Untitled Document
February 25, 2018 [GMT]
  • Welcome
  • Welcome
தமிழர் விடுதலைக் கூட்டணியும் கட்டுப்பணம் செலுத்தியது! Top News
[Thursday 2017-12-07 18:00]

தமிழர் விடுதலைக் கூட்டணி சாவகச்சேரி நகர சபையில் போட்டியிடுவதற்காக இன்று காலை கட்டுப்பணம் செலுத்தியுள்ளது. யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் உள்ள தேர்தல்கள் திணைக்களத்தில், சாவகச்சேரி பிரதேச சபையின் முன்னாள் உப தலைவர் மற்றும் வலிகிழக்கு பிரதேச சபையின் முன்னாள் தலைவர் க.உதயகுமார் மற்றும் வல்வெட்டித்துறை நகர சபையின் முன்னாள் தலைவர் ந.ஆனந்தராஜ் ஆகியோர் கட்டுப்பணத்தை இன்று காலை 9.30 மணிக்கு செலுத்தியுள்ளனர்.

தமிழர் விடுதலைக் கூட்டணி சாவகச்சேரி நகர சபையில் போட்டியிடுவதற்காக இன்று காலை கட்டுப்பணம் செலுத்தியுள்ளது. யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் உள்ள தேர்தல்கள் திணைக்களத்தில், சாவகச்சேரி பிரதேச சபையின் முன்னாள் உப தலைவர் மற்றும் வலிகிழக்கு பிரதேச சபையின் முன்னாள் தலைவர் க.உதயகுமார் மற்றும் வல்வெட்டித்துறை நகர சபையின் முன்னாள் தலைவர் ந.ஆனந்தராஜ் ஆகியோர் கட்டுப்பணத்தை இன்று காலை 9.30 மணிக்கு செலுத்தியுள்ளனர்.

  

  
   Bookmark and Share Seithy.com



ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை- கூட்டமைப்பு வரவேற்பு!
[Sunday 2018-02-25 08:00]

இலங்கையில் நல்லிணக்கம்,பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தும் பிரேரணை தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் விடுத்துள்ள அறிக்கையை வரவேற்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று கூடிய இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுவில், குறித்த அறிக்கை தொடர்பில் வரவேற்பளிக்கப்பட்டதாக தமிழ் தேசிய கூட்டமைப்பினால் விடுக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.



கூட்டமைப்பு பழிவாங்கக் கூடாது! - மணிவண்ணன்
[Sunday 2018-02-25 08:00]

உள்ளூராட்சி சபைகளில் தவிசாளர் மற்றும் உப தவிசாளர் தெரிவுகளின்போது வாக்களிக்கும் உறுப்பினர்களுக்கு எதிராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்காது என்றால், நாம் பகிரங்க வாக்கெடுப்புக்குத தயாராகவே இருக்கின்றோம் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.



12 ஆண்டுகளால் தடுத்து வைக்கப்பட்டிருந்த அரசியல் கைதி நீதிமன்றினால் விடுதலை!
[Sunday 2018-02-25 08:00]

பயங்கரவாத தடைச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கட்டிருந்த வாசுகோபால் தஜரூபன் என்ற அரசியல் கைதி நீர்கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதியினால் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இவருக்கு எதிராக நீர்கொழும்பு மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு அண்மையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.



ஐ.நாவின் விதிவிடப் பிரதிநிதி உனா மக்கோலியின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்க அனுதாபக் கையேடு! Top News
[Sunday 2018-02-25 08:00]

இலங்கைக்கான ஐ.நாவின் வதிவிடப் பிரதிநிதி உனா மக்கோலியின் மறைவிற்கு, இலங்கை ஐக்கிய நாடுகள் வளாகத்தில், அனுதாபக் கையேடு ஒன்று வைக்கப்படவுள்ளது. உனா மெக்கோலியுடன் பணிபுரிந்தவர்கள், அவரைக் குறித்த ஞாபகங்களை அவரது குடும்பத்தினரோடு பகிரும் பொருட்டு குறித்த அனுதாபக்கையேட்டை வைக்கவுள்ளனர்.



கூட்டமைப்பு ஆட்சியமைக்க வெளியில் இருந்து ஆதரவு! - சுரேஷ் பிரேமச்சந்திரன்
[Sunday 2018-02-25 08:00]

தொங்கு நிலையில் உள்ள உள்ளூராட்சி சபைகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சி அமைக்க வெளியே இருந்து ஆதரவு கொடுப்போம் என்று ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.



சுவிஸ் நாடாளுமன்றம் முன்பாக புலம்பெயர் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்! Top News
[Sunday 2018-02-25 08:00]

தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடிய தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தை ஒரு பயங்கரவாத இயங்கமாக அடையாளப்படுத்தி, அந்த இயக்கத்திற்காக உழைத்த தமிழ் தேசிய செயற்பாட்டாளர்களை தண்டிக்கும் நோக்கில் சுவிட்ஸர்லாந்து காவல்துறை மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம் ஆகியன இணைந்து தொடர்ந்துள்ள வழக்கை கண்டித்து ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.



வெளியுறவுக் கொள்கையைக் கையில் எடுக்கிறது ஐதேக!
[Sunday 2018-02-25 08:00]

அமைச்சரவை மாற்றத்தின் பின்னர், இலங்கையின் வெளியுறவுக் கொள்கையில் மாற்றங்கள் ஏற்படும் என ஐக்கிய தேசியக் கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று இடம்பெறவுள்ள அமைச்சரவை மாற்றத்தின் பின்னர், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்க செயற்பாடுகளில் கூடுதல் செல்வாக்குச் செலுத்தும் என கூறப்படுகின்றது.



கோவில் கூரையில் இருந்து விழுந்த குடும்பஸ்தர் மரணம்!
[Sunday 2018-02-25 08:00]

கூரையில் இருந்து விழுந்த குடும்பஸ்தர் ஒருவர் சிகிச்சை பலனளிக்காது நான்கு நாட்களின் பின்னர் உயிரிழந்தார். புதுக்குடியிருப்பு மல்லிகைத்தீவில் வசிக்கும் 51 வயதுடைய குடும்பஸ்தர் கடந்த 20 ம் திகதி கோவில் ஒன்றில் கூரை வேலை செய்யும் போது கீழே விழுந்துள்ளார். பின்னர் அருகில் உள்ள வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்கு யாழ் போதனாவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.



முதலியார்குளத்தில் லொறி கவிழ்ந்து ஒருவர் பலி!
[Sunday 2018-02-25 08:00]

திருகோணமலை - அநுராதபுரம் பிரதான வீதியில் மொரவெவ, முதலியார்குளம் பகுதியில் நேற்று நடந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். லொறி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து பாதையில் புரண்டதனாலேயே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.



இலங்கைக்கு வேறு வழிகளில் அழுத்தங்களைக் கொடுக்க வேண்டும்! - ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர்
[Saturday 2018-02-24 18:00]

இலங்கையில் பொறுப்புக்கூறலை மேற்கொள்வதற்கான வேறு வழிகளை ஆராயும்படி, ஐ.நா மனித உரிமைகள் பேரவையிடம், ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் அழைப்பு விடுத்துள்ளார். வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 37ஆவது கூட்டத்தொடருக்குச் சமர்ப்பித்துள்ள இலங்கை தொடர்பான அறிக்கையிலேயே அவர் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தியுள்ளார்.



8000 பக்தர்கள் பங்கேற்ற கச்சதீவு அந்தோனியார் திருவிழா! Top News
[Saturday 2018-02-24 18:00]

கச்­ச­தீவு புனித அந்­தோ­னியார் ஆலய வரு­டாந்த பெரு­விழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. இன்று காலை யாழ் மறை மாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானபிரகாசம் மற்றும் காலி மறை மாவட்ட ஆயர் றேமன் விக்கிரமதுங்க தலைமைத்துவத்தில் திருப்பலி ஒப்புகொடுக்கப்பட்டு திருவிழா புனிதமாக முன்னெடுக்கப்பட்டு நிறைவடைந்தது.



பாதுகாப்புக்காகவே திருப்பி அழைக்கப்பட்டார் பிரிகேடியர் பிரியங்க! - இராணுவத் தளபதி தெரிவிப்பு
[Saturday 2018-02-24 18:00]

பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோவின் பாதுகாப்பை கருத்தில் கொண்டே அவர் இலங்கைக்கு திருப்பியழைக்கப்பட்டார் என இராணுவத் தளபதி மகேஸ் சேனாநாயக்க, தெரிவித்தார்.



விடுதலையைத் துரிதப்படுத்துமாறு அரசியல் கைதிகள் கோரிக்கை! Top News
[Saturday 2018-02-24 18:00]

அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தமது விடுதலை தொடர்பில் உரிய தலைவர்களுடன் கதைத்து விடுதலையை துரிதப்படுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக வட மாகாண சபை உறுப்பினர் எஸ்.பிரிமூஸ் சிறாய்வா தெரிவித்தார்.



டக்ளஸ், பிள்ளையான் கட்சிகளுடன் பேசக் கூடாது! - சம்பந்தன் தடை
[Saturday 2018-02-24 18:00]

உள்ளூராட்சி சபைகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு வழங்க முன்வரும் தமிழ்க் கட்சிகளுடன் பேச்சு நடத்துவது என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் நேற்று முடிவு செய்யப்பட்டுள்ளது. எனினும், ஈ.பி.டி.பி. மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியுடன் பேச்சு நடத்தக் கூடாது என்று, கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.



பிரிகேடியர் பிரியங்க குடும்பத்தையும் வெளியேற்ற வேண்டும்! - பிரித்தானியாவிடம் கோரிக்கை
[Saturday 2018-02-24 18:00]

பிரித்தானியாவில் உள்ள புலம்பெயர் தமிழ் மக்களை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோவின் குடும்பத்தாரையும் இலங்கைக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என உலக தமிழர் பேரவை கோரிக்கை விடுத்துள்ளது.



மு.திருநாவுக்கரசுவின் “பூகோள வாதம் புதிய தேசிய வாதம்” நூல் யாழ்ப்பாணத்தில் வெளியீடு! Top News
[Saturday 2018-02-24 18:00]

அரசியல் ஆய்வாளர் மு.திருநாவுக்கரசுவின் “பூகோள வாதம் புதிய தேசிய வாதம்” எனும் நூல் இன்று யாழ்ப்பாணத்தில் வெளியிட்டு வைக்கப்பட்டது. யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், தமிழகத்தைச் சேர்ந்த எழுத்தாளர் செயப்பிரகாசம், மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், கல்வியாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.



மட்டக்களப்பில் பாரிசவாத நோய் விழிப்புணர்வுப் பேரணி! Top News
[Saturday 2018-02-24 18:00]

தேசிய பாரிசவாத தினத்தை முன்னிட்டு 'பாரிசவாதத்தை தடுப்போம்! குணமாக்குவோம்! வாருங்கள், சேர்ந்து நடப்போம்! எனும் தொனிப் பொருளில் தேசிய பாரிசவாத நிகழ்வு இன்று காலை மட்டக்களப்பில் நடைபெற்றது. இலங்கை தேசிய பாரிசவாத சங்கமும், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் நரம்பியல் வைத்திய பிரிவும், மட்டக்களப்பு மாவட்ட செயலகமும் இணைந்து இதனை ஏற்பாடு செய்திருந்தது.



ஜனாதிபதி மைத்திரியை இந்தியா வருமாறு அழைப்பு! Top News
[Saturday 2018-02-24 18:00]

அனைத்துலக சூரிய கூட்டமைப்பின் (International Solar Alliance) உருவாக்கக் கூட்டம் மற்றும் சூரிய மாநாட்டில் பங்கேற்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. புதுடெல்லியில் வரும் மார்ச் 11ஆம் நாள் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் பங்கேற்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், பிரெஞ்ச் அதிபர் இமானுவெல் மக்ரோனும் அழைப்பு விடுத்துள்ளார்.



சிறுவர் இல்லத்தில் 12 சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகம்! -2 பிக்குகள் உள்ளிட்ட 8 பேர் கைது
[Saturday 2018-02-24 18:00]

குருநாகல் - ரஸ்ணாயகபுர, உடஹேதகம பிரதேசத்தில் உள்ள சிறுவர் இல்லத்தைச் சேர்ந்த 12 சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தினார்கள் என்ற குற்றச்சாட்டில் பிக்குகள் இருவர் உட்பட 8 பேரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 8 வயதுக்கும் 12 வயதுக்கும் இடைப்பட்ட சிறுமிகளே இவ்வாறு துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் 32 தடவைகள் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளனரென விசாரணைகளில் தெரியவந்துள்ளது.



மட்டக்களப்பில் மீனவர்களின் தோணிகள் இனந்தெரியாதவர்களால் தீக்கிரை! Top News
[Saturday 2018-02-24 18:00]

மட்டக்களப்பு - முனைக்காடு பகுதி மீனவர்களின் தோணிகள் இனந்தெரியாதவர்களினால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மகிழடித்தீவு ஆற்றுப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மூன்று மீனவர்களின் தோணிகளே நேற்று எரியூட்டப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். முனைக்காடு வடக்கு பிரதேசத்தைச் சேர்ந்த இராமக்குட்டி சிவஞானம், சீனிதம்பி சிவகுமார், சிவலிங்கம் சீனிதம்பி ஆகியோரின் மீன்பிடி தோணிகளே இவ்வாறு தீக்கரையாக்கப்பட்டுள்ளன.


Mahesan-Remax-169515-Seithy
SELVI-HOMES-09-02-17
Easankulasekaram-Remax-300716
Tharsi-home-15-10-2016
<P>
 <b> 13-08-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற இசை மாலைப் பொழுது - 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
</p>
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 29ம் 30ம்தி கதிகளில் நடைபெற்ற World Tamil Badminton Federation 5th annual tournament நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 7ம் 8ம் 9ம்தி கதிகளில் நடைபெற்ற குதூகலம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா