Untitled Document
July 24, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
தி.மு.க-வுக்கும் அ.தி.மு.க-வுக்கும் வசனம் பேசுவதே வேலையாக இருக்கிறது: - அன்புமணி ராமதாஸ்
[Monday 2017-07-17 08:00]

பா.ம.க. 29-வது ஆண்டு விழா வேலுரில் நடந்தது. அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில், அந்தக் கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசினார். அப்போது, ''தமிழத்தில் தி.மு.க., அ.தி.மு.க-வை எதிர்க்கும் ஒரே கட்சி பா.ம.க. மட்டும்தான். இந்த இரண்டு கட்சிகளின் பிடியிலிருந்து தமிழ்நாட்டைக் காப்பாற்ற வேண்டும். பூரண மதுவிலக்கு, ஏரி குளங்கள் தூர் வாறுதல் எல்லாம் பா.ம.க-வின் கொள்கைகள். அதைத்தான் இன்று தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் காப்பி அடித்துக்கொண்டிருக்கின்றன.

பா.ம.க. 29-வது ஆண்டு விழா வேலுரில் நடந்தது. அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில், அந்தக் கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசினார். அப்போது, ''தமிழத்தில் தி.மு.க., அ.தி.மு.க-வை எதிர்க்கும் ஒரே கட்சி பா.ம.க. மட்டும்தான். இந்த இரண்டு கட்சிகளின் பிடியிலிருந்து தமிழ்நாட்டைக் காப்பாற்ற வேண்டும். பூரண மதுவிலக்கு, ஏரி குளங்கள் தூர் வாறுதல் எல்லாம் பா.ம.க-வின் கொள்கைகள். அதைத்தான் இன்று தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் காப்பி அடித்துக்கொண்டிருக்கின்றன.

  

குறிப்பாக, தி.மு.க. நம்மை அப்படியே பின்பற்றுகிறார்கள். அய்யா ராமதாஸ் அறிக்கை எப்போது வரும் என்று காத்துக்கொண்டிருக்கிறார்கள். அவரது அறிக்கையைக் காப்பியடித்து வெளியிட்டுக்கொண்டிருக்கிறார்கள்'' என்றார்.

மேலும், ''அந்தக் காலத்தில் எம்.ஜி.ஆருக்கும் கருணாநிதிக்கும் போட்டி என்று கிளப்பிவிட்டார்கள். இப்போது ஓ.பி.எஸ்-இ.பி.எஸ் இடையே போட்டி என்று அவர்களாகவே சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். தி.மு.க-வுக்கு அ.தி.மு.க-வும் போட்டி போட்டு தமிழ்நாட்டுக்கு என்ன நன்மை? பா.ம.க. ஆட்சிக்கு வந்தால், தமிழ்நாட்டுக்கும் ஆந்திராவுக்கும் போட்டி வரும். தமிழ்நாட்டுக்கும் சிங்கப்பூருக்கும் போட்டி வரும். அதை எங்களால் கொண்டு வர முடியும். தி.மு.க-வுக்கும் அ.தி.மு.க-வுக்கும் வசனம் பேசுவதே வேலையாக இருக்கிறது. இந்த இரண்டு கட்சிகளும் மக்களை ஏமாற்றுகிறார்கள். இந்த இரண்டு கட்சிகளையும் ஒதுக்க வேண்டும். அப்படி ஒதுக்கும் போதுதான், தமிழ்நாட்டுக்கு விடுதலை. அந்த நாள் வெகுவிரைவில் வரும்'' என்று பேசினார்.

  
   Bookmark and Share Seithy.comதமிழ்நாட்டில் 122 ஆண்டுகளுக்கு பிறகு ஜூலை மாதத்தில் வெப்பம் அதிகரிப்பு: - மக்கள் கவலை
[Monday 2017-07-24 12:00]

தமிழகத்தில் 122 ஆண்டுகளுக்கு பிறகு ஜூலை மாதத்தில் வெப்பநிலை அதிகரித்துள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேகங்கள் அற்ற தெளிவான வானம், காற்று கீழிறங்கி அழுத்தம் பெறுதல், மேற்கிலிருந்து மிதமாக வீசும் வடகாற்று ஆகியவை வெப்பநிலை அதிகரிக்க காரணம் என்று வானிலை மைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.துடைப்பத்தை காணிக்கையாகச் செலுத்தி வழிபடும் விசித்திர சிவன் கோயில்!
[Monday 2017-07-24 12:00]

உத்தரப்பிரதேசத்தில் உள்ள சிவன் கோயிலுக்கு, சவான் மாதத்தின் மூன்றாம் திங்கள்கிழமையான இன்று, அனைவரும் துடைப்பத்தை காணிக்கையாகச் செலுத்தி வழிபட்டனர்.குஜராத்த்தில் கடும் மழை: - வெள்ளத்தில் மிதக்கும் மாநிலம்
[Monday 2017-07-24 08:00]

குஜராத் மாநிலத்தில், கடந்த சில நாள்களாக கனமழை பெய்துவருகிறது. இதனால், மாநிலமே வெள்ளத்தில் தத்தளித்துவருகிறது. குறிப்பாக பனஸ்கந்தா, சபர்கந்தா போன்ற வடக்கு மாவட்டங்கள் மற்றும் வல்சாத் போன்ற தெற்கு மாவட்டத்திலும் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.கர்ப்பிணிப் பெண்ணை மூங்கில் மூலம் சுமந்து சென்ற உறவினர்கள்: - புதிய இந்தியாவிலும் மாறாத காட்சி!
[Monday 2017-07-24 08:00]

ரூபாய் நோட்டு வாபஸ், ஜி.எஸ்.டி அமல் என கடந்த மூன்று ஆண்டுகளில், பல முறை புதிய இந்தியா பிறந்துவிட்டதாக மத்திய அரசு கூறிவருகிறது. ஆனால், நாட்டின் பல்வேறு கிராமங்களில் இன்னும் மருத்துவச் சேவைக்கே படாதபாடு படவேண்டியதாக இருக்கிறது. அரசு மருத்துவமனைகளில் ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால், நாட்டின் பல்வேறு பகுதிகளில் தங்களது உறவினர்களின் சடலங்களைத் தோளில் சுமந்துசென்ற கொடுமையைப் பார்த்திருப்போம்.அரசியல் சாசனத்தை கட்டிக் காக்க கடுமையாக முயற்சித்தேன்: - பிரணாப் முகர்ஜி
[Monday 2017-07-24 08:00]

இந்தியாவின் 13வது ஜனாதிபதியான பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைகிறது.இதனைதொடர்ந்து பிரணாப் முகர்ஜிக்கு நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நேற்று பிரிவுபசார விழா நடந்தது.இதில் துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி, பிரதமர் மோடி, நாடாளுமன்ற சபாநாயகர் மற்றும் எம்.பிக்கள் கலந்து கொண்டனர்.மயக்க மருந்து கொடுத்து மனநலம் குன்றிய சிறுமியை பல முறை கற்பழித்த நபர் கைது!
[Sunday 2017-07-23 19:00]

இந்தியாவில் மனநலம் குன்றிய சிறுமி ஒருவருக்கு மயக்க மருந்து கொடுத்து பல முறை கற்பழித்து வந்த நபரை பொலிசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.தெலுங்கானா மாநில தலைநகரான ஹைதிராபாத்தில் தான் இந்த கொடூரமான செயல் நிகழ்ந்துள்ளது.நடிகர் கமல்ஹாசன் கடும் விளைவுகளை சந்திக்க கூடும்: - எச்சரிக்கும் நாளிதழ்
[Sunday 2017-07-23 19:00]

தமிழக அரசை எதிர்க்கும் நடிகர் கமல்ஹாசனுக்கு, எம்ஜிஆர் நாளிதழ் வழியாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.திரிசங்கு சொர்க்கத்தில் நடிகர் கமல் என்ற தலைப்பில் வெளியாகியுள்ள செய்தியில், அரசை எதிர்த்து ஆர்வக் கோளாறு காரணமாக கமல்ஹாசன் கருத்து தெரிவிப்பதை திமுக உள்ளிட்ட கட்சிகள் ஆதரிப்பதால், ஒட்டுமொத்த தமிழகமும் தனக்குப் பின்னால் இருப்பதாக கமல் கருதுவதாக கூறப்பட்டுள்ளது.கர்நாடகாவில் 5 பேரை வெட்டி கொன்ற நபர்: - மரண தண்டனை விதித்த நீதிமன்றம்
[Sunday 2017-07-23 18:00]

இளம் பெண் ஒருவர் உல்லாசத்துக்கு வர மறுத்ததால் கோபத்தில் 5 பேரை கொலை செய்த நபருக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்பளித்துள்ளது.இந்தியாவின் கார்நாடக மாநிலத்தில் உள்ள சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் கரும்பு வெட்டும் தொழில் நடைபெறுகிறது.தமிழ்நாட்டை சேர்ந்த கூலி தொழிலாளர்கள் பலர் இங்கு தங்கி கரும்பு வெட்டும் வேலை செய்து வருகிறார்கள்.கதிராமங்கலம் மக்களுக்கு ஆதரவாக மெரினாவில் போராட்டம்: - போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு!
[Sunday 2017-07-23 09:00]

கதிராமங்கலம் மக்களுக்கு ஆதரவாக மெரினாவில் போராட்டம் நடத்தப் போவதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவிவருவதால், மெரினா கடற்கரையில் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.அயோத்தியில் சட்டமுறைப்படியே ராமர் கோயில் கட்டப்படும்: - அமித் ஷா திட்டவட்டம்
[Sunday 2017-07-23 09:00]

உத்தரப் பிரதேச மாநிலத்தின் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுப்படுவது குறித்து பா.ஜ.க மத்தியில் ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்தே தொடர்ந்து பேச்சுகள் அடிபட்டு வரும் நிலையில், அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா, 'சட்டமுறைப்படியே ராமர் கோயில் கட்டப்படும்' என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.ரூ.10 லட்சங்களுக்கு விலைபோகும் சசிகலாவின் வீடியோ!
[Sunday 2017-07-23 09:00]

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 வருட சிறை தண்டனை பெற்ற சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.இந்நிலையில் கடந்த 13ம் திகதி சிறைத் துறை டிஐஜி ரூபா மாநில உள்துறை செயலருக்கு அனுப்பிய கடிதத்தில், சசிகலாவுக்கு சிறையில் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன என்றும் சிறைத்துறை டிஜிபி சத்தியநாராயணராவ் உள்ளிட்ட அதிகாரிகள் அவரிடம் ரூ. 2 கோடி வரை லஞ்சம் பெற்றுள்ளனர் என்றும் குற்றம் சாட்டினார்.ஜீவசமாதி அடைய அனுமதி கோரி மனு கொடுத்த முருகன்!
[Saturday 2017-07-22 16:00]

ராஜீவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளி முருகன், ஜீவசமாதி அடைய அனுமதி கோரி மனு கொடுத்துள்ளார்.1991 மே 21-ம் தேதி சென்னையில் அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தி மனிதவெடிகுண்டு மூலம் படுகொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவத்துக்கு விடுதலைப்புலிகள் அமைப்பின் மீது குற்றம்சாட்டப்பட்டது. மேலும் பேரறிவாளன், நளினி, சாந்தன், முருகன் போன்றோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் இருக்கிறது: - விளாசும் விஜயகாந்த்
[Saturday 2017-07-22 15:00]

கதிராமங்கலத்தில் மக்கள் ஓ.என்.ஜி.சி-க்கு எதிராகத் தொடர்ந்து போராடி வருகின்றனர். பல்வேறு துறைகளிலிருந்து தலைவர்கள், மக்கள் எனத் தினமும் கதிராமங்கலம் வந்து தங்களது ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர்.குட்கா விற்பனை ஊழல்: - சி.பி.ஐ விசாரணைக்கு வைகோ கோரிக்கை!
[Saturday 2017-07-22 15:00]

குட்கா விற்பனை ஊழல் தொடர்பான வருமான வரித்துறை ஆவணங்கள் மறைக்கப்பட்டுள்ளதால், சி.பி.ஐ விசாரணை தேவை என்று வைகோ கோரிக்கை வைத்துள்ளார்.ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழக காவல்துறை சட்டம் - ஒழுங்கு பொறுப்பு டி.ஜி.பி-யாகப் பணியாற்றிய டி.கே.ராஜேந்திரன், ஜூன் 30-ம் தேதி ஓய்வுபெறும் நாளில், இரண்டு ஆண்டுகள் பணி நீட்டிப்பு வழங்கி, சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி-யாக நியமிக்கப்பட்டார்.கமலை எதிர்த்து போட்டியிடமாட்டேன்: பொன்.ராதாகிருஷ்ணன்
[Saturday 2017-07-22 15:00]

ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் கமல் போட்டியிட்டால் அவரை எதிர்த்து தான் போட்டியிட போவதில்லை என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.நடிகர் கமல்ஹாசன் தமிழக அரசின் அனைத்து துறையிலும் ஊழல் இருப்பதாக கூறியதற்கு தமிழக அமைச்சர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.திருமணம் செய்ய மறுத்த காதலியை உயிரோடு கொளுத்திய காதலன்!
[Saturday 2017-07-22 15:00]

திருமணம் செய்து கொள்ள மறுத்ததால் காதலியை உயிரோடு கொளுத்திய காதலனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் Pathanamthitta-ஐ சேர்ந்தவர் Sharika (17) இவர் Sajil (20) என்ற இளைஞரை காதலித்து வந்துள்ளார்.இந்நிலையில் Sajil, Sharikaவிடம் இருவரும் எங்காவது ஓடி போய் திருமணம் செய்து கொள்ளலாம் என வற்புறுத்தியுள்ளார்.ஊழல் புகார் ஆதாரங்களை லஞ்ச ஊழல் தடுப்பு பிரிவு பொலிசாருக்கு அனுப்பி வையுங்கள்: - கமல்ஹாசன்
[Saturday 2017-07-22 11:00]

லஞ்சம், ஊழல் தொடர்பான புகார்களை அதற்கான தடுப்பு பிரிவு பொலிசாருக்கு அனுப்பி வையுங்கள் என ரசிகர்களுக்கு கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.தமிழகத்தின் அனைத்து துறையிலும் ஊழல் இருப்பதாக நடிகர் கமல்ஹாசன் கூறியதற்கு அமைச்சர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன் அதற்கான ஆதாரத்தை அவர் கொடுக்க வேண்டும் என கூறினார்கள்.மந்திரவாதியால் செய்வினைப் பொம்மையாக பயன்படுத்தப்பட்ட சிறுமி: - உடலில் ஊசிகள் பாய்ச்சப்பட்ட நிலையில் பலி
[Friday 2017-07-21 15:00]

மேற்கு வங்காளம் மாநிலம் புருலியா மாவட்டத்தில் உள்ள மந்திரவாதி வீட்டில் பெண் ஒருவர் வேலைப்பார்த்து வந்தார். இந்நிலையில் அம்மந்திரவாதி தனக்கு அதிக மந்திர சக்தி கிடைப்பதற்காக அப்பெண்ணின் மூன்று வயது மகளை ஊசியால் குத்தி சித்தரவதை செய்துள்ளான்.பழுதான மேற்கூரையால் ஹெல்மெட் அணிந்து பாடம் எடுக்கும் ஆசிரியர்கள்: - தெலங்கானாவில் வினோதம்
[Friday 2017-07-21 15:00]

தெலங்கானா மாநிலத்தின் மேடக் மாவட்டத்தில் அரசு பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் சுமார் 664 மாணவர்கள் படித்து வருகின்றனர். பள்ளியின் பல்வேறு இடங்களில் சேதம் ஏற்பட்டுள்ளது.சென்னை கொடுங்கையூரில் தீ விபத்து: - தீயணைப்பு வீரர் உட்பட 4 பேர் பலி
[Friday 2017-07-21 08:00]

சென்னை கொடுங்கையூரில் உள்ள ஒரு சிப்ஸ் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில், பலியானோர் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.கடந்த 16-ம் தேதி, சென்னை கொடுங்கையூரில் உள்ள முருகன் சிப்ஸ் கடையில், இரவு 11.30 மணியளவில் சிலிண்டர் ஒன்று திடீரென வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இதில் 30-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.


Tharsi-home-15-10-2016
Elankeeran-debt-solution-25-06-2016
SELVI-HOMES-09-02-17
Mahesan-Remax-169515-Seithy
Easankulasekaram-Remax-300716
<b> 24-06-2017 அன்று கனடா-ரொரன்டோவில் பரதமைல் நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b> 10-06-2017 அன்று கனடா - ரொரன்டோவில்          இராகாலயா நுண்கலைக்கூடம் வழங்கிய கானமாருதம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b> 03-06-2017 அன்று கனடா - ரொரன்டோவில் நடைபெற்ற இதயராகங்கள் இசை நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா