Untitled Document
June 5, 2024 [GMT]
நகை மற்றும் பணத்துக்காக கணவன் கணவன்-மனைவி அடித்து கொலை: - போலீசார் விசாரணை
[Tuesday 2018-11-27 14:00]

சென்னை ஆவடியில் இன்று காலை நடந்த கொடூர கொலை சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

 
ஆவடி சேக்காடு அய்யப்பன் நகர் மெயின் ரோட்டில் வசித்து வந்தவர் ஜெகதீசன். இவரது மனைவி விலாசினி. இருவரும் தமிழ்நாடு அரசு அச்சகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள்.

சென்னை ஆவடியில் இன்று காலை நடந்த கொடூர கொலை சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:- ஆவடி சேக்காடு அய்யப்பன் நகர் மெயின் ரோட்டில் வசித்து வந்தவர் ஜெகதீசன். இவரது மனைவி விலாசினி. இருவரும் தமிழ்நாடு அரசு அச்சகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள்.

  

10 ஆண்டுகளுக்கு முன்பு அந்த பகுதியில் சுமார் 1 ஏக்கர் நிலப்பரப்பில் இடம் வாங்கி அதில் பண்ணை வீட்டை கட்டி குடியேறினார்கள். முன் பகுதியில் வீட்டை கட்டி பின் பகுதியில் பெரிய தோட்டத்தையும் அமைத்திருந்தனர். ஜெகதீசனுக்கு 65 வயது ஆகிறது. விலாசினிக்கு 60 வயது. வீட்டு வேலைகளை பார்ப்பதற்கு இருவரும் ஆட்களை நியமித்து இருந்தனர். கணவன்-மனைவியாக இருப்பவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்களை வீட்டிலேயே தங்க வைத்தனர்.

கடந்த 3 மாதமாக வீட்டில் வேலை செய்து வந்த இருவர் திடீரென நின்றுவிட்டனர். இதனால் 10 நாட்களுக்கு முன்னர் ஆந்திராவை சேர்ந்த கணவன்-மனைவியை வேலைக்கு சேர்ந்தனர். இன்று காலையில் நீண்ட நேரமாகியும் ஜெகதீசன், விலாசினி இருவரும் வெளியில் வரவில்லை. வேலையாட்களையும் காணவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தனர். அப்போது கணவன்- மனைவி இருவரும் ரத்த வெள்ளத்தில் அறையில் பிணமாக கிடந்தனர். அவர்களது தலையில் பலமாக தாக்கியதற்கான அடையாளங்கள் காணப்பட்டன. இணை கமி‌ஷனர் விஜய குமாரி, துணை ஆணையர் ஈஸ்வரன் ஆகியோரும் விசாரணை மேற்கொண்டனர். அப்போது ஜெகதீசனும், விலாசினியும் தலையில் அடித்து கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது. நகை-பணத்தை கொள்ளையடிக்கும் நோக்கத்தில் இருவரும் துடிக்க துடிக்க கொடூரமாக கொலை செய்யப்பட்டிருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.

சுமார் 50 பவுன் நகைகளும், வீட்டில் இருந்த பணமும் கொள்ளை போயிருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஜெகதீசனையும், விலாசினியையும் பார்த்துக் கொள்வதற்காக வேலைக்கு சேர்ந்த ஆந்திர தம்பதி வீட்டில் இல்லை. இருவரும் மாயமாகி விட்டனர். நகை- பணத்துக்காக அவர்கள் இருவரும் சேர்ந்து இந்த கொலையை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். கொலையுண்ட ஜெகதீசன், விலாசினி இருவரின் செல்போன் எண்களை வைத்து துப்பு துலக்கப்பட்டு வருகிறது. அவர்கள் யார்-யாருடன் பேசி உள்ளனர்? என்பது பற்றிய தகவல்களை போலீசார் திரட்டி வருகிறார்கள்.

இதற்கிடையே கணவன்- மனைவியை கொலை செய்ததாக கருதப்படும் ஆந்திர தம்பதி யார் என்பது அடையாளம் தெரிந்துள்ளது. அவர்களை பிடிக்க போலீசார் வலை விரித்துள்ளனர். குற்றவாளிகளை பிடிக்க ஆந்திர மாநிலத்துக்கும் தனிப்படை விரைந்துள்ளது. அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களும் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. தனியாக வசித்து வந்த தம்பதி கொலை செய்யப்பட்ட சம்பவம் ஆவடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விலாசினி, ஜெகதீசனுக்கு 2-வது மனைவி ஆவார். சமீபத்தில்தான் அவர் பணி ஓய்வு பெற்றுள்ளார். இதற்காக அவருக்கு பணி ஓய்வு பணம் கிடைத்திருக்கும் என்று கூறப்படுகிறது. அந்த பணம் என்ன ஆனது என்பதும் தெரியவில்லை. ஜெகதீசனின் முதல் மனைவி பெயர் சுகுமாரி. இவர் அண்ணாநகரில் வசித்து வருகிறார். அவருக்கு 2 மகன்கள் உள்ளனர். விலாசினிக்கு குழந்தைகள் இல்லை.

  
   Bookmark and Share Seithy.com



தமிழகத்தின் பாஜகவின் பொறுப்புக்களிலிருந்து அண்ணாமலையை நீக்க யோசனை!
[Wednesday 2024-06-05 18:00]

இந்திய நாடாளுமன்ற தேர்தலில் பாஜக ஒரு தொகுதி கூட பெறாத மாநிலமாக தமிழகம் உருவாகியிருக்கும் நிலையில், தமிழக பாஜக தலைவராக இருக்கும் அண்ணாமலையை மாற்ற தேசிய தலைமை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் பாஜக தலைவர் அண்ணாமலை தலைமைக்கு கீழ் கட்சி வளர்ந்துவிட்டதாக வாதங்கள் வைக்கப்பட்டன. ஆனால் பெரிய வளர்ச்சி எல்லாம் தமிழ்நாட்டில் பாஜகவிற்கு ஏற்படவில்லை என்பதை தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.



தேர்தலில் அண்ணாமலையிடம் சவால் விட்டு தோற்றுப்போன சீமான்!
[Wednesday 2024-06-05 18:00]

தமிழகம், புதுச்சேரி உள்பட 40 மக்களவை தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் தோல்வி அடைந்துள்ளனர். நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னம் கிடைக்காத நிலையில் தமிழகத்தில் உள்ள 40 தொகுதிகளிலும் மைக் சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். ஆனால், நாம் தமிழர் கட்சியானது 10 தொகுதிகளில் சராசரியாக 40 ஆயிரம் வாக்குகள், 6 தொகுதிகளில் 50 ஆயிரம் வாக்குகளை பெற்றுள்ளது. திமுக மற்றும் அதிமுகவுக்கு அடுத்தபடியாக நாம் தமிழர் கட்சி இருக்கிறது.



தமிழகத்தில் "நோட்டா" வாக்குகளை அதிகம் பெற்ற தொகுதி எது?
[Wednesday 2024-06-05 18:00]

தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவை தொகுதிகளில் எந்த தொகுதியில் NOTA வாக்குகள் அதிகம் பெற்றுள்ளது என்பதை பார்க்கலாம். கடந்த 2013 -ம் ஆண்டு இந்திய தேர்தல் ஆணையமானது உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின் படி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் NOTA -வை None Of The Above) சேர்த்தது. எந்த வேட்பாளருக்கும் வாக்களிக்க விருப்பம் இல்லை என்பதை பதிவு செய்வதற்காகவும், வாக்களிக்க விருப்பம் இல்லாதவர்களின் ஓட்டுகள் கள்ள ஓட்டுகளாக மாறிவிடக் கூடாது என்பதற்காகவும் NOTA கொண்டுவரப்பட்டது.



பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் நரேந்திர மோடி!
[Wednesday 2024-06-05 18:00]

நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் பிரதமர் மோடி பதவியை ராஜினாமா செய்துள்ளார். டெல்லியில் குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை அவருடைய இல்லத்தில் சந்தித்து ராஜினாமா கடிதத்தை ஒப்படைத்துள்ளார்.



மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம்: ஆட்சி தொடர்பில் புதிய வியூகம்!
[Wednesday 2024-06-05 06:00]

நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெறவுள்ளதாக இந்திய ஊடகஙகள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்படி இன்று காலை 11.30 மணியளவில் அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த கூட்டத்தில் தெலுங்கு தேசம் கட்சி, ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளும் கலந்து கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.



இந்திய தேர்தலில் வெற்றிபெற்ற மோடிக்கு ரணில் வாழ்த்து!
[Wednesday 2024-06-05 06:00]

இந்திய மக்களவை தேர்தல் முடிவுகள் தொடர்பில் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்திய பிரதமருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.



பா.ஜ.க.வின் பணபலத்தை உடைத்தெறிந்து மகத்தான வெற்றியை பதிவுசெய்துள்ளோம்: ஸ்டாலின் பெருமிதம்!
[Wednesday 2024-06-05 06:00]

அனைத்திற்கும் முத்தாய்ப்பாக, ”பா.ஜ.க.வின் பணபலம், அதிகார மீறல்கள், ஊடகப் பரப்புரை ஆகியவற்றை உடைத்தெறிந்து பெற்றுள்ள இந்த வெற்றி மகத்தான வெற்றி என தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின்(M. K. Stalin) கூறியுள்ளார். வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியாக இது அமைந்துள்ளது எனவும், தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியான பிறகு இந்திய ஜனநாயகத்தையும் அரசியல்சாசனத்தையும் காக்கத் தேவையான அரசியல் செயல்பாடுகளைத் தி.மு.க. தொடர்ந்து முன்னெடுக்கும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.



வாரணாசி தொகுதியில் 1.50 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பிரதமர் மோடி வெற்றி!
[Tuesday 2024-06-04 18:00]

உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் பிரதமர் நரேந்திர மோடி வெற்றி பெற்றார். இன்று காலை 8 மணி முதல் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 295 -க்கும் அதிகமான இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.



மோடி பதவி விலக காங்கிரஸ் வலியுறுத்தல்!
[Tuesday 2024-06-04 18:00]

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது. கடந்த ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை ஏழு கட்டங்களாக இந்தியாவில் தேர்தல் நடைபெற்று முடிந்தது. குறித்த தேர்தலின் இறுதி முடிவானது இன்று வெளியாகவுள்ளது. அதற்கான நடவடிக்கை இன்று காலை 8 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டது.



தமிழகத்தில் மண்ணை கவ்விய பாஜக!
[Tuesday 2024-06-04 18:00]

உலகிலேயே அதிக மக்கள் தொகையை கொண்ட நாட்டில் ஆறு வாரங்களாக நடத்தப்பட்ட தேர்தலில் இன்று முடிவுகள் வெளியாகின்றன. குறித்த தேர்தலானது ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை ஏழு கட்டங்களாக நடைபெற்று முடிந்துள்ளது. தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை வெளியிட்டு வரும் நிலையில், தமிழகத்தில் திமுக முன்னிலையை வகித்துள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை திமுக, அதிமுக, பாஜக மற்றும் நாம் தமிழர் கட்சி இடையே போட்டியானது நிலவி வருகிறது.



மேற்கு வங்காளத்தில் பாஜகவை பின்னுக்கு தள்ளிய மம்தா பானர்ஜி!
[Tuesday 2024-06-04 18:00]

மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜியின் கட்சி 29 இடங்களில் முன்னணி வகித்து வருகிறது. மேற்கு வங்காளத்தில் காங்கிரஸ் கட்சியை கழற்றி விட்டு தனியாக பாஜகவை எதிர்த்து நின்றது மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி. இதனால், பல்வேறு விடயங்களை காரணம் காட்டி மம்தா பானர்ஜி கட்சியை பாஜக ஓரம் கட்ட பார்த்தது.



“தமிழகத்தில் அதிகமான தொகுதிகளில் பாஜக வெற்றி பெறும்” – தமிழிசை சவுந்தரராஜன்!
[Tuesday 2024-06-04 06:00]

தமிழகத்தில் அதிகமான தொகுதிகளில் பாஜக வெற்றி பெறும் எனத் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். 18வது மக்களவைத் தேர்தல் இந்தியா முழுவதும் ஏப்ரல் 19ஆம் தேதி, முதல் கட்டமாகத் தொடங்கி, ஏப்ரல் 26, மே 7, மே 13, மே 20, மே 25 மற்றும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்றது. இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை (04.06.2024) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. நாளை வெளிவர இருக்கும் தேர்வு முடிவுக்காகப் பொதுமக்கள் ஆர்வமுடன் நாளைய விடியலுக்காக எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கின்றனர்.



‘இந்தியா’ கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்குக் காங்கிரஸ் அழைப்பு!
[Tuesday 2024-06-04 06:00]

18வது மக்களவைத் தேர்தல் இந்தியா முழுவதும் ஏப்ரல் 19ஆம் தேதி, முதல் கட்டமாகத் தொடங்கி, ஏப்ரல் 26, மே 7, மே 13, மே 20, மே 25 மற்றும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை (04.06.2024) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. நாளை வெளிவர இருக்கும் தேர்வு முடிவுக்காகப் பொதுமக்கள் ஆர்வமுடன் நாளைய விடியலுக்காக எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கின்றனர்.



ரூ.7,755 கோடி மதிப்பிலான 2,000 நோட்டுகள்: இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கை!
[Tuesday 2024-06-04 06:00]

மக்களிடம் இன்னும் 2,000 நோட்டுகள் இருப்பதாக இந்திய ரிசர்வ் வங்கி (RBI) தெரிவித்துள்ளது. இன்னும் ரூ.7,755 கோடி மதிப்பிலான இரண்டாயிரம் நோட்டுகள் மக்களிடம் இருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புழக்கத்தில் இல்லாத இந்த நோட்டுகளில் 97.82 சதவீதம் வங்கிகளுக்குத் திரும்பியுள்ளது. மே 19, 2023 அன்று, ரிசர்வ் வங்கி ரூ.2,000 நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறுவதாக அறிவித்தது. அப்போது ரூ.3.58 லட்சம் கோடி மதிப்பிலான இரண்டாயிரம் நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன.



குடியரசுத் தலைவருக்கு முன்னாள் நீதிபதிகள் கடிதம்!
[Monday 2024-06-03 18:00]

18வது மக்களவைத் தேர்தல் இந்தியா முழுவதும் ஏப்ரல் 19ஆம் தேதி, முதல் கட்டமாகத் தொடங்கி, ஏப்ரல் 26, மே 7, மே 13, மே 20, மே 25, ஜூன் 1 என ஒவ்வொரு தொகுதிகளிலும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்று. 7 கட்டங்களாக நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை (04-06-24) எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. நாளை வெளிவர இருக்கும் தேர்வு முடிவுக்காகப் பொதுமக்கள் ஆரவமுடன் நாளை விடியலுக்காக எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கின்றனர்.



இத்தாலி கப்பலில் நடந்த அமர்களமான கொண்டாட்டம்: மும்பை திரும்பிய அம்பானிகள்!
[Monday 2024-06-03 18:00]

முகேஷ் அம்பானி மற்றும் அவரது மனைவி நீதா அம்பானி அவர்களின் மகன் ஆனந்த் அம்பானி மற்றும் Radhika Merchant திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டத்திற்கு பிறகு மும்பை திரும்பியுள்ளனர். இந்த திருமண கொண்டாட்டம் இத்தாலி மற்றும் தென் பிரான்ஸ் வழியாக செல்லும் ஒரு சொகுசு கப்பலில் நடைபெற்றது.



விருதுநகரில் ராதிகா சரத்குமார் வெற்றி பெறுவாரா?
[Monday 2024-06-03 18:00]

விருதுநகரில் மக்களவை தொகுதியில் போட்டியிடும் ராதிகா சரத்குமாருக்கு வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது என்று அவரே பதிலளித்துள்ளார். விருதுநகர் மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட நடிகை ராதிகா மற்றும் சரத்குமார், இன்று காலை ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் தரிசனம் செய்தார்.



மக்களவை தேர்தல் 2024: வாக்கு எண்ணிக்கையை உடனக்குடன் தெரிந்துக்கொள்வது எப்படி?
[Monday 2024-06-03 18:00]

மக்களவைத் தேர்தல், ஆந்திரா, ஒடிசா மாநில சட்டப்பேரவைகளுக்கான இடைத்தேர்தல் போன்றவற்றின் வாக்கு எண்ணிக்கையானது நாளை காலை 8 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது. குறித்த தேர்தலானது ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை ஏழு கட்டங்களாக நடைபெற்று முடிந்துள்ளது. இதற்கான முடிவுகள் நாளை வெளியாகவுள்ள நிலையில் உலகமே முடிவிற்காக காத்துக்கொண்டிருக்கிறது. இதை எப்படி உடனுக்குடன் பார்வையிடலாம் என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.



‘3ஆம் பாலினத்தவர் உள் இடஒதுக்கீடு ரத்து’ - நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
[Monday 2024-06-03 06:00]

சென்னையைச் சேர்ந்தவர் திருநங்கை ரக்‌ஷிதா ராஜ். இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அவர் அளித்த அந்த மனுவில், ‘மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலின் கீழ் 3ஆம் பாலினத்தவர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்கியது அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமானது. எனவே அதை ரத்து செய்ய வேண்டும்’ என்று தெரிவித்திருந்தார்.



காங்கிரஸ் நிச்சயமாக 3இல் 2 பங்கு இடங்களில் வெற்றி பெறும்” - டி.கே.சிவகுமார் நம்பிக்கை!
[Monday 2024-06-03 06:00]

18வது மக்களவைத் தேர்தல் இந்தியா முழுவதும் ஒவ்வொரு மாநிலமாக நடைபெற்றது. அதன்படி, கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி, முதல் கட்டமாகத் தமிழகம், மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்களில் 18வது ஜனநாயகத் திருவிழா தொடங்கி, ஏப்ரல் 26, மே 7, மே 13, மே 20, மே 25, ஜூன் 1 என ஒவ்வொரு தொகுதிகளிலும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்று நேற்று (01-06-24) 6 மணியுடன் முடிவடைந்தது. 7 கட்டங்களாக நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.


Karan Remax-2010
Mahesan-Remax-169515-Seithy
Asayan-Salon-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
Vaheesan-Remax-2016
Logan-Kumaresh-Homelife-02-02-2021
NKS-Ketha-04-11-2021
Airlinktravel-2020-01-01
Ambikajewellers-01-08-2021-seithy
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா