Untitled Document
May 19, 2024 [GMT]
போரின்போதும், ஐநாவிலும் பாகிஸ்தான் அளித்த உதவியை மறக்க முடியாது! - மைத்திரி
[Wednesday 2016-01-06 07:00]

எமது இன்பத்திலும் துன்பத்திலும் உண்மையாகவே பங்கு பற்றும் உண்மை நண்பனான பாகிஸ்தானுடனான நட்புறவை மென்மேலும் மேம்படுத்துவது மிக அவசியமானது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

எமது இன்பத்திலும் துன்பத்திலும் உண்மையாகவே பங்கு பற்றும் உண்மை நண்பனான பாகிஸ்தானுடனான நட்புறவை மென்மேலும் மேம்படுத்துவது மிக அவசியமானது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

  

இரண்டு நாள் இராஜதந்திர விஜயத்தை மேற்கொண்டு இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிபுக்கு உத்தியோகபூர்வ செங்கம்பள வரவேற்பு அளிக்கும் வைபவம் ஜனாதிபதி செயலக வளாகத்தில் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து இரு தரப்பு பேச்சுவார்த்தை இடம்பெற்றது. அதனடிப்படையில் இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எட்டு புரிந்துணர்வு உடன்படிக்கைகளில் கைச்சாத்திடப்பட்டன.

அதனைத் தொடர்ந்து உரையாற்றிய போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இவ்வைபவத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொடர்ந்தும் உரையாற்றுகையில் குறிப்பிட்டதாவது ; பாகிஸ்தான் பிரதமர் இலங்கைக்கு மேற்கொண்டிருக்கும் உத்தியோகபூர்வ விஜயத்தின் நிமித்தம் நாம் பெரிதும் மகிழ்ச்சி அடைகின்றோம்.

குறிப்பாக இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் மிக நீண்ட கால நட்புறவு நிலவி வருகின்றது. எமது நாட்டின் அபிவிருத்திக்கு மாத்திரமல்லாமல் எம் நாட்டில் யுத்தம் நிலவிய காலத்தில் தேசிய பாதுகாப்பின் நிமித்தம் பாகிஸ்தான் எமக்கு பாரிய ஒத்துழைப்பை நல்கியது. அவ்வுதவிகளை எம்மால் ஒரு போதும் மறக்க முடியாது. அதனால் இலங்கை அரசாங்கமும் இந்நாட்டு மக்களும் பாகிஸ்தான் அரசாங்கம் குறித்தும் அந்நாட்டு மக்கள் தொடர்பாகவும் பெரும் கௌரவத்தையும் மரியாதையையும் கொண்டுள்ளனர்.

அதேநேரம் ஐக்கிய நாடுகள் சபையிலும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிலும் கடந்த வருடங்களில் பாகிஸ்தானின் பிரதிநிதி இலங்கைக்கு சார்பாக செயற்பட்ட விதம், எமக்கு அளித்த அனுசரணை மற்றும் ஒத்துழைப்பை நாம் பெரிதும் பாராட்டுகின்றோம். பாகிஸ்தான் அரசாங்கமும் அந்நாட்டு மக்களும் எப்போதுமே எமது இன்பத்திலும் துன்பத்திலும் உண்மையாகவே பங்கு பற்றும் உண்மை நண்பனாவர். அதனால் எம்மிரு நாடுகளுக்கடையிலான நட்புறவை மென்மேலும் மேம்படுத்துவது மிக அவசியமானது.

வர்த்தகம் உள்ளிட்ட எட்டு புரிந்துணர்வு உடன்படிக்கைகளில் நாம் இன்று கைச்சார்த்திட்டுள்ளோம். அவற்றில் நீர் மின்சாரம், மீன்பிடிக் கைத்தொழில், கப்பல் துறை என்பன பிரதானமானவையாக உள்ளடக்கப்பட்டுள்ளன. அதேநேரம் நான் கடந்த வருடம் பாகிஸ்தானுக்கு மேற்கொண்ட இராஜதந்திர விஜயத்தின் போது மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கைகளையும் இணக்கப்பாடுகளையும் வெற்றிகரமாக நடைமுறைப்புத்துவது குறித்தும் இங்கு கலந்துரையாடினோம். அவற்றை நாம் தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு எதிர்பார்த்துள்ளோம். அதனால் நாம் இச்சந்தர்ப்பத்தை மிக முக்கிய வாய்ப்பாகக் கருதுகின்றோம்.

இதேவேளை சார்க் அமைப்பின் அடுத்த மாநாடு அடுத்த வருடம் பாகிஸ்தானில் நடைபெறவுள்ளது. அம்மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு எமக்கு விடுக்கப்பட்டுள்ள உத்தியோகபூர்வ அழைப்பை நாம் ஏற்றுக் கொண்டுள்ளோம். அம்மாநாட்டில் நாம் பங்குபற்றுவதற்கும் எதிர்பார்த்துள்ளோம்.

இவை அனைத்து செயற்பாடுகளுக்கும் மத்தியில் பாகிஸ்தான் இலங்கை அரசாங்கங்களுக்கு இடையிலும் மக்களுக்கு மத்தியிலும் ஏற்பட்டுள்ள நட்புறவை நாம் பெரிதும் மதிக்கின்றோம். இரு பக்க நட்புறவை மேன்மேலும் மேம்படுத்தி இச்செயற்பாடுகளை தொடர்ந்தும் முன்னெடுப்பதுடன் தேசிய மற்றும் சர்வதேச மட்டத்திலும் ஒத்துழைப்பையும்,நட்புறவையும் மென்மேலும் மேம்படுத்துவதற்கு எதிர்பார்க்கின்றோம். அதனால் பாகிஸ்தான் பிரதமரின் இலங்கை விஜயத்தை மிக முக்கிய வருகையாகக் கருதுகின்றோம். அவரது வருகையின் நிமித்தம் நாமும் எமது அரசாங்கமும் மக்களும் பெரிதும் மகிழ்ச்சி அடைகின்றோம் என்றும் குறிப்பிட்டார்.

  
   Bookmark and Share Seithy.com



இறுதி யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களை நினைவு கூர கனேடிய பிரதமர் அழைப்பு!
[Sunday 2024-05-19 08:00]

இலங்கையின் இறுதி யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களை நினைவு கூறுவதற்காக கனேடிய அரசின் சார்பில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அழைப்பு விடுத்துள்ளார்.



இறுதிப் போரில் உயிரிழந்த மக்களுக்கு கனடா சுகாதார அமைச்சர் அஞ்சலி! Top News
[Sunday 2024-05-19 08:00]

கனடாவின் சுகாதார அமைச்சரான மார்க் ஹொலண்ட் அலுவலகத்தில் இறுதி யுத்தத்தில் உயிரிழந்த தாயக உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் அவர் தனது எக்ஸ் தள கணக்கில் பதிவொன்றையும் வெளியிட்டுள்ளார்.



நினைவேந்தல் கைதுகள் - அமெரிக்க செனட் வெளியுறவுக் குழு கவலை!
[Sunday 2024-05-19 08:00]

இலங்கையின் ஈவிரக்கமற்ற உள்நாட்டு யுத்தத்தின் போது கொல்லப்பட்ட பலவந்தமாக காணாமல்போகச்செய்யப்பட்ட சித்திரவதை செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழர்களை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் தினத்தை அடிப்படையாக கொண்டு இடம்பெற்ற கைதுகள் குறித்து கவலையடைந்துள்ளதாக அமெரிக்க செனெட் வெளியுறவுக்குழுவின் தலைவர் செனெட்டர் கார்டின் தெரிவித்துள்ளார்.



கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களின் நினைவேந்தலைக் குழப்பியதற்கு கண்டனம்!
[Sunday 2024-05-19 08:00]

கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களின் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை காவல்துறையினர் அநாகரீகமான அடாவடியான விதத்தில் குழப்பியமை குறித்து யாழ்பல்கலைகழக மாணவர் ஒன்றியம் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது



தமிழரின் விடிவு காலம் நினைவேந்தல் சுடரில் பிரகாசமாக ஒளிர்வதை காண்கின்றேன்!
[Sunday 2024-05-19 08:00]

வட, கிழக்கு தமிழ் பேசும் மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து எமது பொது அபிலாசைகளை வெளிக்கொண்டுவரும் விதத்தில் நடந்து கொள்வோம் என்று தமிழ் மக்கள் கூட்டணி செயலாளர் நாயகமும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.



பொது வேட்பாளரை ஏற்கவே முடியாது! - அடம்பிடிக்கிறாராம் சம்பந்தன்.
[Sunday 2024-05-19 08:00]

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்தும் யோசனையை ஏற்றுக்கொள்ள முடியாது என்று இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவர் இரா.சம்பந்தன் மாவை.சோ.சேனாதிராஜா மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனிடத்தில் இறுக்கமான நிலைப்பாட்டை வெளியிட்டுள்ளார்.



முள்ளிவாய்க்காலில் தமிழினப் படுகொலையின் 15ஆவது ஆண்டு நினைவேந்தல்! - உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு. Top News
[Saturday 2024-05-18 20:00]

முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற தமிழினப் படுகொலையின் 15ஆவது ஆண்டு நினைவேந்தல் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் முற்பகல் 10.30 மணியளவில் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.



முள்ளிவாய்க்கால் பிரகடனம் - 2024!
[Saturday 2024-05-18 20:00]

எமது பேரன்பிற்கும் பெருமதிப்பிற்குமுரிய எம் மக்களே!

தமிழினப்படுகொலை முள்ளிவாய்க்காலில் உச்சந்தொட்டு இன்றுடன் 15 ஆண்டுகள் நிறைவடைகின்றது. ஒவ்வொரு படுகொலைக்குப் பின்னரும் “இனிமேல் இது நடக்கவே கூடாது” என்ற உணர்வு பிரவாகம் வலுவாக எழுந்தாலும், அதுவே தொடர்கின்றது இனிமேல் நடக்கவே கூடாது என்ற உணர்வு பிரவாகம் அர்த்தமற்றதாகிவிட்டது.



மட்டக்களப்பு காந்தி பூங்காவில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்! Top News
[Saturday 2024-05-18 20:00]

முள்ளிவாய்க்கால் நினைவு தின நினைவேந்தல் நிகழ்வு இன்று காலை மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இடம்பெற்றது. வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் இணைந்து குறித்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர்



முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி! Top News
[Saturday 2024-05-18 20:00]

முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 15ஆம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும். அந்தவகையில் முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு, முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் இன்று நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தியுள்ளார்.



மன்னாரில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்! Top News
[Saturday 2024-05-18 20:00]

இறுதிப் போரில் உயிர் நீத்த உறவுகளை நினைவுகூறும் முள்ளிவாய்க்கால் 15 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று வடக்கு -கிழக்கு பகுதிகளில் நினைவு கூறப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் மன்னாரில் இன்று காலை 8.30 மணியளவில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இடம் பெற்றது.



நல்லூரில் இனப்படுகொலை வரலாற்று ஆவண காட்சியகம்! Top News
[Saturday 2024-05-18 20:00]

தமிழினப் படுகொலையின் வரலாறுகளை அடுத்த தலைமுறைக்கு கடத்தும் நோக்கில் அரச பயங்கரவாதத்தினால் நேர்ந்த இனப்படுகொலைகளை திகதி வாரியாக தொகுத்து யாழ்ப்பாணத்தில் ஆவண காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.



முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட மக்களுக்காக பிதிர்க்கடன் நிறைவேற்றல்! Top News
[Saturday 2024-05-18 20:00]

முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட மக்களின் ஆத்மசாந்தி பிரார்த்தனை, பிதிர்க்கடன் நிறைவேற்றல் இன்றைய தினம் சனிக்கிழமை முள்ளிவாய்க்கால் கப்பல் வீதியில் உள்ள கடற்கரைப் பகுதியில் நடைபெற்றது.



வெள்ளவத்தை கடற்கரையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்! Top News
[Saturday 2024-05-18 20:00]

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இன்று கொழும்பில் நடைபெற்றது. சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் மனித உரிமைகள் ஆர்வலர்களால் கூட்டாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வு இன்று காலை 9.30 மணிக்கு வெள்ளவத்தை புகையிரத நிலையத்துக்கு அண்மையிலுள்ள கடற்கரையில் நடைபெற்றது.



யாழ். பல்கலைக்கழத்திலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்! Top News
[Saturday 2024-05-18 20:00]

யாழ்ப்பாணம் பல்கலைக் கழத்திலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு அனுஷ்டிக்கப்பட்டது. யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இந்த நினைவேந்தல் நிகழ்வானது யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தூபியில் நடைபெற்றது.



மரத்தில் இருந்து தவறி விழுந்த இளைஞன் மரணம்!
[Saturday 2024-05-18 20:00]

யாழ்ப்பாணம் - உடுவில் பகுதியில் மரத்திலிருந்து தவறிவிழுந்த இளைஞன் ஒருவர் வெள்ளிக்கிழமை உயிரிழந்துள்ளார். இதில் ஆலடி உடுவில் மானிப்பாயைச் சேர்ந்த சசிக்குமார் ரூபின்சன் என்ற 20 வயது இளைஞனே உயிரிழந்தவராவார்.



முள்ளிவாய்க்கால் இனஅழிப்பின் 15ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று!- பிரதான நிகழ்வுகளுக்கு ஏற்பாடு.
[Saturday 2024-05-18 04:00]

முள்ளிவாய்க்கால் இனஅழிப்பின் 15ஆம் அண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று 18 ஆம் திகதி சனிக்கிழமை முற்பகல் 10.30 மணிக்கு முள்ளிவாய்க்காலில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றத்தில் நடைபெறவுள்ளது.



கோட்டாவுக்கு அழைப்பாணை அனுப்ப உத்தரவு!
[Saturday 2024-05-18 04:00]

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அழைப்பாணை அனுப்புமாறு உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.



காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விவகாரத்துக் சர்வதேச விசாரணையே தீர்வு! - உறவுகள் வலியுறுத்தல்.
[Saturday 2024-05-18 04:00]

காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்திற்கு சர்வதேச பொறிமுறையில் தீர்வுபெற்றுத்தர வேண்டுமென வடக்கு, கிழக்கு மாகாணங்களின் வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டோர் சங்கப்பிரதிநிதிகள் சர்வதேச மன்னிப்புச்சபையின் செயலாளர் நாயகம் அக்னஸ் கல்லமார்ட்டிடம் வலியுறுத்திக் கூறியுள்ளனர்.



முள்ளிவாய்க்கால் இனஅழிப்பு வாரம் - குமாரபுரத்தில் படுகொலையான மக்களுக்கு அஞ்சலி! Top News
[Saturday 2024-05-18 04:00]

திருகோணமலை மாவட்டம் குமரபுரத்தில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களுக்கு மட்டக்களப்பு சிவில் சமூகத்தினர் வெள்ளிக்கிழமை மாலை அஞ்சலி செலுத்தியுள்ளனர்.


Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
NKS-Ketha-04-11-2021
Airlinktravel-2020-01-01
Asayan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Rajeef sebarasha 2023/04/19
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா