தாயக மக்களின் மனங்களோடு இணைய மறுக்கும் புலம்பெயர் அமைப்புக்கள்: - மாவீரர் நாள் உணர்த்தியது | Seithy.com - 24 Hours Tamil News Service, World's largest daily tamil news,tamil breaking news,tamilclassifieds,tamil entertainment, srilanka, tamilnadu, tamileelam | www.seithy.com
 Untitled Document
February 25, 2018 [GMT]

  • Welcome
  • Welcome
தாயக மக்களின் மனங்களோடு இணைய மறுக்கும் புலம்பெயர் அமைப்புக்கள்: - மாவீரர் நாள் உணர்த்தியது
[Thursday 2017-11-30 17:00]

கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இம்முறை மாவீரர் துயிலும் இல்லங்களை நோக்கி பெருவாரியாக மக்கள் திரண்டார்கள். வடக்கு- கிழக்கிலுள்ள 30க்கும் அதிகமாக மாவீரர் துயிலும் இல்லங்களிலும் அஞ்சலிச் சுடர் ஏற்றப்பட்டது.

கடந்த காலத்தில் மாவீரர் துயிலும் இல்லங்களை இராணுவம் உருத்தெரியாமல் இடித்து அழித்த போதும், அந்தச் சிதைவுகளை ஒன்றாக்கி மாவீரர்களின் அர்ப்பணிப்பை ஆகுதியின் பெரும் வடிவமாக மக்கள் மாற்றிக் காட்டினார்கள்.


  

அலுவலகங்களுக்குள் மட்டும் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்திய, அரசியல் கட்சியினரும், அமைப்புக்களும் கூட மக்களோடு மக்களாக மாவீரர் துயிலும் இல்லங்களை நோக்கி இம்முறை வருகை தந்ததைக் காண முடிந்தது.

அதுபோல, கடந்த ஆண்டு மாவீரர் துயிலும் இல்லங்களையும், மாவீரர்களுக்கான பொதுச்சுடர் மேடைகளையும் ஆக்கிரமித்திருந்த சில அரசியல்வாதிகள் அதிலிருந்து கீழிறங்கி, மக்களுக்குப் பின்னால் நின்றதையும் காண முடிந்தது.

மேலுள்ள விடயங்கள் குறிப்பிடத்தக்கவை. ஆனாலும், “மாவீரர்களை நினைவு கூருவதற்கான தகுதியை யார் யாரெல்லாம் கொண்டிருக்கின்றார்கள்?, யாருக்கெல்லாம் அந்தத் தகுதி கிடையாது?” என்கிற தரப்படுத்தல் கருத்தியலை முன்னிறுத்தும் செயற்பாடுகளும், புலம்பெயர் தேசங்களில் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளை மேடைப் பேச்சுக்கள் ஆக்கிரமித்திருந்ததும் எரிச்சலாக மிஞ்சியது.

முப்பது ஆண்டுகாலமாக ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்த தரப்பு, அந்தப் போராட்ட வடிவத்தினை மௌனித்த புள்ளியிருந்து, புதிய போராட்ட வடிவத்தினை நோக்கி செல்ல வேண்டிய தேவை தமிழ்த் தேசிய அரசியலில் உருவானது. அது, நடைமுறை உலக அரசியலையும், கடந்த கால போராட்ட படிப்பினைகளையும் உள்வாங்கியதாக இருக்க வேண்டும் என்கிற கடப்பாட்டினையும் மேற்கொண்டு வந்தது.

முள்ளிவாய்க்கால் முடிவுக்குப் பின்னரான கடந்த எட்டரை ஆண்டுகளில் தமிழ்த் தேசிய அரசியல் அந்தக் கட்டத்தை நோக்கி மிகமிக மெதுவாக பயணித்து வருகின்றது. தற்போதையை பயணத்தை விரும்பியோ விரும்பாமலோ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், அதன் தலைமையுமே வழிநடத்திக் கொண்டிருக்கின்றது.

கூட்டமைப்பு மீதும், அதன் தலைமை மீதும் மக்கள் வெளிப்படுத்தும் அதிருப்தி நாளுக்கு நாள் அதிகரித்து வந்தாலும், இன்னொரு பக்கம், கூட்டமைப்பு அழைத்துச் செல்லும் பாதையை நோக்கி மக்கள் வேண்டா வெறுப்பாகவேனும் திரள்கிறார்கள் என்பதையும் ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கின்றது.

இந்த நிலையை, தமிழ்த் தேசிய அரசியலில் ஆரோக்கியமான கட்டம் என்று சொல்ல முடியாது. மாற்றுப் பாதையையோ அல்லது புதிய பாதைகளுக்கான கட்டங்களையோ கடந்த எட்டரை ஆண்டுகளில் யாராலும், எந்தத் தரப்பாலும் வடிவமைக்க முடியவில்லை.

அப்படியான நிலையில், தமது இயலாமைக் கட்டங்களை மறைப்பதற்காக மாவீரர் நினைவேந்தல், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் என்கிற மிகவும் உணர்ச்சிகரமான தருணங்களை இன்னும் இன்னும் உணர்ச்சிகரமான கட்டங்களாக மாற்றி, அதனை கட்சி சார் அரசியலாக மாற்றுவதற்கான முனைப்புக்களை சில தரப்புக்கள் செய்கின்றனவோ என்று எண்ண வேண்டியிருக்கின்றது. அதன்போக்கிலேயே, மாவீரர் தினத்தை யார் யாரெல்லாம் அனுஷ்டிக்க முடியும் என்கிற தரப்படுத்தல் கருத்தியலையும் அணுக வேண்டியிருக்கின்றது.

‘தமிழீழம்’ என்கிற ஒற்றை இலக்கை நோக்கி தமிழீழ விடுதலைப் புலிகள் பயணித்தாலும், ‘சமஷ்டி’ பற்றிய அதிகாரப் பகிர்வு அரசியல் பற்றியும் உரையாடல்களை நடத்தியிருக்கின்றார்கள். விடுதலைப் புலிகளின் சார்பில் சமாதானப் பேச்சுக்களை வழிநடத்தியிருந்த ‘தேசத்தின் குரல்’ அன்ரன் பாலசிங்கமும், சமஷ்டி பற்றி வெளிப்படையாகவே உரையாடியிருக்கின்றார்.

அவரின் இறுதிக் காலங்களில் அது அதிகமாகவே நிகழ்ந்துமிருக்கின்றது. ஒஸ்லோ பேச்சுவார்த்தையிலும் ‘சமஷ்டி’ பற்றிய உரையாடலே பிரதான இடம் வகித்திருந்தது. ‘தமிழீழம்’ என்கிற இலக்கிற்காக போராடி வீழ்ந்தவர்களுக்கு துரோகம் செய்யும் சந்தர்ப்பமாக சமஷ்டி பற்றிய ஒஸ்லோ பேச்சுவார்த்தையைக் கொள்ள வேண்டுமா?, என்கிற கேள்வி அப்போதும் எழுந்திருந்தது. அந்தக் கருத்துக்கு ஆதரவாகவும் எதிராகவும் விமர்சனங்களும் வியாக்கியானங்களும் அதிகளவாக வைக்கப்பட்டுமிருந்தன.

ஆனால், முள்ளிவாய்க்கால் முடிவுக்குப் பின்னரான காலத்தில், சமஷ்டி அதிகாரப் பகிர்வு என்கிற கோரிக்கையை பிரதானமாகக் கொண்டே அனைத்துத் தமிழ்த் தேசியக் கட்சிகளும் பயணிக்கின்றன. அதனையே, தமிழ் மக்களும் தமது பிரதான கோரிக்கையாக தற்போது வரிந்து கொண்டிருக்கின்றார்கள். அப்படியாயின், தமிழீழம் என்கிற ஒற்றை இலக்கை வைத்துப் போராடி வீழ்ந்த மறவர்களுக்கு, தமிழ்ச் சமூகம் ஒட்டுமொத்தமாக துரோகம் இழைப்பதாகக் கொள்ள முடியுமா? அதன்போக்கில், மாவீரர்களை நினைவு கூருவதற்கான தகுதியை தமிழ் மக்கள் இழந்து விட்டார்களா? என்கிற விடயத்தையும் இந்தத் தரப்படுத்தல் கருத்தியலாளர்கள் முன்வைக்க வேண்டும்.

உலகம் பூராவும் முன்னெடுக்கப்படும் உரிமைப் போராட்டங்களில், போராட்ட வடிவங்கள் மாறுகின்ற போது, அதன் தன்மைகளுக்கு ஏற்ப ‘இலக்கின்’ எல்லைகள் சற்று மாறியே வந்திருக்கின்றன.

அதன் போக்கிலேயே, தமிழ்த் தேசியப் போராட்டத் தளமும் தற்போது இருக்கின்றது. உலக ஒழுங்கையும், கடந்த காலப் படிப்பினைகளையும் உள்வாங்காத எந்தப் போராட்டத்தையும் உலகம் என்றைக்குமே விட்டு வைத்ததில்லை.

ஆக, எல்லாவற்றையும் உள்வாங்கி, அதிக விட்டுக்கொடுப்பில்லாத அரசியலையே தமிழ்த் தேசிய அரசியலாக முன்னெடுக்க வேண்டியிருக்கின்றது. அந்தக் கட்டத்தை நோக்கி செல்வது என்பது மாவீரர்களுக்கான துரோகமாக கொள்ள வேண்டியதில்லை.

வீரமறவர்களின் ஆன்மாக்களுக்கு அதனை உணர்ந்து கொள்ளும் திறனும் நேர்மையும் அதிகமாகவே இருக்கும். அப்படியான நிலையில், தரப்படுத்தல் கருத்தியல் வழி, தமது குறுகிய அரசியலை முன்னெடுக்க நினைப்பது அபத்தமானவை. அது, முன்னோக்கிய அரசியல் பயணத்தை பின்னோக்கி இழுக்கும் நிலை. அதனை சம்பந்தப்பட்டவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

தாயகத்தில் தமிழ் மக்கள் பெரும் அடக்குமுறைக்கு உள்வாக்கும் அனைத்துத் தருணங்களிலும், தமிழ்த் தேசியப் போராட்டங்களின் சில முக்கியமான கட்டங்களை புலம்பெயர் தேசங்கள் தாங்கிப் பிடித்திருக்கின்றன.

அவற்றில், மாவீரர் நினைவேந்தல் முக்கியமானது. முள்ளிவாய்க்காலுக்குப் பின்னர், தாயகத்தில் நினைவேந்தலுக்கான வெளிகள் முற்றாக அடைக்கப்பட்டன.

அப்படியான நிலையில், தாயக மக்களின் பெரும் ஏக்கக் குமுறலை புலம்பெயர் நினைவேந்தல் நிகழ்வுகள் குறைத்திருக்கின்றன. ஆனால், இன்னொரு வகையில், அந்த நினைவேந்தல் நிகழ்வுகளில் அரங்கேறும் காட்சிகள் மற்றும் குறு அரசியல் தாயக மக்களை இன்னும் இன்னும் பெரும் அழுத்தத்துக்கு கொண்டு சென்ற காட்சிகளையும் கடந்த எட்டு ஆண்டுகளில் கண்டிருக்கின்றோம்.

புலம்பெயர் அமைப்புக்களுக்கிடையிலான குறு அரசியலும், அடிதடிகளும் இப்போதைக்கு நிற்கப்போவதில்லை என்ற நிலையில், தாயகத்திலிருந்து அது பற்றி கவலைப்படவும் முடியாது. ஏனெனில், கவலைப்படுவதற்கு ஆயிரமாயிரம் விடயங்கள் இங்கு இருக்கின்றன.

ஆனால், புலம்பெயர் தேசத்து மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளை ஆக்கிரமிக்கும் மேடைப் பேச்சுக்கள், பெரும் எரிச்சலை மாத்திரமல்ல, போராட்டத்தின் மாவீரத்தை ஏதோ விளம்பரம் செய்வது போன்றதொரு தோரணையை தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வருகின்றது.

மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளில் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உரையே பிரதானமானது. பிரித்தானியாவில், அன்ரன் பாலசிங்கமும் தலைவரின் உரை ஒலிபரப்புக்குப் பின்னர், விளக்கவுரையாற்றி வந்திருக்கின்றார்.

வேறு, யாரின் உரைகளுக்கும் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளில் இடமில்லை. இதுதான், அதன் அடிப்படை வடிவமாகவும் இருந்திருக்கின்றது. தலைவரின் உரைக்கான வாய்ப்புக்கள் இல்லாத கடந்த எட்டு ஆண்டுகளிலும் அதனையே, தாயகத்திலுள்ள மக்கள் பிரதிபலிக்கின்றார்கள். வேறு யாரையும் உரையாற்ற அனுமதிப்பதில்லை.

கடந்த இரண்டு ஆண்டுகளாக மாவீரர் தினத்தை வெளிப்படையாக அனுஷ்டிப்பதற்கான வெளி உருவாகிய போதிலும், தலைவர் பிரபாகரனின் உரைக்கான வெற்றிடத்தை சிலர் கைப்பற்ற முயற்சித்த போதிலும், அதனை மக்கள் மிக மூர்க்கமாக தடுத்து நிறுத்தியிருந்தனர்.

அப்படியான நிலையில், புலம்பெயர் தேசத்து மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளுக்காக தமிழகத்திலிருந்தும் வேறு பகுதிகளிலிருந்தும் மேடைப் பேச்சாளர்கள் அழைக்கப்படுவது ஏற்புடையதல்ல. அதுவும், அந்த மேடைப் பேச்சாளர்களின் தொனியும், பேசும் விடயங்களும் மக்களை எரிச்சல்படுத்துகின்றன.

புலம்பெயர் தேசங்களில் நினைவேந்தல் நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் பெருவளவான மக்கள், இந்த மேடைப் பேச்சுக்களுக்கு அதிருப்தி வெளியிட்டு வருகின்ற நிலையில், ஏற்பாட்டாளர்கள் ஏன் தொடர்ந்தும் இந்த மேடைப் பேச்சாளர்களை அழைத்து வருகின்றார்கள் என்று தெரியவில்லை.

மாறாக, அவர்களை அழைத்து வருவதற்கான செலவிடும் பணத்தினை இன்னொரு நல்நோக்கத்தில் பயன்படுத்தவும் முடிவும் என்கிற விடயமும் மேல் நோக்கி வருகின்றது. ஏனெனில், இந்த மேடைப் பேச்சாளர்கள் தான் வந்து எமது போராட்டத்தைப் பற்றியும், மாவீரர்களின் அர்ப்பணிப்புப் பற்றியும் சொல்ல வேண்டியதில்லை.

எப்போதுமே அதிகமாக பாதிக்கப்பட்ட தரப்பிற்கு ஒப்பீட்டளவில் அதிகம் பாதிக்கப்படாத தரப்பொன்று முன்மாதிரியாக இருக்க வேண்டும். அப்படிப் பார்க்கையில், தாயக மக்களுக்கு முன்மாதிரியாக புலம்பெயர் தேசமே இருக்க வேண்டும்.

ஆனால், இங்கு எல்லாமும் மாறியே இருக்கின்றது. தாயக மக்களின் மனங்களோடு இணைய முடியாத புலம்பெயர் அமைப்புக்களும், அதன் செயற்பாட்டாளர்களும் ஏதோ தனிப்பயணம் செய்து கொண்டிருக்கின்றார்கள்.

இதனால், புலம்பெயர் மக்களுக்கும் தாயக மக்களுக்குமான இடைவெளியின் அளவும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. அப்படியான கட்டங்களை இந்த மேடைப் பேச்சுக்களும் ஏற்படுத்துகின்றன. எதிர்வரும் காலத்திலாவது இதனைச் சம்பந்தப்பட்ட தரப்புக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

-புருஜோத்தமன் தங்கமயில்-

  
   Bookmark and Share Seithy.com


கடற்படைத் தளபதி சின்னையாவும் அவரின் பின்னாலுள்ள அரசியலும்!
[Sunday 2017-08-27 09:00]

47ஆண்டுகளுக்குப் பின்னர் இலங்கைக் கடற்படையின் தளபதியாக தமிழரான வைஸ் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையா நியமிக்கப்பட்டதும் சர்வதேச ஊடகங்கள் அதற்கு அதிகளவில் முக்கியத்துவம் அளித்திருந்தன. இலங்கையின் கடந்த அரை நூற்றாண்டு வரலாற்றில் தமிழர் ஒருவர் இராணுவம், கடற்படை, விமானப்படை ஆகியவற்றின் தளபதியாக நினைத்துக் கூடப் பார்க்க முடியாத நிலை காணப்பட்டதே அதற்குக் காரணம்.


தமிழ்-முஸ்லிம் உறவும், நமது பேச்சுகளும் எழுத்துக்களும்! - -எஸ். ஹமீத்.
[Monday 2017-07-17 08:00]

கால் நூற்றாண்டுக்கு முன்னம், எப்போதுமில்லாத அளவுக்கு வீசத் தொடங்கிய சந்தேகப் புயலில் அந்த அழகிய-நறுமணம் வீசிக் கொண்டிருந்த பூந்தோட்டம் அழியத் தொடங்கியது. வண்ணமும் வாசமுமாய் ஒன்றுக்குள் ஒன்று பின்னிப் பிணைந்து பூத்த மலர்கள் தத்தம் இதழ்களைக் களைந்து மொட்டைக் கிளைகளோடு வாடி நின்றன. நல்லெண்ணம்-புரிந்துணர்வு-சினேகம்-பரஸ்பர உதவிகள் என்று பூந்தோட்டத்தில் பாட்டுப் பாடிப் பறந்து திரிந்த ஒற்றுமைப் பட்டாம் பூச்சிகள், வீசத் தொடங்கிய சூறாவளிக்குத் தாக்குப் பிடிக்க முடியாமல் கண் காணாத இடம் நோக்கிப் பறந்து போயின.


வடக்கு - கிழக்கு துண்டாடப்பட்ட துயரம்: - மு.திருநாவுக்கரசு
[Sunday 2017-07-09 18:00]

தமிழ்த் தலைவர்கள் சிங்களத் தலைவர்களுடன் சேர்ந்து எதனையும் பெறவில்லை மாறாக சேர்ந்து அனைத்தையும் கொடுக்கின்றனர்.
மு. திருநாவுக்கரசு
ஒரு தேசிய இனம், ஓர் அரசு என்பன அவற்றிற்குரிய தாயக நிலப்பரப்பினாற்தான் நிர்ணயம் பெறுகிறது. ஒரு தேசிய இனத்திற்கு இருக்கக்கூடிய பல்வேறு அடையாளங்களுள் முதலாவது அதற்குரிய பொதுவான நிலப்பரப்பாகும். ஆங்கில மொழி பேசும் பிரித்தானியர், அமெரிக்கர், கனேடியர், அவுஸ்திரேலியர் என பலர் ஒரு மொழியைப் பேசினாலும் அவை வொவ்வொன்றும் தனித் தனித் தேசங்களாகவும், வேறு வேறு அரசுகளாகவும் அடையாளம் காணப்படுகின்றன. எனவே மொழியின் அடிப்படையில் ஒரு தேசிய இனத்தை அடையாளம் காணமுடியாது.


இழப்பிலும் இன்னல்களிலும் இழைக்கப்பட்டதே கனடா 150! - பிரகல் திரு Top News
[Saturday 2017-07-01 09:00]

வட அமெரிக்காவில் எங்கிருந்தாலும் நாம் வாழும் நிலப்பரப்புக்கள், கோடிக்கணக்கான பழங்குடி மக்களின் அழிவிலும் அல்லல்களிலும் உருவாக்கப்பட்டது என்பது அனைவரும் அறிந்தவிடயம். இந்த கண்டத்தின் பழங்குடி மக்களுடன் ஐரோப்பியர்கள், பொருள் பரிமாற்றத்தில் தொடங்கி, மக்களை அளித்து அவர்களின் நிலங்களை பறிமுதல் செய்து அவர்களின் கலாச்சாரத்தை அளித்து, ஒரு இனத்தின் அடையாளமான மொழியை அழித்து, அதன் பயன் உருவாகியது தான் நாம் இன்று போற்றும் குடியேற்ற நாடான “The Dominion of Canada“.


ஒலிம்பிக் தீபம் விக்னேஸ்வரனின் கையில்: - மு. திருநாவுக்கரசு
[Sunday 2017-06-18 09:00]

விக்னேஸ்வரன் ஒரு சேனையற்ற தளபதியானாலும் (A General without an Army) முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் பின்னான ஓர் இடைமாறு காலகட்ட ஈழத் தமிழ்த் தேசியத்தின் சின்னமாக விளங்குகிறார். இதுதான் அவருக்கு இருக்கக்கூடிய அரசியல் முக்கியத்துவம். படை, பட்டாளமற்ற தளபதி போல் அதிகாரமற்ற மாகாணசபையின் முதல்வராக இருந்து கொண்டு அவரால் பெரிதாக எதனையும் சாதிக்க முடியாது என்பது ஓர் அடிப்படை முன்நிபந்தனையாகும். அதற்குள்ளாற்தான் அவரை நோக்க வேண்டும். “வெறுகொண்ட மனம் பிசாசுகளின் பட்டறை” "an idle mind is the devil's workshop”என்பதுபோல செயற்பட அதிகாரமோ, வாய்ப்புக்களோ அற்றதாக மாகாணசபை இருப்பது மட்டுமன்றி கூடவே அது அரச இடையூறுகளுக்கு உரியதாக இருக்கும் நிலையில் அது போய் உறையும் இல்லமாக, குழம்பங்களை பிரவிக்கும் கருப்பையாகக் காணப்படும்.


பேஸ்புக் பதிவால் இலங்கைப் பெண் எடுத்த விபரீத முடிவு!
[Wednesday 2017-04-05 19:00]

பேஸ்புக் விவகாரத்தால் தற்கொலைகள் இடம்பெறுவது அதிகரித்து வருகின்றது. பேஸ்புக்கில் தன்னை பற்றி அவதூறாக பதிவிட்டதால் மனமுடைந்த பெண் ஒருவர் வீடியோ ஒன்றை பதிவு செய்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ஒன்று கிழக்கில் இடம்பெற்றுள்ளது . இப்படியான சம்பவங்கள் இனி வரும் காலங்களில் நடைபெறாமல் இருக்க அவதானமாக சமூக வலைத்தளங்களை கையாளுங்கள்.


தமிழ் மன்னன் இராவணன் ஒரு வீர வரலாறு: - ஈழத்து நிலவன்
[Friday 2016-12-09 22:00]

நெடிய பாரம்பரியம் கொண்ட தமிழ்ச் சமுதாயத்தின் பண்பாட்டுப் பெருமை இராவணன் உண்மையில் தமிழ் உலகம் தந்த மாபெரும் வீரன் அவன். வரலாற்றின் திரிபுகளால் கொடுங்கோலன் ஆக்கப்பட்டான். இராவணன் பற்றிய நோக்குகள் இலங்கையிலும், தமிழ்நாட்டிலும், இந்தியாவின் பிற பகுதிகளிலும் வேறுபட்டு காணப்படுகிறன இராவணன் ஆட்சி எப்படி நடந்தது? அவன் ஆண்ட இலங்கையின் அழகையும், அங்கிருந்த மக்களின் செழிப்பான நிலையையும், கலைகள் ஒங்கியிருந்த சூழலையும் தெரிந்து கொள்ள முடியும்.


மக்களுக்காக மடிந்த மாவீரர்கள் தினம் ஒரு நோக்கு - அ.மயூரன் . லண்டன்.
[Saturday 2016-11-26 18:00]

மனித நாகரிகத்தின் ஆரம்பம் தொட்டு இன்று வரையான அதன் வரலாற்றுப் பரிணாம வளர்ச்சியில் மனிதநாகரிகம் உச்சகட்ட வளர்ச்சியை அடைந்திருக்கிறது. இவ்வளர்ச்சிப் பாதைக்கு வழிசமைத்தவர்கள் போர் வீரர்களே. பலத்தின் மூலம்தான் மனித சமூகம் ஒவ்வொன்றும் தன்னை வரலாற்றில் முன்னிலைப்படுத்தியுள்ளது. இவ் நீண்ட வரலாற்றுக் கால ஓட்டத்தில் போர் வீரர்களைத்தான் அன்றிலிருந்து இன்றுவரை மனிதகுலம் நினைவு கூருகிறது, போற்றுகின்றது. இவ்வாறு மனித வரலாற்றை சமைத்து எமக்குத் தந்துவிட்டு மடிந்து போன மானவீரர்களை உலகெங்கும் பரந்து வாழும் மனித சமூகம் கொண்டாடிக்கொண்டிருந்தாலும், இன்றைய உலகில் ஒடுக்கப்பட்ட, அடக்கப்பட்ட வர்க்கங்களின் விடுதலைக்காக போராடிவீழ்ந்த வீரர்களை கௌரவிப்பதில் தமிழீழ மக்கள் முன்னுதாரணமாகத் திகழ்கின்றனர்.


எழுக தமிழ்! ஒரு அடையாளம் மட்டுமா.. இல்லை எழுச்சியா! - ச.ச.முத்து
[Thursday 2016-10-06 21:00]

நீண்ட ஒரு மௌனம் கலைக்கட்டது..செப்டம்பர் 24 அன்று..யாழ்ப்பாணத்தில்.... அதன் தாக்கம் இப்போது சிங்களதேசத்தில் பல வடிவங்களில் எழுந்தாட தொடங்கி இருக்கிறது. மிகவும் எதிர்பார்த்த எதிர்வினைகள்தான்..அதனை பிறகு பார்ப்போம்.. முதலில் இது தமிழ் மக்களுக்கு எந்தளவுக்கு முக்கியத்துவமானது என்று கொஞ்சம் பார்க்கலாம். தேசியத்தலைவர் தமது உரைகளிலும் பேச்சுகளிலும் அடிக்கடி சொல்வது போல இந்த உலகமானது தத்தமது நாடுகளின் லாபங்களுக்காக மட்டுமே இயக்கப்படுகின்றது..இதற்குள் அவர்கள் என்னதான் மானுட விழுமியம், உலக நாடுகளுக்கான மனித உரிமை சட்டங்கள் அது இது என்று எத்தனை பேசினாலும் தமது நாடுகளின் தேசிய லாபம் என்று வரும்போது எல்லாம் தூக்கி கடாசி எறிந்துவிட்டு தம் நாட்டின் லாபம் ஒன்றுக்காகவே ஒற்றைக் காலில் நிற்பார்கள்... இதுதான் தொடர்ந்து நடந்துவரும் வரலாறு...யாரும் விதிவிலக்கு இல்லை..


ஈழத் தமிழர் அரசியல் ஏதிலிகளா? குவாதர் துறைமுகமும் ஈழத்தமிழர் தலைவிதியும். - மு.திருநாவுக்கரசு
[Sunday 2016-10-02 19:00]

காணப்படும் வாய்ப்புக்களை சிக்கெனப் பற்றி பயன்படுத்தவும் எழும் பிரச்சனைகளை தமக்கு சாதகமாக கையாளவும் கூடிய அரசியல் தேர்ச்சி சிங்களத் தலைவர்களிடம் இயல்பாகவே உண்டு. இவ்வாண்டின் இறுதிவாக்கில் இனப்பிரச்சனைக்கு அரசியல் யாப்பு ரீதியான தீர்வு காணப்படுமென்ற கருத்து பரவியிருக்கும் இக்காலச் சூழலில் இலங்கையின் அரசியல் பிரச்சனைகளோடு நெருக்கமாக சம்பந்தப்பட்டிருக்கும் நாடுகளைச் சார்ந்த இன்றைய சர்வதேச சூழலை மதிப்பீடு செய்ய வேண்டியது மிகவும் அவசியம்.


Tharsi-home-15-10-2016
SELVI-HOMES-09-02-17
Mahesan-Remax-169515-Seithy
Easankulasekaram-Remax-300716
<P>
 <b> 13-08-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற இசை மாலைப் பொழுது - 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
</p>
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 29ம் 30ம்தி கதிகளில் நடைபெற்ற World Tamil Badminton Federation 5th annual tournament நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 7ம் 8ம் 9ம்தி கதிகளில் நடைபெற்ற குதூகலம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா