Untitled Document
February 25, 2018 [GMT]
  • Welcome
  • Welcome
இயக்குநர் கவுதம் மேனனின் கார் லாரி மீது மோதல்!
[Thursday 2017-12-07 18:00]

புதிய படப்பிடிப்பை முடித்துவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்த பிரபல திரைப்பட இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனனின் சொகுசு கார் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், அதிர்ஷ்டவசமாக கவுதம் வாசுதேவ் மேனன் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். காக்க காக்க, வாரணம் ஆயிரம், விண்ணை தாண்டி வருவாயா, வேட்டையாடு விளையாடு, என்னை அறிந்தால், அச்சம் என்பது மடமையடா உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கிவர் கவுதம் வாசுதேவ் மேனன். இவர் துரைப்பாக்கத்தில் வசித்து வருகிறார். தற்போது நடிகர் தனுஷை வைத்து என்னை நோக்கி பாயும் டோட்டா என்ற படமும், விக்ரம் நடிப்பில் துருவ நட்சத்திரம் என்ற இரண்டு படங்களை கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கி வருகிறார்.

புதிய படப்பிடிப்பை முடித்துவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்த பிரபல திரைப்பட இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனனின் சொகுசு கார் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், அதிர்ஷ்டவசமாக கவுதம் வாசுதேவ் மேனன் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். காக்க காக்க, வாரணம் ஆயிரம், விண்ணை தாண்டி வருவாயா, வேட்டையாடு விளையாடு, என்னை அறிந்தால், அச்சம் என்பது மடமையடா உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கிவர் கவுதம் வாசுதேவ் மேனன். இவர் துரைப்பாக்கத்தில் வசித்து வருகிறார். தற்போது நடிகர் தனுஷை வைத்து என்னை நோக்கி பாயும் டோட்டா என்ற படமும், விக்ரம் நடிப்பில் துருவ நட்சத்திரம் என்ற இரண்டு படங்களை கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கி வருகிறார்.

  

புதிய திரைப்படங்களின் படப்பிடிப்பை முடித்து விட்டு, இன்று அதிகாலை பழைய மாமல்லபுரம் சாலை வழியாக துரைப்பாக்கத்தில் உள்ள வீட்டிற்கு கவுதம் வாசுதேவ் மேனன் விலை உயர்ந்த சொகுசு காரில் திரும்பி கொண்டிருந்தார். காரை அவரே ஓட்டி வந்துள்ளார். செம்மஞ்சேரி ஆவின் பால் பண்ணை சிக்னல் அருகே வரும் போது, துரைப்பாக்கத்தில் இருந்து வந்த ஒரு லாரி சிக்னலில் ‘யு’ டர்ன் அடித்து மீண்டும் துரைப்பாக்கம் நோக்கி சென்றது. இதை சற்றும் எதிர்பார்க்காத கவுதம்மேனன் தனது காரை பிரேக் போட்டு நிறுத்த முயன்றுள்ளார்.

ஆனால் வேகத்தின் காரணமாக கார் கட்டுப்பாட்டை இழந்து லாரி பின்னால் பயங்கரமாக மோதியது. இதில் காரின் முன் பக்கம் கடும் சேதமடைந்தது. சொகுசு கார் என்பதால் ஏர் பேக் வெளியே வந்தது. இதனால், இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். இதை பார்த்த பின்னால் அவ்வழியாக வந்த வாகன ஓட்டிகள், காரில் இருந்து கவுதம் வாசுதேவ் மேனனை பத்திரமாக மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

  
   Bookmark and Share Seithy.com



வெளுத்து வாங்கும் த்ரிஷா!
[Saturday 2018-02-24 13:00]

தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை த்ரிஷா. சமீபகாலமாக வளர்ந்து வரும் நடிகைகளால் தமிழ் சினிமாவில் தன்னுடைய மார்க்கெட்டை இழந்து வருகிறார். குறைவான படங்களில் நடித்து வந்தாலும், சிம்ரனுக்கு பிறகு ரசிகர்களால் அதிகமாகக் கொண்டாடப்பட்ட ஒல்லி நடிகை இவர்தான். விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கிக் கொண்டார். இயக்குனர் ஹரி இயக்கத்தில் விக்ரம் மற்றும் கீர்த்தி சுரேஷ் உடன் இணைந்து சாமி ஸ்கொயர் படத்தில் நடிப்பதாக இருந்து பிறகு அதிலிருந்து விலகினார். இந்த விவகாரத்தால் தயாரிப்பாளர் சங்கத்தில் மோதல் உருவானதும் குறிப்பிடத்தக்கது.



பெரியம்மாவான காஜல் அகர்வால்: - திருமணம் எப்போ எனக் கேட்கும் ரசிகர்கள்?
[Saturday 2018-02-24 13:00]

நடிகை காஜல் அகர்வாலின் தங்கை நிஷா அகர்வால். விமல் ஹீரோவாக நடித்த இஷ்டம் என்ற படத்தில் இவர் நாயகியாக அறிமுகமானார். அதன்பிறகு படவாய்ப்புகள் இல்லாததால் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் கரண் வலேச்சா என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் நிஷா அகர்வாலுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்தத் தகவலை காஜல் அகர்வால் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.



எல்லா துறைகளிலும் பெண்களுக்கு பாலியல் தொல்லை: - ரகுல் பிரீத் சிங்
[Saturday 2018-02-24 13:00]

சினிமாவில் மட்டுமின்றி எல்லா துறைகளிலும் பெண்களுக்கு பாலியல் தொல்லை இருப்பதாக நடிகை ரகுல் பிரீத் சிங் தெரிவித்துள்ளார்.



வைர வியாபாரியுடனான தொடர்பை முறித்துக் கொண்ட பிரியங்கா சோப்ரா!
[Saturday 2018-02-24 13:00]

வைர வியாபாரி நிரவ்மோடி பல கோடி ரூபாய் மோசடி செய்தது தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அவருடனான தொடர்பை பிரியங்கா சோப்ரா முறித்துக் கொண்டுள்ளார். பஞ்சாப் நேஷனல் வங்கியில் வைர வியாபாரி நிரவ்மோடி ரூ.11,500 கோடி மோசடி செய்தது குறித்து சி.பி.ஐ. மற்றும் அமலாக்க பிரிவு அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இப்போது வருமான வரித்துறையினரும் இதில் தலையிட்டு விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். நிரவ் மோடி தற்போது இந்தியாவிலிருந்து தப்பிச் சென்று வெளிநாட்டில் தஞ்சமடைந்துள்ளார்.



அனுஷ்கா படத்துக்கு வழக்கு!
[Saturday 2018-02-24 13:00]

சமீபகாலமாக அனுஷ்கா நடித்த பல படங்களுக்கு தடை விதிக்கப்பட்டு வழக்கு தொடரப்பட்ட நிலையில், தற்போதும் அவர் நடிப்பில் வெளியாகியுள்ள புதிய படத்திற்கும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.அனுஷ்கா மற்றும் நாகார்ஜுனா நடிப்பில் இன்று வெளிவர உள்ள 'அகிலாண்டகோடி பிரம்மாண்ட நாயகன்' திரைப்படத்திற்கு தடை கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.



எனக்கு ஆதரவு தெரிவித்தவர்களுக்கு நன்றி: - பிரியா வாரியர்
[Friday 2018-02-23 18:00]

‘ஒரு அடார் லவ்’ மலையாள படத்தில் கண்ணடித்தும், புருவத்தை உயர்த்தியும் பாடல் காட்சிக்கு நடித்திருந்தார் பிரியா வாரியர். இணைய தளத்தில் இந்த காட்சி பிரபலம் ஆனது. அதில் மகிழ்ச்சியில் திளைத்து நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டார் பிரியா. அந்த மகிழ்ச்சியை சிதறடிக்கும் வகையில் பிரியா மீது ஐதராபாத், மும்பை உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டது. இஸ்லாமியர்கள் மனம் புண்படும்படியான பாடல் காட்சியில் நடித்திருக்கும் பிரியா வாரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் தெரிவிக்கப்பட்டது.



கதாநாயகிக்கு கைகுலுக்கி தாத்தா நடிகர் சேட்டை!
[Friday 2018-02-23 18:00]

கோலிவுட்டில் ஹீரோக்கள் சிலர் வயசானாலும் இளமை முறுக்குடன் உடற்கட்டை பராமரிக்கின்றனர். அதேசமயம் தலையும் தாடியும் நரைத்த மூத்த நடிகர்கள் தாத்தா வேடங்களில் நடிக்கின்றனர். அரசியல், காதல், ஆக்‌ஷன், காமெடி அம்சங்களுடன் உருவாகிறது ‘பதுங்கி பாயணும் தல’. இதன் ஆடியோ வெளியிடப்பட்டது. ஹீரோ மைக்கேல், ஹீரோயின் நைனிகா, வேல ராமமூர்த்தி, எம்.எஸ்.பாஸ்கர், சிங்கம் புலி, சிங்கப்பூர் தீபன் உள்ளிட்ட நட்சத்திரங்களுடன் 70 வயது ராகுல் தாத்தாவுடன் நடிக்கிறார்.



உதட்டை கவ்வி முத்தமிடும் பியா!
[Friday 2018-02-23 18:00]

கோ, கோவா, சட்டம் ஒரு இருட்டறை, கூட்டம் உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் பியா. நகரத்து பெண்ணாக பல படங்களில் நடித்திருந்தபோதும் பட வாய்ப்பு மிகக்குறைவாகவே வந்துகொண்டிருந்தது. நீச்சல் உடையில் நடிக்க மாட்டேன், முத்தக்காட்சியில் நடிக்க மாட்டேன் என்று ஆரம்ப கட்டத்தில் நிபந்தனை விதித்துக்கொண்டிருந்தார். இதனால் சகஹீரோயின்களுடன் போட்டிபோட முடியாமல் திணறினார். இரண்டு அல்லது மூன்று நாயகிகளில் ஒருவராகவே நடிக்க வாய்ப்பு வந்தது. கடந்த 2 ஆண்டாக தமிழில் ஒரு படத்தில் கூட அவருக்கு நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. இதில் சோர்ந்திருந்தவர் விளம்பர படங்களில் வந்த வாய்ப்பை ஏற்றுக்கொண்டார்.



பழம்பெரும் நடிகை பானுமதி வேடத்தில் நடிக்கும் அனுஷ்கா!
[Friday 2018-02-23 18:00]

நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு, மகாநடி என்ற பெயரில் தெலுங்கிலும், நடிகையர் திலகம் என்ற பெயரில் தமிழிலும் படமாக உருவாகி வருகிறது. இதற்காக சாவித்திரியின் குடும்பத்தினர் மற்றும் அவரது நண்பர்கள், அவருடன் இணைந்து நடித்தவர்கள் ஆகியோரிடம் தகவல்கள் திரட்டி நாக் அஸ்வின் இயக்கி வருகிறார். சாவித்திரி வேடத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். பத்திரிகை நிருபராக சமந்தா நடிக்கிறார். திரையில் சாவித்திரியின் வாழ்க்கையை அவர் விவரித்துச் சொல்வது போல் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இப்போது அனுஷ்கா முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.



தொடர்ந்து நடிப்பேன்: - பாவனா
[Friday 2018-02-23 18:00]

கன்னடப் பட தயாரிப்பாளரும், தனது நீண்ட நாள் காதலனுமான நவீனை திருமணம் செய்துகொண்ட பாவனா, கன்னடத்தில் சிவராஜ் குமாருடன் இணைந்து நடித்துள்ள படம் விரைவில் ரிலீசாகிறது. இதையடுத்து தொடர்ந்து சினிமாவில் நடிக்க முடிவு செய்துள்ள அவர் கூறியதாவது: இனிமேலும் தொடர்ந்து நடிப்பேன். ஆனால், ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை மட்டுமே தேர்வு செய்து நடிப்பேன். ஆனால், அதற்கான வாய்ப்புகள் மிகவும் அரிதாகவே கிடைக்கிறது. அதுவரை என்னால் காத்திருக்க முடியாது.



கெட்டவார்த்தையில் கேலி செய்தால் நேரடி தாக்குதல்: - நடிகைகள் துணிச்சல் முடிவு
[Wednesday 2018-02-21 17:00]

இணைய தளங்களில் நடிகைகளை கெட்ட வார்த்தையில் விமர்சித்தும், மிரட்டியும், அவர்களை மார்ஃபிங் செய்து ஆபாச படம் வெளியிட்டும் இழிவுபடுத்துகின்றனர். இதனால் பாதிக்கப்படும் நடிகைகள் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்து நடவடிக்கை கோருகின்றனர். அதன்பேரில் ஒருசிலர் மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. ஆனாலும் விமர்சனங்கள் தொடர்ந்த வண்ணமிருக்கிறது. ஒரு சில நடிகைகள் பதிலடியாக இணைய தளத்திலேயே அந்த நபர் எப்படி திட்டினாரோ அதேபாணியில் திட்டி தீர்க்கின்றனர்.



தன்ஷிகா நடித்த குறும்படத்திற்கு எட்டு விருதுகள்!
[Wednesday 2018-02-21 17:00]

கபாலி படத்தின் மூலம் பிரபலமான தன்ஷிகா நடித்த சினம் என்ற குறும்படம் கொல்கத்தா திரைப்பட விழாவில் 8 பிரிவுகளில் விருது பெற்றுள்ளது. ஆனந்த மூர்த்தி இயக்கதியுள்ள சினம் குறும்படம் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். கலாச்சார ரீதியில் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக இப்படத்தை சினிமா விமர்சகர்கள் பாராட்டி வருகின்றனர். தமிழ்நாட்டில் இருந்து மேற்குவங்கத்துக்கு பிழைக்க சென்று அங்கு பாலியல் தொழிலாளியாக மாறிய ஒரு பெண்ணின் கதை.



இளைய தளபதியின் நடன அசைவுகள் என்னை மிகவும் கவர்ந்துள்ளது: - மேகா ஆகாஷ்
[Wednesday 2018-02-21 17:00]

வளர்ந்து வரும் இளம் நடிகை மேகா ஆகாஷ் தான் ஒரு தீவிர விஜய் ரசிகை என்று தெரிவித்துள்ளார். விஜய்யின் நடன அசைவுகள் தன்னை மிகவும் கவர்ந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் நடிகர் தனுஷ் ஜோடியாகவும், ஜெயராம் மகன் காளிதாஸ், மற்றும் அதர்வாவுடனும் அடுத்தடுத்த படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் மேகா ஆகாஷ்.



நெருக்கமாக நடிக்க ஹீரோவுக்கு தைரியம் கொடுத்த ரம்யா நம்பீஸன்!
[Wednesday 2018-02-21 17:00]

குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் நடிக்கும் ரம்யா நம்பீஸன் கதைக்கு தேவைப்படும்போது நெருக்கமான காட்சிகள், முத்தக்காட்சிகளில் நடிக்கிறார். அவர் நடிக்கும் புதிய படம் ‘நட்புன்னா என்னென்னு தெரியுமா’. இதில் ரம்யாவுடன் காதல் காட்சியில் நெருக்கமாக நடிக்க பயந்தார் புதுமுக ஹீரோ கவின். இதுபற்றி பட இயக்குனர் சிவா அரவிந்தன் கூறியது: மூன்று நண்பர்களைபற்றிய கதையாக உருவாகிறது. கவின், ராஜு, அருண்ராஜா காமராஜ் நண்பர்களாக நடிக்கின்றனர். ரம்யா நம்பீஸன் ஹீரோயின்.



தன்னை பற்றிய விமர்சனங்களுக்கு நியாயமான முறையில் பதில் அளிக்கும் இஷா!
[Wednesday 2018-02-21 17:00]

ஃபேஸ்புக், டுவிட்டர். வாட்ஸ் அப் என இணைய தள பக்கங்களில் பல சினிமா நட்சத்திரங்கள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். ஹீரோயின்கள் சிலர், சமுதாயம், பெண்கள் அவமதிப்பு குறித்து துணிச்சலாக கருத்து சொல்கின்றனர். அதுபோன்ற சமயங்களில் சில விஷமிகள் குறிப்பிட்ட நடிகையை திட்டியும், இழிவாக விமர்சித்தும் கருத்து வெளியிடுகின்றனர். யார் இவன், துடக் துடக் துடியா படங்களில் நடித்தவர் இஷா குப்தா. அவரும் விஷமிகளின் விமர்சனத்துக்கு பலமுறை ஆளாகி வருகிறார். இதை தடுப்பது எப்படி என்பது தெரியாமல் தவித்து வந்தார். தற்போது அதற்கான வழியை காண முயற்சி மேற்கொண்டிருக்கிறார்.



ஜெமினி குடும்பத்துடன் ஆலோசனையா? கீர்த்தி சுரேஷ் விளக்கம்
[Tuesday 2018-02-20 17:00]

பழம்பெரும் நடிகையும், ஜெமினி கணேசன் மனைவியுமான சாவித்ரி வாழ்க்கை சரித்திர படம் நடிகையர் திலகம் பெயரில் உருவாகிறது. சாவித்ரி வேடத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். நிஜவாழ்க்கை கதையான இதில் சாவித்ரிபற்றி ஜெமினி கணேசன் குடும்பத்தினருடன் பேசினீர்களா என்றதற்கு பதில் அளித்தார் கீர்த்தி. அவர் கூறியது: சாவித்ரி எவ்வளவு பெரிய நடிகை, ரசிகர்களிடம் எவ்வளவு புகழ் சம்பாதித்தவர் என்பது எனக்கு தெரியும். அவரது வாழ்க்கை சரித்திர படத்தில் நடிக்க வேண்டும் என்றதும் எனக்கு கொஞ்சம் பயமாகவே இருந்தது.



தமிழில் வெளியாகவுள்ள ட்ரிபிள் எக்ஸ் படம்!
[Tuesday 2018-02-20 17:00]

அயல்நாடுகளில் எல்லாம் ஹீரோ ஹீரோயின்கள் ‘முற்றிலும் துறந்த நிலையில்’ நடிக்கும் காட்சிகள் அமைந்த படங்கள் சகஜம். XXX (ட்ரிபிள் எக்ஸ்) என்று முத்திரை குத்தப்படும் இத்தகைய படங்களைப் பார்க்க உலகம் முழுக்கவே ஆர்வலர்கள் அதிகம். நம் நாட்டைப் பொறுத்தவரை சென்ஸார் போர்டு இத்தகைய படங்களை அனுமதிப்பதில்லை. அதிகபட்சமாக XX (டபுள் எக்ஸ்) படங்களை ஏகத்துக்கும் வெட்டித் தள்ளி அனுமதிப்பதுண்டு. சில காலம் முன்பு ‘எக்ஸ் சோன்’ என்கிற பெயரில் ஓர் இந்திப்படம் சென்ஸாருக்கு வந்து, அனுமதிக்கப்படாமலேயே பொட்டிக்குள் முடங்கியது. மேல்முறையீட்டுக்கு போயும்கூட இந்தப் படத்தை இந்தியாவில் அனுமதிக்க முடியாது என்று கறாராக சொல்லிவிட்டது சென்ஸார்.



கதாநாயாகியாகும் நடிகையின் மகள்கள்!
[Tuesday 2018-02-20 17:00]

நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் இந்தியில் ஹீரோயினாக அறிமுகமாகிறார். ஏற்கனவே நடிகை ராதா மகள்கள் கார்த்திகா, துளசி, நடிகை மேனகா மகள் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் ஹீரோயின்களாகி விட்டனர். அடுத்து மற்றொரு நடிகை மகள் ஹீரோயின் ஆகியிருக்கிறார். கமலுடன் விக்ரம் படத்தில் நடித்தவர் லிசி. இயக்குனர் பிரியதர்ஷனை மணந்து பின்னர் விவாகரத்து பெற்றார்.



குத்துச்சண்டை வீராங்கனையாக நடிக்கும் நிகிஷா!
[Tuesday 2018-02-20 17:00]

அழகும், அறிவும், அனுபவமும் மட்டும் ஒரு நடிகையை முன்னணிக்கு கொண்டுவரப் போதாது. ஏழு ஆண்டுகளாக முழுத்திறமையை தமிழிலும், தெலுங்கிலும் காட்டியும்கூட இன்னமும் நிகிஷா படேல் தன் இருப்பை தக்கவைத்துக் கொள்ள போராடிக் கொண்டிருக்கிறார். கட்டி வா என்றால் வெட்டி வருமளவுக்கு கிளாமரை அள்ளித் தருபவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.



சென்னையில் துப்பாக்கி பயிற்சி எடுக்கும் அஜித்!
[Tuesday 2018-02-20 17:00]

விஸ்வாசம் படத்திற்காக நடிகர் அஜித் சென்னையில் துப்பாக்கிச் சுடும் பயிற்சி எடுத்து வருகிறார். படத்தில் சண்டை காட்சிகள் நிஜமாக தோற்றமளிக்க அஜித் அதிக கவனம் செலுத்தி வருகிறார். விஸ்வாசம் படப்பிடிப்புக்காக வடசென்னையில் பிரம்மாண்ட அரங்குகளும் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த மாத இறுதி அல்லது மார்ச் மாதத்தில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. இந்த படத்தை வீரம், வேதாளம், விவேகம் படத்தை இயக்கிய சிவா இயக்க உள்ளார். சத்யஜோதி பிலிம் தாயாரிக்கும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். அஜித் ஜோடியாக நயன்தாரா நடிக்க உள்ளார்.


Easankulasekaram-Remax-300716
Tharsi-home-15-10-2016
SELVI-HOMES-09-02-17
Mahesan-Remax-169515-Seithy
<P>
 <b> 13-08-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற இசை மாலைப் பொழுது - 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
</p>
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 29ம் 30ம்தி கதிகளில் நடைபெற்ற World Tamil Badminton Federation 5th annual tournament நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 7ம் 8ம் 9ம்தி கதிகளில் நடைபெற்ற குதூகலம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா