Untitled Document
August 18, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
பதவி விலக ரெலோ காலக்கெடு - இன்று முடிவை அறிவிக்கிறார் டெனீஸ்வரன்!
[Sunday 2017-08-13 08:00]

வட மாகாண முதலமைச்சரின் அமைச்சரவை மாற்றத்திற்கு, இடமளிக்கும் வகையில்,  போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரனை பதவி விலகுமாறு ரெலோ தலைமைக்குழு கோரியுள்ளதாக அந்த கட்சியின் செயலாளர் சிறிகாந்தா தெரிவித்துள்ளார். வவுனியாவில் நேற்று இடம்பெற்ற ரெலோவின் தலைமைக்குழு கூட்டத்தின் பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து வெளியிட்ட போது அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

வட மாகாண முதலமைச்சரின் அமைச்சரவை மாற்றத்திற்கு, இடமளிக்கும் வகையில், போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரனை பதவி விலகுமாறு ரெலோ தலைமைக்குழு கோரியுள்ளதாக அந்த கட்சியின் செயலாளர் சிறிகாந்தா தெரிவித்துள்ளார். வவுனியாவில் நேற்று இடம்பெற்ற ரெலோவின் தலைமைக்குழு கூட்டத்தின் பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து வெளியிட்ட போது அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

  

வடமாகாண சபையில் எங்களுடைய கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் டெனீஸ்வரன் தொடர்பில் நேற்றைய கூட்டத்தில் ஆராயப்பட்டது. வட மாகாண சபை முதல்வர் விக்னேஸ்வரனுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிராக எங்களுடைய 6 உறுப்பினர்களில், டெனீஸ்வரன் மட்டும் கையெழுத்திட்டிருந்தார். அவருடைய நடவடிக்கை எங்களுடைய கட்சியின் அனுமதி இல்லாமலும் கட்சியின் ஆலோசனை இல்லாமலும் தன்னிச்சையாக எடுக்கப்பட்டிருந்த காரணத்தினால் நாங்கள் அவரிடமிருந்த இது தொடர்பில் விளக்கம் கோரி கடிதமொன்றினை அனுப்பியிருந்தோம்.

அக் கடிதத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் கையொப்பமிட்டமைக்கு ஏன் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கக்கூடாது என்பதற்கு காரணமேதும் உண்டா என கோரியிருந்தோம். அதற்கான பதிலை கடிதம் கிடைத்த இரண்டு வாரங்களுக்குள் எழுத்து மூலமாக சமர்ப்பிக்குமாறு கட்சியின் சார்பில் என்னால் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. எனினும் டெனீஸ்வரனிடமிருந்து எழுத்து மூலமான எவ்வித கடிதமும் கிடைக்கவில்லை. இருந்தாலும் தலைமைக்குழு கூட்டத்தில் அவர் சமுகமளித்து தனது நடவடிக்கை தொடர்பில் விளக்கமளித்துள்ளார். நாமும் அவரிடம் சில கேள்விகளை கேட்டு தெளிவுபடுத்தல்களை செய்துள்ளோம்.

இந்த நிலையில் ஏற்கனவே தமிழ் தேசியக் கூட்டமைப்பினுடைய அங்கத்துவக் கட்சிகள் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் மற்றும் வட மாகாண முதலமைச்சருடனும் கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் நடத்திய சந்திப்பின் போது எட்டப்பட்ட முடிவின் பிரகாரம் வட மாகாண அமைச்சரவையை முதலமைச்சர் மீள அமைப்பதற்கு ஏதுவாக டெனீஸ்வரன் தனது அமைச்சு பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என கேட்டிருக்கின்றோம்.

கட்சி நடவடிக்கையை மீறினார் என்ற ஒழுங்கு நடவடிக்கைகளுக்கு புறம்பாக இந்த வேண்டுகோள் அவருக்கு விடுக்கப்பட்டுள்ளது. அதனை பரிசீலிப்பதாகவும் முடிவை இன்று அறிவிப்பதாகவும் டெனீஸ்வரன் தெரிவித்துள்ளார். அவருடைய முடிவை பொறுத்து தான் ஒழுங்கு நடவடிக்கையை தொடர்ந்து முன்னெடுப்பதா, அவ்வாறு முன்னெடுத்து முடிவை எட்டுவதா, அல்லது அந் நடவடிக்கையை முடிவுக்கு கொண்டு வருவதா என்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும் எனவும் சிறிகாந்தா தெரிவித்துள்ளார்.

  
   Bookmark and Share Seithy.com



மருதங்கேணியில் கடல்நீரை நன்னீராக்க எதிர்ப்புத் தெரிவிப்பது ஏன்? - சிவாஜிலிங்கம் கேள்வி
[Friday 2017-08-18 08:00]

நெடுந்தீவில் கடல் நீரை நன்னீர் ஆக்கி நெடுந்தீவில் குடிநீர் வழங்கப்படுகின்றது. ஆனால் மருதங்கேணியில் கடல்நீரை நன்னீராக்க எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் என்று என வடமாகாண ஆளும் கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் விசனம் தெரிவித்தார்.



கடற்படைத் தளபதியாக றியர் அட்மிரல் சின்னையா!
[Friday 2017-08-18 08:00]

கடற்படையின் கிழக்கு பிராந்திய கட்டளைத் தளபதியாக ரியர் அட்மிரல் ட்ரெவிஸ் ஜெரமி லியான்ந்துரு சின்னையாவை அடுத்த கடற்படைத் தளபதியாக நியமிக்க ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் தீர்மானித்துள்ளதாக அரசாங்க உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார்.



ஐதேக செயற்குழுவில் விஜயதாஸவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை!
[Friday 2017-08-18 08:00]

நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நேற்றைய ஐ.தே. கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. ஐ.தே. கட்சியின் செயற்குழு மற்றும் ஆளும் கட்சி ஐ.தே. க. எம்பிக்கள் பங்கேற்ற கூட்டம் நேற்றைய தினம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்றது. இக்கூட்டத்திலேயே மேற்படி யோசனை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.



2 கிலோ தங்கத்துடன் சிக்கினார் அரச புலனாய்வு அதிகாரி!
[Friday 2017-08-18 08:00]

91 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து கடத்துவதற்கு உதவிய புலனாய்பு அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். சிங்கப்பூரில் இருந்து பயணி ஒருவரால் கொண்டு வரப்பட்ட குறித்த தங்க நகைகளை, கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து கடத்த முயற்சித்த குறித்த சந்தேகநபரை சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர். குறித்த நபர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் பணி புரியும் அரச புலனாய்வு பிரிவு அதிகாரி ஒருவராவார். சந்தேகநபரிடமிருந்து, ரூபா 9,146,385 பெறுமதியான சுமார் 2 கிலோ தங்க நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.



திங்களன்று விசேட அறிவிப்பை வெளியிடுவார் விஜயதாஸ ராஜபக்ஸ!
[Friday 2017-08-18 08:00]

நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச எதிர்வரும் திங்கட்கிழமை விசேட அறிக்கை ஒன்றை வெளியிடுவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. அம்பாந்தோட்டை துறைமுக குத்தகை தொடர்பில் அமைச்சரவை தீர்மானத்துக்கு எதிராக கருத்து வெளியிட்டார் என்று நேற்று ஐக்கிய தேசியக் கட்சியின் மத்தியக் குழுகூட்டத்தில் அவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவரப்பட்டது.



கைவிடப்பட்ட நிலையில் ஆவா குழுவின் மோட்டார் சைக்கிள்!
[Friday 2017-08-18 08:00]

ஆவா குழுவின் குற்றச் செயல்களுக்கு பயன்படுத்தியதாக கூறப்படும் மோட்டார் சைக்கிள் ஒன்று கொக்குவில் பிரதேசத்தில் கைவிடப்பட்ட தோட்டம் ஒன்றில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது. விசேட அதிரடிப்படை அணி ஒன்று இன்று இந்த மோட்டார் சைக்கிளை கைப்பற்றியுள்ளது. உரிமையாளர் இல்லாத மோட்டார் சைக்கிள் ஒன்று கொக்குவில் பிரதேசத்தில் தோட்டம் ஒன்றில் காணப்படுவதாக அதிரடிப்படையின் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலை அடுத்தே இந்த மோட்டார் சைக்கிள் கைப்பற்றப்பட்டுள்ளது.



ஜனவரியில் உள்ளூராட்சித் தேர்தல்!
[Friday 2017-08-18 08:00]

உள்ளூராட்சி தேர்தல் எதிர்வரும் ஜனவரி மாதம் நடத்தப்படும் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். ' உள்ளூராட்சி மதேர்தல் சட்டத்தை எதிர்வரும் செப்டம்பர் மாதம் நாடாளுமன்றில் நிறைவேற்றிக் கொள்ள அரசாங்கம் எதிர்பார்க்கின்றது. உள்ளூராட்சி தேர்தலை நடத்துவது குறித்த வர்த்தமானி அறிவித்தல் ஒக்டோபர் அல்லது நவம்பர் மாதம் வெளியிடப்படும்.



எவராலும் என் வாயை மூட முடியாது! - ரஞ்சன் ராமநாயக்க
[Friday 2017-08-18 08:00]

எனது வாயை எவராலும் மூட முடியாது என பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். கள்வர்கள், ஊழல்மோசடிகளில் ஈடுபடுவோர், கொலைகாரர்கள் மற்றும் மதுபான விற்பனையாளர்களை அம்பலப்படுத்துவதற்கு நான் எடுக்கும் முயற்சியை எவராலும் தடுக்க முடியாது. 1948ஆம் ஆண்டின் பின்னர் இந்த நாட்டில் உருவான மிகவும் ஜனநாயகமான அரசாங்கம் இதுவாகும். இந்த 2020ஆம் ஆண்டை விடவும் நீண்ட காலத்திற்கு ஆட்சியில் இருக்கும்.



வயல் பார்க்கச் சென்ற முதியவரை மோதிய வாகனம்!
[Friday 2017-08-18 08:00]

தென்மராட்சி, தனங்களப்பு- கேரதீவு வீதியில் நேற்றுக் காலை இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் காயமடைந்தார். கைதடி – நாவற்குழியைச் சேர்ந்த பண்டாரி யோகராசா (வயது-71) என்பவரே காயமடைந்த நிலையில், சாவகச்சேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.



காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை ஐ.நா பிரதிநிதிகள் சந்திப்பு! Top News
[Thursday 2017-08-17 18:00]

ஜெனிவாலிருந்து வருகை தந்துள்ள ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் பிரதிநிதியான தோமஸ் மற்றும் இலங்கைக்கான யுஎன்எச்சிஆர் பிரதிநிதி ஆகியோர் காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினர்களை கிளிநொச்சியில் இன்று சந்தித்து கலந்துரையாடினர்.



அவைத் தலைவரின் சாதுரியத்தால் பதவியைத் தக்கவைத்துள்ள எதிர்க்கட்சித் தலைவர்! - முதலமைச்சர் சாடல்
[Thursday 2017-08-17 18:00]

அவைத்தலைவரின் சாதுரியத்தால் தான் எதிர்க்கட்சி தலைவர் தனது பதவியை தக்க வைத்துள்ளார் என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடமாகாண சபையின் மூன்றரை வருட செயற்திட்டங்கள் தொடர்பில், மீளாய்வு செய்வதற்கான விசேட அமர்வு இன்று கைதடியில் உள்ள பேரவைக் கட்டடத்தில் நடைபெற்றது. அதன் போதே முதலமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.



தியாகி திலீபனின் நினைவிடத்தை புனரமைத்து பராமரிக்க வட மாகாணசபை முடிவு!
[Thursday 2017-08-17 18:00]

நல்லூரில் உள்ள தியாகி திலீபனின் நினைவிடத்தை புனரமைத்து பராமரிக்க வடமாகாணசபை முடிவு செய்துள்ளதாக அவைத்தலைவர் சி.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்ற வடமாகாண சபை விசேட அமர்வு போதே அவர் இதனைத் தெரிவித்தார். தியாகி திலீபனின் நினைவிடத்தை சூழவுள்ள பகுதிகளை அறிக்கையிட்டு யாழ்.மாநகர சபையிடம் இருந்து குறித்த பகுதியை மாகாண சபை பொறுப்பேற்றுக்கொள்ளும் முகமாக முதல் கட்டமாக ஆணையாளருக்கு கடிதம் மூலம் கோரப்பட்ட வேண்டும்.



குற்றச்சாட்டுகளுக்கு முதலமைச்சர் சரியான பதிலை அளிக்கவில்லை! - எதிர்க்கட்சித் தலைவர்
[Thursday 2017-08-17 18:00]

முதலமைச்சர் நீண்ட உரையை ஆற்றிய போதும் நான் வினைத்திறன் அற்றவை என சுட்டிய விடயங்கள் தொடர்பாக நேரடியாகப் பதிலளிக்கவில்லை என வட மாகாண எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா தெரிவித்துள்ளார். வட மாகாண சபையின் 102 ஆம் அமர்வு இன்று காலை சபா மண்டபத்தில் நடந்த போது, 101ஆவது அமர்வில் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா, முன்வைத்த குற்றச்சாட்டுக்களுக்கு இன்றைய அமர்வில் முதலமைச்சர் பதிலளித்தார்.



மத்தல விமான நிலைய உடன்பாடு - இந்தியாவுடன் நாளை பேச்சு!
[Thursday 2017-08-17 18:00]

மத்தல விமான நிலையத்தை கூட்டு முயற்சியாக அபிவிருத்தி செய்யும் ஒப்பந்தம் தொடர்பில் ஆராய்வதற்கு இந்திய உயர் மட்ட குழு இலங்கை வந்துள்ளது. இந்தக் குழுவுடன், இலங்கை அதிகாரிகள் குழு நாளை கலந்துரையாடல்களை நடத்தவுள்ளது. நாளை காலை 10 மணிக்கு இடம்பெறவுள்ள இந்த கலந்துரையாடலில் இந்திய அரசின் உயர் மட்ட அதிகாரிகள் குழுவினர் கலந்து கொள்ள உள்ளதாக சிவில் விமான சேவைகள் மேலதிக செயலாளர் ரத்நாயக்க தெரிவித்தார்.



விரைவில் வன்னிப் பல்கலைக்கழகம்! Top News
[Thursday 2017-08-17 18:00]

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம், வன்னி பல்கலைக்கழகம் என்று பெயரிடப்பட்டு தனியான பல்கலைக்கழகமாக உருவாக்கப்படும் என உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். கடந்த 25 ஆண்டுகளாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கீழ் பிரயோக கணிதம் மற்றும் முகாமைத்துவ பீடங்கள் நடத்திச் செல்லப்பட்ட வவுனியா வளாகத்தின் 25ஆவது ஆண்டு நிறைவு விழா இன்றைய தினம் பம்பைமடுவில் உள்ள வளாகத்தில் இடம்பெற்றது.



கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கு மறு அறிவித்தல் வரை பூட்டு!
[Thursday 2017-08-17 18:00]

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகம் தவிர்ந்த அனைத்துப் பீடங்களும் இன்று முதல் மறுஅறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாக கிழக்குப் பல்கலைக் கழக உபவேந்தர் கலாநிதி த.ஜெயசிங்கம் தெரிவித்தார். பல்கலைக்கழக விடுதியிலுள்ள சகல மாணவர்களும், நாளை பகல் 12 மணிக்கு முன்பு தங்களுடைய உடமைகளுடன் வீடுதிகளிலிருந்து வெளியேற வேண்டும் என்றும் அறிவித்துள்ளார்.



இணைய சேவை வரி குறைப்பு!
[Thursday 2017-08-17 18:00]

இணைய சேவைக்காக இதுவரை விதிக்கப்பட்டு வந்த 10 வீத தொலைத்தொடர்பு வரி வரும் செப்டம்பர் மாதம் 01ம் திகதி முதல் குறைக்கப்படும் நிதியமைச்சர் மங்கள சமரவீர அறிவித்துள்ளார். இந்த வரி நீக்கமானது முற்கொடுப்பனவு இணைய சேவைக்கே அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் நூற்றுக்கு 25 வீதமான பிரதிபலனை மக்கள் பெற்றுக் கொள்ள முடியும் என்று அமைச்சர் கூறியுள்ளார்.



மகிந்தவைக் காப்பாற்ற இந்தியப் புலனாய்வுப் பிரிவு முன்வைத்த யோசனை!
[Thursday 2017-08-17 18:00]

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், இலங்கைக்கு எதிராக பிரேரணை கொண்டு வரப்படுவதற்கு முன்னர், இந்திய புலனாய்வுப் பிரிவு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் யோசனை ஒன்றை முன்வைத்ததாகவும் அதனை அவர் ஏற்றுக்கொண்டிருந்தால், மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை தவிர்த்திருக்கலாம் என்றும் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.



நோர்வேயின் ஆராய்ச்சிக் கப்பல் இலங்கை வருகிறது!
[Thursday 2017-08-17 18:00]

2018ஆம் ஆண்டு, இலங்கைக் கடற்பரப்புக்குள் வரவுள்ள நோர்வேயின் புதிய ஆராய்ச்சிக் கப்பலான பிரிட்டோவ் நன்சன், இலங்கைக் கடற்பரப்பில் கடல் வளங்கள் தொடர்பான மதிப்பீடுகளை மேற்கொள்ளவுள்ளது என, இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான நோர்வேத் தூதுவர் தூர்பியோன் கவுஸத்சேத்த, தெரிவித்தார்.



கல்வியங்காட்டில் திடீரென துப்புரவு செய்யப்படும் இந்திய படையினரின் நினைவுத் தூபி!
[Thursday 2017-08-17 18:00]

இந்த வார இறு­தி­யில் இலங்கைக்கு வரவுள்ள இந்­திய இரா­ணுவ உயர் அதி­கா­ரி­கள் குழு ஒன்று, யாழ்ப்­பா­ணத்­தில் கொல்­லப்­பட்ட தமது சகாக்­க­ளுக்கு அஞ்­சலி செலுத்தவுள்ளது. இதற்­காக, 17 ஆண்­டு­க­ளா­கக் கைவி­டப்­பட்­டுக் கிடந்த நினை­வி­டம் தேடிப் பிடித்­துத் துப்­பு­ரவு செய்­யப்­ப­டு­கின்­றது.


SELVI-HOMES-09-02-17
Mahesan-Remax-169515-Seithy
Easankulasekaram-Remax-300716
Tharsi-home-15-10-2016
Elankeeran-debt-solution-25-06-2016
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 7ம் 8ம் 9ம்தி கதிகளில் நடைபெற்ற குதூகலம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b> 30-06-2017 அன்று கனடா-ரொரன்டோவில் நடைபெற்ற மின்னல் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b> 24-06-2017 அன்று கனடா-ரொரன்டோவில் பரதமைல் நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா