Untitled Document
April 27, 2024 [GMT]
நல்லூர் துப்பாக்கிச் சூடு - கண்டனக் கணைகள்!
[Monday 2017-07-24 08:00]

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி எம். இளஞ்செழியன்னை இலக்கு வைத்து, நல்லூர் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் உள்ளிட்ட தலைவர்கள், அமைப்புகளால் கண்டன அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன.

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி எம். இளஞ்செழியன்னை இலக்கு வைத்து, நல்லூர் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் உள்ளிட்ட தலைவர்கள், அமைப்புகளால் கண்டன அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன.

  

ஜனாதிபதி செயலகம்-

இந்தத் துப்பாக்கிப் பிரயோக, சம்பவத்தையடுத்து நீதிபதியின் பாதுகாப்பு குறித்து கவனம்செலுத்தியுள்ள ஜனாதிபதி, அனைத்து நீதிபதிகளினதும் பாதுகாப்பு தொடர்பில் விசேட நிகழ்ச்சித்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துமாறு பொலிஸ் மா அதிபருக்கு பணிப்புரை வழங்கியுள்ளார். இந்தத் துப்பாக்கிப் பிரயோக சம்பவம் தொடர்பில், விசேட பொலிஸ் குழுக்களை அமைத்து விரிவான விசாரணைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறும் பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட பாதுகாப்புத் தரப்பினருக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.

உயிரிழந்த பொலிஸ் அதிகாரியின் மறைவையிட்டு அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ள ஜனாதிபதி, தமது கடமையை சரியாக செய்கின்ற இத்தகைய அதிகாரிகள் முழு அரச சேவைக்கும் பொலிஸ் திணைக்களத்துக்கும் முன்னுதாரணமாகும் என்றும் தெரிவித்துள்ளார். சம்பவத்தில் காயமடைந்த பொலிஸ் அதிகாரி விரைவாக குணமடையவேண்டும் எனத் தான் பிரார்த்திப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன்

கடமையில் ஈடுபட்டிருந்த போது உயிர் நீத்த பொலிஸ் அலுவலரின் குடும்பத்தாருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். அதேநேரத்தில் வன்செயல்களில் ஈடுபட்ட இளைஞர்களின் நடவடிக்கைகளை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். அருமந்த ஒருஉயிரைப் பறித்தமையால் அன்னாரின் குடும்பம் பலவித இன்னல்களுக்கும் இடர்களுக்கும் முகம் கொடுக்க வேண்டி வந்துள்ளது.

வன்முறையில் ஈடுபட்டவர்களின் உள்ளெண்ணம் பற்றித் தாம் ஆராய்ந்து வருவதாக வடமாகாண உப பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதல் சம்பந்தமாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு அவருக்குப் பணித்துள்ளேன்.

வட மாகாணசபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம்

நல்லூர் கந்தசுவாமி ஆலய தென்மேற்கு வீதியில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், நீதிபதி இளஞ்செழியனை காப்பாற்ற முயன்ற அவரது மெய்ப்பாதுகாவலர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் அநியாயமாக உயிரிழந்துள்ளார். மற்றையவர் காயமடைந்துள்ளார். இந்தச் சம்பவத்துக்கு வடக்கு மாகாண சபை சார்பில் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

நீண்டகாலமாக நீதிபதி இளஞ்செழியன் அவர்களது மெய்ப்பாதுகாவலராக இருந்து அவரை காப்பாற்றும் பணியிலேயே தமது உயிரை ஆகுதியாக்கிய அந்த பொலிஸ் அதிகாரிக்கும் எமது அஞ்சலியைத் தெரிவிப்பதுடன் அன்னாரது குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

நீதிபதி இளஞ்செழியன் மீது மேற்கொள்ளப்பட்ட இந்தக் கொலை முயற்சியானது எமது நாட்டினதும் யாழ்ப்பாண மாவட்டத்தினதும் நீதித்துறை மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலாகவே பார்க்கப்படவேண்டும். எமது பிரதேசத்திலே சட்டம் ஒழுங்கை நிலை நாட்டுவதில் மிக அர்ப்பணிப்புடன் சேவையாற்றும் நீதிபதி ஒருவரை கொலை செய்து ஏனைய நீதித்துறை சார்ந்தவர்களையும் அச்சுறுத்தி அராஜகத்தை இந்த மண்ணிலே நிலை நிறுத்துவதே இந்தக் கொலை முயற்சியின் நோக்கமாக இருக்கலாம்.

அதிலும் நல்லூர் கந்தசுவாமி கோயில் வருடாந்த உற்சவம் ஆரம்பிக்க ஒருவாரமே உள்ள நேரத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றமை இங்கு நிலவும் அமைதியான சூழலை குழப்பும் நோக்கம் கொண்டதாகவே பார்க்கப்பட வேண்டும். இந்தக் கொலை முயற்சி மற்றும் கொலைச் சம்பவத்துடன் சம்பந்தப்பட்டவர்களை கைதுசெய்து சட்டத்தின் முன் நிறுத்துவது மட்டுமன்றி இந்தச் செயற்பாட்டின் பின்னணியில் உள்ள சூத்திரதாரிகள் யாவரும் இனங்காணப்பட்டு சட்டத்தின் முன்நிறுத்தப்படவேண்டும் என்றும் நாம் கோருகின்றோம் .

கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன்

யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனை குறிவைத்து நடாத்தப்பட்ட தாக்குதலானது நல்லாட்சிக்கும் இலங்கையின் சட்டத்துறைக்கும் விடுக்கப்பட்ட ஒரு சவாலாகும். இதனை நான் மிகவும் வண்மையாகக் கண்டிக்கின்றேன் உண்மையான சட்டத்தை பாதுகாக்கின்ற ஒருவரை துப்பாக்கியால் சுட்டு கொலைச்செய்ய முடியாது. அது முட்டாள்தனமான ஒரு செயற்பாடாகும். நல்லாட்சி அரசாங்கத்தில் சட்டத்துறைக்கு முழுமையான சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது இதனை ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு சிலருடைய திட்டமிட்ட ஒரு செயலாகவே இதனை கருத வேண்டியுள்ளது.

  
   Bookmark and Share Seithy.com



முகமாலையில் மனித எலும்பு எச்சங்கள் மீட்பு!
[Saturday 2024-04-27 06:00]

கிளிநொச்சி - முகமாலைப் பகுதியில் கண்ணிவெடி அகற்றலின் போது மனித எச்சங்களுடன் கூடிய ஆடை ஒன்று நேற்று இனங்காணப்பட்டுள்ளது. இதையடுத்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டனர்.



வடக்கு கிழக்கில் அதிகரிக்கும் பதற்றம் - பிரித்தானிய அரசாங்கம் கவலை!
[Saturday 2024-04-27 06:00]

இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளில் பதற்றம் அதிகரித்து வருவதாக பிரித்தானியா அரசாங்கம் தெரிவித்துள்ளது.



இந்தியத் தூதுவரைச் சந்தித்தார் பசில்!
[Saturday 2024-04-27 06:00]

இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜாவுக்கும், முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்சவுக்கும் இடையில் நேற்று முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இதன் போது உள்நாட்டு அரசியல் விவகாரங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.



ரணில் களமிறங்கினால் முழுமையான ஆதரவு! -மஹிந்தவுக்கு முன்பாக கூறிய மொட்டு எம்.பிக்கள்.
[Saturday 2024-04-27 06:00]

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்க களமிறங்கினால் அவருக்கு முழுமையான ஆதரவு வழங்குவோம் என்று அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.



ஈரானிய ஜனாதிபதிக்கான இராப்போசனத்தை புறக்கணித்தது ஏன்?- சஜித் விளக்கம்.
[Saturday 2024-04-27 06:00]

ஈரான் ஜனாதிபதியை கௌரவிக்கும் இராப்போசன விருந்தில் கலந்து கொள்ளாமைக்கான காரணத்தை எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் ஊடக அறிக்கை ஒன்றை வௌியிட்டு தௌிவு படுத்தியுள்ளது.



ஒட்டாவா படுகொலைகள் - விசாரணைக்கு திகதி குறிப்பு!
[Saturday 2024-04-27 06:00]

கனடா - ஒட்டாவா Barrhaven பகுதியில் ஆறு இலங்கையர்கள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள சந்தேகநபரிடம் முதற்கட்ட விசாரணைகளுக்கான திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.



உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னணியில் அஜித் தோவலா?
[Saturday 2024-04-27 06:00]

உயிர்த்த ஞாயிறு தின குண்டுத்தாக்குதல்களின் பின்னணியில் இந்திய பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் செயற்பட்டுள்ளார் என்ற சர்ச்சைக்குரிய கருத்தின் உண்மை தன்மை என்ன,இவ்விடயம் தொடர்பில் அரசாங்கம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதா,? என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரசன்ச கேள்வி எழுப்பியுள்ளார்.



எல்லாவற்றையும் எனது தலையில் கொட்ட முடியாது!
[Saturday 2024-04-27 06:00]

நான் விடுதலைப்போராட்டத்தில் இருந்தவன் என்பதற்காக எல்லாவற்றையும் எனது தலையில் கொட்ட முடியாது. எத்தனை விசாரணைகள் வந்தாலும் நான் எதிர்கொள்ளத்தயாராகவே இருக்கின்றேன் என இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.



மூளை யார் என்று கூறாத மைத்திரி!
[Saturday 2024-04-27 06:00]

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் மூளையாக செயல்பட்டவர் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு வழங்கிய இரகசிய வாக்குமூலம் தொடர்பில் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் வெள்ளிக்கிழமை முதன்முறையாக அம்பலப்படுத்தியுள்ளார்.



ரயிலில் ஏற முயன்ற இரண்டு பெண்கள் பெட்டிகளுக்கு நடுவே சிக்கி படுகாயம்!
[Saturday 2024-04-27 06:00]

கொழும்பில் இன்று பயணித்துக் கொண்டிருந்த ரயிலில் ஏற முயன்ற இரண்டு பெண்கள் ரயிலின் இரண்டு பெட்டிகள் நடுவில் சிக்கி படுகாயமடைந்துள்ளனர். கண்டி நோக்கி பயணிப்பதற்காக ரயில் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு வந்து கொண்டிருந்தவேளை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.



சஹ்ரானை வளர்த்து விட்டவர் சுரேஸ் சாலே! - சரத் பொன்சேகா குற்றச்சாட்டு.
[Friday 2024-04-26 16:00]

உயிர்த்த ஞாயிறு குண்டுதாக்குதலில் ஈடுபட்ட சஹ்ரான் ஹாசிமை வளர்த்தவர் தேசிய புலனாய்வு பிரிவின் தலைவர் சுரேஸ் சாலே என ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராணுவ தளபதியுமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.



தந்தை செல்வாவின் 47ஆவது நினைவேந்தல் நிகழ்வு! Top News
[Friday 2024-04-26 16:00]

தந்தை செல்வாவின் 47ஆவது நினைவேந்தல் நிகழ்வு இன்று யாழ்ப்பாணம் தந்தை செல்வா நினைவிட வளாகத்தில் ஓய்வுநிலை ஆயர் கலாநிதி சு.ஜெபநேசன் தலைமையில் இடம்பெற்றது. தந்தை செல்வா நினைவு அறக்காவற் குழுவின் ஏற்பாட்டில் நடந்த இந்த நிகழ்வில், தந்தை செல்வாவின் சிலைக்கு மலர் மாலை அணிவித்ததுடன் அன்னாரின் சமாதிக்கு மலரஞ்சலி செலுத்தினர்.



மத்தல விமான நிலைய நிர்வாகம் இந்திய, ரஷ்ய நிறுவனங்களிடம்!
[Friday 2024-04-26 16:00]

மத்தல விமான நிலையத்தின் நிர்வாகத்தை இந்திய ரஸ்ய நிறுவனங்களிடம் ஒப்படைப்பதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.



வவுனியாவில் புளொட் பிரமுகர் வீட்டில் திருடப்பட்டதாக கூறப்பட்ட நகைகள் வீட்டுக் கூரைக்குள் இருந்து மீட்பு!
[Friday 2024-04-26 16:00]

வவுனியா - நகரசபையின் முன்னாள் உபநகர பிதாபின் வீட்டில் திருடப்பட்ட ஒரு கோடி ரூபாய் பெறுமதியான 60 பவுண் நகைகள் அவரது வீட்டு கூரையில் இருந்து இன்று மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.



வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை - ஒளிந்திருந்த சந்தேக நபர் கைது!
[Friday 2024-04-26 16:00]

யாழ்ப்பாணம்- வட்டுக்கோட்டை பகுதியில் இளைஞனை கடத்தி சித்திரவதைக்கு உள்ளாக்கி படுகொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.



ஆஸ்துமா நோயால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இலங்கை முன்னிலையில்!
[Friday 2024-04-26 16:00]

உலகில் ஆஸ்துமா நோயால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இலங்கை முன்னிலையில் உள்ளதாக இலங்கை சுவாச நோய் நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் நெரஞ்சன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.



பிரதான சான்றுப் பொருள் இல்லை - நீதிபதி இளஞ்செழியன் மீதான துப்பாக்கிச் சூட்டு வழக்கு ஒத்திவைப்பு!
[Friday 2024-04-26 16:00]

நீதிபதி மா. இளஞ்செழியன் மீதான துப்பாக்கி சூடு வழக்கின் பிரதான சான்று பொருளான கைத்துப்பாக்கி அரச பகுப்பாய்வு பிரிவிடம் இருந்து மீள பெறப்படாததால் , வழக்கு மே மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.



அளவெட்டியில் எரிந்த நிலையில் முதியவரின் சடலம்!
[Friday 2024-04-26 16:00]

யாழ்ப்பாணம் - அளவெட்டி தெற்கு பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து முழுமையாக எரிந்த நிலையில் முதியவர் ஒருவருடைய சடலம் நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளது. அதே பகுதியைச் சேர்ந்த ஐயம்பிள்ளை தேவராசா (வயது 73) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.



சகோதரியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சகோதரன் கைது!
[Friday 2024-04-26 16:00]

தனது சகோதரியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி வந்ததுடன், அவரை வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்த குற்றச்சாட்டில் சகோதரன் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.



சுவீடனுக்குப் பறந்தார் அனுரகுமார!
[Friday 2024-04-26 16:00]

தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க சுவீடன் நாட்டிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.


NKS-Ketha-04-11-2021
Kugeenthiran-200-2022-seithy
Airlinktravel-2020-01-01
Rajeef sebarasha 2023/04/19
Ambikajewellers-01-08-2021-seithy
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
Mahesan-Remax-169515-Seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Asayan-Salon-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா