Untitled Document
February 24, 2018 [GMT]
  • Welcome
  • Welcome
வலி.வடக்கு காணிகள் விடுவிப்பு பேச்சுவார்த்தை தோல்வி!
[Friday 2017-04-21 18:00]

பலாலி விமான நிலையத்தைச் சூழவுள்ள 4 ஆயிரம் ஏக்கர் காணிகளை விடுவிப்பது தொடர்பாக இன்று நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை வெற்றியளிக்கவில்லை என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ். மாவட்டத்தில் முப்படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள பொது மக்கள் மற்றும் திணைக்களங்களுக்குச் சொந்தமான காணிகளை விடுவித்தல் தொடர்பிலான மாவட்ட உயர்மட்டக் கலந்துரையாடல்,  யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று  இடம்பெற்றது.

பலாலி விமான நிலையத்தைச் சூழவுள்ள 4 ஆயிரம் ஏக்கர் காணிகளை விடுவிப்பது தொடர்பாக இன்று நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை வெற்றியளிக்கவில்லை என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ். மாவட்டத்தில் முப்படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள பொது மக்கள் மற்றும் திணைக்களங்களுக்குச் சொந்தமான காணிகளை விடுவித்தல் தொடர்பிலான மாவட்ட உயர்மட்டக் கலந்துரையாடல், யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்றது.

  

கூட்டத்தின் நிறைவில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், "பலாலி விமான நிலையத்தைச் சூழ்ந்த 4 ஆயிரம் ஏக்கர் காணிகளை விடுவிப்பது தொடர்பான பேச்சுவார்த்தை வெற்றியளிக்கவில்லை. பலாலி விமான நிலையத்தை விஸ்தரிப்பதனால் அவற்றை விடுவிக்க முடியாத சூழ்நிலை காணப்படுகிறது. விமான நிலையம் விஸ்தரிக்கப்படுமா, இல்லையா, விஸ்தரிக்கப்படுமானால் அதற்கு எவ்வளவு காணிகள் தேவைப்படும் என்பது தொடர்பில் உயர் மட்டத்துடன் கலந்துரையாடி முடிவுகள் மேற்கொள்ளப்படும். விமான நிலையம் விஸ்தரிக்கப்படுமானால் தனியார் காணிகளைச் சுவீகரிக்க கூடிய சூழல் உள்ளது. இது தொடர்பான தரவுகள், விவரங்கள் தற்போதும் எமக்குக் கிடைக்கப்பெற்றுள்ளன. அதனை வைத்துக்கொண்டு மக்களுடனும் கலந்தாலோசித்து இது தொடர்பில் மேற்கொள்ளவேண்டிய மாற்று நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்வோம். அதன்படி நாங்கள் எடுக்கின்ற முடிவுகளின் அடிப்படையில் படைத்தரப்பினருடன் பேச்சு வார்த்தை நடத்துவோம்.

இராணுவத்தினரிடம் இருக்கின்ற பகுதிகள் அடையாளம் காட்டப்பட்டுள்ளன. சில இடங்களை விடுவிப்பதாக தெரிவித்துள்ளனர். தனியார் காணி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பல இடங்களில் காணி விடுவிப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தாலும், அவை முடிவடையவில்லை. அது குறித்து இராணுவத்தினர் சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளது. ஒவ்வொரு பிரதேச செயலகத்திலும், தனியார் காணிகளை விடுத்து, அரச காணிகளின் பாதுகாப்பு கருதி இடங்கள் தேவைப்படின் அவைகளை இராணுவத்தினரிடம் வழங்க இணக்கம் காணப்பட்டுள்ளது.

காணிகள் குறித்த விவரத்தினை பிரதேச செயலாளர்கள் ஒரு வாரத்தில் அரசாங்க அதிபரிடம் கையளிப்பார்கள். பிரதேச செயலாளர்கள் தரவுகளை மாவட்ட செயலரிடம் கையளித்த பின்னர் இராணுவத்தினருடன் கலந்துரையாடி, அதில் தடைகள் ஏதும் இருந்தால், அவற்றினை நீக்கி, பாதுகாப்பு அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்படும். அதன்பின்னர் பாதுகாப்பு படையினருடன் உயர்மட்ட கலந்துரையாடல் இடம்பெற்றதன் பின்னர் ஏனைய விடயங்களை கையாள முடியும்.

2009 போர் முடிவடைந்த பின்னர் 27 ஆயிரம் ஏக்கர் காணி படையினர் வசம் இருந்ததாகவும், தற்போது 4 ஆயிரத்து 700 ஏக்கராகவும் குறைக்கப்பட்டுள்ளதாகவும், இராணுவத்தினர் சுட்டிக் காட்டியுள்ளனர். வலி. வடக்கு பிரதேசத்தினைச் சூழ்ந்த பகுதியில் 12 ஆயிரம் ஏக்கர் ஆரம்பத்தில் இருந்துள்ளது. 2003 ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா மற்றும் ஏனைய 2 பேர் இணைந்து உயர் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்திருந்த போது, ஒருவர் உயிரிழந்துவிட்டார். மற்றயவரின் காணி விடுவிக்கப்பட்டுள்ளது. மாவை சேனாதிராஜாவின் வழக்கு தற்போதும் நடைபெற்று வருகின்றது. அதில் படிப்படியாக சில இடங்கள் விடுவிக்கப்பட்டுள்ளன. 2007 ஆம் ஆண்டு இவை அனைத்து காணிகளும் மக்களுக்கு மீள்குடியேற்றத்திற்கு கையளிக்கப்பட வேண்டுமென்ற இடைக்கால உத்தரவினை பிறப்பித்திருந்தது. அதற்கான படிமுறைகளை வகுத்திருந்தும் கூட 10 வருடங்களின் பின்னர் விடுவிக்கப்பட்ட பகுதிகள் மிகக்குறைவானவை.

மீள்குடியேற்றம், அல்லது சுமூக நிலை வருகின்ற போது, மக்கள் தமது சொந்த இடங்களுக்குச் சென்று வாழ வேண்டுமென்பது எமது அடிப்படை கோரிக்கை. கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது, ஜனாதிபதி வேட்பாளராக மைத்திரி பால சிறிசேன இருந்த போது தனியார் காணிகள் அனைத்தும் விடுவிக்கப்படுமென்று எழுத்து மூலமான வாக்குறுதி அளித்திருந்தார். ஆகவே ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைவாக பாதுகாப்பு படையினருடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருகின்றோம். தனியார் காணிகளை விடுவித்து, தமது இடங்களை மாற்றி அமைத்தும் உண்மையிலே பாதுகாப்புக்கு தேவையான இடங்களுக்கு சென்ற பின்னரும், அதிகளவான காணிகள் பாதுகாப்புத் தரப்பினரிடம் இருக்குமாக இருந்தால், அடுத்த நடவடிக்கை என்ன என்பது பற்றி சிந்திக்க முடியும். மாவட்ட ரீதியாக நடைபெறும் கலந்துரையாடல்களின் பின்னர், அரசியல் தலைவர்களுடன், அமைச்சர்களுடனும் நடைபெறவுள்ள உயர்மட்ட கலந்துரையாடல் தான், மிக முக்கியமாக இருக்கும். அவை தான் காணி விடுவிப்பு குறித்து உறுதியான முடிவுகளை எடுப்பதற்கான கலந்துரையாடலாக இருக்கும்" என்றார்.

  
   Bookmark and Share Seithy.com



ஐ.நாவின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி திடீர் மரணம்!
[Saturday 2018-02-24 08:00]

இலங்கைக்கான ஐ.நாவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி உனா மக்கோலி திடீரென மரணமானார். கொழும்பில் உள்ள ஐ.நா பணியகம் இன்று அதிகாலை இந்த தகவலை வெளியிட்டுள்ளது. 54 வயதான உனா மக்கோலி, மருத்துவ விடுப்பில் சென்று சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே காலமானார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



பிரிகேடியர் பிரியங்க விவகாரத்தை தீவிரமாக எடுத்துக் கொண்ட பிரித்தானியா!
[Saturday 2018-02-24 08:00]

பிரித்தானியாவில் ஆர்ப்பாட்டம் செய்த புலம்பெயர் தமிழர்களை சைகையின் மூலம் அச்சுறுத்திய பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ தொடர்பாக உலக தமிழ் பேரவை பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் அனுப்பிய மின்னஞ்சலுக்கு லண்டனில் உள்ள வெளிநாட்டு அலுவலகத்திலிருந்து, கொமன்வெல்த் அலுவலகத்தில் இருந்தும் பதில் அனுப்பப்பட்டுள்ளது.



மன்னாரில் இருந்தும் நூற்றுக்கணக்கானோர் குடும்பங்களுடன் கச்சதீவுக்குப் பயணம்!
[Saturday 2018-02-24 08:00]

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவிற்கு மன்னார் மாவட்டத்தில் இருந்து நூற்றுக்கணக்கான குடும்பங்கள் படகுகள் மூலம் பயணமாகியுள்ளன. தலைமன்னார், பேசாலை, பள்ளிமுனை, கோந்தைப்பிட்டி கடற்பகுதியூடாக மக்கள் படகுகள் மூலம் கச்சதீவை நோக்கி பயணமாகியுள்ளனர். இவர்களுக்குத் தேவையான சகல வசதிகளையும் இலங்கை கடற்படை ஏற்பாடு செய்துள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் தெரிவித்தார்.



செப்ரெம்பரில் மாகாணசபைத் தேர்தல்!
[Saturday 2018-02-24 08:00]

எதிர்வரும் செப்டம்பர் மாதமளவில் மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படக்கூடிய சாத்தியங்கள் காணப்படுகின்றன என்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தகவல் வெளியிட்டுள்ளார். மத்திய, வடக்கு மற்றும் வடமேல் மாகாண சபைகளின் பதவிக் காலம் பூர்த்தியாக உள்ளநிலையில் எதிர்வரும் செப்டம்பர் மாதமளவில் இந்த மாகாணசபைகளுக்கான தேர்தல்களை நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது.



கூட்டமைப்பை தமிழ் மக்கள் நிராகரித்து விட்டனர்! - கெஹலிய ரம்புக்வெல
[Saturday 2018-02-24 08:00]

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வடக்கு – கிழக்கு மக்கள் நிராகரித்து விட்டமையை தேர்தல் பெறுபெறுகள் நன்கு புலப்படுத்தி நிற்கின்றன என நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.



அர்ஜுன் அலோசியஸ் சிறைச்சாலை வைத்தியசாலையில்!
[Saturday 2018-02-24 08:00]

மத்திய வங்கி பிணை முறி மோசடிகள் தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள பேர்பச்சுவல் ட்ரஸரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜூன் அலோசியஸ் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மத்திய வங்கி பிணை முறி மோசடிகள் தொடர்பில் அர்ஜூன் அலோசியஸ் மற்றும் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளர் கசுன் பலிசேன ஆகியோர் அண்மையில் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.



கபீர் காசிமுக்கு உயர்கல்வி அமைச்சு?
[Saturday 2018-02-24 08:00]

அமைச்சரவை மாற்றம் நாளை இடம்பெறும் என்று அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்போது ஐக்கிய தேசிய கட்சி சார்ந்த அமைச்சுக்கள் பலவற்றில் மாற்றங்கள் செய்யப்படவுள்ளதாக தெரிய வந்துள்ளது. அமைச்சர் கபீர் ஹாசிமின் அரச தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சுப் பதவி அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியெல்லவிற்கும், அவரது உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு அமைச்சர் கபீர் ஹாசிமுக்கு வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.



கைவிடப்படுகிறது எட்கா!
[Saturday 2018-02-24 08:00]

எட்கா எனப்படுகின்ற இலங்கை - இந்திய பொருளாதார ஒத்துழைப்பு உடன்படிக்கையை கைச்சாத்திடுவதில் கடும் நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளதால் அந்த முயற்சியை இலங்கை அரசு தற்காலிகமாக ஒத்திவைக்கக்கூடும் எனத் தெரியவருகின்றது.



கட்டுநாயக்கவில் 10 தங்கக் கட்டிகளுடன் மூவர் கைது!
[Saturday 2018-02-24 08:00]

55 இலட்சம் ரூபா பெறுமதியான 10 தங்க கட்டிகளுடன் இந்திய பிரஜைகள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த மூவரும் நேற்று பிற்பகல் SG 004 எனும் இந்திய தனியார் விமான சேவை விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து மதுரை நோக்கி பயணிக்க இருந்த நிலையில், கைது செய்யப்பட்டுள்ளனர். 48, 52, 52 வயதுடைய குறித்த சந்தேகநபர்களால் கொண்டு வரப்பட்ட கைப்பையை கதிர் சோதனைக்குட்படுத்தப்பட்டபோது, அதில் மறைத்து வைக்கப்பட்ட சந்தேகத்திற்கிடமான பொருட்கள் அவதானிக்கப்பட்டுள்ளது.



உலக சமாதானத்தை வலியுறுத்தி கனடாவில் தொடங்கிய மரதன் வவுனியாவைச் சென்றடைந்தது! Top News
[Friday 2018-02-23 20:00]

வவுனியா பிறப்பிடமாகவும் கனடாவில் வசித்து வரும் உலக சாதனை வீரன் சுரேஸ் ஜோஷிம் உலக சமாதானத்தினை வலியுறுத்தி ஆரம்பித்த மரதன் ஓடடம், இன்று வவுனியாவை வந்தடைந்தது. கனடாவில் இருந்து ஆரம்பித்த மரதன் இன்று வவுனியா சூசைப்பிள்ளையார் கோவிலை வந்தடைந்துள்ளது. ஏழ்மையின் சின்னமாகிய பனையின் பாளையை ஏந்தியவாறாக, 72 நாட்டுக்கு 123 நாட்களில், சுமார் 4000 கிலோமீற்றர் ஓடிச்செல்லவுள்ள இப்பயணமானது, இன்று வவுனியாவில் இருந்து கிளிநொச்சி நோக்கி ஆரம்பித்திருந்தது.



மீண்டும் கூட்டமைப்பில் இணையும் சாத்தியம் இல்லை! - சிவசக்தி ஆனந்தன்
[Friday 2018-02-23 20:00]

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பு­டன் மீண்­டும் இணை­வ­தற்கு எந்­தச் சாத்­தி­ய­மும் இல்லை என்று, ஈ.பி.ஆர்.எல்.எவ். அமைப்­பின் செய­ல­ரும், நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான சிவ­சக்தி ஆனந்­தன் திட்­ட­வட்­ட­மாக தெரிவித்துள்ளார். “ நாம் நான்கு கட்­சி­கள் இணைந்த தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பில்­தான் இருந்­தோம். தமிழ் அர­சுக் கட்­சி­யில் இருக்­க­வில்லை. அந்­தக் கட்­சி­யின் வீட்­டுச் சின்­னத்­தில் போட்­டி­யிட்­டி­ருந்­தோமே தவிர, அந்­தக் கட்­சி­யில் இணை­ய­வில்லை.



கச்சதீவு செல்ல போதிய படகுகள் இல்லை! - பக்தர்கள் அவதி Top News
[Friday 2018-02-23 20:00]

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்திற்கு செல்வதற்காக குறிகாட்டுவான் துறையில் போதிய போக்குவரத்து வசதிகள் இல்லாமையால் மக்கள் பெரும் சிரமத்தை எதிர் நோக்கினர். பெருமளவான பக்தர்கள் இம்முறை கச்சதீவுக்கு செல்வதற்காக இறங்கு துறைக்கு சென்ற நிலையில் அங்கு போதிய படகுகள் காணப்படவில்லை.



வடக்கின் அபிவிருத்தி, அரசியல் நிலவரங்கள் குறித்து ஜனாதிபதியுடன் கூட்டமைப்பு பேச்சு!
[Friday 2018-02-23 20:00]

எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நேற்று சந்தித்து பேச்சு நடத்தியுள்ளனர். நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்ட சில உறுப்பினர்கள் இந்த சந்திப்பில் பங்கேற்றனர்.



வத்தளையில் பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த மஞ்சு சுட்டுக்கொலை!
[Friday 2018-02-23 20:00]

வத்தளைப் பகுதியில், பிரபல பாதாள குழுத் தலைவர் என அழைக்கப்படும், தடல்லகே மஞ்சு விசேட அதிரடிப்படையினரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். விசேட அதிரடிப்படையினர் குறித்த நபரை கைது செய்யவதற்காக சென்றிருந்த போது, அங்கிருந்து தப்பிச்செல்வதற்காக சந்தேக நபர் முயற்சித்த நிலையில் துப்பாக்கி சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது பாதாள குழுவைச் சேர்ந்த மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றது.



தியத்தலாவ குண்டு வெடிப்புக் குறித்து விசாரிக்க இராணுவ விசாரணைக்குழு அமைப்பு!
[Friday 2018-02-23 20:00]

தியத்தலாவ, கஹகொல்ல பிரதேசத்தில் பயணிகள் பஸ்ஸில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவம் தொடர்பில் விசாரணை செய்ய ஆறு பேர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அதபத்து தெரிவித்துள்ளார்.



சாவகச்சேரி, பருத்தித்துறையில் தமிழ்க் காங்கிரஸ் ஆட்சியமைப்பதைக் கூட்டமைப்பு குழப்பாது!
[Friday 2018-02-23 20:00]

உள்ளூராட்சி சபைகளில் எந்தக் கட்சி கூடுதலான ஆசனங்களைப் பெற்றுக் கொண்டுள்ளதோ அந்தக் கட்சி ஆட்சி அமைப்பதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்ப்பதில்லை என்று கட்சியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் நேற்று முடிவு செய்யப்பட்டுள்ளது. பருத்தித்துறை, சாவகச்சேரி நகரசபைகள் மற்றும் நெடுந்தீவு பிரதேசசபை என்பவற்றின் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு கூட்டமைப்பு மோதுவதில்லை என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.



ஐதேக முக்கிய தலைவர்களுடன் ரணில் ஆலோசனை!
[Friday 2018-02-23 20:00]

ஐக்கிய தேசியக்கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் அடங்கிய குழுவினரை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இன்று அலரி மாளிகையில் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார். நாட்டை அபிவிருத்தி செய்வதற்கான, விசேட திட்டத்தை சமர்ப்பிக்குமாறும் அவர்களிடம் பிரதமர் கோரியுள்ளார்.



தேசிய ஒலிம்பிக் குழு தலைவர் பதவிக்கான தேர்தலில் வென்றார் சுரேஸ் சுப்ரமணியம்!
[Friday 2018-02-23 20:00]

ஒன்பது வருடங்களின் பின்னர் இன்று நடைபெற்ற தேசிய ஒலிம்பிக் குழுத் தேர்தலில் தேசிய ஒலிம்பிக் குழுவின் தலைவராக சுரேஸ் சுப்ரமணியம் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவர் இலங்கை டெனிஸ் சங்கத்தின் முன்னாள் தலைவராகவும், ஆசிய டெனிஸ் சங்கத்தின் தற்போதைய பிரதி தலைவராகவும் கடமையாற்றுகிறார். தேசிய ஒலிம்பிக் குழுவின் தலைவர் பதவிக்காக சுரேஸ் சுப்பிரமணியமும், ரொஹான் பெர்னாண்டோவும் போட்டியிட்டிருந்தனர். இதேவேளை, தேசிய ஒலிம்பிக் குழுவின் செயலாளராக மெக்ஸ்வெல் டி சில்வா தெரிவாகியுள்ளார்.



அமைச்சரவை மாற்றம் - ஞாயிறு வரை ஒத்திவைப்பு!
[Friday 2018-02-23 20:00]

அமைச்சரவை மாற்றம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்படும் என, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.களுத்துறை வைத்தியாலையில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். ஜனாதிபதியின் தீர்மானங்களுக்கு அமையவே அமைச்சுக்களில் மாற்றம் மேற்கொள்ளப்படும் என, அவர் இதன்போது தெரிவித்தார்.



5 வீத வாக்குகளைப் பெறாத வேட்பாளர்களின் கட்டுப்பணம் பறிபோகும்!
[Friday 2018-02-23 20:00]

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் 5% இற்கும் குறைவான வாக்குகளைப் பெற்ற அனைத்து வேட்பாளர்களினதும் கட்டுப்பணம் அரசுடமையாக்கப்படும் என்றும் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.


Mahesan-Remax-169515-Seithy
Easankulasekaram-Remax-300716
Tharsi-home-15-10-2016
SELVI-HOMES-09-02-17
<P>
 <b> 13-08-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற இசை மாலைப் பொழுது - 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
</p>
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 29ம் 30ம்தி கதிகளில் நடைபெற்ற World Tamil Badminton Federation 5th annual tournament நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 7ம் 8ம் 9ம்தி கதிகளில் நடைபெற்ற குதூகலம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா