Untitled Document
May 2, 2026 [GMT]
  
   Bookmark and Share Seithy.com



செம்மணியில் மேலும் 3 மனித எலும்புக்கூடுகள் மீட்பு!
[Saturday 2026-05-02 09:00]

யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியில் முன்னெடுக்கப்பட்டு வரும் அகழ்வுப் பணியின் நேற்று வெள்ளிக்கிழமை, மேலும் மூன்று மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.



கிளிநொச்சியில் சிறிதரன் தலைமையில் மேதினப் பேரணி! Top News
[Saturday 2026-05-02 09:00]

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தலைமையில் கிளிநொச்சி மாவட்ட தொழிற்சங்கங்களின் ஒருங்கிணைந்த ஏற்பாட்டில் 'யாமார்க்கும் குடியல்லோம்' எனும் மகுடத்தில் கிளிநொச்சியில் மேதின நிகழ்வு நடைபெற்றது.



மட்டக்களப்பில் தமிழரசின் மேதின பேரணி! Top News
[Saturday 2026-05-02 09:00]

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில், இலங்கைத் தமிழரசுக்கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்ட மே தின நிகழ்வு நேற்று மாலை மட்டக்களப்பு, மண்முனை தென்மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட பட்டிப்பளையில் நடைபெற்றது.



மாங்குளத்தில் தமிழரசுக் கட்சியின் மேதினப் பேரணி!
[Saturday 2026-05-02 09:00]

தன்னாட்சி அதிகாரத்துக்காகவும், வளச்சுரண்டல்களுக்கு எதிராகவும் ஒன்றிணைவோம்' எனும் தொனிப்பொருளில் இலங்கைத் தமிழரசுக்கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மேதினக்கூட்டம் பி.ப 3.30 மணியளவில் மாங்குளம் பஸ் நிலையத்துக்கு அருகாமையில் நடைபெற்றது.



ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் மேதினம்!
[Saturday 2026-05-02 09:00]

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் மே தின கூட்டமானது இன்றைய தினம் இணுவில் பகுதியில் உள்ள தனியார் மண்டபம் ஒன்றில் நடைபெற்றது. ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ், தமிழ் தேசிய கட்சி, ஜனநாயக போராளிகள் கட்சி ஆகிய கட்சிகளை ஒன்றிணைத்தே இந்த மே தின கூட்டமானது நடாத்தப்பட்டது.



கறிவேப்பிலை பறிப்பதற்காக மரத்தில் ஏறியவர் தவறி விழுந்து மரணம்!
[Saturday 2026-05-02 09:00]

யாழ்ப்பாணத்தில் நேற்று கறிவேப்பிலை பறிப்பதற்காக மரத்தில் ஏறியவர் தவறி கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். காங்கேசன்துறை வீதி, நாச்சிமார் கோவிலடியை சேர்ந்த 64 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.



எரிபொருள் விலை மேலும் அதிகரிக்கும்!
[Saturday 2026-05-02 09:00]

வலுசக்தி துறையில் ஒருவித நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட மே தினப் பேரணையில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.



முடிந்தால் மாகாண சபைத் தேர்தலை நடத்துங்கள்!- அனுரவுக்கு சவால்.
[Saturday 2026-05-02 09:00]

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் ஏற்கனவே இணைந்துவிட்டன. இந்த ஒற்றுமையை சீர்குலைக்க நினைக்கும் சதிகாரர்களின் முயற்சி ஒருபோதும் வெற்றிபெறாது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.



தேசிய மக்கள் சக்தி வட, கிழக்கைத் தொடுவதற்கு இடமளிக்கமாட்டோம்!
[Saturday 2026-05-02 09:00]

எதிர்வருங்காலங்களில் தேசிய மக்கள் சக்தி வட, கிழக்கைத் தொடுவதற்கு இடமளிக்கவே மாட்டோம் என இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.



நிதியமைச்சின் உதவிப் பணிப்பாளரின் மரணம் தற்கொலை என மருத்துவர் குழு அறிக்கை!
[Saturday 2026-05-02 09:00]

சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நிதியமைச்சின் உதவிப் பணிப்பாளரின் மரணம், அவர் ஏற்படுத்திக்கொண்ட காயங்களினால் நேர்ந்த தற்கொலை என மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிய நியமிக்கப்பட்ட நான்கு பேர் கொண்ட சட்ட மருத்துவக் குழு உறுதி செய்துள்ளது.



ஊழல்வாதிகள், மோசடியாளர்கள், திருடர்கள் இந்த ஆண்டு அதிகளவில் சிறை செல்வார்கள்!
[Friday 2026-05-01 15:00]

மக்களது எதிர்பார்ப்பு மற்றும் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தும் வகையில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஆட்சி அமையும் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நுவரெலியாவில் இன்று இடம்பெற்ற மேதின கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.



காணிகளை விடுவிக்கக் கோரி கொமாண்டர்ஸ் பங்களா முன் வலி.வடக்கு மக்கள் போராட்டம்! Top News
[Friday 2026-05-01 15:00]

வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி, காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் கொமாண்டர்ஸ் பங்களா முன்பாக இன்று (போராட்டத்தினை முன்னெடுத்தனர்.



கனடியப் பிரஜை வவுனியாவில் மரணம்!
[Friday 2026-05-01 15:00]

வவுனியாவில் தற்காலிகமாக வசித்து வந்த கனடா நாட்டுப் பிரஜை ஒருவர், திடீர் உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.



வெளிநாடு செல்லும் பிக்குகளுக்கு கட்டுப்பாடு!
[Friday 2026-05-01 15:00]

வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யும் பௌத்த தேரர்களுக்கு புதிய கட்டாய நடைமுறைகளை இலங்கை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது.



எரிபொருள் விலை மாற்றம் இல்லை!
[Friday 2026-05-01 15:00]

இன்று வெள்ளிக்கிழமை (01) எரிபொருள் விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படமாட்டாது என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.



ரூபாயின் பெறுமதி 2.9% இனால் வீழ்ச்சி! -உத்தியோகபூர்வ கையிருப்பும் கரைகிறது.
[Friday 2026-05-01 15:00]

2026 ஏப்ரல் மாத இறுதியில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி 2.9% இனால் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.



யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் கொலை- சந்தேக நபர்களின் விளக்கமறியல் நீடிப்பு!
[Friday 2026-05-01 15:00]

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சிரேஷ்ட சித்த வைத்தியத்துறை விரிவுரையாளர் கொலை வழக்கில் கைதான இரண்டு சந்தேக நபர்களையும் எதிர்வரும் மே மாதம் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



நிதியமைச்சு அதிகாரியின் மர்ம மரணம்- விசாரிக்க விசேட நிபுணர் குழு!
[Friday 2026-05-01 15:00]

நிதியமைச்சின் உதவிப் பணிப்பாளரின் சந்தேகத்திற்கிடமான மரணம் தொடர்பில் பிரேதப் பரிசோதனையை முன்னெடுப்பதற்காக சட்ட வைத்திய நிபுணர்கள் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.



பலத்த மின்னல் குறித்து எச்சரிக்கை!
[Friday 2026-05-01 15:00]

பலத்த மின்னல் தாக்கம் குறித்த எச்சரிக்கை அறிவித்தல் ஒன்றை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது. இன்று (01) நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவித்தல், இன்று இரவு 11.30 மணி வரை செல்லுபடியாகும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.



சபாத் இல்லம் குறித்து விசாரித்த 7 முஸ்லிம் இளைஞர்கள் கைது!
[Friday 2026-05-01 15:00]

பாணந்துறைப் பகுதியைச் சேர்ந்த ஏழு முஸ்லிம் இளைஞர்கள், வியாழக்கிழமை (30) அன்று பொத்துவில் - அறுகம்பை பிரதேசத்தில் வைத்து பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் சுமார் 28 வயது மதிக்கத்தக்கவர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.


Vaheesan-Remax-2016
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
Asiaan-Salon-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா