Untitled Document
September 25, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
அமெரிக்கா மீது வரலாறு காணாத தாக்குதல்: ஜெனிவாவில் வடகொரியா பகிரங்க மிரட்டல்
[Wednesday 2017-09-13 17:00]

 ஐக்கிய நாடுகள் சபை விதித்துள்ள புதிய பொருளாதார தடைகளுக்கு வடகொரியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனிவா நகரத்தில் அமெரிக்கா நடத்திய கருத்தரங்கில் பேசிய அமெரிக்காவுக்கான வடகொரியா தூதர் ஹான் டே வடகொரியா மீது அமெரிக்கா தொடர்ந்து அழுத்தங்களை ஏற்படுத்தி வருகிறது என்றார். மீண்டும் மீண்டும் வடகொரியாவின் இறையாண்மைக்கு அமெரிக்கா கலங்கம் விளைவித்து வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். இதன் பலனை அமெரிக்கா விரைவில் உணரும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபை விதித்துள்ள புதிய பொருளாதார தடைகளுக்கு வடகொரியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனிவா நகரத்தில் அமெரிக்கா நடத்திய கருத்தரங்கில் பேசிய அமெரிக்காவுக்கான வடகொரியா தூதர் ஹான் டே வடகொரியா மீது அமெரிக்கா தொடர்ந்து அழுத்தங்களை ஏற்படுத்தி வருகிறது என்றார். மீண்டும் மீண்டும் வடகொரியாவின் இறையாண்மைக்கு அமெரிக்கா கலங்கம் விளைவித்து வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். இதன் பலனை அமெரிக்கா விரைவில் உணரும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

  

அணு ஆயுத சோதனைகளை தொடர்ந்து அரங்கேற்றி உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் வடகொரியா மீது மேலும் பொருளாதார தடைகளை ஏற்படுத்த அமெரிக்கா வரைவு தீர்மானம் ஏற்றி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தாக்கல் செய்தது. வாக்கெடுப்புக்கு விடப்பட்ட தீர்மானத்திற்கு 15 உறுப்பு நாடுகளும் ஆதரவாக வாக்களித்தனர். இதையடுத்து வடகொரியா மீது மேலும் 3 பொருளாதார தடைகள் விதித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

  
   Bookmark and Share Seithy.com



பல் அறுவை சிகிச்சை செய்து புதிய பற்களை பொருத்தி சாதனை படைத்த சீன ரோபோ!
[Sunday 2017-09-24 16:00]

சீனாவில் பல் சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வில் 40 கோடி மக்கள் புதிய பற்களுக்காக காத்திருப்பது தெரியவந்தது.ஆனால் அதற்கு தகுந்தாற் போல் பல் டாக்டர்கள் இல்லை. மிக குறைவாக உள்ளனர். எனவே பல் மருத்துவ துறையில் ‘ரோபோ’க்கள் பயன்படுத்த திட்டமிடப்பட்டது. அதற்காக ஸியான் நகரில் உள்ள ராணுவ மருத்துவ பல்கலைக்கழக ஆஸ்பத்திரி, பெய்ஜிங்கில் செயல்படும் பெய்காங் பல்கலைக்கழகத்தின் ‘ரோபோ’ நிறுவனம் இணைந்து ‘பல் மருத்துவ ரோபோ’வை உருவாக்கினார்கள்.



பிலிப்பைன்ஸில் காய்கறி விற்ற சிறுவனுக்கு அடித்த அதிர்ஷ்டம்!!
[Sunday 2017-09-24 16:00]

பொருளாதார சிக்கலால் சாலையில் காய்கறி விற்றுக் கொண்டிருக்கும் சிறுவனை பள்ளியில் சேர்க்க தான் விரும்புவதாக பிலிப்பைன்ஸ் நடிகை ஷரோன் குனெட்டா கூறியுள்ளார்.பிலிப்பைன்ஸில் வறுமை அதிகளவில் தலைவிரித்து ஆடுவதால் அந்நாட்டு சிறுவர்கள் பலர் பள்ளிக்கூடத்துக்கு செல்ல முடியாமல் குழந்தை தொழிலாளியாக வேலைக்கு செல்கிறார்கள்.



ஜெனிவாவில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் இருவர் படுகாயம்!
[Sunday 2017-09-24 16:00]

சுவிட்சர்லாந்து நாட்டில் மர்ம ஒருவர் நடத்திய துப்பாக்கி சூட்டில் இருவர் படுகாயம் அடைந்து தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.சுவிஸின் ஜெனிவா மாகாணத்தில் உள்ள Charmilles என்ற நகரில் வெள்ளிக்கிழமை இரவு 10 மணியளவில் பொதுமக்கள் பொலிசாருக்கு அவசர தகவல் அளித்துள்ளனர்.



துருக்கி ஆட்சிக்கவிழ்ப்பு தொடர்பான டுவிட் பதிவால் பறிக்கப்பட்ட அழகி பட்டம்!
[Sunday 2017-09-24 16:00]

முன்னதாக பதிவிடப்பட்ட டுவிட் ஒன்று அம்பலமாகிய பின்னர், "துருக்கி அழகிப் போட்டி 2017" பட்டத்தை வென்ற அழகியிடம் இருந்து அந்த பட்டம் பறிக்கப்பட்டுள்ளது.கடந்த ஆண்டு துருக்கியில் தோல்வியில் முடிந்த ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியை மேற்கோள்காட்டி, தன்னுடைய மாதவிடாய் சுழற்சியை, "தியாகிகள்" சிந்துகிற ரத்தத்தோடு ஒப்பிட்டு, 18 வயதான இதிர் இசென் டுவிட்டர் பதிவிட்டுள்ளார்.இந்தப் போட்டியை ஏற்பாடு செய்தோர் இந்த டுவிட்டை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறி, இதிர் இசென் வெற்றிபெற்றிருந்த சில மணிநேரங்களுக்கு பிறகு, அந்தப் போட்டியில் இருந்து அவரை நீக்கிவிடுகின்ற தங்களுடைய முடிவை உறுதி செய்தனர்.



ஆசிய பகுதி விண்வெளியில் நைட்ரேட் வாயு படலம்!
[Sunday 2017-09-24 08:00]

ஆசிய பகுதி விண்வெளியில் மாசு படலம் நிலவிய செயற்கை கோள் படங்களை இஸ்ரோவும், நாசா குழுவினரும் ஆய்வு செய்ததில் அதில் நைட்ரேட் வாயு இருப்பது கண்டறிப்பட்டுள்ளது. வாகனப் புகை, குப்பைகளை எரித்தல், காற்றில் அடித்துச் செல்லப்படும் தூசி, எரிமலை புகை போன்றவை காற்றில் கலந்து விண்வெளியில் தூசிப்படலத்தை(ஏரோசோல்) ஏற்படுத்துகின்றன. பூமியின் மேற்பரப்பில் ஒரு சில கி.மீ தூரத்துக்கு இந்த தூசிப்படலம் வழக்கமாக இருக்கும். ஆனால் ஆசிய பகுதியில் பூமியின் மேற்பரப்பில் 16.5 கி.மீ தூரம் முதல் 18.5 கி.மீ தூரம் வரை இந்த தூசிப்படலம் அதிகரித்திருப்பது செயற்கைகோள் படங்கள் மூலம் தெரியவந்தது.



மெக்சிகோ நிலநடுக்கத்தில் சிக்கி உயிருக்கு போராடிய 12 பேரை மீட்ட நாய்!
[Sunday 2017-09-24 08:00]

மெகஸிக்கோவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி உயிருக்கு போராடிய 12 பேரை பிரிடா என்னும் நாய் மீட்டு நெகிழ வைத்துள்ளது.மெக்சிகோவில், கடந்த சில தினங்களுக்கு முன் சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் ஏறத்தாழ 400க்கும் மேற்பட்ட மக்கள் கட்டிட இடிபாடுகளில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.



டிரம்பும் கிம் ஜாங் அன்னும் மழலையர் வகுப்பில் படிக்கிற குழந்தைகள்போல சண்டை போட்டுக்கொள்வதா? - ரஷியா
[Sunday 2017-09-24 08:00]

அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன்னும் தொடர்ந்து வார்த்தை மோதல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.வட கொரியாவை அழித்து விடுவேன் என டிரம்ப் மிரட்டினார். உடனே கிம் ஜாங் அன், “டிரம்புக்கு புத்தி பேதலித்து விட்டது, முதுமையினால் மனத்தளர்ச்சி அடைந்து விட்டார்” என விமர்சித்தார்.



வடகொரியாவில் நிலநடுக்கம்: - அணுஆயுத சோதனையால் ஏற்பட்டிருக்கலாம் என தகவல்
[Saturday 2017-09-23 18:00]

வடகொரியாவில் இன்று காலை சுமார் 8:30 மணியளவில் ரிக்டர் அளவில் 3.4 அளவில் பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சீனா நில அராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த பூகம்பம் முன்னர் அந்நாடு அணுஆயுத சோதனைகள் நடத்திய அதே இடத்தில் ஏற்பட்டிருப்பதாகவும், இதனால் வடகொரியா அந்த இடத்தில் மீண்டும் அணுஆயுத சோதனையோ, ஹைட்ரஜன் குண்டு சோதனையோ நடத்தியிருக்கக்கூடும் எனவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.



சுவிஸில் புலம்பெயர்ந்த பணியாளர்களால் அரசுக்கு ரூ.5,000 கோடி வருவாய் இழப்பு!
[Saturday 2017-09-23 18:00]

சுவிட்சர்லாந்து நாட்டில் புலம்பெயர்ந்த பணியாளர்களால் அரசுக்கு சுமார் 5,000 கோடி வரி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.சுவிட்சர்லாந்து நாட்டில் வீட்டு வேலை உள்ளிட்ட பணிகளுக்காக வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் சுமார் 4 லட்சம் பேர் பணி செய்து வருகின்றனர்.



நாடாளுமன்ற தேர்தல்: - ஜெர்மனியில் மீண்டும் சான்சலர் ஆகிறார் ஏஞ்சலா மெர்கல்
[Saturday 2017-09-23 17:00]

ஜெர்மனியின் நாடாளுமன்றம் கடந்த 1949ம் ஆண்டு நிறுவப்பட்டது. மொத்தம் 598 உறுப்பினர்கள் கொண்ட இந்த நாடாளுமன்றத்தில் ஆட்சியமைக்க 300 இடங்களில் வெற்றி பெற வேண்டும். இதற்கு முன்னர் நடைபெற்ற அனைத்து தேர்தலிகளிலும் கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் கட்சியும், சமூக ஜனநாயக கட்சியும் மட்டுமே வெற்றி பெற்றுள்ளன. கடந்த 2013ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் கட்சி 311 இடங்களில் வெற்றி பெற்று சமூக ஜனநாயக கட்சியுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்தது. கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் கட்சியின் ஏஞ்சலா மெர்கல் தொடர்ந்து மூன்றாவது முறை சான்சலராக (அரசுத் தலைவர்) தேர்ந்தெடுக்கப்பட்டார்.



பொது இடங்களில் முகத்தை காட்டாத இஸ்லாமிய பெண்களுக்கு அபராதம் விதிக்கப்படும்: - அவுஸ்ரேலியா அரசு எச்சரிக்கை
[Saturday 2017-09-23 09:00]

அவுஸ்ரேலியா நாட்டில் பொது இடங்களில் முகத்தை காட்டாத இஸ்லாமிய பெண்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என அந்நாட்டு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.பொது இடங்களில் புர்கா அணிவதை தடை செய்யும் புதிய சட்டத்திற்கு கடந்த மே மாத அரசு அனுமதி அளித்தது.



வடகொரிய அதிபர் பட்டினி போட்டே தனது மக்களை கொன்று விடுவார்: -அமெரிக்க அதிபர் டிரம்ப்
[Friday 2017-09-22 19:00]

வடகொரியாவின் அதிபரான கிம் ஜாங்-உன் உலக நாடுகள் கடும் எதிர்ப்பை மீறி அணு சோதனை, மற்றும் ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு மிரட்டி வருகிறார். கடந்த செப் 3-ம் தேதி வரை 6 முறை அணு சோதனைகளையும், ஒரே ஆண்டில் 12 ஏவுகணை சோதனைகளையும் நடத்தியுள்ளார்.



பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்த இளஞ்சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும் அதிசய ஏரி!
[Friday 2017-09-22 18:00]

சீனாவின் ஷான்சி மாகாணத்தில் உள்ள என்செங் நகரத்தில் மிகப்பெரிய உப்பு ஏரி உள்ளது. இது மிகவும் உவர் தன்மை உள்ளதாக காணப்படுகிறது. கடந்த 4 ஆயிரம் ஆண்டுகளாக சீன மக்கள் இந்த ஏரியிலிருந்து தொழில் நிறுவனங்களுக்கு தேவையான உப்பை உற்பத்தி செய்து வருகின்றனர். மேலும், இந்த ஏரியில் சோடியம் சல்பேட் உப்பு அதிக அளவு உள்ளது. உலகிலேயே இந்த உப்பு அதிகம் உள்ள மூன்றாவது ஏரி இதுவாகும்.



அமெரிக்காவில் ரூ.17 லட்சத்துக்கு ஏலம் போன உடையில் குத்தும் ஒரு ஊசி!
[Friday 2017-09-22 17:00]

அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள ஒரு மையத்தில் அழகிய வேலைப்பாடுடன் கூடிய உடையில் குத்தும் ஒரு ஊசி ஏலத்துக்கு வந்தது. 20-ம் நூற்றாண்டில் தயாரிக்கப்பட்ட அந்த ஊசி 500 ரூபாய் ஏலத் தொகையாக நியமிக்கப்பட்டது.ஏலத்தின் போது அதன் விலை படிப்படியாக உயர்ந்தது. இறுதியில் அது ரூ.17 லட்சத்துக்கு ஏலம் போனது. அதற்கு காரணம் அந்த ஊசியில் மரகதம், சிவப்புக்கல் மற்றும் வைரக்கல் பதிக்கப்பட்டிருந்தது.



போர்ட்டோ ரிகோ தீவை தாக்கிய மரியா புயல்:- 32 பேர் பலியானதாக தகவல்
[Friday 2017-09-22 17:00]

அமெரிக்கா அருகே அட்லாண்டிக் கடலில் ‘மரியா’ புயல் உருவானது. இப்புயல் டொமினிகா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த பல தீவுகளை துவம்சம் செய்தது. இதனால் 32 பேர் மரணமடைந்துள்ளனர்.இந்நிலையில் மரியா புயலின் தாக்கத்தினால் போர்ட்டோ ரிகோ தீவு கடுமையான பாதிப்புக்குள்ளானது. பலத்த காற்றுடன் பெய்த மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் 15 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.



ரோஹிங்யா முஸ்லீம்கள் மீதான வன்முறையை நிறுத்தாவிட்டால் உறவு துண்டிக்கப்படும்: - அமெரிக்கா
[Friday 2017-09-22 17:00]

ரோஹிங்யா முஸ்லீம்கள் மீதான வன்முறையை நிறுத்தாவிட்டால் மியான்மர் உடனான உறவு துண்டிக்கப்படும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. ஐ.நா.வில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் அமெரிக்க தூதர் நிக்கி ஹேலி இதனை தெரிவித்துள்ளார். மியான்மர் தலைவர் ஆங் சான் சூயிடம் அமெரிக்க தனது அதிருப்தியை தெரிவித்துள்ளதாக கூறிய அவர் மியான்மர் ராணுவ தளபதியிடமும் இது குறித்து பேசியுள்ளதாக கூறியுள்ளார்.



டொனால்டு டிரம்ப் மனநலம் குன்றியவர்: - கிம் ஜாங் உன் விமர்சனம்
[Friday 2017-09-22 17:00]

அமெரிக்க அதிபர் பேசுவது நாய் குரைப்பது போன்றது என்று விமர்சித்த வடகொரியா, தற்போது டொனால்டு டிரம்பை மனநலம் குன்றியவர் என்று கடுமையாக விமர்சித்துள்ளது. அணு ஆயுத சோதனையை தொடர்வதால் வடகொரியா மீது அமெரிக்கா புதிய பொருளாதார தடையை விதித்துள்ளது. திருந்தவில்லை என்றால் வடகொரியா முற்றிலுமாக அழிக்கப்படும் எனவும் அமெரிக்கா மிரட்டியுள்ளது.



என் மகனின் உயிரை பறிப்பேன்: - பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி
[Friday 2017-09-22 17:00]

என் மகன் போதை மருந்து கடத்தலில் ஈடுபட்டதாக தெரியவந்தால் அவனது உயிரை பறிப்பேன் என அறிவித்துள்ளார் பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரோட்ரிகோ டுடேர்தே.பிலிப்பைன்ஸில் போதை மருந்து கடத்துபவர்களுக்கு மரணதண்டனை வழங்கப்படுகிறது, ரோட்ரிகோவின் பதவிக்காலத்தில் இதுவரையிலும் 3800க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.



ஈரானில் சிறுமியை கற்பழித்தவருக்கு பகிரங்க தூக்குத்தண்டனை!
[Thursday 2017-09-21 20:00]

ஈரானில் உள்ள அர்டேபிள் பிராந்தியத்தில் 7 வயது சிறுமியை இஸ்மாயில் ஜபர்சேத் (வயது 42) என்பவன் கற்பழித்து கொலை செய்துள்ளார். இது சம்மந்தமான வழக்கு கோர்ட்டில் நடந்து வந்துள்ளது. பொதுமக்கள் முன்னிலையில் துறித்த நபரை தூக்கில் போடும்படி ஈரான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவரை பர்சாபாத் என்ற இடத்தில் உள்ள சதுக்கத்தில் பொதுமக்கள் முன்னிலையில் தூக்கில் போட ஏற்பாடு செய்யப்பட்டது.



நீளமான கம்பி உடலில் பாய்ந்த பிறகும் அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்த இரும்பு மனிதர்!
[Thursday 2017-09-21 18:00]

சீனாவின் செங்டு நகரைச் சேர்ந்த 37 வயது கட்டிட தொழிலாளி, கடந்த 18-ம் தேதி வேலைப்பார்த்துக் கொண்டிருக்கும் போது திடீரென இடி மின்னல் ஏற்பட்டது. இதனால் நிலைகுலைந்த அவர், கால் தவறி அருகில் இருந்த இரும்பு கம்பி மீது விழுந்தார். இதில் அவரது உடலில் தோள்பட்டை வழியாக 2 மீட்டர் அளவிற்கு கம்பி குத்தி வெளியே வந்துள்ளது.


Easankulasekaram-Remax-300716
SELVI-HOMES-09-02-17
Elankeeran-debt-solution-25-06-2016
Mahesan-Remax-169515-Seithy
Tharsi-home-15-10-2016
<P>
 <b> 13-08-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற இசை மாலைப் பொழுது - 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
</p>
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 29ம் 30ம்தி கதிகளில் நடைபெற்ற World Tamil Badminton Federation 5th annual tournament நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 7ம் 8ம் 9ம்தி கதிகளில் நடைபெற்ற குதூகலம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா