இலங்கைக்கு முதல் தங்கப் பதக்கத்தை பெற்றுக்கொடுத்த எதிர்வீரசிங்கம் காலமானார்! | Seithy.com - 24 Hours Tamil News Service, World's largest daily tamil news,tamil breaking news,tamilclassifieds,tamil entertainment, srilanka, tamilnadu, tamileelam | www.seithy.com
 Untitled Document
May 3, 2024 [GMT]

இலங்கைக்கு முதல் தங்கப் பதக்கத்தை பெற்றுக்கொடுத்த எதிர்வீரசிங்கம் காலமானார்!
[Saturday 2024-04-20 06:00]

இலங்கையின் முன்னாள் மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் தனது 91 ஆவது வயதில் அமெரிக்காவில் காலமானார்.உயரம் பாய்தல் வீரரான நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் 1952 மற்றும் 1956 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கை சார்பாக பங்கேற்ற பெருமையை பெற்றுள்ளார்.


  

1958 ஆம் ஆண்டு ஜப்பானில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில் உயரம் பாய்தலில் 1.95 உயரத்திற்கு ஆற்றலை வௌிப்படுத்தி புதிய சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்றார். இதன் மூலம் சர்வதேச மெய்வல்லுநர் அரங்கில் இலங்கைக்கு தங்கப்பதக்கம் ஈட்டிக்கொடுத்த முதல் வீரர் என்ற வரலாற்று சிறப்பும் நாகலிங்கம் எதிர்வீரசிங்கத்திற்கு உள்ளது. 1962 ஆம் ஆண்டு ஜகார்த்தாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு விழாவில் உயரம் பாய்தலில் வௌ்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.

யாழ்ப்பாணம் பெரியவிளானில் 1933 ஓகஸ்ட் 24 ஆம் திகதி பிறந்த இவர் யாழ். மத்திய கல்லூரியின் பழைய மாணவராவார். பாடசாலை பருவத்திலேயே உயரம் பாய்தலில் அகில இலங்கை சாதனையை முறியடித்த பெருமையும் அவருக்கு உள்ளது.

இலங்கை, சியேரா லியோன், பப்புவா நியூ கினியா, நைஜீரியா ஆகிய நாடுகளில் பல்கலைக்கழக விரிவுரையாளராக பணியாற்றியுள்ள நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் யுனெஸ்கோவிலும் 5 ஆண்டுகள் கடமையாற்றியுள்ளார்.

  
   Bookmark and Share Seithy.com


வெளிநாட்டவர்களுக்கு விசா வழங்கும் பணி தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படவில்லை!
[Friday 2024-05-03 05:00]

இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டவர்களுக்கு விசா விநியோகிக்கும் பணிகள் வெளிநாட்டு நிறுவனத்துக்கு முழுமையாக வழங்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி முற்றிலும் பொய்யானது. விசா விநியோகிக்கும் பணிகளுக்கு உரிய வசதிகளை வழங்கும் நடவடிக்கைகளுக்கான பொறுப்பு மாத்திரமே இந்நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது என அரசாங்கம் அறிவித்துள்ளது.


கட்டுநாயக்க விமான நிலைய விசா வழங்கும் பிரிவை இந்திய நிறுவனம் பொறுப்பேற்கவில்லை!
[Friday 2024-05-03 05:00]

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசா வழங்கும் நடைமுறையை இந்திய நிறுவனங்கள் பொறுப்பேற்றுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி உண்மைக்கு புறம்பானது என கொழும்புக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவிக்கின்றது.


வட இலங்கை சமாதானத்தை அனுபவிக்கிறதாம்!- சொல்கிறார் சொல்ஹெய்ம்.
[Friday 2024-05-03 05:00]

தற்போது வட இலங்கை சமாதானத்தை அனுபவிப்பதாகவும், யுத்தம் இடம்பெற்ற காலத்துக்குத் திரும்பிச்செல்வதை எவரும் விரும்பவில்லை எனவும் தெரிவித்துள்ள இலங்கைக்கான முன்னாள் சமாதானத்தூதுவரும், நோர்வே நாட்டு இராஜதந்திரியுமான எரிக் சொல்ஹெய்ம், இருப்பினும் இன்னமும் தமிழர்களின் அபிலாஷைகள் முழுமையாகப் பூர்த்திசெய்யப்படாத நிலையில் இலங்கை அரசு அதிகாரங்களைப் பகிரவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.


முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு - 15ஆம் ஆண்டு நினைவு நாள்! Top News
[Friday 2024-05-03 05:00]

ஆண்டுகள் பல கடந்தும் நீதிக்காகவும், சுதந்திரவேட்கையோடு எம் மண்ணின் விடுதலைக்காகவும் இறுதிப்போரில் வதைக்கப்பட்ட,கொல்லப்பட்டஎம் உறவுகளுக்காகவும் லண்டன் மாநகரில் அணிதிரள்வோம் வாரீர்.


உமா ஓயாவினால் மின்சார சபைக்கு தினமும் 80 மில்லியன் ரூபா மிச்சம்!
[Friday 2024-05-03 05:00]

உமாஓயா அபிவிருத்தி திட்டம் செயற்படத் தொடங்கியதன் மூலம் மின்சார சபைக்கு நாளொன்றுக்கு 80 மில்லியன் ரூபா சேமிக்கப்படுவதாக என அதன் திட்டப் பணிப்பாளர் சுதர்ம எலகந்த தெரிவித்துள்ளார்.


நள்ளிரவில் குறைகிறது லிட்ரோ எரிவாயு விலை!
[Friday 2024-05-03 05:00]

சமையல் எரிவாயுவின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. குறைக்கப்படும் விலைகள் தொடர்பில் இன்ற அறிவிக்கப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்தார். அதன்படி குறைக்கப்பட்ட விலை இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.


அனுரவின் மேதின கூட்டத்திலேயே அதிக சனம்! - என்கிறார் சம்பிக்க.
[Friday 2024-05-03 05:00]

தேசிய மக்கள் சக்தியின் மே தின கூட்டத்திலேயே பெருமளவிலானோர் கலந்துக் கொண்டார்கள்.அவர்களின் கூட்டமே சிறந்த முறையில் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது. பழைய மாக்ஸிச கொள்கையில் இருந்து மக்கள் விடுதலை முன்னணி விடுபட்டால் அரசியலில் முன்னேற்றமடையலாம் என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.


இன, மதக் கலவரத்தை தடுத்தவர் பேராயர்!
[Friday 2024-05-03 05:00]

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்ட போது ஏற்படவிருந்த இன, மத கலவரத்தை பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தடுத்தார். எனவே அவர் மீது போலியான விமர்சனங்களை முன்வைக்க வேண்டாம் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்தார்.


கனடாவில் முதியவர்களிடம் மோசடி செய்த இரு தமிழர்கள் கைது!
[Friday 2024-05-03 05:00]

கனடாவின் டர்ஹாம் பிராந்தியத்தில் பல முதியவர்களை ஏமாற்றி மோசடி செய்த குற்றச்சாட்டில் இரு தமிழர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.


அளம்பில் மாவீரர் துயிலும் இல்ல காணியை இராணுவத்துக்கு சுவீகரிக்கும் முயற்சி தடுத்து நிறுத்தம்! Top News
[Thursday 2024-05-02 17:00]

முல்லைத்தீவு - அளம்பில் மாவீரர் துயிலும் இல்ல காணியினை, இராணுவத்தினருக்கு சுவீகரித்து வழங்க எடுத்த முயற்சி அப் பகுதி மக்களாலும், அரசியல் கட்சி பிரமுகர்கள் சிலராலும் இன்று தடுத்து நிறுத்தப்பட்டது.


Logan-Kumaresh-Homelife-02-02-2021
Ambikajewellers-01-08-2021-seithy
Asayan-Salon-2022-seithy
Karan Remax-2010
Rajeef sebarasha 2023/04/19
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Airlinktravel-2020-01-01
Kugeenthiran-200-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Mahesan-Remax-169515-Seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா