Untitled Document
June 28, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
நிலமோசடி வழக்கில் நீதிமன்றில் ஆஜரான நடிகர்கள் வடிவேலு சிங்கமுத்து!
[Friday 2017-04-21 16:00]

சென்னை தாம்பரத்தை அடுத்த முடிச்சூரில் நடிகர் வடிவேலு 2002-ம் ஆண்டு ராமச்சந்திரன் என்பவரின் வாரிசுகளிடம் இருந்து நிலத்தை வாங்கினார். இதற்கு ‘பவர் ஏஜெண்டாக’ நடிகர் சிங்கமுத்து செயல்பட்டார். இந்த நிலத்தை சுற்றி சுற்றுச்சுவர் கட்ட வடிவேலு முயன்றபோது, பழனியப்பன் என்பவர் நிலத்துக்கு உரிமை கொண்டாடினார்.இதுகுறித்து விசாரித்தபோது, நிலத்தின் உரிமையாளரான மறைந்த ராமச்சந்திரன், தொழில் முதலீட்டு நிறுவனத்திடம் இந்த நிலத்தை அடமானம் வைத்திருந்தார். கடன் தொகையை திருப்பி செலுத்தாததால் 2006-ம் ஆண்டு தொழில் முதலீட்டு நிறுவனம் அந்த நிலத்தை ஏலம் விட்டது. அதை பழனியப்பன் ஏலம் எடுத்தது வடிவேலுவுக்கு தெரியவந்தது.

சென்னை தாம்பரத்தை அடுத்த முடிச்சூரில் நடிகர் வடிவேலு 2002-ம் ஆண்டு ராமச்சந்திரன் என்பவரின் வாரிசுகளிடம் இருந்து நிலத்தை வாங்கினார். இதற்கு ‘பவர் ஏஜெண்டாக’ நடிகர் சிங்கமுத்து செயல்பட்டார். இந்த நிலத்தை சுற்றி சுற்றுச்சுவர் கட்ட வடிவேலு முயன்றபோது, பழனியப்பன் என்பவர் நிலத்துக்கு உரிமை கொண்டாடினார்.இதுகுறித்து விசாரித்தபோது, நிலத்தின் உரிமையாளரான மறைந்த ராமச்சந்திரன், தொழில் முதலீட்டு நிறுவனத்திடம் இந்த நிலத்தை அடமானம் வைத்திருந்தார். கடன் தொகையை திருப்பி செலுத்தாததால் 2006-ம் ஆண்டு தொழில் முதலீட்டு நிறுவனம் அந்த நிலத்தை ஏலம் விட்டது. அதை பழனியப்பன் ஏலம் எடுத்தது வடிவேலுவுக்கு தெரியவந்தது.

  

இதையடுத்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில், நடிகர் சிங்கமுத்து, ராமச்சந்திரனின் வாரிசுகள் கங்கா, சாந்தகுமாரி உள்ளிட்டோர் மீது நடிகர் வடிவேலு புகார் செய்தார். அதன் பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் குற்றப்பத்திரிகையை கோர்ட்டில் தாக்கல் செய்தனர்.இந்த வழக்கு எழும்பூர் கோர்ட்டில் நிலுவையில் இருந்து வருகிறது. இவ்வழக்கை ரத்து செய்யக்கோரி கங்கா உள்பட 5 பேர் 2010-ம் ஆண்டு சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். இந்த வழக்கு நீதிபதி எம்.வி.முரளிதரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, நடிகர்கள் வடிவேலு, சிங்கமுத்து மற்றும் கங்கா உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தி சமரசமாக போவதாக அவர்களின் வக்கீல்கள் கூறினர்இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, நடிகர்கள் வடிவேலு, சிங்கமுத்து உள்ளிட்டோர் ஏப்ரல் 7-ந்தேதி ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார். ஆனால் அன்று அவர்கள் ஆஜராகவில்லை. அடுத்த விசாரணைக்கு வராவிட்டால் நடிகர்கள் வடிவேலு, சிங்கமுத்துவுக்கு எதிராக வாரண்டு பிறப்பிக்கப்படும் என நீதிபதி எச்சரித்தார்.

இந்நிலையில், இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை நீதிபதி எம்.வி.முரளிதரன் தன்னுடைய அறையில் வைத்து விசாரித்தார். நடிகர்கள் வடிவேலு, சிங்கமுத்து, மனுதாரர்கள் கங்கா உள்பட அனைவரும் நேரில் ஆஜரானார்கள். அப்போது அவர்களிடம் நீதிபதி பேச்சுவார்த்தை நடத்தினார். நிலமோசடி வழக்கு மட்டுமல்லாமல், பிற வழக்குகளும் இருதரப்பினர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது. பேச்சுவார்த்தை சுமார் 45 நிமிடங்கள் நடந்தும் தோல்வியில் முடிந்தது.இதையடுத்து கங்கா உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் வடிவேலுவும், சிங்கமுத்துவும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளாமல், தங்கள் காரில் ஏறிச்சென்றனர்.

  
   Bookmark and Share Seithy.com



தலயுடன் மோதும் ஆண்ட்ரியா!
[Wednesday 2017-06-28 15:00]

கற்றது தமிழ், தங்க மீன்கள் படத்தை தொடர்ந்து ராம் இயக்கியுள்ள படம் தரமணி. இந்த படத்தில் ஆண்ட்ரியா, வசந்த் ரவி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்தை ‘ஜே.எஸ்.கே.ஃபிலிம் கார்பரேஷன்’ ஜே.சதீஷ்குமார் தயாரிக்கின்றனர்.



இளைஞர்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இவளுக இம்சை தாங்க முடியல!
[Wednesday 2017-06-28 15:00]

சக்திவேலிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த வி.என்.ராஜசுப்பிரமணியம் இயக்கியுள்ள படம் இவளுக இம்சை தாங்க முடியல. இந்த படத்தில் நான் சிவனாகிறேன்’ படத்தில் நடித்த உதய் கார்த்திக் கதாநாயகனாக நடிக்கிறார். ஹீரோயினாக புதுமுகம் சஹானா நடிக்கிறார். இது குறித்து இயக்குநர் கூறும் போது, சமூக வலைதளங்கள் மூலம் காதல் வயப்பட்டு காதலியை சந்திக்க சென்னையில் இருந்து கோவா செல்கிறார் ஹீரோ.



மோசடி வழக்கில் மீண்டும் பவர் ஸ்டார் சீனிவாசன் கைது!
[Wednesday 2017-06-28 15:00]

ரூ.30 கோடி கடன் வாங்கி தருவதாக கூறி ரூ.1 கோடி கமிஷன் பெற்று, தொழிலதிபர்களை ஏமாற்றிய வழக்கில் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கைது செய்யப்பட்டுள்ளார். கண்ணா லட்டு தின்ன ஆசையா, லத்திகா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் பவர் ஸ்டார் சீனிவாசன்.



எனக்கும் பல்சர் சுனிலுக்கும் தொடர்பா? - பொங்கிய பாவனா
[Wednesday 2017-06-28 15:00]

நடிகை பாவனா கடந்த ஃபிப்ரவரி மாதம் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் தொடர்புடைய 7 குற்றவாளிகள் கைது செய்யப்பட்ட நிலையில் அடுத்தடுத்து சில தகவல்கள் வெளியாகிவருகிறது.சமீபத்தில் நடிகர் திலீப் சம்மந்தப்பட்ட கடிதம் வெளியானதோடு, பல்சர் சுனிலின் நண்பர் ஒருவர், தன்னிடம் பணம் கேட்டு மிரட்டியதாக திலீப் புகார் அளித்திருந்தார். இது குறித்து தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.



படம் முடங்கியதால் அப்செட் ஆனா பூஜா சவேரி!
[Wednesday 2017-06-28 06:00]

செம போத ஆகாத, ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும், இமைக்கா நொடிகள், ஒத்தைக்கு ஒத்தை ஆகிய படங்களில் நடித்து வருகிறார் அதர்வா. கடந்த 2015ம் ஆண்டு அதர்வா நடிக்க தொடங்கிய படம், ருக்குமணி வண்டி வருது. ராஜ் மோகன் இயக்குகிறார். இதில் டோலிவுட் ஹீரோயின் பூஜா சவேரி கதாநாயகியாக நடித்து வந்தார். ஆனால் இப்படம் 40 சதவீதம் முடிந்த நிலையில் கிடப்பில் உள்ளது. இப்படம் டிராப் செய்யப்பட்டுவிட்டதாக தற்போது தகவல் பரவி வருகிறது.



கைத்தறி துணிகளின் தூதராக நியமிக்கப்பட்ட சமந்தா!
[Wednesday 2017-06-28 06:00]

தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார் சமந்தா. விரைவில் நாகார்ஜுனா மகன் நாக சைதன்யாவை மணக்க உள்ளதுடன், திருமணத்துக்கு பிறகும் நடிப்பை தொடர உள்ளார் சமந்தா. இதற்கிடையில் தெலங்கானா மாநிலத்தின் கைத்தறி துணிகளை பிரபலப்படுத்தும் தூதராக சமந்தாவை அம்மாநில அமைச்சர் கே.தரக்கா ராம ராவ் நியமித்தார். இதற்கு அம்மாநில எதிர்கட்சியை சேர்ந்த சில அரசியல்வாதிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். ‘தெலங்கானாவில் பிறந்த ஒரு பெண்ணை மாநிலத்தின் கைத்தறி துணிகளின் தூதராக நியமிக்காமல் சென்னையை சேர்ந்த சமந்தாவை நியமித்தது தவறு’ என்று அவர்கள் குறிப்பிட்டனர்.



பல விமர்சனங்களை தாண்டி வெற்றி பெற்ற சிம்பு!
[Wednesday 2017-06-28 06:00]

சிம்பு எப்போதும் ஒரு சர்ச்சை வலையத்திற்குள் சுற்றி வருபவர். இல்லையென்றால் அவரை சுற்றி ஒரு சர்ச்சை வலையங்கள் உருவாக்கப்படும்.சென்னை மாநகரமே தண்ணீரில் மிதந்தது, அடுத்த வேலை உணவிற்காக ஒவ்வொரு மக்களும் போராடும் சமயத்தில் கூட, எதற்கும் சம்மந்தமே இல்லாத பீப் சாங்கை எடுத்துக்கொண்டு மாதர் சங்கம் போராடியது.



வட சென்னை படப்பிடிப்பு தள்ளிப்போனதுக்கு இதுதான் காரணம்: - தனுஷ்
[Wednesday 2017-06-28 06:00]

ஹாலிவுட் படத்தையும் தாண்டி தனுஷே எதிர்ப்பார்க்கும் ஒரு பெரிய படம் வட சென்னை. வெற்றிமாறன் இயக்கியிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடக்கவில்லை.அண்மையில் ஒரு பேட்டியில் தனுஷிடம் வட சென்னை படம் பற்றி கேட்டபோது, இந்த படத்தில் இன்னும் 15 நாள் படப்பிடிப்பு மட்டும் மீதம் உள்ளது.



சிவகார்த்திகேயனுடன் இணைந்த நயன்தாரா!
[Wednesday 2017-06-28 06:00]

தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராகக் கொண்டாடப்படும் நயன்தாரா, தமிழ், தெலுங்கு என பிஸியாக வலம் வருகிறார். தமிழில் மட்டும் ஒரே நேரத்தில் ஐந்து படங்களில் கமிட்டாகி உள்ள அவர், சிவகார்த்திகேயனுடன் வேலைக்காரன் படத்தில் நடித்து வருகிறார். மோகன் ராஜா இயக்கும் புதிய படத்தில் சிவகார்த்திகேயனுடன் மீண்டும் ஜோடி சேர்கிறார். மோகன் ராஜா இயக்கிய ’தனிஒருவன்’ படத்திலும் நயன்தாரா தான் ஹீரோயின். வேலைக்காரன் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்து விட்டது. இன்று முதல் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கோல்டன் பீச் ரெஸ்டாரெண்டில் நடந்து வருகிறது.



நயன்தாரா படத்தில் பிரபாஸுக்கு ஜோடியான தமன்னா.
[Wednesday 2017-06-28 06:00]

பாகுபலி ஹீரோ பிரபாஸுடன் ஹிந்தியில் உருவாகும் ’காமோஷி’ படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார் தமன்னா. பாகுபலி- 2 மாபெரும் வெற்றிக்கு பிறகு ’சாஹோ’ தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார் பிரபாஸ். அடுத்து அவர் நேரடி ஹிந்தி படங்களில் நடிக்க முயற்சித்து வந்தார். இந்நிலையில் தமிழில் நயன்தாரா நடிப்பில் விரைவில் ரிலீசாக உள்ள ’கொலையுதிர் காலம்’ படத்தின் ஹிந்தி பதிப்பில் நடிக்க இருக்கிறார் பிரபாஸ். இந்தப்படத்தை தமிழில் இயக்கி வருபவர் சாக்ரி டோலொட்டின். தமிழில் உன்னைப்போல ஒருவன் உள்ளிட்ட சில படங்களை இயக்கிய இவரே ஹிந்திப்பதிப்பான ‘காமோஷி’ படத்தையும் இயக்க இருக்கிறார். பிரபாஸுக்கு ஜோடியாக தமன்னா நடிக்க உள்ளார்.



13 வயது சிறுவர்கள் தியேட்டருக்கு வந்தால் சங்கடம்தான்: ராம்
[Wednesday 2017-06-28 06:00]

இயக்குநர் ராம் இயக்கியுள்ள தரமணி படத்திற்கு ஏ சான்றிதழை வழங்கியுள்ளது சென்சார் போர்டு. இயக்குநர் ராம் இயக்கியுள்ள தரமணி படத்தின் ட்ரெய்லரும், ஆடியோவும் ரிலீசாகி ஆண்டுக்கணக்கில் ஆகி விட்டது. ஆனால் படம் ரிலீசாக தாமதமாகி விட்டது. இந்நிலையில் ’ஆண்டவா காணோம்’ படத்தில் இந்தப்படம் குறித்து பேசியவர், வரும் ஆகஸ்ட் 11ம் தேதி தரமணி ரிலீசாகும் எனக்கூறினார். மேலும் பேசிய அவர், ஜே.எஸ்.கே பட நிறுவனத்தின் தயாரிப்பாளர் சதீஷ்குமாருக்கும் எனக்கும் நல்ல புரிதல் உண்டு. ஒரு படத்தை எடுத்து இவ்வளவு நாள் ரிலீசாகமல் இருந்தால் எந்தத் தயாரிப்பாளரும் இயக்குநருடன் மோதலில் ஈடுபட்டிருப்பார்கள். ஆனால் எங்களுக்குள் மோதல் உருவாகவில்லை.



ஏழை குடும்பத்திற்கு வீடு கட்டிக் கொடுத்த நடிகர் பிரகாஷ் ராஜ்
[Wednesday 2017-06-28 06:00]

தெலங்கானாவில் வறுமையில் வாடிய ஏழை முஸ்லிம் குடும்பத்திற்கு வீடுகட்டி கொடுத்திருக்கிறார் நடிகர் பிரகாஷ்ராஜ். ரம்ஜான் தினத்தை முன்னிட்டு நேற்று அந்த வீட்டை அவர்களுக்கு வழங்கினார். மெஹபூப்நகர் மாவட்டத்தில் உள்ள கொண்டாரெட்டிபள்ளியில் மூன்று பெண்குழந்தைகள் மனைவியுடன் வறுமைமையில் வசித்து வந்த அந்த முஸ்லீம் நபருக்கு புதிதாக கட்டப்பட்டை வீட்டை அவர் வழங்கினார். கடந்த ஐந்து மாதங்களாக கொண்டாரெட்டி கிராமத்திற்கு பல வகைகளில் அவரது பிரகாஷ்ராஜ் பவுண்டேசன் உதவிகளை செய்து வருவதாகக் கூறப்படுகிறது.



ரஜினியின் மகள்களுக்கு போட்டியாளர்களாக மாறிய கமலின் மகள்கள்!
[Tuesday 2017-06-27 17:00]

ரஜினி மகள்கள் ஐஸ்வர்யா, சவுந்தர்யா இருவருமே இயக்குனர்களாக உள்ளனர். தனுஷ் நடித்த 3, கவுதம் நடித்த வைராஜா வை படங்களை இயக்கியதுடன் அடுத்து ரியோ ஒலிம்பிக்கில் தங்கபதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் வாழ்க்கை கதையை இயக்குகிறார். அதேபோல் சவுந்தர்யா, ரஜினி நடித்த கோச்சடையான் படத்தை இயக்கினார். தற்போது தனுஷ் நடிக்கும் வேலையில்லா பட்டதாரி 2ம் பாகம் இயக்கி வருகிறார். திரையுலகில் சகோதரிகள் இருவரும் பிஸியாக இருக்கின்றனர்.



நான் அப்படிப்பட்ட ஆள் கிடையாது: - நொந்து போன ரகுல்
[Tuesday 2017-06-27 17:00]

தடையற தாக்க, புத்தகம் போன்ற படங்களில் நடித்த ரகுல் ப்ரித் சிங் தற்போது தமிழ் படங்களில் கவனம் செலுத்தாமல் தெலுங்கு மற்றும் பாலிவுட் படங்களில் கவனம் செலுத்துவதாக அவ்வப்போது தகவல் வந்த வண்ணம் உள்ளது. தமிழில் விஷால் ஜோடியாக துப்பறிவாளன் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு திடீரென்று அந்த படத்தில் விலகினார். இதனால் அவரது இமேஜ் டேமேஜ் ஆனது. தற்போது கார்த்தி ஜோடியாக ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தில் நடித்து வருகிறார்.



இளையதளபதியை ஓவியமாக வரைந்த கீர்த்தி சுரேஷ்!
[Tuesday 2017-06-27 17:00]

நடிகை கீர்த்தி சுரேஷ் பேஷன் டிசைனிங் பட்டதாரி ஆவார். நடிப்பில் பிஸியான பிறகு தனது காஸ்டியூம் டிசைன்களை அவரே தேர்வு செய்கிறார். விஜய்யின் ரசிகையான இவர் பைரவா படத்தில் அவருடன் ஜோடியாக நடித்தார்.



முருகதாஸ் - விஜய் படத்திற்கு இவர் தான் இசையமைப்பாளரா?
[Tuesday 2017-06-27 17:00]

விஜய்-முருகதாஸ் துப்பாக்கி, கத்தி வெற்றியை தொடர்ந்து மூன்றாவது முறையாக இணையவுள்ளது. இதுக்குறித்து ஏற்கனவே நம் தளத்தில் கூறிவிட்டோம்.இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் இப்படத்திற்கு இசை ஜி.வி.பிரகாஷ் என்று ஒரு தகவல் வெளிவந்தது.



கமல் கேட்ட கேள்வியால் பதட்டமடைந்த நமீதா!
[Tuesday 2017-06-27 17:00]

நடிகை நமீதா சமீபத்தில் பொட்டு என்னும் பேய் படத்தில் அகோரியாக நடித்துள்ளார். நீண்ட நாட்களுக்கு பிறகு சற்று பிசியாகியுள்ளார். இதனாலோ என்னவோ அப்படி ஒரு கேள்வியை கமல் கேட்டுவிட்டார் போலும்.அது வேறொன்றுமல்ல! கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் 15-வது நபராக நமிதாவை அறிமுகப்படுத்தப்பட்டார்.



இளமையாக இருப்பதற்கு அதுதான் காரணம்: - ரகசியத்தை வெளியிட்ட ஆனந்த்ராஜ்
[Tuesday 2017-06-27 08:00]

தமிழ் சினிமாவில் வில்லனாக வலம்வந்த ஆனந்த்ராஜ் சமீபகாலமாக காமெடி கலந்த வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி வருகிறார். இவருடைய நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ‘மரகத நாணயம்’ ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இவருடைய கதாபாத்திரமான டுவிங்கில் ராமநாதன் என்ற கதாபாத்திரமும் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.



எனது தந்தை எப்போதுமே மனதுக்கு சரி என்று பட்டதைத்தான் செய்வார்: - சவுந்தர்யா
[Tuesday 2017-06-27 08:00]

நடிகர் ரஜினிகாந்த் விரைவில் அரசியலில் ஈடுபடுவார் என்ற எதிர் பார்ப்பு நிலவுகிறது. கடந்த மாதம் ரசிகர்களை சந்தித்து பேசிய அவர், அடுத்த மாதமும் ரசிகர்களை சந்திக்க முடிவு செய்துள்ளார். தற்போது ‘காலா’ படப்பிடிப்பில் பிசியாக இருக்கும் அவர் இடையிடையே அரசியல் தொடர்பாக தனக்கு நெருக்கமானவர்களிடம் பேசி வருகிறார். தமிழக அரசியல் தொடர்பான புத்தகங்களையும் படித்து வருகிறார்.



எல்லோரும் என்னை கிண்டலடித்தனர்: - எஸ்.ஜே.சூர்யா
[Tuesday 2017-06-27 08:00]

‘இறைவி’ படத்தையடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கி உள்ள படம் ‘மெர்க்குரி’. இதுதவிர தனது ஸ்டோன் பெஞ்ச் பட நிறுவனம் சார்பில் ‘மேயாத மான்’என்ற படத்தையும் தயாரிக்கிறார். இவற்றின் அறிமுக விழா சென்னையில் நடந்தது. இதில் பேசிய எஸ்.ஜே. சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் டிஜிட்டலில் ரூ. 1 கோடி செலவில் படம் எடுக்க முடியும். பெரிய படங்களுடன் போட்டி போடமுடியும் என்று நிரூபித்தவர். அவர் என் வாழ்க்கையில் மறக்க முடியாதவர்.


Mahesan-Remax-169515-Seithy
Easankulasekaram-Remax-300716
Elankeeran-debt-solution-25-06-2016
SELVI-HOMES-09-02-17
Tharsi-home-15-10-2016
<b> 10-06-2017 அன்று கனடா - ரொரன்டோவில்          இராகாலயா நுண்கலைக்கூடம் வழங்கிய கானமாருதம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b> 03-06-2017 அன்று கனடா - ரொரன்டோவில் நடைபெற்ற இதயராகங்கள் இசை நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>14-05-2017 அன்று கனடா - ரொரன்டோவில் நடைபெற்ற தாயின்மடியில் நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா