தமிழ்-முஸ்லிம் உறவும், நமது பேச்சுகளும் எழுத்துக்களும்! - -எஸ். ஹமீத். | Seithy.com - 24 Hours Tamil News Service, World's largest daily tamil news,tamil breaking news,tamilclassifieds,tamil entertainment, srilanka, tamilnadu, tamileelam | www.seithy.com
 Untitled Document
December 11, 2017 [GMT]

  • Welcome
  • Welcome
தமிழ்-முஸ்லிம் உறவும், நமது பேச்சுகளும் எழுத்துக்களும்! - -எஸ். ஹமீத்.
[Monday 2017-07-17 08:00]

கால் நூற்றாண்டுக்கு முன்னம், எப்போதுமில்லாத அளவுக்கு வீசத் தொடங்கிய சந்தேகப் புயலில் அந்த அழகிய-நறுமணம் வீசிக் கொண்டிருந்த பூந்தோட்டம் அழியத் தொடங்கியது. வண்ணமும் வாசமுமாய் ஒன்றுக்குள் ஒன்று பின்னிப் பிணைந்து பூத்த மலர்கள் தத்தம் இதழ்களைக் களைந்து மொட்டைக் கிளைகளோடு வாடி நின்றன. நல்லெண்ணம்-புரிந்துணர்வு-சினேகம்-பரஸ்பர உதவிகள் என்று பூந்தோட்டத்தில் பாட்டுப் பாடிப் பறந்து திரிந்த ஒற்றுமைப் பட்டாம் பூச்சிகள், வீசத் தொடங்கிய சூறாவளிக்குத் தாக்குப் பிடிக்க முடியாமல் கண் காணாத இடம் நோக்கிப் பறந்து போயின.


  

இப்போது 25-35 வயதிற்குள் வாழ்ந்து கொண்டிருக்கும் பெரும்பாலானோர்க்குத் தெரிந்ததெல்லாம் தமிழ் மக்களுக்கு முஸ்லிம்கள் விரோதிகள் என்பதும் முஸ்லிம்களுக்குத் தமிழர்கள் எதிரிகள் என்பதும்தான். இலங்கை சுதந்திரம் அடைந்ததற்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் மட்டுமல்லாது, சுயநல தமிழ்-முஸ்லிம் அரசியல் வியாபார நிறுவனங்களும் இந்த நிலைமையைத் தோற்றுவிப்பதற்கான தமது எத்தனங்களில் பாரிய வெற்றியைக் கண்டுவிட்டன என்பது மறுக்க முடியாத உண்மை.

வெவ்வேறான மத நம்பிக்கைகளுடனும் பாரம்பரியங்களுடனும் கலாசாரங்களுடனும் வாழ்ந்தாலும், மொழி என்ற வட்டத்துக்குள் ஒன்றிணைந்து ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளாய் வாழ்ந்து கொண்டிருந்த தமிழ்-முஸ்லிம் மக்களின் போற்றத்தக்க ஐக்கியத்தில் மண்ணை அள்ளிப் போட்ட கொடுமை திடீரென நிகழ்ந்ததல்ல. அது பல்வேறு சூழ்ச்சிக் குழுக்களினால் மிகத் திட்டமிடப்பட்டு அரங்கேற்றி முடிக்கப்பட்ட கபட நாடகமாகும்.

இலங்கையின் வட-கிழக்கு மாகாணங்களில் செறிவாக வாழ்ந்த தமிழ்-முஸ்லிம் மக்களுக்கிடையிலான நேசப் பிணைப்புகளை இரை மீட்டிப் பார்க்கையில் இதயம் நொந்து அழுவதைத் தவிர்க்க முடியாமல் உள்ளது.

அங்குள்ள பாடசாலைகளில் இணைந்து கல்வி கற்று, மைதானங்களில் விளையாடி, குளங்களில் நீராடி, வாகனங்களில் பயணித்து, விழாக்களில் குதூகலித்து, பண்டிகைகளில் பரஸ்பரம் பட்சணங்கள் பகிர்ந்தளித்து, பெருநாள்-திருநாட்களில் வாழ்த்துச் சொல்லி,சுப காரியங்களில் கலந்து கொண்டு ஆசீர்வாதங்களையும், சோக நிகழ்வுகளில் பங்குபற்றி ஆறுதலையும் வழங்கி வாழ்ந்த அந்த வசந்த காலங்களை எண்ணுகையில் நெஞ்சத்தில் ஏக்கப் பெருமூச்சுக்கள் இடையறாது எழுகின்றன.

எந்தக் கொள்ளிக் கண் பட்டதோ, தமிழீழ விடுதலைக்கென்று தொடங்கப்பட்ட ஆயுதப் போராட்டத்தின் பின்னர் வட-கிழக்குத் தமிழ்-முஸ்லிம் ஒற்றுமைப் பூங்காவை நோக்கிப் புயலடிக்க ஆரம்பித்து விட்டது. மொழியின் ஐக்கியம் தாண்டி, மதத்தின் மேலான ஐயப் பார்வை உக்கிரமடையத் தொடங்கிற்று.

அன்பால் கட்டுண்டு கிடந்தவர்களை ஆயுதங்கள் வலுக்கட்டாயமாகப் பிரித்தெடுத்தன. காட்டிக் கொடுத்தல்களும் கழுத்தறுப்புகளும் மும்முரமாகின. பாவமும் பழியும்-பழிக்குப் பழியுமென தமிழ்-முஸ்லிம் ஒற்றுமையெனும் மலர்க் காடு, மயானக் காடாய்ப் பாழ்பட்டது.

யார் ஆரம்பித்தது...யார் முடித்து வைத்தது..? யார் அதிகமாகக் குற்றமிழைத்தது...யார் குறைவாகக் குற்றம் புரிந்தது...? என்பது போன்ற வினாக்களுக்கான விடை தேடல்களில் இறங்குவதானது, இனி என்றைக்குமே தமிழ்-முஸ்லிம் உறவுக்கான சூழ்நிலைகளை உருவாக்குவதற்குத் தடையாகவே இருக்கும் என்பது எனது தாழ்மையான அபிப்பிராயமாகும்.

தெளிவாகக் கணக்கிட்டுப் பார்க்கப் போனால், இரு தரப்பிலும் கொடுஞ் செயல்கள் புரிந்தவர்கள் சில நூற்றுக் கணக்கானோர்தான். ஆனால், அந்தக் கொடுஞ் செயல்களை வெறுத்தோர்-இன்னமும் வெறுப்போர் பல இலட்சக் கணக்கானோர் என்ற உண்மை தெளிவாகும்.

வன்செயல்களினால் பாதிக்கப்பட்டோரும் அவரைச் சார்ந்தோரும் உணர்ச்சிகளின் உந்துதலுக்காற்பட்டு, அவ்வப்போது எதிர்த் தரப்பாரை நொந்து கொள்வது வெகு இயற்கையானதே. ஆயினும், இறந்த காலங்களில் நடந்து முடிந்து விட்டவற்றை இல்லாமற் செய்துவிட முடியாதெனும் யதார்த்தத்தை உணர்ந்து, தம்மைத் தாமே தேற்றிக் கொண்டு வாழ முற்படுவதே விவேகமாகும்.

விட்டுக் கொடுப்பு, சகிப்புத்தன்மை,பரஸ்பர நம்பிக்கை,புரிந்துணர்வு, இணக்கப்பாடு மற்றும் மனிதம் சார்ந்த அணுகுமுறைகள் என்பவற்றால் பிரிந்து நிற்கும் சமூகங்கள் மீண்டும் பிணைக்கப்பட வேண்டும்!!

தமது இருப்புக்காகவும் பிழைப்புக்காகவும் கடந்த கால ரணங்களைக் கிளறி வாழ்வோரிலிருந்து விலகி, சீரழிந்து போன தமிழ்-முஸ்லிம் உறவைச் சீர் செய்து, செப்பனிட்டு வாழும் வழிவகைகள் கண்டறியப்பட வேண்டும். கொடுந் துவேஷக் கூற்றத்தினால் பாழ்பட்டுப் போயிருக்கும் தமிழ்-முஸ்லிம் உறவுப் பூந்தோட்டம் மீண்டும் புனரமைக்கப்பட வேண்டும்!

தமிழ்-முஸ்லிம் மக்களுக்கிடையிலான உறுதியான ஐக்கியத்தை உருவாக்கும் பாரிய பணியில் இரு தரப்பிலுமுள்ள ஆர்வலர்கள், அறிஞர்கள், அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்கள் என அனைத்துத் தரப்பினரும் தம்மை அர்ப்பணித்துக் கடமையாற்றின், வெகு விரைவிலேயே வண்ணத்துப் பூச்சிகள் சிறகடிக்கும் வாசம் கமழ்கின்ற தமிழ்-முஸ்லிம் உறவு என்னும் வண்ணப் பூங்காவனத்தைப் புனர் நிர்மாணம் செய்து விடலாம்.

ஆனாலும், இன்றைய முல்லைத்தீவுப் பிரச்சினைகள் பற்றிய விடயத்தில் தமிழ்-முஸ்லிம் மக்களிற் சிலர் நடந்து கொள்ளும் முறைமையும் அவை பற்றிய ஆக்கங்களின் கீழே பதியப்படுகின்ற அசிங்கமான பின்னூட்டங்களும் ஏற்றுக் கொள்ள முடியாதவை மட்டுமல்ல, மிக அசிங்கமானதுமாகும். தாய்-சகோதரிகளென இழுத்து, வெகு ஆபாசமாகவும் அருவருப்பாகவும் மொழிகின்ற-பதிகின்ற செயல்களுக்கு உடனடியாகவே முற்றுப் புள்ளி வைக்க வேண்டும். ஒரு சிறிய பொறி பெரும் நெருப்பை உண்டாக்கிவிடுதல் போல, உணர்ச்சிவசப்பட்ட நிலைமையில் நாம் உதிர்க்கும் ஒற்றைச் சொல் பெரும் கலவரங்களை ஏற்படுத்தி விடும். ஆகவே, நமது பேச்சுக்களிலும் எழுத்துக்களிலும் நிதானத்தையும் நேர்மையையும் பேணுவோம்!

  
   Bookmark and Share Seithy.com


கடற்படைத் தளபதி சின்னையாவும் அவரின் பின்னாலுள்ள அரசியலும்!
[Sunday 2017-08-27 09:00]

47ஆண்டுகளுக்குப் பின்னர் இலங்கைக் கடற்படையின் தளபதியாக தமிழரான வைஸ் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையா நியமிக்கப்பட்டதும் சர்வதேச ஊடகங்கள் அதற்கு அதிகளவில் முக்கியத்துவம் அளித்திருந்தன. இலங்கையின் கடந்த அரை நூற்றாண்டு வரலாற்றில் தமிழர் ஒருவர் இராணுவம், கடற்படை, விமானப்படை ஆகியவற்றின் தளபதியாக நினைத்துக் கூடப் பார்க்க முடியாத நிலை காணப்பட்டதே அதற்குக் காரணம்.


கனடாவில் 'கரபிராம் 2017' ஈழம் சாவடி: - தனியார் கம்பெனியாக மாற்றம் பெற்று வருவதாக பலரும் விமர்சனம்!
[Thursday 2017-07-13 11:00]

பிராம்ப்டன் ஈழம் - ஈழம் சாவடி நிகழ்வு தனியார் கம்பெனியாக மாற்றம் பெற்று வருவதாக பலரும் விமர்சிக்கின்றனர் - ஈழத்து தாய்நாட்டின் பெயரால் உள்ளே என்னதான் நடக்கிறது..?? சும்மா பெயருக்கு ஒரு தலைவர் செயலாளர் தடால் புடல் என்று மக்களுக்கு வெளியே காட்டிக்கொண்டு.. உள்ளே தில்லு முள்ளுகள் நிறைந்து.. மமதை பிடித்த அதிகார மாமேதைகலால் கட்டுப் படுத்தப் பட்டு சர்வாதிகார நிலைப் பாட்டில் சுயநல சுயஇலாப நோக்கில் இயக்கப் படுவதே ஈழம் சாவடி நிகழ்வு என விமர்சிக்கப்படுகிறது.. அதில் உண்மைகள் இருப்பதாகவே தெரிகிறது.. - இதை பிராம்ப்டன் வாழ் சமூகநலன் விரும்பிகள் பலரும் நன்கொடையாளர்கள் பலரும் இனப்பற்று மொழிப்பற்று மிக்க ஈழம்சாவாடி செயற்பாட்டாளர்கள் சிலரும் சொல்லி விசனப் படுகிறார்கள்.


வடக்கு - கிழக்கு துண்டாடப்பட்ட துயரம்: - மு.திருநாவுக்கரசு
[Sunday 2017-07-09 18:00]

தமிழ்த் தலைவர்கள் சிங்களத் தலைவர்களுடன் சேர்ந்து எதனையும் பெறவில்லை மாறாக சேர்ந்து அனைத்தையும் கொடுக்கின்றனர்.
மு. திருநாவுக்கரசு
ஒரு தேசிய இனம், ஓர் அரசு என்பன அவற்றிற்குரிய தாயக நிலப்பரப்பினாற்தான் நிர்ணயம் பெறுகிறது. ஒரு தேசிய இனத்திற்கு இருக்கக்கூடிய பல்வேறு அடையாளங்களுள் முதலாவது அதற்குரிய பொதுவான நிலப்பரப்பாகும். ஆங்கில மொழி பேசும் பிரித்தானியர், அமெரிக்கர், கனேடியர், அவுஸ்திரேலியர் என பலர் ஒரு மொழியைப் பேசினாலும் அவை வொவ்வொன்றும் தனித் தனித் தேசங்களாகவும், வேறு வேறு அரசுகளாகவும் அடையாளம் காணப்படுகின்றன. எனவே மொழியின் அடிப்படையில் ஒரு தேசிய இனத்தை அடையாளம் காணமுடியாது.


இழப்பிலும் இன்னல்களிலும் இழைக்கப்பட்டதே கனடா 150! - பிரகல் திரு Top News
[Saturday 2017-07-01 09:00]

வட அமெரிக்காவில் எங்கிருந்தாலும் நாம் வாழும் நிலப்பரப்புக்கள், கோடிக்கணக்கான பழங்குடி மக்களின் அழிவிலும் அல்லல்களிலும் உருவாக்கப்பட்டது என்பது அனைவரும் அறிந்தவிடயம். இந்த கண்டத்தின் பழங்குடி மக்களுடன் ஐரோப்பியர்கள், பொருள் பரிமாற்றத்தில் தொடங்கி, மக்களை அளித்து அவர்களின் நிலங்களை பறிமுதல் செய்து அவர்களின் கலாச்சாரத்தை அளித்து, ஒரு இனத்தின் அடையாளமான மொழியை அழித்து, அதன் பயன் உருவாகியது தான் நாம் இன்று போற்றும் குடியேற்ற நாடான “The Dominion of Canada“.


ஒலிம்பிக் தீபம் விக்னேஸ்வரனின் கையில்: - மு. திருநாவுக்கரசு
[Sunday 2017-06-18 09:00]

விக்னேஸ்வரன் ஒரு சேனையற்ற தளபதியானாலும் (A General without an Army) முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் பின்னான ஓர் இடைமாறு காலகட்ட ஈழத் தமிழ்த் தேசியத்தின் சின்னமாக விளங்குகிறார். இதுதான் அவருக்கு இருக்கக்கூடிய அரசியல் முக்கியத்துவம். படை, பட்டாளமற்ற தளபதி போல் அதிகாரமற்ற மாகாணசபையின் முதல்வராக இருந்து கொண்டு அவரால் பெரிதாக எதனையும் சாதிக்க முடியாது என்பது ஓர் அடிப்படை முன்நிபந்தனையாகும். அதற்குள்ளாற்தான் அவரை நோக்க வேண்டும். “வெறுகொண்ட மனம் பிசாசுகளின் பட்டறை” "an idle mind is the devil's workshop”என்பதுபோல செயற்பட அதிகாரமோ, வாய்ப்புக்களோ அற்றதாக மாகாணசபை இருப்பது மட்டுமன்றி கூடவே அது அரச இடையூறுகளுக்கு உரியதாக இருக்கும் நிலையில் அது போய் உறையும் இல்லமாக, குழம்பங்களை பிரவிக்கும் கருப்பையாகக் காணப்படும்.


பேஸ்புக் பதிவால் இலங்கைப் பெண் எடுத்த விபரீத முடிவு!
[Wednesday 2017-04-05 19:00]

பேஸ்புக் விவகாரத்தால் தற்கொலைகள் இடம்பெறுவது அதிகரித்து வருகின்றது. பேஸ்புக்கில் தன்னை பற்றி அவதூறாக பதிவிட்டதால் மனமுடைந்த பெண் ஒருவர் வீடியோ ஒன்றை பதிவு செய்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ஒன்று கிழக்கில் இடம்பெற்றுள்ளது . இப்படியான சம்பவங்கள் இனி வரும் காலங்களில் நடைபெறாமல் இருக்க அவதானமாக சமூக வலைத்தளங்களை கையாளுங்கள்.


தமிழ் மன்னன் இராவணன் ஒரு வீர வரலாறு: - ஈழத்து நிலவன்
[Friday 2016-12-09 22:00]

நெடிய பாரம்பரியம் கொண்ட தமிழ்ச் சமுதாயத்தின் பண்பாட்டுப் பெருமை இராவணன் உண்மையில் தமிழ் உலகம் தந்த மாபெரும் வீரன் அவன். வரலாற்றின் திரிபுகளால் கொடுங்கோலன் ஆக்கப்பட்டான். இராவணன் பற்றிய நோக்குகள் இலங்கையிலும், தமிழ்நாட்டிலும், இந்தியாவின் பிற பகுதிகளிலும் வேறுபட்டு காணப்படுகிறன இராவணன் ஆட்சி எப்படி நடந்தது? அவன் ஆண்ட இலங்கையின் அழகையும், அங்கிருந்த மக்களின் செழிப்பான நிலையையும், கலைகள் ஒங்கியிருந்த சூழலையும் தெரிந்து கொள்ள முடியும்.


மக்களுக்காக மடிந்த மாவீரர்கள் தினம் ஒரு நோக்கு - அ.மயூரன் . லண்டன்.
[Saturday 2016-11-26 18:00]

மனித நாகரிகத்தின் ஆரம்பம் தொட்டு இன்று வரையான அதன் வரலாற்றுப் பரிணாம வளர்ச்சியில் மனிதநாகரிகம் உச்சகட்ட வளர்ச்சியை அடைந்திருக்கிறது. இவ்வளர்ச்சிப் பாதைக்கு வழிசமைத்தவர்கள் போர் வீரர்களே. பலத்தின் மூலம்தான் மனித சமூகம் ஒவ்வொன்றும் தன்னை வரலாற்றில் முன்னிலைப்படுத்தியுள்ளது. இவ் நீண்ட வரலாற்றுக் கால ஓட்டத்தில் போர் வீரர்களைத்தான் அன்றிலிருந்து இன்றுவரை மனிதகுலம் நினைவு கூருகிறது, போற்றுகின்றது. இவ்வாறு மனித வரலாற்றை சமைத்து எமக்குத் தந்துவிட்டு மடிந்து போன மானவீரர்களை உலகெங்கும் பரந்து வாழும் மனித சமூகம் கொண்டாடிக்கொண்டிருந்தாலும், இன்றைய உலகில் ஒடுக்கப்பட்ட, அடக்கப்பட்ட வர்க்கங்களின் விடுதலைக்காக போராடிவீழ்ந்த வீரர்களை கௌரவிப்பதில் தமிழீழ மக்கள் முன்னுதாரணமாகத் திகழ்கின்றனர்.


எழுக தமிழ்! ஒரு அடையாளம் மட்டுமா.. இல்லை எழுச்சியா! - ச.ச.முத்து
[Thursday 2016-10-06 21:00]

நீண்ட ஒரு மௌனம் கலைக்கட்டது..செப்டம்பர் 24 அன்று..யாழ்ப்பாணத்தில்.... அதன் தாக்கம் இப்போது சிங்களதேசத்தில் பல வடிவங்களில் எழுந்தாட தொடங்கி இருக்கிறது. மிகவும் எதிர்பார்த்த எதிர்வினைகள்தான்..அதனை பிறகு பார்ப்போம்.. முதலில் இது தமிழ் மக்களுக்கு எந்தளவுக்கு முக்கியத்துவமானது என்று கொஞ்சம் பார்க்கலாம். தேசியத்தலைவர் தமது உரைகளிலும் பேச்சுகளிலும் அடிக்கடி சொல்வது போல இந்த உலகமானது தத்தமது நாடுகளின் லாபங்களுக்காக மட்டுமே இயக்கப்படுகின்றது..இதற்குள் அவர்கள் என்னதான் மானுட விழுமியம், உலக நாடுகளுக்கான மனித உரிமை சட்டங்கள் அது இது என்று எத்தனை பேசினாலும் தமது நாடுகளின் தேசிய லாபம் என்று வரும்போது எல்லாம் தூக்கி கடாசி எறிந்துவிட்டு தம் நாட்டின் லாபம் ஒன்றுக்காகவே ஒற்றைக் காலில் நிற்பார்கள்... இதுதான் தொடர்ந்து நடந்துவரும் வரலாறு...யாரும் விதிவிலக்கு இல்லை..


ஈழத் தமிழர் அரசியல் ஏதிலிகளா? குவாதர் துறைமுகமும் ஈழத்தமிழர் தலைவிதியும். - மு.திருநாவுக்கரசு
[Sunday 2016-10-02 19:00]

காணப்படும் வாய்ப்புக்களை சிக்கெனப் பற்றி பயன்படுத்தவும் எழும் பிரச்சனைகளை தமக்கு சாதகமாக கையாளவும் கூடிய அரசியல் தேர்ச்சி சிங்களத் தலைவர்களிடம் இயல்பாகவே உண்டு. இவ்வாண்டின் இறுதிவாக்கில் இனப்பிரச்சனைக்கு அரசியல் யாப்பு ரீதியான தீர்வு காணப்படுமென்ற கருத்து பரவியிருக்கும் இக்காலச் சூழலில் இலங்கையின் அரசியல் பிரச்சனைகளோடு நெருக்கமாக சம்பந்தப்பட்டிருக்கும் நாடுகளைச் சார்ந்த இன்றைய சர்வதேச சூழலை மதிப்பீடு செய்ய வேண்டியது மிகவும் அவசியம்.


Easankulasekaram-Remax-300716
Tharsi-home-15-10-2016
Mahesan-Remax-169515-Seithy
SELVI-HOMES-09-02-17
<P>
 <b> 13-08-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற இசை மாலைப் பொழுது - 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
</p>
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 29ம் 30ம்தி கதிகளில் நடைபெற்ற World Tamil Badminton Federation 5th annual tournament நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 7ம் 8ம் 9ம்தி கதிகளில் நடைபெற்ற குதூகலம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா