Untitled Document
June 28, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
நாளை முதல் யாழ்ப்பாணத்தில் பொலித்தீன், பிளாஸ்டிக் பயன்பாட்டுக்குத் தடை!
[Friday 2017-04-21 18:00]

யாழ். நகரில் நாளை முதல் பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் பொருட்களின் பாவனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
நாளை பூமி தினம் ஆகையால், அரச நிறுவனங்கள் மற்றும் பாடசாலைகள் உட்பட அனைத்து இடங்களிலும் பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் பொருள்களின் பாவனையை முற்றாகத் தடை செய்யவேண்டும் என யாழ்ப்பாண மாநகர சபை தெரிவித்துள்ளது.

யாழ். நகரில் நாளை முதல் பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் பொருட்களின் பாவனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நாளை பூமி தினம் ஆகையால், அரச நிறுவனங்கள் மற்றும் பாடசாலைகள் உட்பட அனைத்து இடங்களிலும் பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் பொருள்களின் பாவனையை முற்றாகத் தடை செய்யவேண்டும் என யாழ்ப்பாண மாநகர சபை தெரிவித்துள்ளது.

  

வடக்கில் சூழல் மாசடைவதை தடுக்கும் நோக்கில் வடக்கு மாகாண சபை நிறைவேற்றிய தீர்மானத்துக்கு அனைத்து மக்களும் ஆதரவு வழங்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் யாழ்ப்பாண மாநகர சபை விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நாளாந்த பாவனையின் பின்னர் கழிவாக வீசப்படும் பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் ஆகியவையே பெருமளவில் திரண்டு மாநகர கழிவகற்றலில் சவால்களையும் சூழலுக்குப் பெரும் தீங்கையும் ஏற்படுத்துகின்றது. குடிதண்ணீர் விற்பனையாகும் பிளாஸ்ரிக் போத்தல்கள், ஒருநாள் பாவனை பிளாஸ்ரிக் குவளைகள், மதிய உணவு பொதியிடும் பொலித்தீன்கள், பொருடகள் வாங்கும் இலகு பொலித்தீன் பைகள் போன்றவை இதில் ஆதிக்கம் செலுத்துகின்றன.

உணவுச்சாலைகள் மற்றும் திருமண மண்டபங்கள் தங்கள் வியாபார நடவடிக்கையின்போது சாப்பாட்டுத் தட்டுகளைக் கொதிநீரில் கழுவி, சுத்தமான தட்டுகளில் வாழை இலைகளை இட்டுச் சுத்தமான கண்ணாடி அல்லது சில்வர் குவளைகளைப் பாவித்துக் குடிதண்ணீரை வழங்கலாம். உணவுப் பொதியிடுகையில் வாழை இலைகளைப் பாவித்து குளிர்களியையும் பழங்களின் கலவையையும் சுத்தமான சில்வர் ஏந்திகளில் வழங்கி இந்த முயற்சிக்கு வலுச் சேர்க்க முடியும். மேலும், பூமி தினத்தில் தடை செய்யப்படும் பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் கழிவுகள் தங்கள் இடங்களில் சேரும் திண்மக் கழிவுகளில் காணப்படுமாயின் யாழ்ப்பாண மாநகர பொதுச் சுகாதார பொறியியற் பிரிவினரால் குறித்த இடத்துக்கான கழிவகற்றல் சேவை நிறுத்தப்படும்.

இவற்றை எரிப்பதால் உண்டாகும் விளைவுகள் மனிதருக்குத் தீங்கை ஏற்படுத்தும் எனவும், மாநகர எல்லையினுள் குப்பைகளுக்கு எரியூட்டுதல் தவிர்க்கப்படல் வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  
   Bookmark and Share Seithy.comவட மாகாணசபையின் அமைச்சர்களாக அனந்தி, சர்வேஸ்வரன் நாளை பதவியேற்பு!
[Wednesday 2017-06-28 18:00]

வட மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சியைச் சேர்ந்த கந்தையா சர்வேஸ்வரன் ஆகியோர், புதிய அமைச்சர்களாக முதலமைச்சரால் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கந்தையா சர்வேஸ்வரன் கல்வி அமைச்சராகவும், அனந்தி சசிதரன் சமூகசேவைகள் மற்றும் மகளிர் விவகாரம், புனருத்தாரண அமைச்சராகவும் நியமிக்கப்படவுள்ளனர்.வித்தியா கொலை ஆபாச வீடியோவை விற்பதற்கான சதி! - அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்ட பதில் சட்டமா அதிபர்
[Wednesday 2017-06-28 18:00]

சர்வதேசத்துக்கு ஆபாச வீடியோவை விற்பனை செய்யும் நோக்கிலேயே மாணவி வித்தியா பாலியல் வன்கொடுமையின் பின் கொல்லப்பட்டார் என்று பதில் சட்டமா அதிபர் நீதிமன்றில் தெரிவித்தார்.2015 ஆம் ஆண்டு கூட்டுப் பாலியல் வன்கொடுமையின் பின் படுகொலை செய்யப்பட்ட புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கு தொடர்பாக இன்று காலை 9.30 மணிக்கு ஆரம்பமான ட்ரயல் அட்பார் மன்றத்தில் பதில் சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா தமது நிலைப்பாட்டை அறிவித்துள்ளார்.ஆதரவு அணியினருடன் விக்னேஸ்வரன் அவசர கலந்துரையாடல்!
[Wednesday 2017-06-28 18:00]

வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தனது இல்லத்தில் இன்று மாலை 6 மணிக்கு அவசர கலந்துரையாடல் ஒன்றுக்கு அழைப்பு விடுத்துள்ளார். தனக்கு ஆதரவு வழங்கும் மாகாண சபை உறுப்பினர்கள் 15 பேருக்கு மட்டுமே முதலமைச்சரால் இந்தக் கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.கூட்டமைப்பை கூறு போட ஒருபோதும் இடமளிக்கமாட்டோம்! - த.சித்தார்த்தன்
[Wednesday 2017-06-28 18:00]

தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிளவுபட்டால், அரசியலமைப்பு உருவாக்கத்தில் தடைகளை ஏற்படுத்தலாம் என்று சிங்கள பேரினவாத சக்திகளும், அரசாங்கத்திற்குள்ளேயே இருக்கும் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துள்ள நிலையில், கூட்டமைப்பை கூறுபோட ஒருபோதும் இடமளிக்கமாட்டோம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.மனைவியைக் கொலை செய்த இலங்கையரை நாடு கடத்துவதை தடுக்குமாறு கனடிய அரசிடம் கோரிக்கை!
[Wednesday 2017-06-28 18:00]

கனடாவில் மனைவியை கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள சிவலோகநாதன் தனபாலசிங்கத்தை, இலங்கைக்கு நாடு கடத்துவதை தடுக்குமாறு கனேடிய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சந்தேகநபருக்கு எதிரான வழக்கு கனேடிய உயர் நீதிமன்றத்தில் இடம்பெற்று வருகின்றது. இதன்போது, கியூபெக் குரோன் (Quebec Crown) வழக்கறிஞர்கள், சிவலோகநாதனின் நாடு கடத்தலை தடுக்குமாறு கனேடிய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.இரணைதீவு விவகாரத்துக்கு 2 வாரங்களுக்குள் தீர்வு! - ருவான் விஜேவர்த்தன Top News
[Wednesday 2017-06-28 18:00]

கடற்படையினர் வசமுள்ள இரணைதீவு பகுதியை விடுவிப்பது தொடர்பில், ஜனாதிபதியுடன் பேசி இரண்டு வார காலத்துக்குள் உரிய பதிலை வழங்குவதாக, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்த்தன உறுதியளித்தார். இரணைதீவை விடுவிப்பது தொடர்பான கலந்துரையாடல் இன்று, இரணைமாதா நகர்ப் பகுதியில், இடம்பெற்றது.சம்பூர் எரிவாயு மின் திட்டத்தை அரசாங்கம் நிராகரிப்பு!
[Wednesday 2017-06-28 18:00]

இந்திய, ஜப்பானிய நிதியுதவிடன் திரவப் வாயு மின் நிலையங்களை சம்பூரில் அமைக்கும் திட்டத்தை, அரசாங்கம் கைவிட முடிவு எடுத்துள்ளது என, மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய, தெரிவித்தார். இந்தத் திட்டத்துக்குப் பதிலாக, 50 மெகாவொட் சக்தியுடையை, சூரிய மின்நிலையம், அங்கு நிர்மாணிக்கப்படுமென, அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.மயி­லிட்­டித் துறை­மு­கப் பகுதி அடுத்தவாரம் விடுவிப்பு!
[Wednesday 2017-06-28 18:00]

மயி­லிட்­டி துறை­மு­கம் மற்­றும் அத­னோடு இணைந்த 54.6 ஏக்­கர் காணிகள் எதிர்­வ­ரும் 3 ஆம் திகதி மக்­க­ளி­டம் மீள ஒப்­ப­டைக்­கப்­ப­ட­வுள்­ளன. இதன் மூலம் 27 வருடங்களுக்குப் பின்னர், மயி­லிட்டி மக்­கள் தமது சொந்த மண்ணை மிதிக்­க­வுள்­ள­னர். மயி­லிட்­டித் துறை­மு­கம் விடு­விக்­கப்­ப­டு­வது பற்றிய தக­வல், யாழ்ப்­பாண மாவட்­டக் கட்­ட­ளைத் தள­ப­தி­யால், யாழ்ப்­பாண மாவட்­டச் செய­ல­கத்­துக்கு நேற்று மாலை தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.அரைகுறைத் தீர்வைத் திணிக்கவே வட மாகாணசபையில் குழப்பம்! - விக்னேஸ்வரன்
[Wednesday 2017-06-28 18:00]

மிழ் மக்களுடைய கவனத்தினைத் திசைதிருப்பும் முகமாக நன்கு திட்டமிட்ட வகையில் வடமாகாணசபையின் செயற்பாடுகளில் தொடர்ச்சியாகக் குழப்பங்களை உருவாக்கி தமிழ் மக்களையும் தமிழ் அரசியல் செயற்பாட்டாளர்களையும் எனது கவனத்தினையும் திசைதிருப்ப அரசும் அவர்களுக்குச் சார்பான சில தமிழ் அரசியல்வாதிகளும் முயன்று வருகின்றனர் என்று வடமாகாண முதலமைச்சர் சீவி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.யாழ்ப்பாணத்தில் வயோதிபப் பெண்ணைக் கொலை செய்தவருக்கு மரணதண்டனை!
[Wednesday 2017-06-28 18:00]

யாழ். நகரில் வயோதிபப் பெண்ணை கொலை செய்து நிலத் தில் குழிதோண்டிப் புதைத்த குடும்பத் தலைவருக்கு மரண தண்டனை விதித்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. 2009ஆம் ஆண்டு யாழ்ப்பாண நகர் மார்ட்டீன் வீதியில் உள்ள வீடு ஒன்றில் அதன் உரிமையாளர் லில்லி மேரி என்ற வயோதிபப் பெண் கொலை செய்யப்பட்டு அவரது வீட்டின் முற்றத்தில் புதைக்கப்பட்டு சடலமாக மீட்கப்பட்டார்.சுமந்திரன் கொலைச் சதி சந்தேக நபர்கள் யாழ். சிறைச்சாலைக்கு மாற்றம்!
[Wednesday 2017-06-28 18:00]

பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியகுற்றச்சாட்டில் கைது செய்து அனுராதபுரம்சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்ட ஐந்து சந்தேகநபர்களும் 23ம்திகதி கடுமையாகத் தாக்கப்பட்டமை தொடர்பில் உரிய விசாரணை மேற்கொண்டு மன்றுக்குஅறிக்கையிடுமாறு கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.புதிய அரசியல் யாப்பு - ஓகஸ்ட் மாதம் இடைக்கால அறிக்கை!
[Wednesday 2017-06-28 18:00]

புதிய அரசியல் யாப்பு தொடர்பான இடைக்கால அறிக்கை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் சமர்ப்பிக்கப்படவிருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் இன்று இடம்பெற்ற அரசியல் யாப்பு திருத்தம் தொடர்பான செயலமர்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.சர்வதேச மனித உரிமைச் சட்டத்தை இலக்கு வைப்பது ஏன்? - ஐ.நா மனித உரிமை ஆணையாளர் கேள்வி
[Wednesday 2017-06-28 06:00]

சர்வதேச மனித உரிமைகள் சட்டம் இப்போது பலராலும் விமர்சிக்கப்படக் கூடியளவுக்கு எளிதான இலக்காக உள்ளது என்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் ஷெய்ட் ராட் அல் ஹுஸைன் தெரிவித்துள்ளார். லண்டன் சட்ட சங்கத்தில் ஆற்றிய உரையிலேயே, அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.வெளிவிவகாரக் கொள்கை குறித்து ஆராயும் மாநாடு!
[Wednesday 2017-06-28 06:00]

இலங்கையின் வெளியுறவுக் கொள்கை தொடர்பான மாநாடு ஒன்று நாளையும் நாளை மறுதினமும் கொழும்பில் லக்ஷ்மன் கதிர்காமர் நிறுவகத்தில் நடைபெறவுள்ளது. மாநாட்டுக்கு வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க தலைமை தாங்குவார். இதன்போது இலங்கையின் வெளியுறவுக் கொள்கை அடிப்படையிலான தற்போதைய வாய்ப்புகளைப் பெற்றுக் கொள்வது குறித்து ஆராயப்படவுள்ளது.கிளிநொச்சியிலும் போராட்டத்தில் குதித்த சுகாதாரத் தொண்டர்கள்! Top News
[Wednesday 2017-06-28 06:00]

கிளிநொச்சி மாவட்டத்தில் பணியாற்றும் சுகாதாரத் தொண்டர்கள் நேற்று மாலை தொடக்கம் கவனயீர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். சுகாதாரத் தொண்டர்களுக்கு நியமனம் வழங்கவில்லை என வடமாகாணத்தில் போராட்டங்கள் நடைபெற்று வந்த நிலையில் அதற்கான ஆதரவினை கிளிநொச்சி சுகாதார தொண்டர்கள் வழங்கி வந்தனர். இந்த நிலையில் நேற்று பிற்பகல் கிளிநொச்சி சுகாதார தொண்டர்கள் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.பல்கலைக்கழகத்தில் பாடம் நடத்திக் கொண்டிருந்த விரிவுரையாளர் கலாநிதி ஸ்ரீதர் மயங்கி விழுந்து மரணம்!
[Wednesday 2017-06-28 06:00]

சப்ரகமுவ பல்கலைக் கழகத்தில் பாடம் நடத்திக்கொண்டிருந்த விரிவுரையாளர் ஒருவர் மாரடைப்பால் மயங்கி வீழ்ந்து மரணமடைந்தார். மொழியியல்துறை முதுநிலை விரிவுரையாளரான கலாநிதி எஸ்.வை.ஸ்ரீதர் என்பவரே இவ்வாறு மரணமடைந்துள்ளார். நேற்று முன்தினம் சிங்கள மாணவர்களுக்குத் தமிழ் கற்பித்துக்கொண்டிருந்த வேளையிலேயே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.பதிவு செய்யும் தகைமையுடன் 92 அரசியல் கட்சிகள்!
[Wednesday 2017-06-28 06:00]

புதிதாகப் பதிவு செய்து கொள்வதற்கு 95 அரசியல் கட்சிகள் விண்ணப்பம் கோரியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். விண்ணப்பித்துள்ள கட்சிகளில் 92 கட்சிகள், பதிவிற்கான அனைத்து தகுதிகளையும் பூர்த்தி செய்து கொண்டுள்ளதாகவும் இதன்படி எதிர்வரும் காலங்களில் கட்சிப் பதிவு குறித்து ஆராய்ந்து பதிவு வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். தற்போது நாட்டில் 64 அரசியல் கட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.காங்கேசன்துறை இராணுவ முகாம் சிப்பாய் கொழும்பில் சங்கிலி அறுத்த போது மாட்டினார்!
[Wednesday 2017-06-28 06:00]

கொழும்பு, புறக்கோட்டை பஸ்டியன் மாவத்தையில் பஸ் தரிப்பு நிலையத்தில் பெண் ஒருவரிடம் இருந்து தங்கச் சங்கிலியை கொள்ளையிட்டு செல்ல முயற்சித்த இராணுவ வீரர் ஒருவரை பொதுமக்களின் ஒத்துழைப்புடன் பொலிஸார் நேற்று மடக்கிப் பிடித்துள்ளனர்.இராணுவத் தளபதிக்கு ஜெனரலாகப் பதவி உயர்வு - கூட்டுப் படைத் தளபதியாகவும் நியமனம்!
[Wednesday 2017-06-28 06:00]

இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் கிரிஷாந்த டி சில்வா ஜெனரலாக தரமுயர்த்தப்பட்டுள்ளதுடன் பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று செவ்வாய்க்கிழமையிலிருந்து உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இந்த பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. நான்கு நட்சத்திர ஜெனரலாக இதற்கு பின்னர் சேவையாற்றவுள்ளார்.அமெரிக்காவில் முதல் மாணவனாக சாதனை படைத்த தமிழ் மாணவன்! Top News
[Wednesday 2017-06-28 06:00]

அமெரிக்காவில் கல்வி கற்று வரும் தமிழ் மணவனான நிருபன் பகிதரன், Technology High School, Newark ல் உயர்தரக் கல்வியைக் கற்று அதிகூடிய புள்ளிகளைப் பெற்று, முதல் நிலை மாணவனாக சாதனை படைத்துள்ளார். இதன் காரணமாக பல்கலைக்கழகத்தில் மருத்துவ, பொறியியல் துறைகளில் கல்வி கற்கத் தகைமை பெற்றுள்ளார். Rutgers University புலமைப்பரிசில் வழங்கி, கல்வியைத் தொடர வாய்ப்பளித்துள்ளது.


Easankulasekaram-Remax-300716
Elankeeran-debt-solution-25-06-2016
Tharsi-home-15-10-2016
SELVI-HOMES-09-02-17
Mahesan-Remax-169515-Seithy
<b> 10-06-2017 அன்று கனடா - ரொரன்டோவில்          இராகாலயா நுண்கலைக்கூடம் வழங்கிய கானமாருதம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b> 03-06-2017 அன்று கனடா - ரொரன்டோவில் நடைபெற்ற இதயராகங்கள் இசை நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>14-05-2017 அன்று கனடா - ரொரன்டோவில் நடைபெற்ற தாயின்மடியில் நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா