Untitled Document
May 18, 2026 [GMT]
மன்னார் பேருந்து நிலையத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி!
[Monday 2026-05-18 03:00]


முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்தின் ஆறாம்  நாளான  ஞாயிற்றுக்கிழமை (17)  மன்னார் பிரதான பேருந்து நிலைய பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வும் ஈழபோரின் வலி சுமந்த நாட்களின் நினைவு நிகழ்வும் அனுஷ்டிக்கப்பட்டது.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்தின் ஆறாம் நாளான ஞாயிற்றுக்கிழமை (17) மன்னார் பிரதான பேருந்து நிலைய பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வும் ஈழபோரின் வலி சுமந்த நாட்களின் நினைவு நிகழ்வும் அனுஷ்டிக்கப்பட்டது.

  

இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளையின் ஏற்பாட்டில் பிரதான பேருந்து நிலையத்தின் நுழைவாயில் பகுதியில் காலை 10.30 மணியளவில் நிகழ்வு இடம்பெற்றது. இதன் போது முள்ளிவாய்க்கால் கஞ்சி தயாரிக்கப்பட்டு அங்கிருந்தவர்கள் உட்பட வீதியில் சென்றவர்களுக்கும் கஞ்சி கொடுக்கப்பட்டுள்ளது.

இதன் போது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், மன்னார் மாவட்ட தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள், தமிழரசு கட்சியின் நகரசபை உறுப்பினர்கள் உள்ளடங்களாக பலர் கலந்து கொண்டனர்.

  
   Bookmark and Share Seithy.com



முள்ளிவாய்க்காலில் இன்று தமிழினப் படுகொலை நினைவேந்தல்!
[Monday 2026-05-18 03:00]

2009 ஆம் ஆண்டு பாரிய இனப்படுகொலையுடன் போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு இன்றுடன் 17 ஆண்டுகள் பூர்த்தியடையும் நிலையில், முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்வு இன்று முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் உணர்வெழுச்சியுடன் நடைபெறவுள்ளது.



சிறிதரனை விசாரிக்க மூவர் குழு!- தமிழரசின் மத்திய குழு தீர்மானம்.
[Monday 2026-05-18 03:00]

பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தொடர்பாக முன்வைக்கப்பட்டிருந்த குற்றச்சாட்டுகளை ஆராய்வதற்காக அவரது இணக்கப்பாட்டுடன் மூவர் கொண்ட குழு நியமிக்கப்பட்டிருப்பதாக தமிழரசுக்கட்சியின் பதில் பொதுசெயலாளர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்தார்.



மேல் மாகாண ஆளுநர் பதவி விலக முடிவு!
[Monday 2026-05-18 03:00]

மேல் மாகாண ஆளுநர் பதவியில் இருந்து விலகுவதற்கு தாம் தீர்மானித்துள்ளதாக ஹனீஃப் யூசுப் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு அறிவித்துள்ளார். அவர் ஊடகங்களுக்கு அறிக்கையொன்றை விடுத்து இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.



களுவாஞ்சிக்குடியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல்!
[Monday 2026-05-18 03:00]

தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டத்தை 22 நாடுகள் சேர்ந்து எமது மௌனிக்கச் செய்திருந்தன. மீண்டும் நாம் அகிம்சை ரீதியான போராட்டத்திலேயே தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றோம். நாட்டிலே சம அந்தஸ்துடன் வாழ்வதற்காக இவ்வாறான போராட்டங்களை நாங்கள் முன்னெடுத்து வருகின்றோம்.என மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப் பற்றுப் பிரதேச சபையின் தவிசாளர் விமலநாதன் மதிமேனன் தெரிவித்தார்.



மாகாண சபைத் தேர்தல் - அரசு இழுபறி!
[Monday 2026-05-18 03:00]

மாகாண சபைத் தேர்தலை இவ்வருடத்திற்குள் நடத்துவது தொடர்பில் அரசாங்கத்திற்குள் நிலவி வந்த இழுபறிகள் தற்போது ஒரு தீர்க்கமான முடிவை நோக்கி நகர்ந்துள்ள நிலையில், தற்போதைய அரசியல் சூழலில் தேர்தலை நடத்துவது சாத்தியமில்லை எனத் தெரியவருகிறது.



முள்ளிவாய்க்கால் படுகொலை- திருகோணமலையில் நினைவேந்தல்!
[Monday 2026-05-18 03:00]

2009 மே மாதத்தில் முள்ளிவாய்க்காலில் நடந்தேறிய இனப் படுகொலையில் கொல்லப்பட்ட ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோரை நினைவேந்தும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு திருகோணமலை சிவன் கோயிலடியில் நேற்று நடைபெற்றது.



பொன்னாலையில் நினைவேந்தலுடன் முள்ளிவாய்க்கால் கஞ்சி!
[Monday 2026-05-18 03:00]

தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்த வட்டுக்கோட்டை - பொன்னாலையில் நேற்று முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது இனப்படுகொலை நினைவுச் சின்னத்துக்கு முன்பாக ஈகைச் சுடர் ஏற்றப்பட்டு, மலர்தூவி அக் வணக்கத்துடன் அஞ்சலி செலுத்தப்பட்டது.



காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கோரிய தாய் மரணம்!
[Monday 2026-05-18 03:00]

மட்டக்களப்பு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்துடன் இணைந்து, வடக்கு கிழக்கு தமிழர் தாயகப் பகுதிகளில் வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்காக நீதி கோரி பல ஆண்டுகளாக போராடி வந்த மேலும் ஒரு தாய் நீதி கிடைக்காமலேயே உயிரிழந்துள்ளார்.



பெரியமுறிப்பில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு!
[Monday 2026-05-18 03:00]

முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தை முன்னிட்டு முள்ளிவாய்க்கால் கஞ்சி எனப்படும் இறுதி யுத்தத்தின் போது மக்களின் அவலங்களை வெளிப்படுத்தும் கஞ்சி வழங்கும் செயற்பாடு வடக்கு கிழக்கு உள்ளிட்ட தமிழர்கள் வாழும் பகுதிகளில் உணர்வுபூர்வமாக இடம்பெற்று வருகின்றது.



நாளை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் உணர்வெழுச்சியுடன் நினைவேந்தல்!
[Sunday 2026-05-17 17:00]

2009 ஆம் ஆண்டு போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு 17 ஆண்டுகள் பூர்த்தியடையும் நிலையில், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு நாளைய தினம் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் உணர்வெழுச்சியுடன் நடைபெறவுள்ளது.



27ஆம் திகதி ஐஎம்எவ்இன் அடுத்த மீளாய்வு!
[Sunday 2026-05-17 17:00]

இலங்கையின் விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் கீழ், இலங்கை தொடர்பான ஐந்தாவது மற்றும் ஆறாவது மதிப்பாய்வுகளை மேற்கொள்வதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக்குழு எதிர்வரும் மே மாதம் 27ஆம் திகதியை குறித்துள்ளது.



சுவிசில் இருந்து விடுமுறையில் வந்தவர் முகமூடி கொள்ளையர்களால் கொலை!- யாழ்ப்பாணத்தில் சம்பவம்.
[Sunday 2026-05-17 17:00]

சுவிஸ் நாட்டில் இருந்து யாழ்ப்பாணம் வந்தவரை படுகொலை செய்து , நகைகள் பணம் என்பவற்றை முகமூடி கொள்ளை கும்பல் ஒன்று கொள்ளையடித்து சென்றுள்ளது. மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சண்டிலிப்பாய் பகுதியை சேர்ந்த வல்லிபுரம் சந்திரசேகரம் (வயது 67) என்பவரே படுகொலை செய்யப்பட்டுள்ளார்.



சிரேஷ்ட ஊடகவியலாளர் டி.பி.எஸ். ஜெயராஜ் காலமானார்!
[Sunday 2026-05-17 17:00]

சிரேஷ்ட ஆங்கில ஊடகவியலாளரும், அரசியல் பத்தி எழுத்தாளருமான டி.பி.எஸ். ஜெயராஜ் காலமானார். இலங்கை அரசியல், இனப்பிரச்சினை, புவிசார் அரசியல் மற்றும் தமிழ் சினிமா குறித்துப் பல தசாப்தங்களாக ஆழமானதும் காத்திரமானதுமான அரசியல் ஆய்வுக் கட்டுரைகளை அவர் எழுதி வந்தார்.



விக்டோரியா நீர்த்தேக்கத்தில் நீராட சென்ற மூவர் நீரில் மூழ்கி மரணம்!
[Sunday 2026-05-17 17:00]

விக்டோரியா நீர்த்தேக்கத்தில் நீராட சென்று நீரில் மூழ்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3 ஆக உயர்வடைந்துள்ளது. இன்றைய (17) தினம் தெல்தெனிய - பம்பரகல விகாரைக்கு அருகில் உள்ள விக்டோரியா நீர்த்தேக்கத்தில் நீராடுவதற்கு நான்கு இளைஞர்கள் சென்றுள்ளனர்.



தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம்!
[Sunday 2026-05-17 17:00]

தமிழரசுக்கட்சியின் மத்தியசெயற்குழு கூட்டம் வவுனியா குருமன்காட்டில் அமைந்துள்ள கட்சியின் அலுவலகமான தாயகத்தில் இன்று (17) ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிக்கு ஆரம்பமாகியது.



பாதுகாப்பு தலைமை அதிகாரி சட்டத்தை நீக்குவதற்கான சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு!
[Sunday 2026-05-17 17:00]

பாதுகாப்புப் படைகளின் தலைமை அதிகாரி சட்டத்தை நீக்குவதற்கான சட்டமூலம் வர்த்தமானி மூலம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சரின் உத்தரவின் பேரில் தயாரிக்கப்பட்ட இந்தச் சட்டமூலம், கடந்த மே மாதம் 15ஆம் திகதி அரசாங்க வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.



மட்டக்களப்பு வாவியில் வலையில் சிக்கிய சடலம்!
[Sunday 2026-05-17 17:00]

மட்டக்களப்பு கல்லடிப் பாலத்தின் கீழ் வாவியில் மீனவர் வலையில் சிக்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் இன்று காலையில் மீட்கப்பட்டுள்ளதாகக் காத்தான்குடிப் பொலிஸார் தெரிவித்தனர்.



மட்டக்களப்பைச் சேர்ந்த பொறியியல் மாணவர் விபத்தில் பலி!
[Sunday 2026-05-17 17:00]

பண்டாரவளை - பதுளை வீதியின் 3ஆம் மைல் பகுதியில், பல்கலைக்கழக மாணவர் ஒருவர் செலுத்திய மோட்டார் சைக்கிள் கார் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ்விபத்தில் ருஹுணு பல்கலைக்கழக பொறியியல் பீட மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொரு மாணவர் படுகாயமடைந்த நிலையில் சனிக்கிழமை (16) இரவு தியத்தலாவை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பண்டாரவளை பொலிஸார் தெரிவித்தனர்.



என்பிபி எம்.பியின் வாகனம் மோதி இருவர் படுகாயம்!
[Sunday 2026-05-17 17:00]

தேசிய மக்கள் சக்தியின் காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டி.கே ஜயசுந்தர பயணித்த கப் ரக வாகனம், முச்சக்கரவண்டி ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதி மற்றும் 8 வயது சிறுவனும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



யாழ். பல்கலைக்கழகத்தில் "நினைவாயுதம்"! Top News
[Sunday 2026-05-17 05:00]

முள்ளிவாய்க்கால் தமிழ் இனப் படுகொலையை வெளிப்படுத்தும் வகையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில், "நினைவாயுதம்" எனும் ஓவிய, புகைப்பட மற்றும் ஆவணக் கண்காட்சி சனிக்கிழமை (16) ஆரம்பமானது. பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இந்தக் கண்காட்சி நடைபெற்றது. தமிழினப் படுகொலை தொடர்பான பதிவுகளை வெளிப்படுத்தும் வகையில் ஆரம்பமான இந்தக் கண்காட்சி திங்கட்கிழமை (18) வரை நடைபெறுகிறது.


Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Asiaan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா