Untitled Document
October 23, 2026 [GMT]
34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானம்!
[Friday 2026-10-23 16:00]



34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

  

பத்தரமுல்லையில் இடம்பெற்ற அரசாங்க நிலை அளவையாளர் திணைக்கள சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

இதற்காகக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

நாட்டில் ஏற்படும் பொருளாதார அதிர்ச்சிகளை எதிர்கொள்வதற்குப் போதுமான அளவிலான ரூபாய்கள் கைவசம் உள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி, இருப்பினும் வெளிவாரி அதிர்ச்சியொன்றை எதிர்கொள்ளும் அளவுக்குப் பொருளாதாரம் வலுவாக இல்லை என்றும் சுட்டிக்காட்டினார்.

திறைசேரிக்கு கிடைக்கும் செல்வத்தை மக்களுக்குக் கொண்டு சேர்க்கும் பணியை அரச சேவையே செய்ய வேண்டும்.

அதற்கு வலுவான அரச இயந்திரம் அவசியம் என்றும், தற்போதைய அரசாங்கம் அதை உறுதியாக நம்புவதாகவும் ஜனாதிபதி கூறினார்.

இருப்பினும், நாட்டின் அரச சேவை ஈர்க்கக்கூடியதாக இல்லாததால், பலரும் அதனை விட்டு விலகிச் செல்வதாகவும், தொழில் வல்லுநர்களைத் தக்கவைத்துக்கொள்ளக்கூடிய அரச சேவை நாட்டில் உருவாக்கப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இத்தகைய கடினமான பின்னணியில் அடிப்படைச் சம்பளத்தை உயர்த்தத் தீர்மானிக்கப்பட்டதுடன், 2027ஆம் ஆண்டில் சம்பளத்தை அதிகரிப்பதற்கு 110 பில்லியன் ரூபா தேவைப்படுவதால், இந்த வரவு செலவுத் திட்டத்தில் கொடுப்பனவுகள் குறித்து அதிக கவனம் செலுத்தப்படும் என்றும் ஜனாதிபதி அங்கு வலியுறுத்தினார்.

2028ஆம் ஆண்டில் கொடுப்பனவுகளை வழங்குவது குறித்துப் பெருமளவில் கவனம் செலுத்தப்படும் என்றும், அந்த ஆண்டில் அடிப்படைச் சம்பளம் அதிகரிக்கப்பட மாட்டாது என்றும் அவர் கூறினார்.

இருப்பினும், அரச சேவையில் ஊழியர்களைத் தக்கவைத்துக் கொள்வதற்கு அத்தியாவசியமான கொடுப்பனவுகள் குறித்துக் கவனம் செலுத்தப்படும்.

தொழில்முறை அரச சேவையில் பல வெற்றிடங்கள் நிலவும் அதேவேளை, கடந்த காலத்தில் வழங்கப்பட்ட அரசியல் நியமனங்கள் காரணமாக கீழ்மட்டப் பதவிகள் நிரம்பி வழிகின்றன என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

எனவே, சில அரச நிறுவனங்களை மூடுவதற்கும், சிலவற்றை ஒருங்கிணைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நிதி அமைச்சினால் 34 அரச நிறுவனங்களை மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், இதற்காகக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி மேலும் வலியுறுத்தினார்.

மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, "ஆனால் நடந்துள்ளது என்னவென்றால், தொழில்முறை அரச சேவையில் பாரிய வெற்றிடங்கள் நிலவும் அதேவேளை, கடந்த காலத்தில் அரசியல் நியமனங்கள் காரணமாக கீழ்மட்டப் பதவிகள் பெருமளவில் நிரம்பியுள்ளன.

அதனால் நாங்கள் ஒரு சிறிய முடிவை எடுத்தோம். அரச சேவை அத்தியாவசியமானதுதான். ஆனால் அந்தச் சேவையை வழங்குவதற்காக நாம் செலவிடும் தொகை அதிகம். அதனால் சில நிறுவனங்களை மூடுவதற்கும், சில நிறுவனங்களை ஒருங்கிணைப்பதற்கும் தீர்மானித்துள்ளோம். தற்போது நிதி அமைச்சினூடாக 34 நிறுவனங்களை மூடுவது தொடர்பில் தீர்மானம் எடுத்துள்ளோம். மூடுவதற்காகக் குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. ஒன்றை மூடினால் கொடுப்பனவு கொடுக்க வேண்டியுள்ளது. மூடுவதும் மிகவும் கடினமானது, ஏனெனில் இவை மிகவும் சிக்கலானவை. சில நிறுவனங்கள் ஏன் உருவாக்கப்பட்டன? சில நிறுவனங்கள் உருவாக்கப்பட்ட காலத்தை விட இப்போது காலம் மாறியுள்ளது.

அன்று இருந்த தேவை இன்று இல்லை. அன்று சில துறைகளில் அரச துறை மட்டுமே இருந்தது. ஆனால் இன்று வெளியே பெரிய தனியார் துறை உள்ளது. அப்படியிருக்க அவற்றை நாமே செய்ய வேண்டுமா? அல்லது அவற்றை நாம் விட்டுவிட முடியுமா? தனியாரிடமிருந்து சேவைகளைப் பெறுவது நமக்கு இலாபகரமானதா? தொழில் வல்லுநர்களை நாம் எவ்வாறு அரச சேவையில் இணைத்துக்கொள்வது? தொழில் வல்லுநர்களுக்கு ஈர்ப்புடையதாக இந்த அரச சேவையை எவ்வாறு மாற்றுவது? இல்லையெனில், நமது அரச சேவை பாரிய நெருக்கடியைச் சந்திக்கும் என்று நான் நினைக்கிறேன்." என்றார்.

  
   Bookmark and Share Seithy.com



செம்மணி புதைகுழி உண்மைகளை மூடி மறைக்கும் சதி!
[Friday 2026-10-23 16:00]

செம்மணி மனிதப் புதைகுழி விசாரணை தொடர்பில் பேராசிரியர் ராஜ் சோமதேவ வெளியிட்டுள்ள 4வது இடைக்கால அறிக்கை முற்றிலும் திசைதிருப்பப்பட்டதாகவும், உண்மைகளை மூடி மறைக்கும் சதிச் செயல் எனவும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்றைய தினம் (23) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.



27ஆவது வாரமாக மயிலிட்டி மக்கள் போராட்டம்!
[Friday 2026-10-23 16:00]

மயிலிட்டி மக்களின் பூர்வீகக் காணிகளை விடுவிக்குமாறு கோரி முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர் போராட்டம், கொட்டும் மழைக்கு மத்தியிலும் 27ஆவது வாரமாக இன்றும் (23) நடத்தப்பட்டது.



ராஜ் சோமதேவவின் அறிக்கைக்கு எதிராக நீதிமன்றில் நகர்த்தல் பத்திரம் தாக்கல்!
[Friday 2026-10-23 16:00]

செம்மணிப் புதைகுழி தொடர்பான அறிக்கையில் 'பெரும் மனிதப் புதைகுழி' என்ற சொற்றொடரைப் பேராசிரியர் ராஜ் சோமதேவ திட்டமிட்டு நீக்கியுள்ளார் எனச் சந்தேகிப்பதாகப் பாதிக்கப்பட்ட தரப்பினரின் சார்பில் சட்டத்தரணிகள் குழுவொன்று நீதிமன்றத்தில் நகர்த்தல் பத்திரத்தைத் தாக்கல் செய்துள்ளது.



துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் குறைந்து விட்டன!
[Friday 2026-10-23 16:00]

இலங்கையில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களுடன் தொடர்புடைய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் 2025 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2026 ஆம் ஆண்டில் 18 ஆகக் குறைவடைந்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.



பிக்குகளின் கோரிக்கை நிராகரிப்பு!
[Friday 2026-10-23 16:00]

கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு வலியுறுத்தி, விகாரமஹாதேவி பூங்காவின் புத்தர் சிலைக்கு அருகில் பிக்குகள் குழுவினர் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவதைத் தடுத்து நேற்று (22) பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் எவ்வித மாற்றமும் செய்யப்படமாட்டாது என கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (23) அறிவித்தது.



ஷிரந்திக்கு முதல் இதய அறுவைச் சிகிச்சை நிறைவு!
[Friday 2026-10-23 16:00]

முன்னாள் முதற்பெண்மணியும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் மனைவியுமான ஷிரந்தி ராஜபக்‌ஷவுக்கு மேற்கொள்ளப்பட்ட முதலாவது இதய அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.



சாமர சம்பத்துக்கு மீண்டும் விளக்கமறியல்!
[Friday 2026-10-23 16:00]

இலஞ்சம் பெற்றுக் கொண்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க மற்றும் அவரது தனிப்பட்ட செயலாளர் ஆகிய இருவரையும் எதிர்வரும் நவம்பர் 6 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



சொகுசுப் பேருந்து விபத்து- இருவர் பலி, 15 பேர் காயம்!
[Friday 2026-10-23 16:00]

புத்தளம் - அநுராதபுரம் பிரதான வீதியின் சாலியவெவ 19ஆவது மைல்கல் பகுதியில் நேற்று (22) மாலை 6 மணியளவில் இடம்பெற்ற கோர விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.



நாமலுக்கு மீண்டும் விளக்கமறியல்!
[Friday 2026-10-23 16:00]

கிரிஷ் கொடுக்கல் வாங்கல் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மற்றும் கிரிஷ் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் ஜானகி சிறிவர்தன ஆகியோரை எதிர்வரும் நவம்பர் மாதம் 6 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



செம்மணி விவகாரம் குறித்து நீதியமைச்சருடன் கலந்துரையாடலாம்!
[Friday 2026-10-23 06:00]

செம்மணி மனிதப்புதைக்குழி அகழ்வுப் பணிகள் மற்றும் தற்போதைய நிலைவரம் தொடர்பில் ஏதேனும் பிரச்சினை காணப்பட்டால் தமிழ் அரசியல் பிரதிநிதிகள் நீதியமைச்சருடன் கலந்துரையாடலாம். ஒரு தரப்பு நிலைப்பாட்டில் இருந்துக் கொண்டு மாத்திரம் குற்றச்சாட்டுக்களை முன்வைக்க கூடாது.வடக்கு மற்றும் கிழக்கில் இடம்பெற்ற படுகொலைகள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்துக் கொண்டு செயற்படுகிறோம் என சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.



சைவமக்களின் சமய மரியாதைக்கு ஏற்பட்ட அவமதிப்புகளைப் பட்டியலிட்ட ரவிகரன்!
[Friday 2026-10-23 06:00]

நாட்டில் சைவமக்களின் சமய மரியாதைக்கு ஏற்பட்ட அவமதிப்புகளைப் பட்டியலிட்டுக்காட்டிய வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், இறுதிப்போரின்போது காணாமல் ஆக்கப்பட்ட அருட்தந்தை பிரான்சிஸ் ஜோசப் அடிகளாருக்கான நீதியும் இதுவரை கிடைக்கவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.



வடக்கு,கிழக்கு, மலையக எம்.பிக்களுடன் சஜித் சந்திப்பு!
[Friday 2026-10-23 06:00]

வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று நேற்று இடம்பெற்றுள்ளது. பாராளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.



ஞானசார தேரர் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படமாட்டார்!
[Friday 2026-10-23 06:00]

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் கலகொட அத்தே ஞானசார தேரர், இன்று வௌ்ளிக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படமாட்டார் என புத்தசாசன அமைச்சு அறிவித்துள்ளது.



பிக்குகளை அகற்ற முயன்றதால் பதற்றநிலை!
[Friday 2026-10-23 06:00]

கொழும்பு, விஹாரமாதேவி பூங்காவில் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பிக்குகள் உள்ளிட்ட பொதுமக்களை அங்கிருந்து வெளியேற்றுவதற்காக, பொலிஸார் வியாழக்கிழமை (22) இரவு நீதிமன்ற உத்தரவுடன் அங்கு வந்ததைத் தொடர்ந்து பதற்றமான சூழல் ஏற்பட்டது.



உக்ரைன் கைப்பற்றிய இலங்கையரின் சடலம் ரஷ்யாவிடம் ஒப்படைப்பு!
[Friday 2026-10-23 06:00]

ரஷ்ய இராணுவத்தில் பணியாற்றியபோது உயிரிழந்த இலங்கையரான ரோஹன் குமார் சுடியின் சடலம், உயிரிழந்த இராணுவத்தினரின் சடலங்களைப் பரிமாறும் நடவடிக்கையின்போது ரஷ்யாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் அரசாங்கத்தின் ஆதரவுடன் செயல்படும் ‘ஐ வான்ட் டு லிவ்’ (I Want to Live) திட்டம் ஒக்டோபர் 22ஆம் திகதி தெரிவித்துள்ளது.



3 மாதங்களுக்கு ஒரு முறை வாகனப் பரிசோதனை!
[Friday 2026-10-23 06:00]

வாகனப் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில், ஒவ்வொரு 5,000 கிலோமீற்றர் பயணத்திற்குப் பின்னரோ அல்லது சுமார் மூன்று மாதங்களுக்கு ஒருமுறையோ வாகன உரிமையாளர்கள் வாகனத் தகுதிச் சான்றிதழைப் பெற வேண்டிய நடைமுறையை அறிமுகப்படுத்துவது குறித்து ஆராயப்பட்டு வருவதாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம், ஓய்வுபெற்ற எயார் மார்ஷல் துஷார பெர்னாண்டோ தெரிவித்தார்.



சிறையில் உள்ள நாமலுக்கு மருத்துவமனையில் இருந்து மஹிந்த அனுப்பிய இரகசிய கடிதம்!
[Friday 2026-10-23 06:00]

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தனது மகனும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்‌ஷவுக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.



இராஜதந்திர தோல்விகளால் இலங்கையின் சர்வதேச கௌரவம் பாதிப்பு!
[Friday 2026-10-23 06:00]

இராஜதந்திர ரீதியிலான தோல்விகள் மற்றும் மூலோபாய தொலைநோக்கின்மை காரணமாக இலங்கையின் சர்வதேச நிலைப்பாடு பலவீனமடைந்துள்ளதாக சர்வஜன அதிகாரத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர குற்றம் சுமத்தியுள்ளார்.



பெண்ணுக்குப் பாலியல் தொல்லை- என்பிபி பிரதேசசபை உறுப்பினர் கைது!
[Friday 2026-10-23 06:00]

இளம் பெண்ணொருவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகச் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட பொல்கஹவெல பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவரை எதிர்வரும் நவம்பர் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பொல்கஹவெல நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



செம்மணி புதைகுழி தொடர்பில் சர்வதேச விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும்!
[Thursday 2026-10-22 16:00]

செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான பேராசிரியர்களின் அறிக்கை, சர்வதேச விசாரணையின் அவசியத்தையே வலியுறுத்துவதாக ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் பேச்சாளர் சுரேஷ் க. பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.


Asiaan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா