Untitled Document
September 25, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
இறந்து போனவர்களை நினைவு கூரும் உரிமை எவருக்கும் உள்ளது! - சரத் பொன்சேகா
[Friday 2017-05-19 19:00]

எவரும் இறந்து போன தமது உறவினர்களை விளக்கேற்றி, ஆலயத்திற்கு சென்று வழிபட்டு நினைவு கூரலாம். அதற்கு உரிமை உள்ளது என அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

எவரும் இறந்து போன தமது உறவினர்களை விளக்கேற்றி, ஆலயத்திற்கு சென்று வழிபட்டு நினைவு கூரலாம். அதற்கு உரிமை உள்ளது என அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

  

மகிந்த ராஜபக்ச தலைமையிலான அணியினர் நாளைய தினம் தனியாக படை வீரர்களை நினைவுகூர மேற்கொண்டுள்ள நடவடிக்கை அருவருக்கத்தக்கது. அரசாங்கம் ஒரு தேசிய நிகழ்வை ஏற்பாடு செய்திருக்கும் நிலையில், அவர்கள் தனியாக நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளனர். இது மகிந்த ராஜபக்ச தமது ஆட்சிக்காலத்தில் எம்மையும் இராணுவத்தினரையும் பழிவாங்கி சிறையில் அடைத்ததை நினைவுகூர ஏற்பாடு செய்துள்ள நிகழ்வாக இருக்கலாம்.

அதேவேளை இனப்படுகொலை வாரத்தை அனுஷ்டிக்க போவதாக கூறி ஜனாதிபதியை வடக்கு வரவேண்டாம் என சிவாஜிலிங்கம் கூறியமையானது கள்ளு அருந்திய ஒருவர் பூனையை பிடித்து தரையில் அடித்த கதை போன்றது. சிவாஜிலிங்கத்திற்கு செவி கொடுக்கக் கூடிய மக்கள் வடக்கில் இல்லை. அவர் அனாதையான நிராகரிக்கப்பட்ட அரசியல்வாதி. இதனால், அவர் கூறும் கதைகளால் தேசிய பாதுகாப்பு பாதிப்பை ஏற்படுத்தும் என்று நான் நினைக்கவில்லை.

எவரும் இறந்து போன தமது உறவினர்களை விளக்கேற்றி, ஆலயத்திற்கு சென்று வழிபட்டு நினைவுகூரலாம். அதற்கு உரிமை உள்ளது. ஒரு கொலைக்காரன், பயங்கரவாதி, கொடியன் இறந்தால், அவர்களின் உறவினர்களுக்கு அவர்களை நினைவுகூர உரிமையுள்ளது. இப்படியான விடயங்கள் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் அல்ல.

யாழ்ப்பாணம், முகமாலை பிரதேசத்தில் நேற்றிரவு நடந்த துப்பாக்கி பிரயோக சம்பவம் நடந்துள்ளது. பொலிஸ் வாகனம் மீது துப்பாக்கி பிரயோகம் செய்த சம்பவம் ஒரு வாரத்திற்கு முன்னர் பிலியந்தலையிலும் நடந்தது. அதற்கு முன்னர் களுத்துறையில் சிறைச்சாலை பேருந்து மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. அதில் சிறைச்சாலை அதிகாரிகள் கொல்லப்பட்டனர். இவற்றை செய்யும் குழுக்கள் நாட்டில் எந்த பகுதியிலும் இருக்கலாம். யாழ்ப்பாணத்திலும் எமக்கு தெரிந்த வகையில் ரௌடி குழுக்கள் உள்ளன.

அவர்களை பிடித்து அடக்கி, தண்டிக்க வேண்டியது பொலிஸாரின் கடமை. பாதாள உலக குழுக்கள், ரௌடி குழுக்கள் மேற்கொள்ளும் இப்படியான சட்டவிரோத நடவடிக்கைகள் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என நாங்கள் கருதக் கூடாது எனவும் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

  
   Bookmark and Share Seithy.comகேப்பாப்புலவில் பொதுமக்களின் காணிகளில் இருந்து வெளியேறத் தொடங்கியது இராணுவம்!
[Sunday 2017-09-24 18:00]

முல்லைத்தீவு - கேப்பாப்புலவில் இராணுவத்தினர் வசமுள்ள மக்களின் காணிகளில் இருந்து தற்போது இராணுவத்தினர் வெளியேறி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. 64பேருக்குச் சொந்தமான 111 ஏக்கர்நிலப்பரப்பை விடுவிப்பதாகத் தெரிவித்து வந்த அரசாங்கம் கடந்த காலங்களில் மக்களுக்குச் சொந்தமில்லாத காணிகளையே இதுவரை விடுவித்து வந்தது. இந்நிலையில் குறித்த மக்கள் முல்லைத்தீவு மாவட்ட இராணுவத் தலைமையகத்துக்கு முன்னால் தொடர்ச்சியான போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.உள்ளூராட்சித் தேர்தலுக்குத் தயாராகிறது ரெலோ! - தமிழரசுக் கட்சியுடன் பேச குழு அமைப்பு
[Sunday 2017-09-24 18:00]

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான இடஒதுக்கீடு தொடர்பாக, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உயர்பீடத்துடன் பேசுவதற்கு ரெலோ தீர்மானித்துள்ளது. ஆறு பேர் கொண்ட குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது. வவுனியாவில் நேற்று இடம்பெற்ற ரெலோவின் தலைமைக்குழு உறுப்பினர்களின் கூட்டத்தில், எதிர்வரும் ஜனவரி மாதம் இடம்பெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான ஆயத்தங்களை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.தியாகதீபம் திலீபனின் அகிம்சைப் போராட்டம் வித்தியாசமானது! - சம்பந்தன் Top News
[Sunday 2017-09-24 18:00]

தியாக தீபம் திலீபனின் அகிம்சைப் போராட்டம் வித்தியாசமானது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டம் கல்முனையில் இன்று இடம்பெற்றது. இதில் தியாக தீபம் திலீபனுக்கு இரா.சம்பந்தன் சுடரேற்றி அஞ்சலி தெசலுத்தினார். இதனையடுத்து கருத்து தெரிவித்த அவர், “தமிழ் மக்களின் விடுதலைக்காக பல்வேறு அஹிம்சை போராட்டங்கள் இடம்பெற்றுள்ளன. அதில் தியாகி திலீபனின் விடுதலைப் போராட்டம் வித்தியாசமானது.கிழக்கு மாகாணசபையின் கடைசி அமர்வு நாளை! - 30 ஆம் திகதியுடன் ஆயுள் முடிகிறது
[Sunday 2017-09-24 18:00]

கிழக்கு மாகாணசபையின் கடைசி அமர்வு நாளை இடம்பெறவுள்ளது, 2012ஆம் ஆண்டு செப்டம்பர் 8ஆம் திகதி கிழக்கு மாகாணசபைத் தேர்தல் இடம்பெற்றது. இதையடுத்து, மாகாண சபையின் பணிகள் செப்டம்பர் 30ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டன. இந்த நிலையில், அதன் ஐந்தாண்டு காலப்பகுதி எதிர்வரும் 30 ஆம் திகதியுடன் முடிவடையவுள்ளது. ஐந்தாண்டு காலப்பகுதியில் கிழக்கு மாகாண சபையில் 85 அமர்வுகள் நடத்தப்பட்டுள்ளன.இந்த நிலையில், கடைசி அமர்வு நாளை இடம்பெறவுள்ளது.இனிமேல் விக்னேஸ்வரனுக்கு ஆதரவு இல்லை! - ரெலோ தலை­மைக் குழுக் கூட்­டத்­தில் முடிவு
[Sunday 2017-09-24 18:00]

வடக்கு மாகாணசபையின் தற்போதைய பதவிக் காலத்துக்குப் பின்­னர், வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ர­னுக்கு எந்­தக் காரணம் கொண்­டும் ஆத­ர­வ­ளிப்­ப­தில்லை என்று ரெலோ முடிவு செய்­துள்­ளது. முதல்­வ­ரின் தற்­போ­தைய பத­விக் காலம் வரைக்­கும் மட்­டுமே ஆத­ர­வ­ளிப்­பது என்­றும் தீர்­மா­னிக்­கப்­பட்­டது. வவு­னி­யா­வில் நேற்று நடை­பெற்ற அந்­தக் கட்­சி­யின் தலை­மைக் குழுக் கூட்­டத்­தில் இந்த முடிவுகள் எடுக்­கப்­பட்டன.காணாமல் போனோர் பணியகத்துக்கான உறுப்பினர்களை பரிந்துரைப்பதற்கான ஆலோசனைகள் ஆரம்பம்!
[Sunday 2017-09-24 18:00]

காணாமல் போனோர் பணியகத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை பரிந்துரைப்பதற்கான ஆலோசனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அரசியலமைப்பு பேரவையால் இதற்கான கலந்துரையாடல்கள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது. காணாமல் போனோர் பணியத்துக்கு தலைவர் உட்பட ஏழு உறுப்பினர்கள் நியமிக்கப்படுவர்.அதற்கான பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டதன் பின்னர், அவை ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டு, அவரால் நியமனங்கள் மேற்கொள்ளப்படும்.18 வயதுக்கு குறைந்த பிள்ளைகளை வாகனம் ஓட்ட அனுமதித்தால் பெற்றோர் மீது பாயும் சட்டம்!
[Sunday 2017-09-24 18:00]

18 வயதுக்குக் குறைந்தவர்கள் வாகனங்களைச் செலுத்தும் பட்சத்தில், அவர்களது பெற்றோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வீதிப் பாதுகாப்புக்கான தேசிய சபை எச்சரித்துள்ளது. இதுதொடர்பாக, சபையின் தலைவர் கலாநிதி சிசிர கோதாகொட கருத்து வெளியிடுகையில், அண்மைக்காலமாக குறைந்த வயதுடையவர்கள் வாகனங்களைச் செலுத்துவதால் இடம்பெறும் விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக குறிப்பிட்டார்.மஹிந்தவுடன் இணைந்து இனி ஆட்சியமைக்க இடமில்லை! - சந்திரிகா
[Sunday 2017-09-24 18:00]

நாட்டை மீட்டெடுக்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து ஆட்சியமைப்பது தவறில்லை. ஆனால் மஹிந்த ராஜபக் ஷவுடன் இணைந்து ஒருபோதும் ஆட்சியமைக்கப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்தார். கம்பஹா பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.சுன்னாகத்தில் இலத்திரனியல் கடையில் பற்றிய தீயினால் நகைக்கடை, புடைவைக் கடையும் நாசம்!
[Sunday 2017-09-24 18:00]

சுன்னாகம் பகுதியில் நேற்று இரவு மின்சார ஒழுக்கினால் ஏற்பட்ட தீவிபத்தில் மூன்று வர்த்தக நிலையங்கள் எரிந்து நாசமாகின. சுன்னாகம் சந்திப் பகுதியில் உள்ள இலத்திரனியல் வர்த்தக நிலையத்தில் ஏற்பட்ட மின் ஒழுங்கின் காரணமாகவே தீ விபத்து ஏற்பட்டதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. வர்த்தக நிலையத்தில் ஏற்பட்ட தீயினால் அருகில் இருந்த இரு கடைகளுக்கும் தீ பரவியுள்ளது. ஒரு புடவை கடை மற்றும் நகை கடை என்பவற்றில் தீ பரவியுள்ளது.வாள்வெட்டு சந்தேக நபர் அதிகாலை சுற்றிவளைப்பில் சிக்கினார்!
[Sunday 2017-09-24 18:00]

துன்னாலையில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் வட்டுக்கோட்டைப் பிரதேசத்திலுள்ள வீடொன்றில் பதுங்கியிருந்த போது, இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார். துன்னாலைப் பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயதுடைய சந்தேகநபரே கைது செய்யப்பட்டுள்ளார். கடற்படையினரைத் தாக்கினார் எனவும் பொலிஸ் காவலரண் மீது தாக்குதல் நடத்தினார் எனவும் சந்தேக நபர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.இந்த வருடத்தில் எச்.ஐ.விக்கு 22 பேர் பலி!
[Sunday 2017-09-24 18:00]

இந்த வருடத்தில் மாத்திரம், எச்.ஐ.வி தொற்று நோய்க்கு உள்ளாகி 22 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 178 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தேசிய பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் தடுப்பு பிரிவின் பணிப்பாளர் டொக்டர் சிசிர லியனகே தெரிவித்துள்ளார்.கிளிநொச்சி நகரில் பாழடைந்த கட்டடத்தில் ஆணின் சடலம் மீட்பு! Top News
[Sunday 2017-09-24 18:00]

கிளிநொச்சி நகரில் பாழடைந்த கட்டடத்தில் ஆணின் சடலம் ஒன்று இன்று மீட்கப்பட்டுள்ளது. இன்று காலை குறித்த பகுதியில் சடலம் ஒன்று இருப்பது தொடர்பில் பொலிசாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்தனர். சடலம் தற்போது கிளிநொச்சி வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது. உயிரிழந்த நபர் தொடர்பில் அடையாளம் காணும் நடவடிக்கைகள் பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.நிரந்தர அரசியல் தீர்வை ஏற்படுத்த வேண்டும்! - ஜனாதிபதி மைத்திரியிடம் வலியுறுத்திய ஐ.நா பொதுச்செயலர் Top News
[Sunday 2017-09-24 08:00]

அரசியலமைப்புத் திருத்தம் மூலம் இலங்கையில் நிரந்தர அரசியல் தீர்வை ஏற்படுத்த வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் வலியுறுத்திக் கூறியுள்ளார். நியூயோர்க்கில் ஐ.நா. சபையின் 72வது அமர்வின்போது ஜனாதிபதி - குட்டெரஸ் இடையிலான சந்திப்பு நேற்று நடைபெற்றது. இதன்போதே குட்டெரஸ் மேற்படி கருத்து வெளியிட்டிருந்தார்.வடமராட்சியில் புதிய நீர்த்தேக்கத்தை உருவாக்கி குடிநீர் வழங்கத் திட்டம்!
[Sunday 2017-09-24 08:00]

யாழ். குடாநாட்டுக்காக குடிநீர் தேவையை நிறைவேற்றும் வகையில், மழை நீர் சேகரிப்புத் திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளது. இதன்படி, குடாநாட்டில் பெய்யும் மழையில் 20 சதவீதத்தை வடமாட்சியில் உள்ள 78 சதுர கிலோ மீற்றர் விஸ்தீரணம் கொண்ட நீரேரில் சேகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்துக்கு வட மாகாண சபை முதலமைச்சரும், அமைச்சரவையும் அனுமதி வழங்கியுள்ளனர்.75 வீதமான போரை முடிவுக்குக் கொண்டு வந்தது நான் தான்! - என்கிறார் சந்திரிகா
[Sunday 2017-09-24 08:00]

மூன்று தசாப்தங்களாக நிலவிய போரின் பெரும்பகுதியை முடிவுக்கு கொண்டு வந்த பெருமை தன்னையே சேரும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார். கம்பஹா மீரிகம பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். “ விடுதலைப் புலிகளிடமிருந்த 75 வீதமான நிலப்பரப்பை நானே வெற்றி கொண்டேன். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச 25 வீதம் மாத்திரமே யுத்தத்தை நிறைவு செய்தார் என்றும் அவர் கூறியுள்ளார்.என்னைக் கொல்ல வருபவன் பைத்தியக்காரன்! - இப்படிச் சொல்கிறார் மகிந்த
[Sunday 2017-09-24 08:00]

பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளதால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பில் உள்ள தனது வீட்டுக்குள் கத்தியுடன் நுழைய முயன்ற நபரை பாதுகாப்பு தரப்பினர் கைது செய்தமை தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள மகிந்த ராஜபக்ச, எவரேனும் கத்தியை எடுத்துக்கொண்டு என்னை கொலை செய்ய வருவாரேயானால் அவர் பைத்தியகாரனாக இருப்பார் எனவும் அவர் கூறியுள்ளார்.மாந்தைச் சந்தியில் விபத்து- யாழ். இளைஞன் பலி!
[Sunday 2017-09-24 08:00]

மன்னார்-யாழ் பிரதான வீதி மாந்தை சந்தியில் நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்தார். யாழ்ப்பாணம் ஆத்திமோட்டை பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளார். திருக்கேதீஸ்வரத்தில் இருந்து வந்த 4 இளைஞர்கள் முச்சக்கர வண்டியில் பிரதான வீதியை கடக்க முற்பட்ட போது,மன்னாரில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த லொரியுடன் மோதி விபத்து நடந்தது. முச்சக்கர வண்டியில் பயணித்த ஒரு இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.ஆறு மாகாணசபைகளுக்கு மார்ச்சில் தேர்தல்!
[Sunday 2017-09-24 08:00]

எதிர்வரும் 2018ம் ஆண்டு மார்ச் மாதம் ஆறு மாகாணசபைகளின் தேர்தல்களை நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. வடமத்திய, சப்ரகமுவ மற்றும் கிழக்கு மாகாண சபைகளின் பதவிக் காலம் இம்மாதத்துடன் பூர்த்தியாக உள்ள நிலையில் இந்த மாகாணசபைகளுக்கான தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதேவேளை, அடுத்த ஆண்டில் பதவிக் காலம் நிறைவடைய உள்ள மத்திய, வடமேல் மற்றும் வட மாகாணசபைகளின் தேர்தலும் மார்ச் மாதம் நடத்தப்பட உள்ளது.இலங்கைக்கு திருட்டுத்தனமாக வரவில்லை! - சிங்களப் பத்திரிகைக்கு அருட்தந்தை எஸ்.ஜே இமானுவேல் பேட்டி
[Sunday 2017-09-24 08:00]

இலங்கைக்குத் தாம் திருட்டுத்தனமாக வரவில்லை என்று உலக தமிழர் பேரவையின் தலைவர் அருட்தந்தை எஸ்.ஜே இமானுவேல் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால தனக்கு பலமுறை அழைப்பு விடுத்திருந்ததாகவும் அதற்கமையவே தாம் இந்த விஜயத்தை மேற்கொண்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற ஆட்சிமாற்றத்தின் பின்னர் இலங்கைக்கான தனது முதலாவது பயணமாக இது அமைந்திருப்பதாக இம்மானுவேல் அடிகளார் சிங்களப் பத்திரிகை ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.வடமராட்சி விபத்தில் இருவர் படுகாயம்! Top News
[Sunday 2017-09-24 08:00]

வடமராட்சி- புறாப்பொறுக்கி, யாழ்-பருத்தித்துறை பிரதான வீதியில் நேற்று பிற்பகல் 5 மணியளவில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து இரண்டு மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இருவர் படுகாயமடைந்தனர். கொழும்பைச்சேர்ந்த விக்ரம ஆராச்சி மற்றும் இமையாணன் மேற்கைச்சேர்ந்த குகதாசன் அனுசியா ஆகியோர் பலத்த காயங்களுடன் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்துத் தொடர்பான மேலதிக விசாரணைகளை நெல்லியடி போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.


Tharsi-home-15-10-2016
Elankeeran-debt-solution-25-06-2016
Mahesan-Remax-169515-Seithy
SELVI-HOMES-09-02-17
Easankulasekaram-Remax-300716
<P>
 <b> 13-08-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற இசை மாலைப் பொழுது - 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
</p>
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 29ம் 30ம்தி கதிகளில் நடைபெற்ற World Tamil Badminton Federation 5th annual tournament நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 7ம் 8ம் 9ம்தி கதிகளில் நடைபெற்ற குதூகலம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா