Untitled Document
January 22, 2018 [GMT]
  • Welcome
  • Welcome
புதன்கிழமை மோடியைச் சந்திக்கிறார் ரணில்!
[Friday 2017-04-21 18:00]

பிரதமர் ரணில் விக்ரமசிங்க  எதிர்வரும் 25ஆம் திகதி புதுடில்லி செல்லவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. 
எதிர்வரும் 25ஆம் திகதி முதல் 29ஆம் திகதி வரை பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்தியாவில் தங்கியிருப்பார் என தெரிவிக்கப்படுகின்றது.  இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தின் மூலோபாயங்கள் குறித்து ஆராய்வதற்காகவே அவர் இந்தியாவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 25ஆம் திகதி புதுடில்லி செல்லவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. எதிர்வரும் 25ஆம் திகதி முதல் 29ஆம் திகதி வரை பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்தியாவில் தங்கியிருப்பார் என தெரிவிக்கப்படுகின்றது. இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தின் மூலோபாயங்கள் குறித்து ஆராய்வதற்காகவே அவர் இந்தியாவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

  

பிரதமர் ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 26ஆம் திகதி இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோன்று, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இந்திய வௌிவிவகார அமைச்ச் சுஷ்மா சுவராஜ், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் வீதி போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் கப்பற்துறை அமைச்சர் நித்தின் கட்காரி ஆகியோருடனும் கலந்துரையாடல்களை நடாத்தவுள்ளார்.

  
   Bookmark and Share Seithy.com50 ஆயிரம் கனடிய டொலர் உதவியை பெற முடியாத நிலையில் வடக்கு மாகாணசபை! - முதலமைச்சர்
[Monday 2018-01-22 07:00]

வடக்கு மாகாணசபைக்கு கனடியத் தமிழர்கள் 50 ஆயிரம் டொலர் நிதியை வழங்க முன்வந்தனர். ஆனால் முதலமைச்சர் நிதியம் இன்னமும் ஆரம்பிக்கப்படவில்லை. அதனால் அந்த நிதியைப் பெற்றுக் கொள்ள முடியாதுள்ளது என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.சம்பந்தனுக்கு முடியாவிட்டால் விட்டுப் போ! - கஜேந்திரகுமார் ஆவேசம்
[Monday 2018-01-22 07:00]

நடக்கப்போகின்ற சதித்திட்டங்களுக்கு துணை போகாமல் உரிமையைப் பெற்றெடுப்பதற்கான பங்காளர்களாகவும் செயற்பாட்டாளர்களாகவும் முன்வாருங்கள். எங்களது மக்களை ஏமாற்றி அழிக்காதீர்கள் என்று அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,தெரிவித்துள்ளார்.ஹக்கீம், ரிஷாட் போல நாள் ஏமாளி இல்லை! - என்கிறார் மனோ கணேசன்
[Monday 2018-01-22 07:00]

தமிழர்கள் செறிந்து வாழும் பிரதேசம், கொச்சிக்கடை. அங்கு வாழும் தமிழ​ர்களிடம் ஒரு திமிர் இருக்கிறது. தமிழ் திமிர் இருக்கிறது. அவர்க​ளை போலவே நானும் திமிரானவன் என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.மக்களின் பணத்தை திருடியவர்களை மன்னிக்கமாட்டேன்! - மட்டக்களப்பில் ஜனாதிபதி
[Monday 2018-01-22 07:00]

நாட்டு மக்களின் பணத்தை திருடிய எவருக்கும் மக்கள் மன்னிப்பு வழங்கக் கூடாது. அத்தகையவர்களுக்கு மன்னிப்பு வழங்க நானும் தயாரில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.ஆனைக்கோட்டையில் வயோதிப பெண் அடித்துக் கொலை!
[Monday 2018-01-22 07:00]

மானிப்பாய் - ஆனைக்கோட்டை பகுதியில் வயோதிபப் பெண் ஒருவர் மர்ம நபர்களினால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறினர். தனிமையில், உறவினர் ஒருவரின் உதவியுடன் வாழ்ந்து வந்த நிலையில் கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது. 72 வயதுடைய ஜெகநாதன் சத்தியபாமா என்ற மூதாட்டியே தலையில் அடிகாயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.தமிழ் மக்களை ஈபிஆர்எல்எப் கொன்று குவித்ததை மக்கள் மறந்து விடமாட்டார்கள்! - சிறீதரன்
[Monday 2018-01-22 07:00]

நாங்கள் அரசாங்கத்திடம் இரண்டு கோடி ரூபா பணத்தை வாங்கியதை சிவசக்தி ஆனந்தன் நிரூபித்துக் காட்டுவாரா என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் சவால் விடுத்துள்ளார்.உள்ளூராட்சித் தேர்தலில் ஐதேகவுக்கு கூடுதல் வாய்ப்பு! - புலனாய்வு அறிக்கையால் சலசலப்பு
[Monday 2018-01-22 07:00]

உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில்தேசிய புலனாய்வு சேவை நடத்திய இரகசிய ஆய்வு ஐதேகவுக்கு சாதகமாக இருந்ததால், அரசாங்கத்துக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.கஞ்சா பிடிக்கப்போன பொலிசார் யானையிடம் மாட்டினர்! - துப்பாக்கியை போட்டு விட்டு ஓட்டம்
[Monday 2018-01-22 07:00]

கதிர்காமம் - லுணுகம்வேஹெர வனப் பகுதியில் பொலிஸ் அதிகாரிகள் குழுவினர், கஞ்சா சுற்றிவளைப்புக்காக சென்ற போது, காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகினர். பொலிஸ் உத்தியோகத்தர்கள் உயிரைக் காப்பாற்ற தப்பியோடிய போது, ஒருவரது ரி- 56 ரக துப்பாக்கி தவறிப் போயுள்ளது. இதேவேளை, காட்டு யானையின் தாக்குதலால் இரு கான்ஸ்டபில்கள் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.யாழ். மாநகர மேயர் வேட்பாளர் மணிவண்ணனிடம் பொலிசார் விசாரணை!
[Monday 2018-01-22 07:00]

தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் இரட்ணஜீவன் கூல் வழங்கிய முறைப்பாட்டையடுத்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாண மாநகர சபை மேயர் வேட்பாளர் வி. மணிவண்ணனிடம் பொலிஸார் நேற்று விசாரணை மேற்கொண்டனர்.இனி இலங்கையிலும் செயற்கை மழை?
[Monday 2018-01-22 07:00]

விவசாயத்துறையில் பெரும் புரட்சியொன்றை ஏற்படுத்தும் வகையில் செயற்கை மழை பெய்விக்கும் தொழில்நுட்பத்தை இலங்கைக்கு வழங்க தாய்லாந்து விருப்பம் வெளியிட்டுள்ளது.கொழும்பு ஒரு சிங்கள நகர் அல்ல! - முதலமைச்சர்
[Sunday 2018-01-21 20:00]

கொழும்பு ஒரு சிங்கள நகர் அல்ல. அது பல் இன, பல் சமய, பன் மொழி பேசும் மக்கள் வாழும் நகரம். நாட்டின் தலைநகரம் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.ஜெனிவாவை சமாளிக்க தேர்தலுக்கு பின் திடீர் நகர்வுகளுக்கு தயாராகும் அரசு!
[Sunday 2018-01-21 20:00]

ஜெனிவா கூட்டத்தொடருக்கு முன்பாகவே பொறுப்புக்கூறல் பொறிமுறை குறித்து சில முக்கிய நகர்வுகளை கையாள இலங்கை அரசாங்கம் தயாராகி வருகின்றது. தேர்தல் முடிந்தவுடன் அடுத்தகட்டமாக காணமல்போனோர் சட்டமூலம், பயங்கரவாத திருத்த சட்டம் குறித்து பாராளுமன்றத்தில் ஆராயப்படவுள்ளதாக தெரியவருகின்றது.சதுரிக்கா- மஹிந்த சந்திப்பு - அரசியலில் குழப்பம்! Top News
[Sunday 2018-01-21 20:00]

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகளின் சந்திப்பு தொடர்பில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.பொலன்னறுவை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறிபால கம்லத்தின் மகள் ரஞ்சா, டெங்கு நோயினால் அகால மரணமடைந்தார்.அன்னாரின் இறுதிக் கிரியை நடவடிக்கைகள் நேற்று நடைபெற்றது. இதில் பல்வேறு அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டனர். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக பொலநறுவை சென்றிருந்தார்.பெண் அதிபரை மண்டியிட வைத்த ஊவா முதல்வருக்கு எதாிராக விசாரணை! - பொலிஸ் மா அதிபருக்கு ஜனாதிபதி உத்தரவு
[Sunday 2018-01-21 20:00]

ஊவா மாகாண முதலமைச்சரான சாமர சம்பத் தஸநாயக்க, தனது உத்தியோகபூர்வ இல்லத்திற்கு தன்னை அழைத்து அச்சுறுத்தியதோடு, முழந்தாழிட்டு மன்னிப்பும் கோர வைத்ததாக, பதுளை மகளிர் தமிழ் பாடசாலை அதிபர் தரப்பில் இருந்து குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்த விடயம் குறித்து விரைவாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொலிஸ்மா அதிபர் பூஜித்த ஜெயசுந்தரவுக்கு பணித்துள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.மகிந்த அணி வேட்பாளர்கள் கூண்டோடு கட்சி தாவினர்!
[Sunday 2018-01-21 20:00]

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தாமரை மொட்டு அணியின் சார்பில் ஏறாவூர் நகர சபைக்கான வேட்பாளர்கள் அனைவரும் ஐக்கிய தேசியக் கட்சி சார்பிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு தாவியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த தாவல் நிகழ்வு நேற்று நள்ளிரவு ஏறாவூரில் உள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தலைவரும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் முன்னிலையில் இடம்பெற்றது.பூநகரியில் தன்னைத்தானே சுட்டுக் கொண்ட இராணுவச் சிப்பாய்!
[Sunday 2018-01-21 20:00]

கிளிநொச்சி - பூநகரிப் பகுதியில் உள்ள 66வது படைத் தலைமையகத்தில் இராணுவ சிப்பாய் ஒருவர் தனது துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுள்ளார். இன்று காலை அவர் ரி- 56 ரக துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்ட போது, சன்னம் அவரது இடக்காலில் பட்டு காயம் அடைந்த நிலையில், கிளிநொச்சி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருவதாக கிளிநொச்சி இராணுவத் தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.கிளிநொச்சி முழங்காவில் மகாவித்தியாலயத்தில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம்! -கனடா செந்தில் குமரன் வழங்கிவைப்பு Top News
[Sunday 2018-01-21 20:00]

தாயகத்தில் ஏராளமானோர் சுத்தமில்லாத குடி நீரை அருந்துவதால் சிறுநீரக நோய்க்கு உள்ளாகி அவதியுற்று இறக்கும் நிலை பெருகி வருகின்றது. இந்நிலையில்தாயகத்தில் யுத்தத்தின் வடுக்களைச்சுமந்தும் நோய்களின் தாக்கங்களினாலும் துன்பங்களைச்சந்தித்து வரும் தாயக உறவுகளுக்கு உயிர்காக்கவும் உதவிக்கரம் நீட்டுவதிலும் கனடா செந்தில்குமரன் அவர்களின் நிவாரண நிதியமும் கனடா வாழ் உறவுகளும் பெரும்பங்கை ஆற்றிவரும் நிலையில் இன்றைய தினம் பூநகரிப்பிரதேசத்தின் கிளி/முழங்காவில் மகாவித்தியாலயத்தில் குடி நீர் சுத்திகரிப்பு இயந்திரம் வழங்கும் நிகழ்வு பாடசாலைமுதல்வர் திரு பத்மநாதன் ஆனந்தராசா தலைமையில் சிறப்புற இடம்பெற்றது.நாளை கொழும்பு வருகிறார் சிங்கப்பூர் பிரதமர்!
[Sunday 2018-01-21 20:00]

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பின் பேரில் சிங்கப்பூர் பிரதமர் லீ ஷியன் லூங் நாளை இலங்கை வரவுள்ளார். சிங்கப்பூர் பிரதமர் 24 ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருப்பார். இதன்போது அவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருடன் இருதரப்பு பேச்சுகளில் ஈடுபடவுள்ளார். சுதந்திர வர்த்தக உடன்படிக்கை தொடர்பிலும் இதன்போது முக்கிய பேச்சு இடம்பெறவுள்ளது.தமிழ்க் காங்கிரஸ் ஆதரவாளர்கள் கைது!
[Sunday 2018-01-21 20:00]

தேர்தல் விதிமுறைகளை மீறி அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் பரப்புரை சுவரொட்டிகளை ஒட்டினார்கள் என்ற சந்தேகத்தில் இரண்டு பேர் கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கோப்பாய் பகுதியில் நேற்றிரவு தேர்தல் சுவரொட்டிகளை ஒட்டிய போதே அவர்கள் கைது செய்யப்பட்டனர்.கல்வி அமைச்சர் பதவியில் இருந்து விலகினார் ஊவா மாகாண முதலமைச்சர்!
[Sunday 2018-01-21 20:00]

ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தனது கல்வி அமைச்சர் பதவியில் இருந்து விலகியுள்ளார்.பாடசாலை அதிபர் ஒருவரை முழந்தாழிட வைத்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைகள் நிறைவடையும் வரை தான் கல்வி அமைச்சர் பதவியை இராஜினாமா செய்யப் போவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பான உத்தியோகப்பூர்வ கடிதத்தை ஜனாதிபதி மற்றும் ​ஆளுநருக்கு விரைவில் அனுப்பவுள்ளதாகவும் ஊவா மாகாண முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.


Tharsi-home-15-10-2016
SELVI-HOMES-09-02-17
Easankulasekaram-Remax-300716
Mahesan-Remax-169515-Seithy
<P>
 <b> 13-08-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற இசை மாலைப் பொழுது - 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
</p>
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 29ம் 30ம்தி கதிகளில் நடைபெற்ற World Tamil Badminton Federation 5th annual tournament நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 7ம் 8ம் 9ம்தி கதிகளில் நடைபெற்ற குதூகலம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா