi-home-15-10-2016
Mahesan-Remax-169515-Seithy
Easankulasekaram-Remax-300716
SELVI-HOMES-09-02-17
<P>
 <b> 13-08-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற இசை மாலைப் பொழுது - 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
</p>
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 29ம் 30ம்தி கதிகளில் நடைபெற்ற World Tamil Badminton Federation 5th annual tournament நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 7ம் 8ம் 9ம்தி கதிகளில் நடைபெற்ற குதூகலம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா