Untitled Document
February 24, 2018 [GMT]
  • Welcome
  • Welcome
தென் கொரியாவில் தவளையை சமைத்து சாப்பிட்ட நபர் மரணம்: - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நண்பர்கள்
[Friday 2017-04-21 18:00]

தென் கொரியா நாட்டில் தவளையை சமைத்து சாப்பிட்ட நண்பர்களில் ஒருவர் துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.தென் கொரியாவில் உள்ள Daejeon நகரில் தான் இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.இப்பகுதியில் தவளைகளை பிடித்து வந்து சமைத்து சாப்பிடுவது வழக்கமான ஒரு நிகழ்வாகும்.இந்நிலையில், சில தினங்களுக்கு முன்னர் 57 வயதான நபர் ஒருவர் நண்பர்களுடன் தவளைகளை பிடித்து வரச் சென்றுள்ளார்.

தென் கொரியா நாட்டில் தவளையை சமைத்து சாப்பிட்ட நண்பர்களில் ஒருவர் துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.தென் கொரியாவில் உள்ள Daejeon நகரில் தான் இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.இப்பகுதியில் தவளைகளை பிடித்து வந்து சமைத்து சாப்பிடுவது வழக்கமான ஒரு நிகழ்வாகும்.இந்நிலையில், சில தினங்களுக்கு முன்னர் 57 வயதான நபர் ஒருவர் நண்பர்களுடன் தவளைகளை பிடித்து வரச் சென்றுள்ளார்.

  

நீண்ட நேரத்திற்கு பிறகு 5 தவளைகளை பிடித்து வந்துள்ளனர். பின்னர், வீட்டில் வைத்து தவளைகளை சமைத்து சாப்பிட்டுள்ளனர். சிறிது நேரத்தில் 57 வயதான நபர் திடீரென வாந்தி எடுத்து மயக்கமாகியுள்ளார்.அதிர்ச்சியான நண்பர்கள் அவரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், சிகிச்சை பலனளிக்காத காரணத்தினால் மறுநாள் அவர் உயிரிழந்துள்ளார்.நபர் சாப்பிட்ட உணவை சோதனை செய்தபோது அதில் தவளை மூலமாக உணவில் விஷம் பரவியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.ஆனால், அதிர்ஷ்டவசமாக நண்பர்கள் உடனடியாக சிகிச்சை மேற்கொண்டதால் அவர்கள் உயிர் பிழைத்துள்ளனர்.தவளைகள் அனைத்து பார்ப்பதற்கு ஒரே தோற்றத்தில் இருந்தாலும் கூட சில வகையான தவளைகள் விஷமிக்கதாகும்மேலும், இதுபோன்ற தவளைகளுக்கு ஆபத்து ஏற்படும் நேரத்தில் தனது தோல் வழியாக விஷத்தை வெளியேற்றி அதன் மூலம் எதிரியை கொல்ல முயற்சிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

  
   Bookmark and Share Seithy.comதொடரும் மரணங்கள்: - சிரியாவில் போர்நிறுத்தத்தை கொண்டுவர தடுமாறும் ஐ.நா
[Saturday 2018-02-24 08:00]

கடந்த வியாழன் முதல் அடுத்தடுத்த வாக்கெடுப்புகள் தடைபெற்றுவரும் சூழலில், இன்று மீண்டும் ஒரு வாக்கெடுப்பை நடத்துவதற்கான முயற்சி மேற்கொள்ளப்படவுள்ளது. உதவி மற்றும் மருத்துவப் பொருட்களை கொண்டு செல்வதற்காக 30 நாட்கள் போர்நிறுத்தம் மேற்கொள்ளப்படவேண்டும் என்று அந்தத் தீர்மானத்தின் நகலில் கூறப்பட்டுள்ளது. அதில் மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும் என்று சிரியாவின் முக்கியக் கூட்டாளியான ரஷ்யா வலியுறுத்திவரும் நிலையில், போர்நிறுத்தம் அமலாவதை ரஷ்யா தமாதிப்பதாக மேற்கத்திய நாடுகள் குற்றம் சாட்டியுள்ளன.துப்பாக்கி கலாசாரத்துக்கு முடிவு கட்ட அடுத்தடுத்து நடவடிக்கைகள் எடுக்கப்படும் : - அதிபர் டிரம்ப் உறுதி
[Saturday 2018-02-24 08:00]

அமெரிக்காவில் அண்மைக் காலமாக பள்ளிகள், கல்லூரிகள், கல்வி நிறுவனங்களில் துப்பாக்கிச்சூடு அதிகரித்து வருகிறது. கடந்த 14-ந் தேதி புளோரிடா, பார்க்லேண்ட் டக்ளஸ் உயர்நிலைப்பள்ளியில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 17 பேர் பலியாகினர். ஏற்கனவே தங்கு சர்வசாதாரணமாக துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டு வருவதற்கு எதிர்ப்புக்குரல்கள் எழுந்து வரும் நிலையில், இந்த சம்பவம் அதற்கு மேலும் வலு சேர்த்துள்ளது. பார்க்லேண்ட் சம்பவத்தில் உயிர் தப்பிய மாணவர்கள், புளோரிடா தலைநகர் டலஹாசியில் சட்டசபை முன் நேற்று போராட்டம் நடத்தினர்.இரட்டை கார் வெடிகுண்டு தாக்குதல்: - சோமாலியாவில் 18 பேர் பலி
[Saturday 2018-02-24 08:00]

கிழக்கு ஆப்பிரிக்க நாடான சோமாலியா தலைநகர் மொகடிசுவில் அரசு அலுவலகங்களை குறிவைத்து நேற்று அடுத்தடுத்து இரட்டை கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் சுமார் 18 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். முதல் தாக்குதல் தற்கொலைப்படை தீவிரவாதி காரில் வெடிகுண்டு பொருள்களை நிரப்பி வெடிக்கச் செய்தான்.இந்தோனேசியாவில் இரு ஆண்டுகளில் 20 முட்டைகள் இட்ட வினோத சிறுவன்!
[Saturday 2018-02-24 08:00]

கோழி முட்டை இடுவது வழக்கமானது. ஆனால், கோழியை போல் முட்டையிடும் சிறுவன் ஒருவர் உள்ளார். இந்தோனேசியாவில் சிறுவன் ஒருவர் இரண்டு ஆண்டுகளாக முட்டை இட்டு வரும் வினோத சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.கல்லூரி மாணவிகளை கடத்திய போகோ தீவிரவாதிகள்: - தாக்குதல் நடத்தி அதிரடியாக மீட்ட ராணுவம்
[Friday 2018-02-23 18:00]

நைஜீரியாவில் போகோ ஹாரம் தீவிரவாதிகள் கடத்திய 76 கல்லூரி மாணவிகளை அந்நாட்டு ராணுவத்தினர் அதிரடியாக மீட்டுள்ளனர். வடகிழக்கு நைஜீரியாவில் உள்ள ஒருபகுதியில் உள்ள அரசு மகளிர் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் நேற்று முன்தினம் இந்த கடத்தல் சம்பவம் நிகழ்ந்துள்ளது. தீவிரவாதிகள் கல்லூரி வளாகத்திற்குள் புகுந்து மாணவிகள் மீது திடீர் தாக்குதல் நடத்தினர். பிறகு 91 மாணவிகளை தீவிரவாதிகள் கடத்தி சென்றதாக அதிர்ச்சி தகவல் வெளியானது. இதனால் அச்சமடைந்த மாணவியர்களின் பெற்றோர்கள் கல்லூரியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.சூப்பர்நோவா எனப்படும் வானியல் நிகழ்வை தற்செயலாக படம்பிடித்த தன்னார்வலர்: - குவியும் பாராட்டுகள்
[Friday 2018-02-23 18:00]

விண்வெளியில் நட்சத்திரம் பெரும் வெளிச்சத்துடன் வெடித்துச்சிதரும் சூப்பர்நோவா எனப்படும் வானியல் நிகழ்வை தன்னார்வலர் ஒருவர் தற்செயலாக படம்பிடித்திருக்கிறார். அர்ஜென்டினாவை சேர்ந்த விக்டர் பூஸோ என்பவர் வானியல் ஆய்வுகளில் தன்னார்வ அடிப்படையில் ஈடுபடுபவர். கடந்தாண்டு செப்டம்பரில் தனது வானியல் தொலைநோக்கியில் கேமராவை பொருத்தி சோதனை செய்துள்ளார். பூமியிலிருந்து 6 கோடியே 5 லட்சம் ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள என்.ஜி.சி.613 என்ற விண்மீன் திரளை நோக்கி கேமரா வைக்கப்பட்டது.அமெரிக்காவில் ஒரு பெண்ணின் ஒரே ட்விட்டால் 1.3 பில்லியன் டொலர் நஷ்டம்!
[Friday 2018-02-23 08:00]

அமெரிக்காவின் தொலைக்காட்சி பிரபலம், கிம் கர்தஷியனின் தங்கை கெய்லி ஜென்னர் பதிவிட்ட ஒரு ட்விட்டால், ஸ்னாப்சேட் நிறுவனத்திற்கு சுமார் 1.3 பில்லியன் டொலர் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. கெய்லி ஜென்னர், அமெரிக்காவின் மொடல் மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளர் ஆவார். இவர், பிரபல தொலைக்காட்சி பிரபலம் கிம் கர்தஷியனின் தங்கை, சமூக வலைதளத்தில் இவரை பல கோடி பேர் பின் தொடர்கின்றனர். பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளம் ஸ்னாப்சேட். இந்த வலைதளத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு, சில நாட்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டது.மனைவியுடன் நேரம் செலவிட தவற மாட்டேன்: - கனடா பிரதமரின் அழகான காதல் கதை
[Friday 2018-02-23 08:00]
கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு சோபி க்ரீகொய்ரி என்ற பெண்ணுடன் கடந்த 2005-ஆம் ஆண்டு மே 28-ஆம் திகதி திருமணம் நடைபெற்றது. இது காதல் திருமணமாகும், மிக இளம் வயதில் ட்ரூடோவும், சோபியும் மொன்றியலில் வளர்ந்தார்கள். சோபியா, ஜஸ்டினின் சகோதரர் மைக்கேலின் பள்ளி வகுப்பு தோழியாவார்.ஜேர்மனியில் பாலியல் குற்றங்களுக்காக மீண்டும் சிறை செல்லும் பாதிரியார்!
[Friday 2018-02-23 08:00]

ஜேர்மனியில் பாலியல் குற்றங்களுக்காக ஏற்கனவே சிறை சென்ற முன்னாள் பாதிரியார் ஒருவர் 108 பாலியல் குற்றச்சாட்டுகளின் பேரில் மீண்டும் சிறை செல்லவிருக்கிறார்.Thomas Maria B (53) என்னும் அந்த முன்னாள் கத்தோலிக்க பாதிரியார் ஏற்கனவே பாலியல் குற்றங்களுக்காக 2003 முதல் 2009 வரை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.அரசுப் படைகளின் தொடர் தாக்குதல்: - சிரியாவில் 5 நாளில் 400 பேர் பலி
[Friday 2018-02-23 07:00]

சிரியா நாட்டில் கிளர்ச்சியாளர்களை குறிவைத்து அரசுப் படையினர் தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதலுக்கு கடந்த 5 நாட்களில் 400-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர் என போர் மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. சிரியாவில் கிளர்ச்சியாளர்களை குறிவைத்து அரசு ஆதரவுப் படையினர் கடந்த ஒரு வார காலமாக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். கடந்த 2013-ம் ஆண்டுக்கு பிறகு இப்படி ஓர் அதிரடி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.என்னை ஒழித்துக்கட்ட சதி நடக்கிறது: - நவாஸ் ஷெரீப்
[Friday 2018-02-23 07:00]

கட்சித்தலைவர் பதவியில் இருந்து சுப்ரீம் கோர்ட்டால் தகுதி நீக்கம் செய்யப்பட்டு உள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், “அரசியலில் இருந்து என்னை ஒழித்துக்கட்ட சதி நடக்கிறது என்று கூறினார். பாகிஸ்தானில் பிரதமராகவும், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியின் (நவாஸ்) தலைவராகவும் பதவி வகித்து வந்தவர் நவாஸ் ஷெரீப். இவர் “பனாமா கேட்’ ஊழல் வழக்கில் கடந்த ஆண்டு சுப்ரீம் கோர்ட்டால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து அவர் பிரதமர் பதவியையும், கட்சித்தலைவர் பதவியையும் ஒரு சேர இழந்தார்.வங்காளதேசத்தில் ரெயில் கூரையில் இருந்து விழுந்து 4 பேர் பலி: - ஓசிப் பயணத்தால் வந்த வினை
[Wednesday 2018-02-21 17:00]

வங்காளதேசம் நாட்டின் வடக்கு பகுதியில் தினஜ்பூர் நோக்கி சென்ற டுருடோஜன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் சிலர் பயணச்சீட்டு இல்லாமல் ரெயில் கூரையின் மீது அமர்ந்து பயணம் செய்தனர். அந்த ரெயில் ராணிநகர் நிலையத்தை நெருங்கியபோது மின்சாரம் கடத்தும் கம்பத்தின் இடையில் ரெயில் புகுந்து சென்றது.சிரியாவில் அரசுப்படைகளின் தாக்குதலில் குழந்தைகள் உட்பட அப்பாவி பொதுமக்கள் 250 பேர் பலி!
[Wednesday 2018-02-21 17:00]

சிரியாவில் கிளர்ச்சியாளர்களின் பிடியில் உள்ள பகுதியில் அந்நாட்டு ராணுவம் நடத்திய பயங்கர தாக்குதலில் 250-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பலியாகினர். 4 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வசித்து வரும் கவுட்டா பகுதியில் நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் 58 குழந்தைகள், 42 பெண்கள் உள்பட 250-க்கும் அதிகமான பொதுமக்கள் பலியாகியுள்ளனர். 1000-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். அதிபர் படை தொடர்ந்து தாக்குதலை தீவிரப்படுத்தி வருவதால் உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக மக்கள் கூட்டம் கூட்டமாக இடம் பெயர்ந்து வருகின்றன.அமெரிக்காவில் கழிப்பறை இல்லாத வீட்டில் பிள்ளைகளை அடைத்து வைத்த பெற்றோர்!
[Wednesday 2018-02-21 16:00]

அமெரிக்காவில் 4 பிள்ளைகளை அவர்களின் வளர்ப்பு பெற்றோர் வீட்டில் உள்ள படுக்கையறையில் உணவு மற்றும் கழிப்பறை வசதியில்லாமல் அடைத்து வைத்திருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அரிசோனா மாகாணத்தில் உள்ள டுக்சன் நகரில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது.பெனிடோ (69) மற்றும் கரோல் குடிரீஸ் (64) தம்பதி 6லிருந்து 12 வயதுடைய 4 பிள்ளைகளை தத்தெடுத்து வளர்த்து வந்தனர்.ரஷ்யாவில் குடும்பத்தாருக்கு வீடியோ அனுப்பிய பின்னர் தற்கொலை செய்து கொண்ட சகோதரிகள்!
[Wednesday 2018-02-21 16:00]

ரஷ்யாவில் குடும்பத்தாருக்கு வீடியோ அனுப்பிய பின்னர் இரண்டு சகோதரிகள் ஒன்றாக தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Izhevsk நகரத்தில் வசித்து வந்த Maria Vinogradova(12) மற்றும் Anastasia Svetozarova(15) ஆகிய ஒன்றுவிட்ட சகோதரிகள் தான் இந்த துயரச் செயலில் ஈடுபட்டுள்ளனர்.பம்ப்ஸ்டாக் இயந்திர துப்பாக்கிக்கு தடை விதிக்கும் உத்தரவில் கையெழுத்திட்ட டொனால்ட் டிரம்ப்!
[Wednesday 2018-02-21 08:00]

கடந்த சில தினங்களுக்கு முன் நிகழ்ந்த ஃப்ளோரிடா பள்ளி துப்பாக்கிச் சூட்டிற்கு இந்த இயந்திரம்தான் பயன்படுத்தப்பட்டது. ஃப்ளோரிடாவில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் மாணவர்கள் பெற்றோர்கள் என 17 பேர் இறந்தனர். இதனால், அமெரிக்க மக்கள் ஆயுதக் கொள்கையில் மாற்றம் கொண்டு வர வலியுறுத்தி உள்ளூர் நேரப்படி புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டு இருந்தனர்.சொந்த மகனை பெட்டிக்குள் அடைத்து கடத்திய தந்தை: - விசாரணையை துவக்கிய நீதிமன்றம்
[Wednesday 2018-02-21 07:00]

ஸ்பெயின் எல்லையில் நபர் ஒருவர் தமது 8 வயது மகனை பெட்டிக்குள் அடைத்து கடத்திய விவகாரத்தில் நீதிமன்றம் விசாரணையை துவக்கியுள்ளது.கடந்த 2015 ஆம் ஆண்டு பெட்டிக்குள் வைத்து 8 வயது சிறுவன் கடத்தப்படுவதாக வெளியான புகைப்படம் உலக அளவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.தென்கொரியாவில் வடிவமைக்கப்பட்ட உலகின் மிக இருட்டான கட்டிடம்!
[Tuesday 2018-02-20 17:00]

உலகின் மிக இருட்டான கட்டிடம் தென் கொரியாவில் திறக்கப்பட்டுள்ளது. இந்த கட்டிடம் பொதுமக்கள் பார்வைக்கு விடப்பட்டுள்ளது. குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் ஒரு பகுதியாக ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் சார்பில் லண்டன் கட்டிடக்கலை நிபுணர்களைக் கொண்டு இந்த வித்யாசமான கட்டிடத்தை வடிவமைத்துள்ளனர். தூய்மை மற்றும் ஆரோக்கியமான எதிர்காலத்தை குறிக்கும் வகையில் இந்த கட்டிடம் உருவாக்கப்பட்டுள்ளதாக வடிவமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.கனடாவில் பல் மருத்துவரின் தவறான சிகிச்சையால் சிறுமிக்கு நேர்ந்த பரிதாபம்!
[Tuesday 2018-02-20 09:00]

கனடாவில் பல் மருத்துவரின் தவறான சிகிச்சையால் இளம் சிறுமியின் மூளை பாதிக்கப்பட்டுள்ள சம்பவத்தால் பெற்றோர்கள் மன வேதனையில் உறைந்துள்ளனர்.2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பல் சிகிச்சைக்காக Amber Athwal என்னும் நான்கு வயது சிறுமி Dr. William Mather என்னும் பல் மருத்துவரின் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாள்.அங்கு அவளுக்கு பல் சிகிச்சைக்காக மயக்க மருந்து செலுத்தப்பட்டது,சிகிச்சைக்குப் பின் அவளுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.உறுப்புகளை தானம் செய்ததன் மூலம் நான்கு பேரை வாழ வைத்த சிறுமி!
[Tuesday 2018-02-20 09:00]

கார் விபத்தில் பலியான சிறுமி ஒருத்தி தனது உறுப்புகளை தானம் செய்ததன்மூலம் நான்கு பேரை வாழ வைத்துள்ளதை நினைவு கூறுகிறார் அவளது தந்தை.கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் பிரித்தானியாவிலுள்ள Devonஇல் நிகழ்ந்த கார் விபத்தொன்றில் சிக்கி 9 வயது Keiraவும் அவளது தாய் மற்றும் சகோதரனும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.


SELVI-HOMES-09-02-17
Tharsi-home-15-10-2016
Easankulasekaram-Remax-300716
Mahesan-Remax-169515-Seithy
<P>
 <b> 13-08-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற இசை மாலைப் பொழுது - 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
</p>
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 29ம் 30ம்தி கதிகளில் நடைபெற்ற World Tamil Badminton Federation 5th annual tournament நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 7ம் 8ம் 9ம்தி கதிகளில் நடைபெற்ற குதூகலம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா