Untitled Document
December 14, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
ஐ.நா நிபுணர்களின் பரிந்துரைகளை கேட்க வேண்டிய அவசியம் இல்லை! - வெளிவிவகார அமைச்சு
[Thursday 2017-10-12 07:00]

ஐ.நா விசேட அறிக்கையாளரின் ஆலோசனை மற்றும் பரிந்துரைகளை  பின்பற்ற வேண்டிய கடப்பாடு அரசாங்கத்துக்கு இல்லை என்று வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. உண்மைத்தன்மை, நீதி, இழப்பீடு ஆகியவற்றை ஊக்குவித்தல் மற்றும் மீள நிகழாமைக்கு உத்தரவாதமளித்தல் தொடர்பான ஐக்கிய நாடுகள் விசேட அறிக்கையாளரின் பயணம் தொடர்பில் விடுத்துள்ள அறிக்கையில் வெளிவிவகார அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது.

ஐ.நா விசேட அறிக்கையாளரின் ஆலோசனை மற்றும் பரிந்துரைகளை பின்பற்ற வேண்டிய கடப்பாடு அரசாங்கத்துக்கு இல்லை என்று வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. உண்மைத்தன்மை, நீதி, இழப்பீடு ஆகியவற்றை ஊக்குவித்தல் மற்றும் மீள நிகழாமைக்கு உத்தரவாதமளித்தல் தொடர்பான ஐக்கிய நாடுகள் விசேட அறிக்கையாளரின் பயணம் தொடர்பில் விடுத்துள்ள அறிக்கையில் வெளிவிவகார அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது.

  

இலங்கை அரசாங்கங்கள், குறித்த விடயங்கள் தொடர்பில் அறிவுரைகளையும், கருத்துக்களையும் பெறுவதற்காக இத்தகைய விசேட அறிக்கையாளர்களுக்கு அழைப்பு விடுத்துக் கொண்டிருந்தன.எனினும், அவர்களின் ஆலோசனை மற்றும் பரிந்துரைகளை அரசாங்கங்கள் பின்பற்ற வேண்டிய கடப்பாடில்லை.அரசாங்கங்களுக்கு கிடைக்கக்கூடியதாகவுள்ள விசேட அறிக்கையாளர்களின் நிபுணத்துவ அறிவையும், அனுபவத்தையும் பெற்றுக்கொள்ள முடியும். நிறுவன ரீதியான திறனை கட்டியெழுப்பல், கொள்கை உருவாக்கம் முதலியனவற்றிற்கு நலன் வழங்கும் பாங்கொன்றில் அவர்களது ஆலோசனையும், நிபுணத்துவமும் தேவையென அரசாங்கம் கருதுமிடத்து அவற்றைப் பயன்படுத்தலாம் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

  
   Bookmark and Share Seithy.comமக்களின் தீர்மானம் உறுதியாக வெளிவர வேண்டும்! - சம்பந்தன்
[Thursday 2017-12-14 08:00]

உள்ளக சுயநிர்ணய உரிமையை உள்ளடக்கிய அரசியல் தீர்வை பெற்றுக் கொள்வதற்கு மக்கள் ஓரணியில் திரண்டு தமிழரின் உறுதிப்பாட்டை நிரூபிக்க வேண்டும் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.இந்த ஆண்டில் 146 இலங்கையர்கள் சுவிசில் அடைக்கலம்!
[Thursday 2017-12-14 08:00]

146 இலங்கையர்கள் சுவிசில் அரசியல் தஞ்சம் கோரியுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. குறித்த 146 இலங்கையர்களும் இந்த வருடத்தில் சுவிட்சர்லாந்திற்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.மன்னார் நகரசபை ஆசன ஒதுக்கீடு குறித்த பேச்சுக்கள் தோல்வி!
[Thursday 2017-12-14 08:00]

உள்ளூராட்சி தேர்தல் தொடர்பாக இலங்கை தமிழரசுக் கட்சிக்கும், டெலோவிற்கும் இடையில் நேற்று மாலை மன்னாரில் உள்ள இலங்கை தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் இடம் பெற்ற பேச்சு தோல்வியில் முடிந்துள்ளது.நாமலும், பிரசன்னவுமே ஒற்றுமையை கெடுக்கின்றனர்! - தயாசிறி
[Thursday 2017-12-14 08:00]

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி பிளவடையாமல் இருப்பதையே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விரும்புவதாகவும் எனினும், சிலர் தங்களின் சுயலாபம் கருதி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை பிளவுப்படுத்த முனைவதாக, அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.மிருக வேள்விக்கு எதிரான மேல்முறையீட்டு மனு பெப்ரவரிக்கு ஒத்திவைப்பு!
[Thursday 2017-12-14 08:00]

வட மாகாண ஆலயங்களில் மிருகபலி வேள்வி நடத்த தடைவிதித்து யாழ்ப்பாண மேல்நீதிமன்றால் பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவை ஆட்சேபித்து, மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு மீதான விசாரணை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 2 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.முதலமைச்சர் விக்கி நாடாளுமன்றம் செல்ல வேண்டும்! - வட மாகாணசபை உறுப்பினரின் ஆசை
[Thursday 2017-12-14 08:00]

அடுத்­த­முறை நல்ல முத­ல­மைச்­சர் ஒரு­வர் கிடைக்­க­ வேண்­டும். அதே­வேளை தற்­போ­தைய முதல்­வர் நாடா­ளு­மன்­றுக்­குச் சென்று மக்­க­ளுக்­காகக் குரல் கொடுக்க வேண்­டும். இது­தான் எனது விருப்­பம் என்று வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர் ச.சுகிர்­தன் தெரி­வித்­தார். வடக்கு மாகாண சபை­யின் அடுத்த ஆண்­டுக்­கான வரவு செல­வுத்­திட்­ட அமர்­வில் உரையாற்றிய போதே அவர் இவ்­வாறு தெரி­வித்­தார்.கைவிடப்படும் முதியோரால் நிரம்பி வழியும் கைதடி முதியோர் இல்லம்!
[Thursday 2017-12-14 08:00]

கைதடி அரச முதி­யோர் இல்­லத்­தில் இட­நெ­ருக்­கடி ஏற்­பட்­டுள்­ளது. கைவி­டப்­பட்ட முதி­ய­வர்­கள் இல்­லத்­தில் சேர்க்­கப்­பட்டு வரு­வ­தால் நெருக்­கடி நிலை ஏற்­பட்­டுள்­ளது. இந்த நிலை­யில் முதி­யோர் இல்­லத்­தில் முதி­ய­வர்­க­ளைச் சேர்ப்­பது தற்­கா­லி­க­மாக நிறுத்­தப்­பட்­டுள்­ளது என இல்ல அத்­தி­யட்­ச­கர் த.கிரு­பா­க­ரன் தெரி­வித்­தார்.சாட்சி சொன்ன ஆசிரியைக்கு தண்டனை இடமாற்றம் - யாழ். மேல்நீதிமன்றம் இடைக்காலத் தடை!
[Thursday 2017-12-14 08:00]

குடிமகன் ஒருவரின் அடிப்படை உரிமையை மீறுகின்ற வகையில் நிபந்தனை விதித்து ஆசிரியை ஒருவருக்கு வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளரால் வழங்கப்பட்ட இடமாற்றக் கடிதத்தை இடைநிறுத்துமாறு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் கட்டளையிட்டார்.ஜெருசலேமை அங்கீகரிக்கவில்லை! - இலங்கை அரசு
[Thursday 2017-12-14 08:00]

இஸ்ரேலுக்கான இலங்கை தூதரகத்தை ஜெரூஸலேம் நகருக்கு மாற்றுவதில்லை எனவும், ஜெரூஸலேத்தை இஸ்ரேலின் தலைநகராக இலங்கை ஏற்றுக்கொள்வதில்லை எனவும் அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.கருணாதிலக அமுனுகம காலமானார்!
[Thursday 2017-12-14 08:00]

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் முன்னாள் செயலாளர் கருணாதிலக அமுனுகம, சுகவீனம் காரணமாக நேற்று காலமானார். இவர் ஜேர்மனிக்கான தூதுவராகவும் அண்மையில் பணியாற்றியிருந்தார்.இனியும் யாருக்கும் வாக்களிக்க கூடிய நிலையில் நாம் இல்லை!
[Wednesday 2017-12-13 18:00]

எல்லோரையும் நம்பி வாக்களித்து ஏமாந்து விட்டோம். இனியும் நாம் வாக்களிக்க கூடிய நிலையில் இல்லை என, முல்லைத்தீவில் 280ஆவது நாளாக போராடும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், இன்று தெரிவித்துள்ளனர்.முன்னாள் புலி உறுப்பினர்கள் 7 பேருக்கு தலா 56 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை!
[Wednesday 2017-12-13 18:00]

கொலைக் குற்றத்தை ஒப்புக்கொண்ட விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் 7 பேருக்கு தலா 56 ஆண்டு கடூழிய சிறைத்தண்டனை வழங்கி அனுராதபுரம் விசேட மேல் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. மன்னார், வவுனியா, சாவகச்சேரி மற்றும் புத்தளம் பிரதேசங்களை சேர்ந்த முன்னாள் போராளிகளுக்கே இந்தத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.வேட்புமனுக்களை தயாரிப்பதில் பிரதான கட்சிகள் திணறல்!
[Wednesday 2017-12-13 18:00]

உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்களைத் தயாரிப்பதில், அரசியல் கட்சிகள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் காரணமாக, பெரும்பாலான வேட்பாளர்கள், வேட்புமனுக்கள் கிடைத்தாத நிலையில், கட்சியை விட்டு வெளியேறுவது அல்லது சு​யேட்சையாகக் களமிறங்குவதென்றத் தீர்மானங்களுக்கு வந்துள்ளனர் எனத் தெரியவருகிறது.கிளிநொச்சியில் கட்டுப்பணம் செலுத்தியது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி! Top News
[Wednesday 2017-12-13 18:00]

உள்ளூராட்சித் தேர்தலில் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, கிளிநொச்சி பிரதேச சபைகளுக்கான கட்டுப்பணத்தை, கிளிநொச்சிய மாவட்டச் செயலகத்திலுள்ள தேர்தல்கள் அலுவலகத்தில் இன்று செலுத்தியுள்ளது. கட்சியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் ஜெகதீஸ்வரன் தலைமையில் கரைச்சி, பூநகரி, பச்சிலைப்பள்ளி பிரதேச சபைகளுக்கான கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.காலிமுகத்திடல் நத்தார் மரத்துக்கு கின்னஸ் அங்கீகாரம்!
[Wednesday 2017-12-13 18:00]

காலிமுகத்திடலில் கடந்த வருடம் 72.1 மீற்றர் உயரத்தில் அமைக்கப்பட்ட நத்தார் மரமானது கின்னஸ் சாதனைப் படைத்துள்ளது. அமைச்சர் அர்ஜுண ரணதுங்க துறைமுகங்கள் அமைச்சராக பதவி வகித்த போது இவரது தலைமையின் கீழ் கடந்த 2016ஆம் ஆண்டு கொழும்பு காலிமுகத்திடலில் அமைக்கபட்ட நத்தார் மரம் உலகிலேயே உயரமான நத்தார் மரமாக கின்னஸ் புத்தகத்தில் பதியப்பட்டுள்ளது.அமெரிக்காவுக்குப் பறந்தார் கோத்தா!
[Wednesday 2017-12-13 18:00]

கோத்தபாய ராஜபக்ச அமெரிக்கா புறப்பட்டுச் சென்றுள்ளார். தனிப்பட்ட விஜயமாக அமெரிக்கா சென்றுள்ள கோத்தபாய, உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடியும் வரை இலங்கை திரும்ப மாட்டார் எனக் கூறப்படுகிறது. அரச பணத்தை தவறாக பயன்படுத்தி தமது பெற்றோருக்கு நினைவிடத்தை நிர்மாணித்தமை தொடர்பில் கோத்தபாய, பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினரால் கைதுசெய்யப்பட விருந்தார்.வித்தியா கொலை வழக்கு ஆவணங்கள் உயர்நீதிமன்றிடம் கையளிப்பு!
[Wednesday 2017-12-13 18:00]

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட 7 குற்றவாளிகளால் முன்வைக்கப்பட்ட மேன்முறையீட்டு மனுவுக்கு அமைவாக, தீர்ப்பாயத்தால் நடத்தப்பட்ட விசாரணை குறித்த மூல வழக்கேடுகள் மற்றும் அதன் பிரதிகள் இன்று உயர் நீதிமன்றில் கையளிக்கப்பட்டன.இந்தியத் தளபதியின் ஹெலி கண்டியில் பழுது!
[Wednesday 2017-12-13 18:00]

இந்திய விமானப்படையின் பிரதானியான எயார் சீப் மார்ஷல் பிரேந்திர சிங் பயணித்த ஹெலிகொப்டர் இன்று கண்டியில் பழுதடைந்தது. இன்று கண்​டி தலதா மாளிகைக்கு வருகைத் தந்த இவரது ஹெலிகொப்டர் இயந்திரக்கோளாறு ஏற்பட்டதையடுத்து, மற்றொரு ஹெலிகொப்டர் மூலம் திரும்பிச் சென்றுள்ளார்.இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான குறித்த ஹெலிகொப்டர் கண்டி அஸ்கிரிய பொலிஸ் மைதானத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்ய அனுமதி!
[Wednesday 2017-12-13 18:00]

காங்கேசன்துறை துறைமுகத்தினை மறுசீரமைப்பு செய்வதற்கான முன்மொழிவுகளை இலங்கை துறைமுக அதிகார சபை முன்வைத்துள்ளது. இங்கு வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு உகந்த வகையில், அடிப்படை வசதிகளை அபிவிருத்தி செய்வதற்கான ஆரம்ப கட்டுமானங்களை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.மாணவியை துஷ்பிரயோகம் செய்ய முயன்ற ஆசிரியர் தப்பியோட்டம்!
[Wednesday 2017-12-13 18:00]

முல்லைத்தீவு - விஸ்வமடு பகுதியில் ரியூசன் ஆசிரியர் ஒருவர், கல்விப் பொதுத்தராதர சாதாரண தர மாணவியை துஷ்பிரயோகம் செய்ய முற்பட்டமை தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. நேற்றையதினம் இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.


Easankulasekaram-Remax-300716
Tharsi-home-15-10-2016
SELVI-HOMES-09-02-17
Mahesan-Remax-169515-Seithy
<P>
 <b> 13-08-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற இசை மாலைப் பொழுது - 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
</p>
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 29ம் 30ம்தி கதிகளில் நடைபெற்ற World Tamil Badminton Federation 5th annual tournament நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 7ம் 8ம் 9ம்தி கதிகளில் நடைபெற்ற குதூகலம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா