Untitled Document
February 24, 2018 [GMT]
  • Welcome
  • Welcome
பற்றியெரிந்த குப்பை மேடு! - சுற்றுப் புறமெங்கும் சீர்கேடு
[Thursday 2017-10-12 07:00]

யாழ்ப்பாணம்- காக்கைதீவு குப்பை மேட்டிற்கு தீ மூட்பட்டுள்ளதால் அப் பகுதியில் பெரும் புகைமண்டலம் சூழ்ந்துள்ளது. இதன் காரணமாக அக் குப்பை மேடு காணப்படும் வீதியின் ஊடான போக்குவரத்துக்களும் தடைப்பட்டுள்ளன.  யாழ்ப்பாணம் மாநகரசபைக்கு உட்பட்ட பிரதேசத்தில் சேகரிக்கப்படும் குப்பை கழிவுகளானது யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை வீதியில் உள்ள குறித்த குப்பை மேட்டில் கொட்டப்பட்டு வருகின்றது.

யாழ்ப்பாணம்- காக்கைதீவு குப்பை மேட்டிற்கு தீ மூட்பட்டுள்ளதால் அப் பகுதியில் பெரும் புகைமண்டலம் சூழ்ந்துள்ளது. இதன் காரணமாக அக் குப்பை மேடு காணப்படும் வீதியின் ஊடான போக்குவரத்துக்களும் தடைப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் மாநகரசபைக்கு உட்பட்ட பிரதேசத்தில் சேகரிக்கப்படும் குப்பை கழிவுகளானது யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை வீதியில் உள்ள குறித்த குப்பை மேட்டில் கொட்டப்பட்டு வருகின்றது.

  

சில நாட்களாக அக் குப்பை மேட்டில் சேகரிக்கப்படும் குப்பைகள் விடுமுறை நாட்களில் குறிப்பாக ஞாயிற்றுக்கிழமைகளில் தீ மூட்டப்பட்டு வருகின்றது. இச் செயற்பாட்டின் அடுத்த கட்டமாக நேற்று குறித்த குப்பை மேட்டின் அனைத்து குப்பைகளுக்கும் தீ மூட்டப்பட்டுள்ளது. இதனால் தீ சுவாலைகள் பல கிலோ மீற்றர் துரத்திற்குமப்பால் தெரியும் வகையில் கொளுந்து விட்டு எரிவதுடன் அங்கே கொட்டப்பட்ட பிளாஸ்ரிக் கழிவுகள் தீயில் எரிந்து அவற்றில் இருந்து வெளிக்கிளம்பிய புகையானது அப் பகுதி முழுவதையும் மூடிக் காணப்படுகின்றது.

புகை மண்டலத்தின் காரணமாக அப் பகுதி ஊடான போக்குவரத்தானது முற்றாக ஸ்தம்பிதம் அடைந்துள்ளது. குறிப்பாக வீதி வெளிச்சம் அற்ற அவ் வீதியில் தற்போது இப் புகையும் சூழ்ந்துள்ளதால் வாகனங்கள் அப் பகுதியை கடந்து செல்ல முடியாத நிலையில் காணப்படுகின்றன. அதாவது முன்னே செல்லும் அல்லது முன்னிருந்து வரும் வாகனம் என்னவென்று தெரியாத அளவிற்கு அவ் வீதி உட்பட அப் பகுதியானது புகையினால் மூடப்பட்டுள்ளது. இதுவரை தீயினை அணைப்பதற்கான எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை .

இதேவேளை இங்கு சேகரிக்கப்படும் குப்பைகளிருந்து அயலில் உள்ள பிரதேசமான நவாலி, ஆனைக்கோட்டை ஆகிய பகுதிகளுக்கு தோற்று நோய்களை ஏற்படுத்த கூடிய ஈக்கள் பரவுவதாகவும், அக் குப்பைகளிவுகளால் நோய்கள் பரவுவதாகவும், சுற்றுசூழல் மாசுபடுவதாகவும் அப் பிரதேச மக்களால் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.

  
   Bookmark and Share Seithy.comஇலங்கைக்கு வேறு வழிகளில் அழுத்தங்களைக் கொடுக்க வேண்டும்! - ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர்
[Saturday 2018-02-24 18:00]

இலங்கையில் பொறுப்புக்கூறலை மேற்கொள்வதற்கான வேறு வழிகளை ஆராயும்படி, ஐ.நா மனித உரிமைகள் பேரவையிடம், ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் அழைப்பு விடுத்துள்ளார். வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 37ஆவது கூட்டத்தொடருக்குச் சமர்ப்பித்துள்ள இலங்கை தொடர்பான அறிக்கையிலேயே அவர் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தியுள்ளார்.8000 பக்தர்கள் பங்கேற்ற கச்சதீவு அந்தோனியார் திருவிழா! Top News
[Saturday 2018-02-24 18:00]

கச்­ச­தீவு புனித அந்­தோ­னியார் ஆலய வரு­டாந்த பெரு­விழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. இன்று காலை யாழ் மறை மாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானபிரகாசம் மற்றும் காலி மறை மாவட்ட ஆயர் றேமன் விக்கிரமதுங்க தலைமைத்துவத்தில் திருப்பலி ஒப்புகொடுக்கப்பட்டு திருவிழா புனிதமாக முன்னெடுக்கப்பட்டு நிறைவடைந்தது.பாதுகாப்புக்காகவே திருப்பி அழைக்கப்பட்டார் பிரிகேடியர் பிரியங்க! - இராணுவத் தளபதி தெரிவிப்பு
[Saturday 2018-02-24 18:00]

பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோவின் பாதுகாப்பை கருத்தில் கொண்டே அவர் இலங்கைக்கு திருப்பியழைக்கப்பட்டார் என இராணுவத் தளபதி மகேஸ் சேனாநாயக்க, தெரிவித்தார்.விடுதலையைத் துரிதப்படுத்துமாறு அரசியல் கைதிகள் கோரிக்கை! Top News
[Saturday 2018-02-24 18:00]

அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தமது விடுதலை தொடர்பில் உரிய தலைவர்களுடன் கதைத்து விடுதலையை துரிதப்படுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக வட மாகாண சபை உறுப்பினர் எஸ்.பிரிமூஸ் சிறாய்வா தெரிவித்தார்.டக்ளஸ், பிள்ளையான் கட்சிகளுடன் பேசக் கூடாது! - சம்பந்தன் தடை
[Saturday 2018-02-24 18:00]

உள்ளூராட்சி சபைகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு வழங்க முன்வரும் தமிழ்க் கட்சிகளுடன் பேச்சு நடத்துவது என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் நேற்று முடிவு செய்யப்பட்டுள்ளது. எனினும், ஈ.பி.டி.பி. மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியுடன் பேச்சு நடத்தக் கூடாது என்று, கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.பிரிகேடியர் பிரியங்க குடும்பத்தையும் வெளியேற்ற வேண்டும்! - பிரித்தானியாவிடம் கோரிக்கை
[Saturday 2018-02-24 18:00]

பிரித்தானியாவில் உள்ள புலம்பெயர் தமிழ் மக்களை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோவின் குடும்பத்தாரையும் இலங்கைக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என உலக தமிழர் பேரவை கோரிக்கை விடுத்துள்ளது.மு.திருநாவுக்கரசுவின் “பூகோள வாதம் புதிய தேசிய வாதம்” நூல் யாழ்ப்பாணத்தில் வெளியீடு! Top News
[Saturday 2018-02-24 18:00]

அரசியல் ஆய்வாளர் மு.திருநாவுக்கரசுவின் “பூகோள வாதம் புதிய தேசிய வாதம்” எனும் நூல் இன்று யாழ்ப்பாணத்தில் வெளியிட்டு வைக்கப்பட்டது. யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், தமிழகத்தைச் சேர்ந்த எழுத்தாளர் செயப்பிரகாசம், மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், கல்வியாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.மட்டக்களப்பில் பாரிசவாத நோய் விழிப்புணர்வுப் பேரணி! Top News
[Saturday 2018-02-24 18:00]

தேசிய பாரிசவாத தினத்தை முன்னிட்டு 'பாரிசவாதத்தை தடுப்போம்! குணமாக்குவோம்! வாருங்கள், சேர்ந்து நடப்போம்! எனும் தொனிப் பொருளில் தேசிய பாரிசவாத நிகழ்வு இன்று காலை மட்டக்களப்பில் நடைபெற்றது. இலங்கை தேசிய பாரிசவாத சங்கமும், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் நரம்பியல் வைத்திய பிரிவும், மட்டக்களப்பு மாவட்ட செயலகமும் இணைந்து இதனை ஏற்பாடு செய்திருந்தது.ஜனாதிபதி மைத்திரியை இந்தியா வருமாறு அழைப்பு! Top News
[Saturday 2018-02-24 18:00]

அனைத்துலக சூரிய கூட்டமைப்பின் (International Solar Alliance) உருவாக்கக் கூட்டம் மற்றும் சூரிய மாநாட்டில் பங்கேற்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. புதுடெல்லியில் வரும் மார்ச் 11ஆம் நாள் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் பங்கேற்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், பிரெஞ்ச் அதிபர் இமானுவெல் மக்ரோனும் அழைப்பு விடுத்துள்ளார்.சிறுவர் இல்லத்தில் 12 சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகம்! -2 பிக்குகள் உள்ளிட்ட 8 பேர் கைது
[Saturday 2018-02-24 18:00]

குருநாகல் - ரஸ்ணாயகபுர, உடஹேதகம பிரதேசத்தில் உள்ள சிறுவர் இல்லத்தைச் சேர்ந்த 12 சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தினார்கள் என்ற குற்றச்சாட்டில் பிக்குகள் இருவர் உட்பட 8 பேரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 8 வயதுக்கும் 12 வயதுக்கும் இடைப்பட்ட சிறுமிகளே இவ்வாறு துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் 32 தடவைகள் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளனரென விசாரணைகளில் தெரியவந்துள்ளது.மட்டக்களப்பில் மீனவர்களின் தோணிகள் இனந்தெரியாதவர்களால் தீக்கிரை! Top News
[Saturday 2018-02-24 18:00]

மட்டக்களப்பு - முனைக்காடு பகுதி மீனவர்களின் தோணிகள் இனந்தெரியாதவர்களினால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மகிழடித்தீவு ஆற்றுப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மூன்று மீனவர்களின் தோணிகளே நேற்று எரியூட்டப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். முனைக்காடு வடக்கு பிரதேசத்தைச் சேர்ந்த இராமக்குட்டி சிவஞானம், சீனிதம்பி சிவகுமார், சிவலிங்கம் சீனிதம்பி ஆகியோரின் மீன்பிடி தோணிகளே இவ்வாறு தீக்கரையாக்கப்பட்டுள்ளன.இன்றைய அமைச்சர்கள் நாளை எம்.பிகள் ஆகலாம்! - மஹிந்த கூறிய ஆரூடம்
[Saturday 2018-02-24 17:00]

நாளை இடம்பெறவிருக்கின்ற அமைச்சரவை மாற்றத்தின் போது, இன்று அமைச்சராக இருக்கின்றவர்கள், நாளை முதல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகலாம் என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான மஹிந்த அமரவீர தெரிவித்தார். அங்குணகொலபெ​லேஸ்ஸில் இன்றுஇடம்பெற்ற, வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.ஐ.நாவின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி திடீர் மரணம்!
[Saturday 2018-02-24 08:00]

இலங்கைக்கான ஐ.நாவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி உனா மக்கோலி திடீரென மரணமானார். கொழும்பில் உள்ள ஐ.நா பணியகம் இன்று அதிகாலை இந்த தகவலை வெளியிட்டுள்ளது. 54 வயதான உனா மக்கோலி, மருத்துவ விடுப்பில் சென்று சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே காலமானார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.பிரிகேடியர் பிரியங்க விவகாரத்தை தீவிரமாக எடுத்துக் கொண்ட பிரித்தானியா!
[Saturday 2018-02-24 08:00]

பிரித்தானியாவில் ஆர்ப்பாட்டம் செய்த புலம்பெயர் தமிழர்களை சைகையின் மூலம் அச்சுறுத்திய பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ தொடர்பாக உலக தமிழ் பேரவை பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் அனுப்பிய மின்னஞ்சலுக்கு லண்டனில் உள்ள வெளிநாட்டு அலுவலகத்திலிருந்து, கொமன்வெல்த் அலுவலகத்தில் இருந்தும் பதில் அனுப்பப்பட்டுள்ளது.மன்னாரில் இருந்தும் நூற்றுக்கணக்கானோர் குடும்பங்களுடன் கச்சதீவுக்குப் பயணம்!
[Saturday 2018-02-24 08:00]

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவிற்கு மன்னார் மாவட்டத்தில் இருந்து நூற்றுக்கணக்கான குடும்பங்கள் படகுகள் மூலம் பயணமாகியுள்ளன. தலைமன்னார், பேசாலை, பள்ளிமுனை, கோந்தைப்பிட்டி கடற்பகுதியூடாக மக்கள் படகுகள் மூலம் கச்சதீவை நோக்கி பயணமாகியுள்ளனர். இவர்களுக்குத் தேவையான சகல வசதிகளையும் இலங்கை கடற்படை ஏற்பாடு செய்துள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் தெரிவித்தார்.செப்ரெம்பரில் மாகாணசபைத் தேர்தல்!
[Saturday 2018-02-24 08:00]

எதிர்வரும் செப்டம்பர் மாதமளவில் மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படக்கூடிய சாத்தியங்கள் காணப்படுகின்றன என்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தகவல் வெளியிட்டுள்ளார். மத்திய, வடக்கு மற்றும் வடமேல் மாகாண சபைகளின் பதவிக் காலம் பூர்த்தியாக உள்ளநிலையில் எதிர்வரும் செப்டம்பர் மாதமளவில் இந்த மாகாணசபைகளுக்கான தேர்தல்களை நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது.கூட்டமைப்பை தமிழ் மக்கள் நிராகரித்து விட்டனர்! - கெஹலிய ரம்புக்வெல
[Saturday 2018-02-24 08:00]

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வடக்கு – கிழக்கு மக்கள் நிராகரித்து விட்டமையை தேர்தல் பெறுபெறுகள் நன்கு புலப்படுத்தி நிற்கின்றன என நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.அர்ஜுன் அலோசியஸ் சிறைச்சாலை வைத்தியசாலையில்!
[Saturday 2018-02-24 08:00]

மத்திய வங்கி பிணை முறி மோசடிகள் தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள பேர்பச்சுவல் ட்ரஸரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜூன் அலோசியஸ் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மத்திய வங்கி பிணை முறி மோசடிகள் தொடர்பில் அர்ஜூன் அலோசியஸ் மற்றும் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளர் கசுன் பலிசேன ஆகியோர் அண்மையில் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.கபீர் காசிமுக்கு உயர்கல்வி அமைச்சு?
[Saturday 2018-02-24 08:00]

அமைச்சரவை மாற்றம் நாளை இடம்பெறும் என்று அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்போது ஐக்கிய தேசிய கட்சி சார்ந்த அமைச்சுக்கள் பலவற்றில் மாற்றங்கள் செய்யப்படவுள்ளதாக தெரிய வந்துள்ளது. அமைச்சர் கபீர் ஹாசிமின் அரச தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சுப் பதவி அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியெல்லவிற்கும், அவரது உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு அமைச்சர் கபீர் ஹாசிமுக்கு வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.கைவிடப்படுகிறது எட்கா!
[Saturday 2018-02-24 08:00]

எட்கா எனப்படுகின்ற இலங்கை - இந்திய பொருளாதார ஒத்துழைப்பு உடன்படிக்கையை கைச்சாத்திடுவதில் கடும் நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளதால் அந்த முயற்சியை இலங்கை அரசு தற்காலிகமாக ஒத்திவைக்கக்கூடும் எனத் தெரியவருகின்றது.


Easankulasekaram-Remax-300716
Tharsi-home-15-10-2016
SELVI-HOMES-09-02-17
Mahesan-Remax-169515-Seithy
<P>
 <b> 13-08-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற இசை மாலைப் பொழுது - 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
</p>
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 29ம் 30ம்தி கதிகளில் நடைபெற்ற World Tamil Badminton Federation 5th annual tournament நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 7ம் 8ம் 9ம்தி கதிகளில் நடைபெற்ற குதூகலம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா